தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், நீங்கள் அளிக்கின்ற பாராட்டுகளை நான் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். அது நான் இன்னும் கவனமா, கூடுதலாக பணியாற்ற ஊக்கம் தருது. கடந்த ஆண்டு இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராக இந்தியா டுடே இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதைவிட தமிழ்நாடு நம்பர் ஒன் ஆவது தான் எனக்கு பெருமை என்று அப்ப நான் சொன்னேன். அதை மனசுல வச்சு பணியாற்றினோம். அதற்கு பலனாக கடந்த […]
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சி ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், பாஜக எதிர்க்கட்சியாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பீகாரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் கயா மாநகராட்சியில் சிந்தாதேவி என்ற பெண் துணை மேயராக வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 40 வருடங்களாக […]
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்தார். அதன் பிறகு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆப்ரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 போன்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த ஆபரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 திட்டத்தின் மூலம் மாநில முழுவதும் காவல்துறையினர் அதிரடி கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கஞ்சா […]
வடகொரியா முன்னெப்போதும் இல்லாத விதமாக தென்கொரிய பகுதிகளில் ஏவுகணை சோதனையை நடத்தி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் அதி நவீன ஏவுகணையான கண்டம் விட்டு கண்ட பாயும் ஏவுகணை உட்பட பல்வேறு ஏவுகணை ஏவி சோதனைகளை நடத்தியுள்ளது. இந்நிலையில் “வடகொரியா இன்று குறைந்தபட்சம் ஒரு குறிப்பிடப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென்கொரியா ராணுவம் கூறியுள்ளது”. மேலும் தென்கொரிய தீபகற்பத்தில் ராணுவ பதட்டங்கள் இந்த வருடம் கடுமையாக அதிகரித்துள்ளது. இது குறித்து தென் கொரிய அதிபர் […]
மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகிக்கு ஊழல் போன்ற பல வழக்குகளின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதி அன்று ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு, நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கியமான தலைவர்களை வீட்டு சிறையில் அடைத்தனர். ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டது, ஊழல் போன்ற பல வழக்குகளின் […]
உலகம் முழுவதும் நாளை 2023-ம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இன்று நள்ளிரவு 12 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தமிழக மக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து தன்னுடைய twitter பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனுடன் அனைத்து துறைகளிலும் எழுச்சியை […]
கார் விபத்திற்குப் பிறகு ரிஷப் பண்டைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை ‘ரியல் ஹீரோ’ என்று விவிஎஸ் லக்ஷ்மன் பாராட்டிய நிலையில், அந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் வெள்ளிக்கிழமை (நேற்று) காலை தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த போது பயங்கர விபத்தில் சிக்கினார். அவரது கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்து, நெற்றிக்கு மேல் வெட்டுக் காயம் ஏற்பட்டாலும், சரியான […]
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் தனது தாயின் செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தன்னை சிலர் கடத்தி வந்து அடைத்து வைத்திருப்பதாகவும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாக கூறி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் செல்போன் அழைப்பிற்கு வந்த […]
கீதாஞ்சலி பகிர்ந்த புகைப்படங்களில் செல்வராகவனின் புகைப்படம் இடம்பெறவில்லை. தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது […]
உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டின் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டின் ஆக்லாந்து நகரம் வானவேடிக்கை மற்றும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாக்லாந்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓன்று கூடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறி புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரளா அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அருகிலேயே விமான நிலையம் அமைப்பதற்கான புதிய அரசாணையை அரசு பிறப்பித்தது. […]
நாமக்கல் மாவட்டத்தில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் இன்று அதிகாலை வீட்டில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்டாசு வெடிபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50,000 நிதி […]
தேனி மாவட்டத்தில் குள்ளப்புரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த மே மாதம் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அந்த வழியாக ஊர்வலம் சென்ற பெண்களை ஒரு பிரிவினர் தரக் குறைவாக பேசியது மட்டுமல்லாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அந்த பாதை […]
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி மண்ணாக, மதச்சார்பற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க, தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்கணும். நம்மிடையே வெறுப்புணர்வை தூண்டி, நம்மை பிளவுபடுத்தும் சாதிய – மதவாத சக்திகளுக்கு எப்பவும் நாம் இடமளிக்கக்கூடாது. மொழியால், இனத்தால், தமிழர்கள் என்று உணர்வோடு ஒன்றிணைந்து வாழ்வோம். நல்லிணக்க மாநிலமாக இருந்தால் தான் சிறந்த மாநிலமாக ஆக முடியும். இன்றைய இளைய சமுதாயமானது படிப்பு , படிப்பு […]
சிம்புவின் ஐம்பதாவது திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. அண்மையில் வெந்து தணிந்தது காடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கு முன்னதாகவே பத்து தல திரைப்படத்தில் நடிக்க […]
சென்னை மெரினா கடற்கரையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் 151 மகளிர் உதவி மையத்தின் சார்பாக மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. இந்த மணல் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதி ஏற்போம்! என்னும் பெண்களின் பாதுகாப்பு உறுதிமொழி விழிப்புணர்வு” பதாகையில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, உயர்கல்வித்துறை […]
திருவண்ணாமலை, மதுரை, ராமேஸ்வரம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் -அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை -அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், மதுரை -அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் போன்ற கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். […]
நாளைய பஞ்சாங்கம் 01-01-2023, மார்கழி 17, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி இரவு 07.12 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 12.48 வரை பின்பு பரணி. சித்தயோகம் பகல் 12.48 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் – 01.01.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உறவினர்கள் […]
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ராயியா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முட்டாள் கிளப் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூடநம்பிக்கைகள், ஊழல், போதை பொருள் மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இவர்கள் சமுதாயத்தின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த அமைப்பை கடந்த 25 வருடங்களுக்கு முன்பாக ராஜீந்தர் ரிக்கி என்பவர் உருவாக்கினார். அப்போது தகன மேடையில் கேக் வெட்டி […]
அவதார் 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு […]
கேஜிஎப் ஹீரோ மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கேஜிஎப். இத்திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் விரைவில் இதன் மூன்றாம் பாகத்தை எடுக்க போவதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கேஜிஎப் திரைப்படத்தின் ஹீரோ யாஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர், ஹர்திக் பாண்டியா மற்றும் சகோதரர் குர்ணால் பாண்ட்யா உள்ளிட்டோர் […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த செங்கரும்புகளை கூட்டுறவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன் பிறகு நவீன மயமாக்கப்பட்ட ரேஷன் கடைகள் […]
முன்னாள் போப்பான 16 ஆவது பெனடிக்ட் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். முன்னாள் போப் பெனடிக்ட் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 95… 2013 ஆம் ஆண்டில், இடைக்காலத்தில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த முதல் போப்பாண்டவர் ஆனார். முன்னாள் போப் 16ம் பெனடிக்ட், நீண்டகால நோயின் பின்னர் தனது 95வது வயதில் காலமானார் என்று வாடிகன் சனிக்கிழமை அறிவித்தது. வாடிகன் […]
தமிழகத்தில் புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டம் இன்று நள்ளிரவு தொடங்கப்படும் நிலையில், காவல்துறையினரும் அரசாங்கமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா பரவலின் காரணமாக சென்னையில் கடற்கரை மணலில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புத்தாண்டு பண்டிகையின் போது ஏராளமான இளைஞர்கள் மது அருந்திவிட்டு சாலையில் பைக் ரேஸில் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]
பிரபலமான முன்னாள் மல்யுத்த வீரர் Jacin strife (37). இவர் சில காலமாக உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த நிலையில், திடீரென மரணம் அடைந்துள்ளார். முன்னாள் மல்யுத்த வீரர் ஸ்டிரைஃப் உயிரிழந்ததை அவருடைய சகோதரர் சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். அதோடு நிதி நெருக்கடியில் தவிக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்காக நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும்WWE ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த மல்யுத்த வீரர் உயிரிழந்ததை நடித்து மிகுந்த கவலையில் இருப்பதோடு, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.
ரிஷப் பந்தை காப்பாற்றிய ஹீரோ சுஷில் மான், கார் விபத்தில் இருந்து பயங்கரமான தருணங்களை நினைவு கூர்ந்தார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளான முழு சம்பவத்தையும் பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் விவரித்தார். டிசம்பர் 30ஆம் தேதி (நேற்று) வெள்ளிக்கிழமை அதிகாலை இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் பயங்கர கார் விபத்தில் சிக்கிய பிறகு அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் கூறினார். […]
கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக […]
இயக்குனர் தங்கர் பச்சான் பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன் நடிப்பில் சங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். தங்கர் பச்சான் பேட்டி அளித்த போது எப்போதும் ஒரு தரமான படைப்பு, தனக்கு தேவையானதை தானே தேடிக் கொள்ளும். அதுபோலத்தான் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படமும் இருக்கின்றது. இத் திரைப்படம் ஏதோ ஒன்றை செய்யப் போகின்றது என்பது மட்டும் […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தி,ல் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாரிசு படத்தில் இருந்து […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூர்ணா. இவர் தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த பூர்ணா கடைசியாக பிசாசு 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி நடிகை பூர்ணாவுக்கும் துபாய் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், […]
வாரிசு திரைப்படத்தை பார்த்த விஜய் மகிழ்ச்சியில் இருக்கின்றாராம். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் […]
தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் பாஜக அண்ணாமலை பற்றி ஒரு ட்வீட் பதிவு போட்டிருந்தார். அதில் கடந்த 10-ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவரும், இளைஞர் அணியின் தேசிய தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது அண்ணாமலை பொறுப்பே இல்லாமல் விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறந்து விளையாடியுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இதனால் விமானத்திலிருந்து பயணிகள் மீண்டும் இறக்கிவிடப்பட்டு, அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டது. மன்னிப்பு கடிதம் எழுதுவது பரம்பரை பழக்கம் என்பதால் அன்று மன்னிப்பு கடிதம் […]
சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு 1,000 உரிமைத்தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு […]
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்று வாழ்வதல்ல வாழ்க்கை, ஆண்டொன்று போனால் வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த வகையில் கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்ட பொறுத்த வரைக்கும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும், எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது. […]
வெள்ளிக்கிழமை அதிகாலையில் விபத்திற்குப் பிறகு ரிஷப் பந்திற்கு உதவிய ஹரியானா ரோட்வேஸ் பேருந்து ஓட்டுநருக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ‘நற்கருணை வீரன்’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் வெள்ளிக்கிழமை (நேற்று) அதிகாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார். அவரது சொகுசு கார் சாலையில் உள்ள டிவைடரின் மீது மோதி தீப்பிடித்ததில், அதிசயமாக உயிர் தப்பினார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூரில் […]
கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய் நீரினை பயன்படுத்துவோர்க்கான சங்க தேர்தல் தமிழ்நாடு பாசனதாரர்கள் நீர் பாசன அமைப்பு சார்பாக நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்தலை உதவி ஆட்சியர் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்தினார். மேலும் உதவி அதிகாரியாக விக்னேஸ்வரன் இருந்தார். இந்த வாக்குப்பதிவானது காலை 6 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இதற்காக 21 பூத் அமைக்கப்பட்டிருந்தது. இதில் வாக்களிக்க 34 கன்மாய் […]
கொள்ளிடம் ஆற்று மதகுப் பகுதியில் சிக்கிய வாலிபரை தீவிரமாக தேடும் பணி நடந்து வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே இருக்கும் திருவைகாவூர் தெற்கு தெருவில் வசித்து வரும் ரவி என்பவரின் மகன் தினேஷ். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மாடுகளை ஓட்டிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றிருக்கின்றார். அப்போது மாடு தண்ணீரை தாண்டி செல்வதை பார்த்த தினேஷ் தண்ணீரை கடக்க முயன்றார். இதில் தினேஷ் மதகு பகுதியில் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் […]
சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களின் 164 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் இன்றோடு ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்தும், தேர்தல் அறிக்கையில் 311ஐ நிறைவுறுத்த வலியுறுத்தியும 5 நாட்களுக்கு முன்பு டிபிஐ வளாகத்தில் இந்த போராட்டம் தொடங்கியது. 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், இந்த போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நேற்று அமைச்சர்களுடன் பேச்சு […]
அரிசி இருப்பில் முரண்பாடு கண்டறியப்பட்டதால் ரேஷன் கடை ஊழியருக்கு 26,000 அபராதம் விதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அகரதிநல்லூர், இளவங்கார்குடி, விளம்பல், தியானபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடைகளில் எடை எந்திரம் சரியாக இயங்குகின்றதா? எனவும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்தும் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது தண்டலை ஊராட்சி விளமல் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் […]
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை இருக்கிறது. இந்த அணை மொத்தம் 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை இருக்கிறது. இங்கு பெய்யும் மழையின் அளவை பொறுத்துதான் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின் போது பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்த நிலையில், தற்போது நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 104.10 […]
குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் நேற்று இரவு கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ப்ரமுக் சுவாமி மகாராஜா சதாப்தி விழாவில் கலந்து கொண்டு சிலர் பேருந்தில் திரும்பி கொண்டு இருந்தனர். இந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 9 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த […]
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாகவுள்ள தலைமை காவலர்(Ministerial) மற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் (Steno) பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1,458 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Central Reserve Police Force பதவி பெயர்: Head Constable (Ministerial) and ASI (Steno) மொத்த காலியிடம்: 1,458 சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100 வயதுவரம்பு: 18 – 25 Years விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 […]
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என முகவரியிட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக அலுவலகம் ஏற்க மறுத்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள ரிமோட் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிப்பதற்கு நேற்று அதிமுகவிற்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர் (co-ordinater), இணை ஒருங்கிணைப்பாளர் (jt. co-ordinater) என பதிவிட்டு அந்த கடிதம் என்பது அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. அதன்பிறகு இலவச வேட்டி மற்றும் சேலை குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இலவச வேட்டி, சேலை வழங்கப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது […]
ஜனவரி 31ஆம் தேதி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்..ஒரு கோடிக்கும் அதிகமான ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்காத காரணத்தால் தற்போது ஜனவரி 31 ஆம் தேதி வரை இணைப்புக்கான காலகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 87,91,000 இணைப்புதாரர்களும் ஆன்லைன் மூலமாக 74, 67,000 மின் […]
தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்றவைகள் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களாக இருக்கிறது. இந்த கோவில்களில் இனி நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, தீயணைப்பு துறை புதிய டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஊர்க்காவல் படை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும், காவல்துறை பொது பிரிவு ஐஜியாக செந்தில்குமாரும், கடலோர பாதுகாப்பு குழுமம் டிஐஜியாக கயல்விழியும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக ஆசியாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக காவல்துறையின் தலைமை ஏடிஜிபி வெங்கட்ராமன் இனி கூடுதல் பொறுப்பாக […]
டெல்லி-டேஹ்ராடூன் நெடுஞ்சாலையில், சொகுசு கார் மோதி தீப்பிடித்ததில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கு உதவிய ஓட்டுநர் சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் ஆகியோரை ஹரியானா ரோட்வேஸ் நேற்று கவுரவித்தது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்க்கி அருகே நடந்த சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம் அடைந்தார். அந்த இடத்திலேயே உதவிய ஹரியானாவை சேர்ந்த இருவர் ரிஷப் பந்தின் உயிரைக் காப்பாற்றுவதில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். விபத்து […]
கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு பண்டிகைகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதற்காக புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரிக்கு வருகின்றனர். புத்தாண்டு பண்டிகை காரணமாக புதுச்சேரியில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு வருவார்கள் என்ற காரணத்தினால் கடற்கரை சாலை முழுவதும் கடலில் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் […]