நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘மகான்’ திரைப்படம் OTT-ல் வெளியாகிறது
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள ‘மகான்’ திரைப்படத்தில் அவருடைய மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் வாணி போஜன் ,சிம்ரன் ,பாபி சினிமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் முடிந்துள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ‘மகான்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக போட்டியில் வெளியாக உள்ளது. இப்படம் வருகின்ற ஜனவரி 26-ம் தேதி OTT-ல் வெளியாகிறது. இதனால் ‘மகான்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.