Categories
சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிக்கிய நெல்லை…. ! ”இன்று 50 பேருக்கு கொரோனா” 200யை நெருங்கும் பாதிப்பு …!!

நெல்லையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நெல்லையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்ட்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என மாவட்டத்தின் அருகே இருக்கக்கூடியவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

இந்த நிலையில் இதுவரைக்கும் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ஒருவர் உயிரிழந்ததால் 72 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் மகாராஷ்டிரா மாநிலம், வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |