பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மீது மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களதேஷின் டாக்காவில் உள்ள சிட்டலக் ஷியா நதியில் கடந்த 20 ஆம் தேதி அன்று சுமார் 50 பயணிகளுடன் படம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த படகின் மீது மோதியது. இந்த நிலையில் படகின் மீது கப்பல் மோதியதில் வேகத்தில் படகில் முன்பகுதி கப்பலில் சிக்கியுள்ளது. மேலும் படகு இழுத்து செல்லப்பட்டதில் பயணிகள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர் மற்றும் சிலர் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆற்றில் குதித்தனர்.
இதற்கிடையில் கப்பலை செலுத்துபவர் கப்பலை நிறுத்துவதற்கு முன்பக்கம் சிக்கிக் கொண்டிருந்த படகை உடைத்து நொறுக்கினார். இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சமீபத்தில் இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியிருந்த நிலையில் தற்போது இணையதளங்களில் அடுத்தாக சம்பவ இடத்தில் இருந்த மற்ற படகுகளில் பயணித்தவர்கள் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் கப்பலில் செலுத்துபவரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் நீர்வழி போக்குவரத்து துறையில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு தான் இந்த விபத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.