சென்னை தரமணியில் எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியானது அமைந்துள்ளது. அதனை ஒட்டி பிலிம் சிட்டி உள்ளது. இங்கு போலீஸ் நிலையம், பஸ் நிலையம், பங்களா, குடிசை, பாலம் ஆகிய நிரந்தர அரங்கங்கள் இருக்கிறது. இதுதவிர்த்து நவீன இண்டோர் ஸ்டூடியோவும் உள்ளது. எனினும் கடந்த சில வருடங்களாக இங்கு பராமரிப்பு இல்லாததால் செட்டுகள் வீணானதுடன், படப்பிடிப்பு பகுதிகளில் புல், புதர்கள் முளைத்து இருக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக திரைத் துறையினரால் வைக்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு […]
மைசூருக்கு சென்று கொண்டிருந்தபோது பிரதமர் சகோதரிகளின் கார் விபத்தில் சிக்கியதில் அவர் காயம் அடைந்தார். பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி அவரது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் உட்பட 6 பேர் மைசூர் வந்தனர். மைசூரில் இருந்து பந்திப்பூர் வனவியல் பூங்காவுக்கு சென்ற போது கார் விபத்தில் சிக்கியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவர் மீது மோதியதில் பிரகலாத் மோடி அவரது குடும்பத்தினர் காயம் அடைந்தனர். காயமடைந்த பிரகலாத் மோடி உள்ளிட்டோர் சிகிச்சைக்காக […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரளயம் ஏலஞ்சிபுதூர்காரர் தோட்டத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் பழனிச்சாமி குன்றி பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்தில் மக்காச்சோள அறுவடை பணிக்கு எந்திரத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து பழனிச்சாமியும் அறுவடை இயந்திர ஓட்டுநர் நாகேஷ் […]
மத மாற்ற சம்பவங்களை தடுக்க கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பிரபல மந்திரி கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷரத்தா என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொலை செய்தார். பின்னர் அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லி முழுவதும் வீசினார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த கொலைக்கு பின்னால் […]
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைந்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தாழ்குனி பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவர் 2 பெண்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ராஜாமணியை மனு கொடுக்க வைத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் இறந்துவிட்டார். எங்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து […]
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் முருங்கைக்காடு பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 50 ஆண்டாக சின்னவீரசங்கலியில் இருக்கும் எனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தேன். கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டதால் தோட்டத்து வீட்டில் வசிக்கிறேன். எனது மகன் எனக்கு […]
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா கடைசியாக நடித்த லைகர் திரைப்படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. எனினும் அவர் குஷி திரைப்படத்தில் உற்சாகத்துடன் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதை சென்ற 5 வருடங்களாக அவர் செய்து வருகிறார். அதன்படி இந்த வருடம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ரசிகர்களை சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கிறார். இது தொடர்பாக விஜய் தேவரகொண்டா கூறியதாவது […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாணிகவுண்டன்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டிற்கு எதிரே இருக்கும் 80 அடி ஆழ கிணற்றுக்குள் சரஸ்வதி திடீரென குதித்துவிட்டார். தண்ணீர் இல்லாமல் 1 அடிக்கு சேரும், சகதியுமாக இருந்த கிணற்றில் விடிய விடிய சரஸ்வதி உட்கார்ந்திருந்தார். நேற்று காலை கிணற்றுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டதால் அந்த வழியாக சென்ற பச்சையப்பன் என்பவர் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் போக்குவரத்து போலீசில் மாரிமுத்து என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே போக்குவரத்து பிரிவு போலீசில் மகாவீரன் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு மகாவீரன் போலீஸ் ஜீப்பில் மாரிமுத்துவை அவரது வீட்டில் விடுவதற்காக அழைத்து சென்றுள்ளார். அவர்கள் திருமுல்லைவாயில் கல்லறை நிறுத்தம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே கிடந்த மரக்கட்டை மீது ஏறி இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் […]
சொத்து வரி உயர்வு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் நிராகரிக்கபட்டுள்ளது. மாநகராட்சிகளின் தீர்மானங்கள் செல்லும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்தவும் உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது. மேலும் சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெறுவதற்கு வசதியாக மாநகராட்சி இணையதளங்களை மேம்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள இலஞ்சியில் இன்ஜினியரான காயத்ரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கம் பகுதியில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காயத்ரி தன்னுடன் வேலை பார்க்கும் ரகுராம், தினேஷ்குமார், அஸ்வின் ஆகியோருடன் காரில் கோவளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த காரை அஸ்வின் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பொன்மார் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் தொடரில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் இறுதியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று […]
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 29-ஆம் தேதி சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தபட உள்ளது. அதேபோல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் பற்றி அறிவுறுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் […]
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படும் கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் அரிசி வழங்கும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் சேவை திட்டங்களால் ஏற்படும் கூடுதல் பணி சுமையை ஈடு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏ.ஜி புதூர் பகுதியில் விக்ரம் சுதாகர் என்பவர் நண்டுவிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் திருநாவுக்கரசு பஞ்சாப்பில் இருக்கிறார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கரம்வீர், பங்கஜ் மித்தல் ஆகிய இருவரும் இயற்கை உரத்தை வாங்கி பஞ்சாபில் விற்பனை செய்து தருவதாக திருநாவுக்கரசிடம் தெரிவித்தனர். இதனை நம்பி திருநாவுக்கரசு அவர்களை விக்ரம் சுதாகருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் இயற்கை உரத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. […]
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு அரசு மேனிலைப் பள்ளியில் 177-வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக டி.ஜி.பி சைலேந்திரபாபு பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு நிகழ்ச்சியில் பேசியதாவது, “உலகில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கல்வி எனும் ஆயுதத்தை மாணவர்கள் கையில் எடுக்க வேண்டும். நெல்சன் மண்டேலா கூறியது போன்று உலகிலேயே சிறந்த ஆயுதம் கல்வி தான். அதனை மாணவர்கள் கையில் எடுங்கள். அதன்பின் உங்களை வளர்த்த தாய்க்கு நன்றி சொல்லுங்கள். […]
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த விசாரணையில் மாணவனை கைது செய்ததற்கு போலீசை கண்டித்து நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும், அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டி இருப்பதால் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு […]
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மழைக்கு வாய்ப்பு. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, சேலத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாயம் கிராமத்தில் கணேசன் என்பவர் சக்திவேல்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முரதியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிசுதன்(9), ஹரிஸ்னி(7) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சக்திவேல் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உறவினர்களுக்கு இறப்பு செய்தி சொல்லி, உடலை அடக்கம் செய்ய முயன்றனர். […]
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் கமல் மொபைலில் பயன்படுத்தும் ஒரு ரிங்டோனாக மன்சூர் அலிகான் நடனமாடி நடித்திருந்த சக்கு சக்கு ஒத்திக்கிச்சு என்ற பாடல் இடம்பெற்று அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது. இந்நிலையில் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூரின் தீவிரமான ரசிகர் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை திடீரென குமரவேலின் குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மதிப்பெண் சான்றிதழ்கள், […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருகிற ஜனவரி மாதம் 29-ஆம் தேதி தைப்பூச திருவிழா தொடங்குவதால் பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் பக்தர்கள் குழு உடன் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தார். நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் இரவில் தூங்கிவிட்டு மீண்டும் அவர்கள் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்வியுடன் வந்தவர்கள் […]
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இந்நிலையில் ஒரு பெண் தனது உறவினர்களுடன் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர் தேனி மாவட்டத்தில் உள்ள தென்கரையை சேர்ந்த சுதா என்பது தெரியவந்தது. அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2013-ஆம் ஆண்டு எனது மகன் விக்னேஸ்வரன் வெல்டிங் […]
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது வருகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் […]
சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி மத்திய, மாநில அரசுகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தின் போது சென்னை முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்த கொண்டாட்டங்களின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக சென்னை மாநகரம் முழுவதும் […]
ஈரோடு மாநகர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பாம்புகள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான இடங்களில் இருந்து பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விட்டதாக தகவல்கள் வந்தது. இதனால் பழையபாளையம், மாணிக்கம் பாளையம், வில்லரசன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் 17 பாம்புகள் பிடிபட்டன. அதில் 3 நாகப்பாம்பு, 14 சாரைப்பாம்பு. இதனையடுத்து […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசின் நலத்திட்டங்களுக்கு பக்க பலமாக இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 என்ற உச்ச வரம்பிற்கு […]
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலை வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு உரிய ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் 100 நாட்களுக்கு மேல் மாநில அரசு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கினால் தன் சொந்த நிதியிலிருந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக […]
சென்னையில் வெளியான டிஜிட்டல் விளம்பரம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் வணிக ரீதியிலான விளம்பர டிஜிட்டல் பேனர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலைய பாலங்களுக்கு கீழேயும் இது போன்ற டிஜிட்டல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை மெட்ரோ ரயில் நிலைய பாலத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எந்த பெண்ணுடனும் […]
அஜித்-சிவா ஆகிய இருவரும் இணைந்திருக்கும் திரைப்படம் “விஸ்வாசம்”. இதில் ஹீரோயினியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 2019-ல் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகியது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் இடம்பெற்ற தந்தை மகள் பாசம் பெரியதாக பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் கண்ணான […]
குஜராத் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் மகளின் ஆபாச வீடியோவை சக மாணவர் ஒருவர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்க எல்லை பாதுகாப்பு படை வீரர், அவருடைய மனைவி மற்றும் 2 மகன்கள் என 4 பேரும் தங்களுடைய மகளுடன் ஒரே பள்ளியில் படிக்கும் அந்த 15 வயது சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பிறகு சிறுவனின் பெற்றோரிடம் மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எல்லை பாதுகாப்பு படை வீரரின் […]
100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனை டேவிட் வார்னர் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட செயலாளர் – கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2024 ஆம் ஆண்டு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதிமுக பல அணிகளாக செயல்பட்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை சேர்க்கக்கூடாது என ஒரு தரப்பும், ஓபிஎஸ் […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஆனது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வாக்குவாதமானது ஏற்பட்டு இருக்கிறது. காரசாரமான ஆலோசனை நபிடைபெற்றுள்ளது. மாவட்டச் செயலாளர் சிலருக்கும், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் – சி.வி சண்முகம் ஆகியோருக்கும் மோதல் என தகவல் வெளியாகி உள்ளது.
உலக அளவில் பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவைகளுக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா முன்னெச்சரிக்கை […]
திருவெற்றியூர் கடற்கரையில் மாயமான நான்கு பேரை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மணலி அருகே அமைந்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனர் ஒருவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த நிறுவன ஒப்பந்ததாரரிடம் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் நேற்று […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]
இந்தியாவில் ஆதார் எண் உள்ள நிலையில் தமிழகத்தில் மாநில அரசினால் தனியாக எண் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு தளம் உருவாக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்களில் மக்கள் ஐடி (MAKKAL ID) அளிக்கப்பட உள்ளது. சமூக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐ.டி எண் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையில் புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் ஏழாவது வந்தே பாரத் ரயில் சேவை மேற்கு வங்க மாநிலம் […]
கொரோனா பரவல் தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டுமே பகிர வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 100 பேருடன் திங்கட்கிழமை காணொலி வழியாக கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பு தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டுமே மற்றவர்களுக்கு பகிர வேண்டும். ஏனென்றால் கொரோனா […]
அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வரக்கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருவது என்பது, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள், மாற்று கட்சிக்கு சென்றவர்கள் மிக முக்கியமாக ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக சென்றவர்கள் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து கூட்டத்தில் தொடக்கத்தில் இருந்து மிகவும் சூடான விவாதமானது தொடங்கி இருக்கிறது. இதில் மாற்று கட்சி, ஓபிஎஸ் ஆதரவாளராக சென்றுவர்கள், அமமுக சென்றவர் மீண்டும் அதிமுகவிற்கு வரும்போது அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒருதரப்பினரும், அதேபோல அவர்களை […]
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூட்டத்தில் பங்கேற்ற தென்காசி தெற்கு ஒன்றிய அதிமுக துணை செயலாளர் உச்சிமாகாளி என்பவரிடமிருந்து 1 லட்ச ரூபாய் […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எழுதிய ஊரக திறனாய்வு தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் https://dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். விடை குறிப்பில் ஏதாவது மாற்றம் இருந்தால் […]
சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 24-ஆம் தேதி முதல் ரேண்டம் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்.பி.சி.டி.ஆர் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தட்பவெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் கொரானா தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் […]
இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் “வாரிசு”. இப்படத்தில் ஹீரோயினியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சங்கீதா, ஷியாம், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உட்பட பல பேர் பங்கேற்றனர். அப்போது விழாவில் ராஷ்மிகா ரஞ்சிதமே […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
கர்நாடகாவில் கொரியர் அலுவலகத்திற்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கொரியர் அலுவலகத்திற்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது. இந்த சம்பவத்தில் ஊழியர் ஒருவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் கொரியர் அனுப்பியவரின் முகவரி மற்றும் விவரங்களை காவல்துறையினர் பெற்றுக்கொண்டனர். மேலும் கொரியர் […]
பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தாக்கல் செய்திருக்கிறார். பொங்கல் பரிசாக அரசு நல்ல விலைக்கு […]
உலகம் முழுவதும் தற்போது உருமாறிய பி.எப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறதா என்பது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கடந்த 3 […]