அமைச்சர் வீட்டின் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. மேலும் ஆப்கான் அரசு தலீபான்களின் பயங்கரவாதத்தை தடுக்க பல்வேறு வழிகளில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தலீபான்கள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலானது காபூலில் இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் வீட்டின் அருகே நடந்துள்ளது.
இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஆப்கான் அரசு விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த தாக்குதல்கள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் நிகழ்வாதல் ஆப்கான் விவகாரங்களில் தலையிடும் ஐ.நா. பிரிவு மிகுந்த கவலை அளித்துள்ளது.