பாடகர் கே ஜே யேசுதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு 28 பாடகர்கள் இணைந்து அசத்தலான ட்ரிபியூட் கொடுத்துள்ளனர் .
தமிழ் ,ஆங்கிலம் ,ஹிந்தி, மலையாளம் ,தெலுங்கு ,கன்னடம் என பல மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர் கே ஜே யேசுதாஸ். இவர் சிறந்த பாடலுக்காக எட்டு முறை மத்திய அரசின் தேசிய விருதினை பெற்றுள்ளார். மேலும் பத்ம விபூஷண், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இன்று பாடகர் கே ஜே யேசுதாஸின் 81 வது பிறந்தநாள்.
Heartiest congratulations my dear Shweta ! What an amazing way to celebrate Das Anna’s birthday ! A beautiful composition my you sung by 28 singers !! Amazing !! @_ShwetaMohan_ @drkjyesudas https://t.co/8CLVd1y87L
— Shankar Mahadevan (@Shankar_Live) January 10, 2021
இந்நிலையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் யேசுதாஸ், கே எஸ் சித்ரா, ஸ்ரீநிவாஸ் ,எம் ஜி ஶ்ரீகுமார் ,சுஜாதா மோகன் ,பிஜூ நாராயணன் ,உன்னி மேனன், வேணுகோபா , மது பாலகிருஷ்ணன் ,ராஜலட்சுமி ,ஆலாப் ராஜு உட்பட 28 பாடகர்கள் இணைந்து அசத்தல் ட்ரிபியூட் கொடுத்துள்ளனர் . அனைவரும் இணைந்து ‘மண்ணின்டே புணியமம் காந்தர்வ கயாகா’ எனத் தொடங்கும் மலையாள பாடலை பாடியுள்ளனர். இந்தப் பாடலை ஹரிநாராயணன் எழுதியுள்ளார். பாடகி ஸ்வேதா மேனன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை சங்கர்மகாதேவன் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல் யூ டியூபில் வைரல் ஆகி வருகிறது .