அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டது. இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, திமுக அரசின் மக்களுக்கு விடிவு ஏற்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் குறித்து […]
சமூகஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள வெள்ளைப் புலி முன் நடனமாடி, பெண் ஒருவர் அதை கடுப்பேற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்க் ஒன்றில் வெள்ளைப் புலியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதற்காக கண்ணாடியை பாதுகாப்பாக அமைத்து அதன் வழியே பார்க்க ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதற்கிடையில் அங்கு சென்ற குசும்புக்கார […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மாநில அளவில் மிகப் பெரிய மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்குங்கள் என்ற ஒரு உத்தரவை இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சொல்லியிருக்கிறார். விரைவில் மிகப்பெரிய மாநில மாநாடு நடத்துவதற்கான ஒரு முடிவும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் ? எந்த மாவட்டத்தில் ? […]
தனியார் மருத்துவமனையில் ரூபாய் 800, அரசு மருத்துவமனையில் ரூபாய் 325 ஆக நாசி கொரோனா மருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட உள்ளது. Bharat Biotech's nasal Covid vaccine to be priced at Rs 800 for private and Rs 325 for […]
செர்பியா நாட்டின் பைரோட் நகரில் இருந்து அம்மோனியா வாயுவை ஏற்றிக் கொண்டு சென்றிருந்த சரக்கு ரயில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த அம்மோனியா வாயு கசிந்து காற்றில் கலந்தது. இந்நிலையில் விஷவாயு கலந்த காற்றை சுவாசித்த 51 பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்ட செயலாளர் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில் பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் போலி ஓ பன்னீர்செல்வம் என்றும் நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியதாக தகவல் வழியாக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரக்கூடிய மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் […]
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாநகராட்சி தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தியது தொடர்பான தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்த அரசாணை, மாநகராட்சியின் தீர்மானத்தை எதிர்த்து சென்னை […]
உலகம் முழுவதும் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு […]
விஷால் நடிப்பில் நடப்பு ஆண்டு வெளியான 2வது படம் “லத்தி”. இப்படம் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தற்போது தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் நடிகர் விஷால் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது, “தென்னிந்திய சினிமாவின் ஆரம்பம் சென்னை தான். ஆனால் இங்கே வசதியான ஃபிலிம் சிட்டி இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. தரமணி இடத்தை சரியாக பராமரித்தால் திரைதுறைக்கு உதவியா இருக்கும். வெளிமாநிலத்திற்கு போக வேண்டிய சூழல்தான் இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன், தலைமை கழக நிர்வாகிகளான நத்தம் விஸ்வநாதன், கே பி. முனிசாமி போன்ற முக்கிய நிர்வாகிகள், கட்சியினுடைய மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், செய்தி தொடர்பாளர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக அதிமுக உடைய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய […]
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]
கனடா நாட்டில் உருவான பனிப்புயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் நான்கு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் கடும் பனிப்புயல் ஏற்பட்டதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்க நாட்டின் பக்கத்து நாடான கனடா நாட்டிலும் பனிப்புயல் உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாண்ட்ரீல் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நேரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்கள் 2500 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7301 பணியிடங்கள் இருந்தநிலையில் தற்போது குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த […]
தற்போது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(என்பிசிஐ) யூபிஐ வாயிலாக ஒரு நபர் பணம் செலுத்துவதற்குரிய வரம்பை விதித்துள்ளது. அந்த வகையில் ஒரு நபர் நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சம் வரை மட்டுமே டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும். இப்போது நீங்கள் பயன்படுத்தும் பல யூபிஐ செயலிகள் வாயிலாக எவ்வளவு பணத்தை ட்ரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம் என இப்பதிவில் காண்போம். அமேசான் பே அமேசான் பே தனது வாடிக்கையாளர்களை நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூபாய்.1 லட்சம் வரை டிரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கிறது. […]
