ஜப்பான் நாட்டின் சொரியு நீர்மூழ்கிக்கப்பல் மற்றொரு சரக்குக் கப்பலுடன் மோதியதால் பசிபிக் பெருங்கடல் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.
ஜப்பான் நாட்டின் தெற்கு தீவான ஷிகோக்கு தீவில் உள்ள சொரியு நீர்முழ்கிக்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்த சம்பவம் குறித்து ஜப்பான் ஊடகம் கூறுகையில் அந்நாட்டின் நீர்மூழ்கிக் கப்பலான சொரியுவின் ஆன்டென்னா மாஸ்ட் அதிகமாக சேதமடைந்ததாகவும் , 3 பணியாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.மேலும் சொரியுவுக்கு தான் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
#Japan submarine Sōryū shown with damaged sail diving plane after collision with civilian ship https://t.co/IlzRxbrezK pic.twitter.com/r6Ob2x8kn8
— Joseph Dempsey (@JosephHDempsey) February 8, 2021
சொரியுவுடன் மோதிய சரக்கு கப்பல் ஹாங்காங் கொடி கட்டப்பட்ட சீனாவிவின் கிங்டாவிலிருந்து இரும்பு தாதுவை ஏற்றி செல்லும் சரக்கு கப்பலான ஓசான் ஆர்ட்டெமிஸ் ஆக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது .மேலும் இந்த ஓசான் ஆர்ட்டெமிஸ் ஜப்பானின் சொரியு நீர்மூழ்கி கப்பலை விட 17 மடங்கு அதிக அளவை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் இந்த விபத்தில் நீர்மூழ்கி கப்பலின் தகவல்தொடர்பு அமைப்பு சேதமடைந்ததால் விபத்து குறித்து குழுவினர் தகவலை தெரிவிக்க முடியாமல் அந்த இடத்திலேயே பல மணி நேரம் தவித்துள்ளனர் . பின்னர் கரைக்கு அருகே வந்ததால் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.