கத்தார் நாட்டிற்கு பயணம் செய்த இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் அங்குள்ள அதிகாரிகளுடன் ஆப்கனிலுள்ள பெண்களை பாதுகாப்பது தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலாளர கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் ஆப்கன் அகதிகள் தங்கியுள்ள இடங்களை பார்வையிட்டுள்ளார். மேலும் கத்தார் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட இங்கிலாந்து வெளியுறவு துறை செயலாளர் அவர்களுடன் விவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் கூறியதாவது, இனிவரும் காலங்களில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடம் அளிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கனிலுள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான விவாதத்தில் கத்தார் அதிகாரிகளுடன் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலிபான்களுடன் தொடர்பிருக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.