Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாவக் கதைகள்’ காளிதாஸ் ஜெயராம் தளபதியுடன் எடுத்த புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் தளபதியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் , வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கிய ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’ . காதல் ,கௌரவம் ,அந்தஸ்து ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘தங்கம்’ படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது . இந்தப் படத்தில் நடிகர் சாந்தனு மற்றும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் குறிப்பாக மூன்றாம் பாலினத்தவராக காளிதாஸ் ஜெயராமின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

'பாவக்கதைகள்' காளிதாஸ் ஜெயராமை சந்தித்த தளபதி விஜய் உருக்கமான பதிவு vijay and kalidas viral photo

இந்நிலையில் தளபதி விஜய் தனது அலுவலகத்திற்கு நடிகர் காளிதாஸ் ஜெயராமை அழைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் காளிதாஸ் ஜெயராம் ‘இனி எதுவுமே எனக்கு சிறப்பாக மாறப்போவதில்லை என நான் நினைத்த போது நடந்த அற்புதம். மாணவனை சந்தித்த மாஸ்டர். உங்கள் நேரத்தை எனக்காக ஒதுக்கியதற்கு நன்றி விஜய் சார்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Categories

Tech |