பப்ஜி கேம்_மை விளையாட எதிர்ப்பு தெரிவித்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இரக்கம் , கருணை , மன்னிப்பு , அன்பு போன்றவையே மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணங்கள் என காலம் காலமாக அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மிகம் வரை அறிவுறுத்தி வருகின்றனர்.ஆனால் இந்தக் குணங்களுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் கொடூர மனதோடு விளையாடுவது தான் பப்ஜி. இந்த குணம் இருந்தால் தான் இந்த விளையாட்டை ஜெயிக்க முடியும். நீங்கள் பிறரை கொலை செய்வது போல பிறரும் உங்களைக் கொலை செய்வார்கள் அத்தகைய ரணகளமான விளையாட்டாக இருந்த விளையாட்டு தான் பப்ஜி.
தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வீடியோ கேம் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் பப்ஜி. இந்த கேம் 2017ஆம் ஆண்டு டிசம்பரில் தான் வெளியிடப்பட்டது. பல நபர்கள் இணைந்து ஒரே நேரத்தில் விளையாடும் இணைய விளையாட்டு இது. எதிரிகளை துரத்தி , துரத்தி சுட்டு வீழ்த்தி வெற்றி பெறுவதே இதில் விளையாடும் அணிகளின் நோக்கம். அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இன்று உலகம் முழுவதும் கோடிக் கணக்கான இளைஞர்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது இந்த பப்ஜி கேம்.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான சங்கரப்பா என்பவர் அங்குள்ள பெல்காம் மாவட்டத்தின் கக்காட்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் காவல்துறை அதிகாரி ஆவர். 61 வயதான சங்கரப்பா_வின் ஒரே மகன் தான் 20 வயதான ரகுவீர். ரகுவீர் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு கடந்த சில மாதங்களாக வீட்டில் சும்மா இருந்து வந்தார்.
ரகுவீர் பொழுது போக்குவதற்காக பப்ஜி கேமை விளையாட தொடங்கினார். நாளடைவில் அதற்கு அடிமையாகியதால் தந்தை சங்கரப்பா ரகுவீரை கண்டித்தும் இதை ரகுவீர் கண்டுகொள்ளவில்லை. மகனை மீட்பதற்காக வேறு வழியின்றி அவரது செல்போன் இணைய இணைப்பிற்கு ரீசார்ஜ் செய்யாமல் இருந்தார் சங்கரப்பா. இது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டது.தகராறு முடிந்த நிலையில் சங்கரப்பா ஹாலில் படுத்து உறங்கினார் தாயும் ரகுவீர் தனி தனி அறையில் படுத்து உறங்கினர்.
இந்நிலையில் திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தன் அறையில் இருந்து வெளியே வந்த ரகுவீர், தாயின் அறையின் வெளியே தாளிட்டார். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மீது ஏறி அமர்ந்து , அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார் ரகுவீர். கழுத்தை அறுத்த போது துடிதுடித்து கதறி சத்தம் போட்டதை கேட்டு எழுந்து ஜன்னல் வழியாக பார்த்த தாய் கதறி உள்ளார். தாயின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .
உடனடியாக போலீசார் விரைந்து வந்தனர்.அப்போது போலீசார் மற்றொரு கொடூரத்தை கண்டனர். ரகுவீர் தந்தை சங்கரப்பாவின் தலையை தனியாக வெட்டி, அவரது இடது காலையும் தனியாக வெட்டி கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கேயே அவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.மது , கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை மீட்க சட்ட மையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் இது போன்ற வினையான விளையாட்டுக்களில் இருந்து மீட்க மையங்கள் தேவை என்பதையே சங்கரப்பாவின் படுகொலை உணர்த்துகிறது.செல்போன் மீட்பு மையங்கள் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.