Categories
உலக செய்திகள்

இங்க எப்படி வந்துச்சு….? தனியாக தவித்த பென்குயின்…. பாதுகாப்பு கொடுத்த அதிகாரிகள்….!!

கடலில் தனியாக நின்று கொண்டிருந்த பென்குயினை பாதுகாப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள கடற்கரையில் கடந்த புதன்கிழமை Adelie வகையைச் சேர்ந்த பென்குயின் ஒன்று தனியாக நின்று கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட பாதுகாப்புத் துறையினர் அதை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அது அண்டார்டிகாவில் இருந்து 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ளது.

இதனால் அந்த பென்குயின் மிகவும் சோர்வாக இருந்துள்ளது. இதனை அடுத்து அதற்கு அதிகாரிகள் உணவு கொடுத்து சிகிச்சை அளித்து பென்குயினை பாதுகாத்து வந்துள்ளனர். குறிப்பாக பென்குயின் மீண்டும் அண்டார்டிகா செல்வதற்காக அதனை பேங்க்ஸ் தீபகற்ப கடலில் விட்டுள்ளனர்.

Categories

Tech |