சென்னை சென்ட்ரலில் உள்ள புகழ்பெற்ற பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆயுத பூஜை பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் சென்னை சென்ட்ரலில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை முதலே கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள் தங்களது புது வாகனங்களை கோவில் முன் நிறுத்தி பூஜையிட்டதுடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பாதுகாப்பு நடவடிக்கையாக பக்தர்கள் முகக் கவசங்கள் அணிந்தும் பாதுகாப்பான இடைவெளி யோடும் பூஜையில் பங்கேற்றனர்.