நெல்லை வீர தம்பதியினர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாததால் குற்றத்தை ஒத்துக்குமாரு காவல்துறையினர் மிரட்டுவதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கடையம் முதிய தம்பதியை தாக்கி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 15 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கொள்ளையர்களை கைது செய்வதற்கு பதிலாக தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் மிரட்டுவதாக கல்யாணபுரம் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அவர்களிடம் ஊர் மக்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த 11ம் தேதி கடையத்தில் வீட்டிலிருந்த முதியவர்களை தாக்கி முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் 4 சவரன் நகைகளை பறித்துச் சென்றனர்.
இதையடுத்து முகப்பில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.கொள்ளையர்களை விரட்டி முதிய தம்பதிக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவித்தது இந்நிலையில் இன்றைய தினம் வரை குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.