Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பச்சையப்பன் கல்லூரிக்குள் பேராசிரியர்களை நுழையவிடாத முதல்வர்…!!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிசெய்ய கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்காமல் நீதிமன்ற  ஆணைக்கு எதிராக முதல்வர் வாயிலை அடைத்து வைத்ததால் பேராசிரியர்கள் வாயிலில் வெளியே வெகு நேரம் காத்துக் கிடந்து திரும்பிச்சென்று அவலம் அரங்கேறி உள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி திரு சண்முகம் அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி முதல்வர் நீதிமன்ற ஆணைக்கு எதிராக கல்லூரி வாயிலை அடைத்து வைத்துள்ளார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட முக்கிய கல்வி பணியாற்ற சென்று பேராசிரியர்களை கல்லூரிக்குள் செல்ல விடாமல் கடந்த 3 நாட்களாக முதல்வர் தடுத்து வருகிறார்.

பேராசிரியர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என கல்லூரி கல்வித்துறை இணை இயக்குனரின் உத்தரவையும் செயல்படுத்த அவர் மறுத்து வருகிறார். இதனால் ஆராய்ச்சி மாணவர்களின் பணிகள் உள்ளிட்ட மாணவர்களின் கல்வியும் பேராசிரியர்களின் கல்விப் பணிகளும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்களை கல்லூரி வாசலில் காத்துக் கிடக்க வைத்து திருப்பி அனுப்பும் முதல்வர் மற்றும் அறக்கட்டளை செயலாளர் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |