Mission Impossible திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகரின் காரானது திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படங்களில் ஒன்று Mission Impossible. இந்த படமானது திரையரங்குகளில் ஓடி அமோகமான வசூலையும் மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் படத்தின் ஏழாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் நடிகரான டாம் க்ரூஸ் அவர்கள் பிரிட்டன் நாட்டில் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரின் BMW X7 கார் திருடப்பட்டுள்ளது.
அதிலும் ஆயிரம் பவுண்டுகள் மதிப்புள்ள உடைமைகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது Birmingham பகுதியில் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனையடுத்து டாம்மின் வாகனத்தில் மின்னணு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் காவல்துறையினர் வாகனத்தை மீட்டுள்ளனர். இருப்பினும் காரில் உள்ள உடைமைகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.