சென்னை பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் குழு தேர்தல் நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
பச்சையப்பன் அறக்கட்டளைகான நிர்வாக குழு தேர்தல் நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட இவர், தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்துகிறார் என்பது குற்றச்சாட்டு. அறக்கட்டளை நடத்தும் கல்லுரிகளை சேர்ந்த 152 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கு விளக்கம் கேட்டு சண்முகம் நோட்டீஸ் அனுப்பியதற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அறக்கட்டளை நிர்வாக குழு தேர்தல் நடத்துவதற்கு மட்டுமே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் சண்முகம். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் இவருக்கு இல்லை என்று ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் நடத்த தனி அலுவலலை அரசு நியமிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.