Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தெருவில் நடந்து சென்ற பாட்டி, பேத்தி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!!!

வந்தவாசி அருகே சாலையில் நடந்து சென்ற பாட்டி, பேத்தி  இருவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நவாப் ஜான் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்து வாணிசெட்டி தெருவை சேர்ந்தவர். இவருக்கு 70 வயதுடைய அலிமாபீவி என்னும் மனைவி இருந்தார். இவர் நேற்று தனது பேத்தி பானுவுடன்(31)  நேற்று அக்கி எனப்படும் இயற்கை வைத்தியசாலைக்கு காலை 9.30 மணிக்கு வந்தவாசியில் இருந்து வெண்குன்றம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்கள் இருவரின் மேலும் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த வெண்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார்( 18), அவரது தம்பி விஜய் என்ற சஞ்சய்(17) தினேஷ்குமார்(17) ஆகியோரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

அமிதாபீவி மற்றும் பரிதா பானு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சஞ்சய், அருண்குமார், தினேஷ்குமார் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து வந்தவாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |