Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING NEWS: சமஸ்கிருதத்திற்கு ரூ.1,488 கோடி, தமிழுக்கு ரூ.74கோடி: பரபரப்பு தகவல்!!

செம்மொழிக்கான தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கரூர் எம்பி ஜோதிமணியின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்த பதிலில்,  நிதி ஒதுக்கீடு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்துக்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழை வளர்ப்பதற்காக சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு 8 ஆண்டுகளில் 74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருத மொழிகளை வளர்க்க […]

Categories
உலக செய்திகள்

இருமல் மருந்தை கொடுத்ததால் 18 குழந்தைகள் பலி… உஸ்பெகிஸ்தான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!!

இருமல் மருந்து கொடுத்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள ‘மேரியன் பயோடெக்’ எனும் நிறுவனம் “டாக்-1 மேக்ஸ்” என்னும் இருமல் மருந்தை தயாரித்துள்ளது. இந்த இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆய்வக பரிசோதனையில் எத்தலின் கிளைகால் எனும் நச்சுப்பொருள் இருப்பதாகவும் உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் நடிக்கும் “ஏகே 62” படம் எப்படி இருக்கும்?…. விக்னேஷ் சிவன் பதில்…..!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பின் 3-வது முறையாக நடிகர் அஜித்குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்  கூட்டணி மீண்டுமாக இணைந்துள்ள படம் “துணிவு”. ​இந்த படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. இதையடுத்து லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள “ஏகே 62” படத்துக்கு நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தை குறிப்பிட்டு விஜய்யின் மார்க்கெட் […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா… “சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு கிடையாது”… ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது  குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.  இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியதாவது, “சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நாட்டிற்குள் அனுமதிக்கும் விதிகளில் ஆஸ்திரேலியா எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும் சுகாதார நிபுணர்களிடமிருந்து நாங்கள் தகுந்த ஆலோசனைகளை தொடர்ந்து பெறுகிறோம். இதனையடுத்து உலகெங்கிலும் பரவி வரும் புதிய […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஜனவரி 8-ம் தேதி முதல்… மீண்டும் பாஸ்போர்ட் வழங்கும் பணி தொடக்கம்… வெளியான அறிவிப்பு…!!!!!

சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி எனும் பெயரில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு விட்டது. மேலும் வருகிற 8-ம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. கடந்த 2020 -ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சீனாவில் கொரோனா தொற்றால் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வருகிற ஜனவரி 8-ஆம் தேதி முதல் பாஸ்போர்ட்டுகள் வழங்கும் பணி தொடங்க உள்ளதாக சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் சீன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக, அதிமுகவுக்கு மாற்று பிஜேபியே… பரபரப்பாக பேச ஆரம்பிச்ச மக்கள்… தமிழகத்தில் தாமரை மலரும்…. ஹேப்பியில் தேசியவாதிகள்!!

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜக கட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய போது, சகோதரர்களே இது ஒரு சின்ன நிகழ்ச்சி தான். இது ஒரு பெரிய மாநாடு கிடையாது, பொது கூட்டம் கிடையாது. ஆனால் இதை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுதுதான் கட்சினுடைய உண்மையான வலிமை நமக்குத் தெரிகிறது. மேடையில் இருந்து பார்க்கும் பொழுது  சாதாரண பொதுமக்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள். கட்சில புதுசா உறுப்பினராக சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியில் நானும் இணைந்து பாடுபட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க எப்போது கல்யாணம் பண்ண போறீங்க?…. நடிகை த்ரிஷா சொன்ன விஷயம்….!!!!

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி ஆகும். இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நாளை டிச.30 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகை த்ரிஷா  “எதற்கும் பயப்படாத கதாபாத்திரம் என்பதால் “ராங்கி” என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நான் ஆக்சன் காட்சிகளில் நடித்து இருக்கிறேன். கொரோனாவுக்கு பின் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள் அதிகரித்துள்ளது. நான் அரசியல் கட்சியில் இணையப்போவதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடா…! ஜாதி வேண்டாம் என்கிறாரே… நாங்க கோச்சுக்க மாட்டோம்… சீமான் அரசுக்கு கோரிக்கை!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  வாக்கு கேட்கும் போது இதே போல் பல்லாயிர கணக்கான மக்கள்  கூடியிருந்த மேடையில் அன்பு மக்களே உங்கள் மகன் சொன்னேனே… ஒரு தாழ்த்தப்பட்ட தமிழ் இளைஞனை நிறுத்திட்டேன். நான் கேட்டேன்.  இவன் என் தம்பி. இவன் தமிழன் என்றால் எனக்கு ஓட்டு போடு. எனக்கு இவன் தாழ்த்தப்பட்டவன் என்று பார்த்தால்,  போட்டுறாத உன் ஓட்டு, எனக்கு தீட்டு என்று பேசினேன். இன்னும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் வந்த பரபரப்பு தீர்ப்பு… டன்னுக்கு C.M ஸ்டாலின் எடுத்த முடிவு… மாஸாக பேசி மகிழும் கே.என் நேரு!!

அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்றைக்கு கிறிஸ்துவ பேராயர்கள்,  இஸ்லாமிய பெருமக்கள் எல்லோரும் உரையாற்றினார்கள். இந்த அரசு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கின்ற அரசாக நடந்து கொண்டிருக்கிறது என்று….  நான் சேலத்தில் சொன்னது போல் சொல்கிறேன்…  இங்கு வந்திருக்கிறவர்களுக்கு….  இந்த அரசு  உங்களுடைய அரசாக….  நிச்சயமாக இந்த பகுதியில் இருக்கின்ற இஸ்லாமிய பெருமக்களுக்கு நான் சொல்கிறேன்…. பாராளுமன்றத்திலே எந்த சட்டம் கொண்டு வந்தாலும்,  திராவிட முன்னேற்றக் கழகம்…  தளபதி அவர்கள் சிறுபான்மை மக்களுக்காக இருப்பார் […]

Categories
தேசிய செய்திகள்

பதிவு செய்யப்பட்ட பழைய வாகனங்களை வாங்குவதில் புதிய விதிமுறைகள் அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

இந்தியாவில் மறு விற்பனைக்கான கார் சந்தை நல்ல வளர்ச்சியை நோக்கி செல்லும் நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வருகை கூடுதல் ஊக்கத்தை நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட கார்களை வியாபாரிகள் மூலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், வெளிப்படை தன்மையை மேம்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட கார்களை வாங்குவதற்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வியாபாரிகளின் நம்பகத்தன்மையை உறுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞரிடம் முரண்பட்ட பேராசிரியர்… ஆனாலும் கட்சியை விட்டு போகல… ஏன் தெரியுமா ? பரபர தகவல்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் இடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி, உங்களுடைய சமகால இயக்கத்தினுடைய தோழர்கள் யாரை நம்பி ? யாரை எண்ணி ? நீங்கள் பெருமை அடைகிறீர்கள் ? என்று சொன்னபோது,  அதற்கு ஏன் ? என்று கேட்டபோது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடனடியாக சொன்ன பதில்… நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மேடை ஏறிவந்து Annamalaiயை என்ன பண்ணீடுவீங்க..? சும்மா விடுவோமா… GeethaJeevanக்கு எதிராக கரு.நாகராஜன்..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், அழுகிய முட்டை இருக்கிறது என இந்த பேச்சு தொடங்கியது. இது பிஜேபி மட்டும் சொன்ன குற்றச்சாட்டு அல்ல, எல்லா பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, கடலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஒவ்வொரு பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படுகின்ற முட்டை எல்லாம் அழுகிய முட்டையாக இருக்கிறது என்பது செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திட்டமிட்டு இந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்காததை போலவும்,  அதைப்பற்றி எங்களுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் 67-வது திரைப்படத்தின் சூட்டிங் எப்போது?…. வெளியான புது அப்டேட்…..!!!!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய “வாரிசு” படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கு பின் விஜய் மீண்டுமாக லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார். விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் இப்படம் உருவாக இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்பாக தளபதி விஜய் நடிக்கும் 67-வது திரைப்படத்துக்கு வில்லனாக முதலில் நடிகர் பிருத்வி ராஜ் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. அதன்பின்  அவர் தேதி பிரச்சனையில் விலகியதால், நடிகர் விஷால் வில்லனாக இணைந்துள்ளதாக பேசப்பட்டது. அதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லாயக்கு இல்லாத தமிழக அரசு… தூங்கிக் கொண்டிருக்கிறதா என ஜெயக்குமார் விமர்சனம்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஏவா வேலு என்ற  அமைச்சரின் அறிக்கையை பாருங்கள். எப்படி எல்லாம் நிர்வாகத்தை நடத்த தெரியாத, ஒரு லாயக்கு இல்லாத, ஒரு அரசாங்கம் இன்றைக்கு ஆண்டு கொண்டு இருப்பதற்கு அவர் ஒப்புதல் வாக்குமூலமே போதும்.  அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருக்குக்கீன்றது? தூங்கிக் கொண்டிருக்கிறதா ? ஒரு பொருளை  கொள்முதல் செய்தால் ? இது சரியா ? அப்படி இருந்தால் வாங்குவோம். இல்லை என்றால் வாங்க மாட்டோம். அவரே சொல்கிறார்… வெல்லம் […]

Categories
உலக செய்திகள்

இருமல் மருந்தால் 18 குழந்தைகள் மரணம்…. உஸ்பெகிஸ்தானில் பெரும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் உள்ள நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோ டெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 syrup இன்று இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதன் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்தை ஆய்வகத்தில் சோதித்ததில் எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் மருந்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை மருத்துவர்களின் பரிந்துரையின்றி பெற்றோர்கள் மருந்தகத்தில் வாங்கி இருக்கலாம் அல்லது மருந்தகத்தின் பரிந்துரையின் படி […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு: மேலும் 2 பேரை தட்டி தூக்கியது NIA!!

கோவையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் குண்டு வெடித்த சம்பத்தில் ஏற்கனவே 9 பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். முதல் கட்டமாக இந்த சம்பவம் நடந்தவுடன் கோவை மாநகரப் போலீசார் 6 பேரை கைது செய்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மேலும் மூன்று பேரை NIA அதிகாரிகள் கைது செய்தார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

அட அப்படியே ஜொலிக்குதே!…. சீரடி சாய்பாபாவுக்கு இப்படியொரு காணிக்கையா?…. வாயடைத்துப்போன பக்தர்கள்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியிலுள்ள உலக பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலுக்கு பல நாடுகளிலிருந்தும் வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த கோயிலில் பல வேண்டுதல் மற்றும் கோரிக்கைகளை வைக்கும் பக்தர்கள் அது நிறைவேறியதும் தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். மேலும் சிலர் தங்கத்தால் ஆன தலைப்பாகையினை காணிக்கையாக செலுத்துகின்றனர். அதன்படி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பக்தர் கனாரி சுபாரி பட்டேல் என்பவர் வைரக்கற்கள் பதித்த தங்கத்தால் செய்யப்பட்ட கிரீடத்தை சாய்பாபா […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணிகள் பராமரிப்புக்காக “ஸ்வஸ்த்கர்ப்” செயலி…. என்னென்ன நன்மைகள் தெரியுமா?…. இதோ உடனே பாருங்க….!!!!!

ஐ.ஐ.டி ரூர்க்கி மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணைந்து கர்ப்பிணி பெண்களின் பராமரிப்புக்காக செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. “ஸ்வஸ்த்கர்ப்” எனும் இச்செயலியை பிரதமரின் ஸ்வஸ்த் பாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கி இருக்கின்றனர். இந்த செயலி மருத்துவ வசதிகளானது குறைவாகவுள்ள கிராமப் பெண்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த செயலியின் வாயிலாக ஆன்லைனில் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். அத்துடன் உரிய நேரத்தில் மருத்துவரை அணுக பரிந்துரை செய்யும். மருத்துவ பரிசோதனைகளின் அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

“துனிஷா சர்மா தற்கொலை வழக்கு”…. முன்னாள் காதலருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. கோர்ட்டு உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் இந்தி சீரியல் நடிகையான துனிஷா சர்மா(21) சென்ற 24-ம் தேதியன்று சூட்டிங் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். “அலிபாபா தாஸ்தென்- இ- காபுல்” என்ற தொடரில் தன் முன்னாள் காதலன் ஷீசன் முகமது கானுடன் துனிஷா சர்மா நடித்து வந்த நிலையில், திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மகளை தற்கொலைக்கு தூண்டியதாக ஷீசன் மீது துனிஷா சர்மாவின் தாயார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பின் சென்ற 25-ம் தேதியன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் இயக்குனர்களுக்கு…. லோகேஷ் கனகராஜ் சொன்ன முக்கிய அட்வைஸ்…..!!!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய “வாரிசு” படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கு பின் விஜய் மீண்டுமாக லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார். விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் இப்படம் உருவாக இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேர்காணலில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் “லோகேஷ் கனகராஜ் போன்று இயக்குநராக விரும்புபவர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன..?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது “எந்த அறிவுரையும் கேட்காதீர்கள். மேலும் நீங்கள் […]

Categories
மாநில செய்திகள்

உலகத்தில் தலை தூக்கும் புதிய கலாச்சாரம்.. “பிளட் ஆர்ட் நிறுவனங்களில் ஆய்வு”… அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை…!!!!!!

திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் கொரோனா பரிசோதனை பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும் சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 24-ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டிருந்த பதிவில் சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் சென்னை…… “ஒரே கார்டில் மெட்ரோ ரயில், பேருந்து சேவை”…. இனி பயணிகளுக்கு டபுள் டிராவல் ஜாக்பாட்….!!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது நீல வழித்தடத்தில் விம்கோ நகர்  ,பணிமனை முதல் விமான நிலையம் வரையிலும், பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கி வருகிறது. இதைத் தவிர புதிதாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவை 2026-ம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் மூலம் சிங்கிள் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிரம் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் திருச்சி பயணம்…. மொத்தம் 3 பிளான்கள்… என்னென்ன தெரியுமா….? இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இன்று முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் நடைபெறும் மூன்று முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் அதன்படி இன்று காலை 9:45 மணி அளவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவங்க என்ன செஞ்சாலும் நாம டஃப் கொடுக்கணும்”…. CM ஸ்டாலினின் பலே வியூகம்…. வெற்றியை நெருங்கும் திமுக?….. ஷாக்கில் பாஜக..!!!!

தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவில் மொத்தம் 23 அணிகள் இருக்கிறது. இந்த 23 அணிகளின் மாநில நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட 6 குழுக்களின் உறுப்பினர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுக கட்சிக்கு மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி விரைவாக முடிக்க வேண்டும். அதன் பிறகு 23 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க துணை பொதுச்செயலாளராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மா.செ.க்களுக்கு ஜாக்பாட் பரிசு காத்திருக்கு?…. எடப்பாடியின் புதிய உத்தரவால் செம குஷி‌யில் அதிமுகவினர்….!!!!!

அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி 2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலை மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதில் அனைவரும் தீவிரமாக இறங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: இருமல் மருந்து குடித்த 13 குழந்தைகள் பலி…. மீண்டும் அதிர்ச்சி…!!!

உஸ்பெக்கிஸ்தானில் இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டாக்-1 மேக்ஸ் மருந்தை குடித்துதான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள மரியோ பயோடெக் நிறுவனம் இந்த மருந்தை தயாரித்து வருகிறது. இதில், எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள் இருந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இந்த மருந்து, மாத்திரைகள் திரும்பப்பெறப்பட்டன.

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் ஹீரோயின்களுக்கே டஃப்…! ஹார்லி டேவிட்சன் பைக்கில் கெத்து காட்டும் கனிகா..!!!

நடிகை கனிகா கெத்து காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்தவர்தான் நடிகை கனிகா. இவர் மிஸ் சென்னை எனும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றதால் திரையுலகில் நுழைய ஒரு காரணமாக இருந்தது. கடந்த 2002ஆம் வருடம் 5 ஸ்டார் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு குரல் கொடுத்தது இவர்தான். இவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும் டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் […]

Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கு “இது தேவையில்லை”…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!

மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில்  தடுப்பூசி பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா பூஸ்டர் டோஸ் எடுப்பது குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள் நாசி தடுப்பூசியைப் பெற வேண்டாம் என்றும், நாசி தடுப்பூசியில் ‘ஆன்டிஜென் சிங்க்’ இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட வகை ஆன்டிஜெனை மீண்டும் மீண்டும் உடலில் செலுத்தினால், உடல் எதிர்வினை செய்யாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் மூக்கில் தடுப்பூசி போடலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! ஆன்லைனில் பகுதி நேர வேலை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தே ஒரு சில நிறுவனங்களுள் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் போலியான விளம்பரத்தை கொடுத்து வீட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து ஏமாற்றி மோசடி செய்து வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள், 20 சிம்கார்டுகள், 26 ஏடிஎம் கார்டுகள், 37 வங்கி […]

Categories
மாநில செய்திகள்

13 நாட்கள் காசி, கயாவுக்கு யாத்திரை ரயில்…. சுற்றுலா போக நீங்க ரெடியா?…. உடனே இதை பண்ணுங்க….!!!

