Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

“சித்ரா பௌர்ணமி” பாவங்களை போக்க இதை செய்ங்க…..!!

பூமியை சுற்றிவரும் சந்திரன் சித்ரா  பௌர்ணமி அன்று முழு நிலவாக தோன்றி பிரகாசமாக காட்சி தரும். பௌர்ணமி தினம்  மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு தனிச் சிறப்பு உள்ளது. மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் மலை  கோவில்களுக்கு சென்று மக்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால் இந்த  சித்ரா பவுர்ணமி அன்று கோவில்களிலும் புனித ஸ்தலங்களிலும்  பொங்கல் வைக்கிறது போன்ற செயல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

அது மட்டுமல்லாது அன்றைய தினம் புனித நதிகளில் நீராடி நமது பாவங்களை போக்கிக் கொள்ளலாம். சித்ரா பவுர்ணமி சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவதால் அன்று கடலில் குளிப்பது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக் கொள்ளவும் அங்கே பிரசன்னமாகி இருக்கும் பித்ருக்கள், சித்தர்கள், யோகிகள் அனைவரும் தயாராக இருப்பார்கள்.

சித்ரா பௌர்ணமி சித்திரகுப்தருக்கு உகந்த நமது பிறப்பு நாள். இறப்பு கணக்குகளை பார்த்து பூமியில் மனிதர்கள் செய்யும் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து அதற்கேற்றாற்போல் நமக்கு சொர்க்கம் நரகத்தை முடிவு செய்வது சித்திர குப்தனின் கடமை. சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனை மனதில் நினைத்து நாங்கள் மலை  அளவில் செய்த பாவத்தை கடுகளவும் கடுகளவு  செய்த புண்ணியத்தை மலை  அளவாக  எழுதவும் வேண்டி  வழிபடுவது நல்லது. சித்திர குப்தர்க்கு காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும்  திருவண்ணாமலையில் சன்னதியும் இருக்கிறது.

Categories

Tech |