உசிலம்பட்டி அருகே பிறந்து ஒரு வாரத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
மதுரை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதிக்கு அருகே உள்ள கே. பாறைபட்டியில் சின்னசாமி ,சிவபிரியங்கா என்று கணவன் மனைவி வசித்துவந்தனர். இவர்களுக்கு எட்டு வயது மற்றும் மூன்று வயதை சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உள்ளது.
இச்சமயத்தில் தனது மூன்றாவது பிரசவத்திற்காக பழனிக்கு அருகில் உள்ள பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சென்று 10 தேதி அன்று பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர்களுக்கு மூன்றாவதாகவும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்ததும் கே.பாறைப்பட்டியிலுள்ள தங்களது வீட்டிற்கு இரு தினங்களுக்கு முன்பு வந்தனர்.
அப்போது திடீரென்று நள்ளிரவில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் உடனே அருகில் உள்ள உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை எடுத்து சென்றனர். குழந்தைக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழந்தை சில மணி நேரத்திற்கு முன்பபே பலியானதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை கேட்டபோது இறந்த குழந்தையின் முகத்தில் சில காயங்கள் இருப்பதாகவும், குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் அங்கிருந்து போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தப்பநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்தனர். அங்கிருந்து போலீசார் குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு உடற்கூறு ஆய்விற்காக எடுத்து சென்றனர்.இதுதொடர்பாக உத்தப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குழந்தையின் தாய் தந்தையான சின்னசாமி , சிவ பிரியங்கா ஆகிய இருவரிடமும் குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் அதிர்ச்சி அளித்தது.