தை அமாவாசை முன்னிட்டு காசி மற்றும் கயாவுக்கு யாத்திரையில் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாரத் கெளரவு ரயில் திட்டம் தனியார் பங்களிப்புடன் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி தமிழகத்திலிருந்து காசி, கயா, காமாக்யா உள்ளிட்ட தளங்களை காணும் விதமாக யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரையில் இருந்து புறப்படும் யாத்திரையில் திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை,காட்பாடி மற்றும் சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படும். மேலும் உத்தரப்பிரதேச […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடலில் விழுந்த ஹீரோயின்… காப்பாற்றிய ஜூனியர் எம்.ஜி.ஆர்… இயக்குனர் ஓபன் டாக்..!!!

கடலில் விழுந்த ஹீரோயினை ஜூனியர் எம்ஜிஆர் காப்பாற்றியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் வழி வாரிசு ராமச்சந்திரன் என்ற ஜூனியர் எம்.ஜி.ஆர் தற்போது இரும்பன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா தாத்தா நடிக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, சென்ராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தை கீரா இயக்க ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கின்றார். இந்த நிலையில் படம் பற்றி இயக்குனர் கூறியுள்ளதாவது, இது நரிக்குறவர் சமுதாய இளைஞருக்கும் ஜெயின் […]

Categories
தேசிய செய்திகள்

“அடுத்த 40 நாட்கள் எச்சரிக்கை” நாடு முழுவதும் உஷார்…. மத்திய அரசு அறிவுறுத்தல்…!!!

ஜனவரியில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா அலை ஏற்பட்டாலும் பாதிப்பின் கடுமை குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில் கொரோனாவின் BF7 பரவல் வேகமெடுத்த நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களில் 39 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது BF7 வகையா என்பது கண்டறியவில்லை. இந்நிலையில், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு மிக முக்கியமான நாட்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், முந்தைய […]

Categories
மாநில செய்திகள்

தென்னை மர தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. காப்பீடு திட்டத்தில் சேர வேளாண்துறை அழைப்பு….!!!!

தமிழகத்தில் தென்னை மர தொழிலாளர்நலனை பாதுகாக்க தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தென்னை மரம் ஏறும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு அல்லது உடல் ஊனமடைந்தால் அவரின் வாரிசுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம், தற்காலிக முழு உடல் ஊனத்திற்கு 18000 ரூபாய், உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் செலவுக்கு 3000 ரூபாய், இறுதி சடங்கு செலவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

15 வகையான நுழைவுத் தேர்வு…. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

நீட் உள்ளிட்ட 15 வகையான நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் விளக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்டத்திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக நீட் மற்றும் JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2023 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு நெல் அறுவடை அதிகரிக்கும் என்பதால் நேரடி கொள்முதல் நிலையங்களை அதிகம் தொடங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் நுகர்ப்பொருள் வாணிப கழகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக 100 கிலோ உடைய குவிண்டால் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை  வழங்கப்படும். பின்னர் அந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் […]

Categories
உலக செய்திகள்

Breaking: உலகம் முழுவதும் ட்விட்டர் முடக்கம்…. பயனர்கள் கடும் அவதி…!!!!

உலகம் முழுவதும் இன்று காலை 6.30 மணி முதல் ட்விட்டர் முடங்கியுள்ளது. ஏற்கனவே லாக்இன் செய்திருந்தவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால், புதிதாக ட்விட்டரை லாக்இன் செய்பவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக முடங்கியுள்ளதால், பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

போராடிக் கொண்டே இருங்கள்… நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள்… உருக்கமாக பதிவிட்ட சமந்தா..!!!

சமந்தாவின் பதிவு ரசிகர்களிடையே ஆறுதல் அடைய செய்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்போது மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் பேசியபோது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். இருப்பினும் மனம் தளர மாட்டேன் என உருக்கமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசி இருந்தார். இந்த நிலையில் பாடகி சின்மையின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன், ” […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடடே சூப்பர்..! இந்த பெண்ணை தான் திருமணம் செய்வேன்…. மனம் திறந்த ராகுல் காந்தி…!!!

காங். எம்பி ராகுல்காந்தி, தான் ஒரு பெண்ணையே விரும்புவேன், அவரது குணநலன்கள் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன் என கூறியுள்ளார். டெல்லியில் ஒற்றுமை பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தியிடம், அவரது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.  இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்த ராகுல், எனது பாட்டியார் இந்திராதான் எனது வாழ்வின் காதல், இரண்டாம் தாய். நான் ஒரு பெண்ணை தேர்வு செய்வேன். தான் விரும்பும் பெண் அம்மா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.50,000 வேண்டுமா…? ஜனவரி-15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…. மத்திய அரசு பம்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு PM யுவா 2.0 திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50,000 வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 6 மாதங்களுக்கு மாதம் 50,000 கிடைக்கும். நாட்டில் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் வளர்க்க இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய படைப்புகளை உலக அளவில் எடுத்துச் செல்லும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயர் கல்வித் துறை இணைந்து இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே சாட்டில் எடுக்கப்பட்ட “இரவின் நிழல்”… நினைத்து கூட பார்க்க முடியாத வசூல் சாதனை..!!!!

இரவின் நிழல் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா உலகின் பிரபல நட்சத்திரமான பார்த்திபன் அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். இத்திரைப்படம் புதிய சாதனை படைத்தது. தமிழ் சினிமா உலகில் பார்த்திபன் பல சோதனை படங்களை எடுத்து சாதனை படங்களாக்கி வருகின்றார். இவர் ஒத்த செருப்பு திரைப்படத்தை கையிலெடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர் தற்போது இரவின் நிழல் படத்தில் புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கின்றார். உலகிலேயே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சியில் சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு தல எழுநூறு கோடி ரூபாய் எனவும் வருடத்திற்கு 1400 கோடி ரூபாய் வரை என வருவாய் கிடைக்கின்றது. சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்தினால் ஐந்து சதவீதம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் சொத்து வரி செலுத்தினால் இரண்டு சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும். இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் ஜனவரி 12ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே இன்று இலவச டிக்கெட் வெளியீடு…. முந்தினால் முன்னுரிமை…. மறந்துராதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியாக உள்ளது. முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இதில் 1 முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த நிறுவனங்களுக்கு தடை…. மீறினால் நடவடிக்கை…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருந்துகள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படுக்கையை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக கொரோனாவால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. கடந்த 20 நாட்களாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டருக்கு வராதீங்க… படம் பார்க்க ஒருவர் கூட வரல… படம் பார்க்க நினைத்த நயன் ஏமாற்றம்…!!

தியேட்டருக்கு படம் பார்க்க வரவேண்டாம் என நயன்தாராவிடம் தியேட்டர் உரிமையாளர் கூறிவிட்டாராம். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் தற்போது கனெக்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை நயன்- விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தை அஸ்வின் சரவணன் திகில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் இப்படம் சில இடங்களில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் பலயிடங்களில் வரவேற்று கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி இருக்கின்றது. அண்மையில், நயன்தாரா படம் பார்க்க […]

Categories
உலக செய்திகள்

Breaking: வெள்ளத்தில் மூழ்கி 29 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 12 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
மாநில செய்திகள்

“இது இல்லாமல் பில் கொடுத்தால்” உரிமம் ரத்து…. வணிக நிறுவனங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை…!!!!

ஜிஎஸ்டி இல்லாமல் வணிக நிறுவனங்கள் பில் கொடுத்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார். வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி இல்லாமல் பில் கொடுக்கக் கூடாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்வாக நலனுக்காக மதுரை பதிவுத்துறை மண்டலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் 5 புதிய சார் பதிவாளர் அலுவலங்கள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே…. உங்க குழந்தைகளுக்கான சிறந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி-5 ஆம் தேதி…. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் மாவட்டங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் .இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெரும்திருவிழா நடப்பது வழக்கம். இந்த வருடத்திற்கான மார்கழி திருவிழா கொடி ஏற்றத்தோடு தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டார்கள். ஜனவரி 5ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமல்…. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலரும் ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகின்றது. இந்த ஓய்வூதிய தொகைக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சதவீதம் வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி இனி அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய தொகையிலிருந்து குறிப்பிட்ட அளவிலான […]

Categories

Tech |