தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியில் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டித் தேர்வுகள் அந்த துறைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு பணி நியமனம் செய்யப்படுவார்கள். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. கடந்த ஆண்டுகளில் வெளிமாநிலத்தவர்கள் அரசுப்பணிகளில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து தமிழ் மக்களுக்கு அரசு பணிகள் வழங்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தமிழ்வழி தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெறுவது அவசியம். தற்போது தமிழ் மொழி தேர்வின் பாடத்திட்டங்கள் மற்றும் விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். டிஎன்பிஎஸ்சி தொகுதி-1, 2 மற்றும் 11A போட்டித் தேர்வுகளில் முதன்மை தேர்வுடன் விரிந்துரை தெரிவிக்க நடத்தப்படும்.
இந்த தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். மேலும் தொகுதி 1, 2, 11A ஆகிய தேர்வுகளின் தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படும். தொகுதி 3 மற்றும் 4 ஆகிய ஒரே நிலைகொண்ட தேர்வில் தமிழ் மொழி தேர்வானது தகுதி மதிப்பீடு தேர்வாக நடத்தப்படும். இந்த தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். ஒரே நிலைகொண்ட தேர்வில் தமிழ் மொழி தேர்வானது, பகுதி அ என கொள்குறி வகையில் 150 மதிப்பெண்களுக்கு தகுதித் தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.