மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது பெட்ரா 105 வயது பாட்டிகு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மத்திய அரசு பல்வேறு கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் மற்றும் பல்வேறு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு நேற்று பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இந்த பத்மஸ்ரீ விருதுகளில் இடம் பெற்றவர்களில் 105 வயது பாப்பம்மாள் பாட்டியும் ஒருவர் ஆவார். இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதை கௌரவித்து மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது.
இந்த பாட்டி விவசாயம் மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த வயதான காலத்திலும் இப்படி சுறுசுறுப்பாக செயல்படும் இந்த மூதாட்டியினை பார்த்து வளரும் இளைஞர்களும் கற்று கொள்ள வேண்டும். மேலும் பாட்டியின் இந்த சேவை மேலும் தொடர வேண்டும். இதையடுத்து இந்த பாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.