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தென்காசி மாவட்டம் திபனம்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆராதனா என்ற சிறுமி 3-ம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமி முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் என்னுடைய மனுவை ஏற்று எங்களுடைய பள்ளிக்கு நிதி ஒதுக்கியதற்காக மிகவும் நன்றி. இதை உங்களை நேரில் சந்தித்து தெரிவிக்க எனக்கு ஆசையாக இருக்கிறது. நீங்கள் என்னிடம் […]
இங்கிலாந்தில் இருக்கும் கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒரு பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் வலாசே என்ற நகரில் இரவு நேரத்தில் மட்டும் இயங்கக்கூடிய ஒரு கேளிக்கை விடுதி அமைந்திருக்கிறது. அதில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிக மக்கள் கூட்டம் இருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று தன் துப்பாக்கியால் மக்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் ஒரு இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
சொத்துவரி உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, மாநகராட்சி தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துவரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்துவரி உயர்வை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா- நியூ ஜல்பைகுரி இடையான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வருகிற 30-ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இது குறித்து கிழக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “மேற்கு வங்கத்தில் முதல்முறையாக இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத் இயக்கப்பட இருக்கிறது”. இந்த ரயிலை வருகிற 30-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சேவை ஹௌரா […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தில் கட்டணம் மிகக்குறைவு. அதன் பிறகு சிலர் வேலை மற்றும் சொந்த காரணங்களுக்காக சில சமயங்களில் வெளியூர் செல்ல வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் தங்களுடைய பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றையும் உடன் எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒருவேளை உங்களுடைய இருசக்கர வாகனத்தை நீங்கள் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் ரயில் […]
கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசாக ரூ.7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதனை பார்த்த ரொனால்டோ திகைத்துப் போய் நின்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரொனால்டோ தன்னுடைய புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ அவருடைய புதிய காரை பார்த்து […]
இன்று காலை 10:30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல் தொடர்பான விஷயங்கள் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகின்றது. பூத் கமிட்டி அமைப்பது […]
2023-ம் வருடம் டிசம்பர் மாதம் வரையிலும் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு ரேஷன் கடைகள் வாயிலாக இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீங்களும் மலிவான (அ) இலவச ரேஷன் பொருட்களை பெற விரும்பினால், முதலில் ஒரு ரேஷன் கார்டைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். அதை நீங்கள் வீட்டிலேயே உருவாக்கிகொள்ளலாம். ஆகவே நீங்களும் இலவச ரேஷனை பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், அதன் செயல்முறை என்ன என்பதை தற்போது […]
வருமான வரி என்பது வரி வரம்புக்குள் வரக்கூடிய அனைத்து இந்திய குடிமக்களும் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான வரி ஆகும். நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் இவ்வரி முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இப்போது இதுகுறித்த ஒரு முக்கிய அப்டேட் வந்திருக்கிறது. வருமான வரி செலுத்துவோருக்கு அரசு பெரிய நிவாரணமானது கொடுக்கப்போகிறது. அதாவது, வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கும் அடிப்படையில் பெரிய அளவில் நிவாரணம் வழங்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது. அதன் புது உத்தரவை நிதயமைச்சகம் […]
டேவிட் வார்னர் அவரது 100வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. […]
அதிமுக மாவட்ட செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று நத்தம் விஸ்வநாதன் வலியுறுத்தியதாக தகவல். சட்டமன்ற தேர்தலை போல நாடாளுமன்றத் தேர்தலையும் பழனிச்சாமி தலைமையில் எதிர்கொள்ள தயார் என்று நத்தம் விஸ்வநாதன் பேச்சு. ஓ பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க கூடாது என்று […]
செர்பியா நாட்டின் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அம்மோனியா வாயு வெளியேறியதில் 51 நபர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செர்பியாவின் பைரோட் நகரத்திலிருந்து, புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று அம்மோனியா வாயுவை எடுத்துச் சென்றது. அந்த தண்டவாளத்தில் ரயில் சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த சரக்கு ரயிலில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியா வாயு வெளியேறி காற்றில் கலந்து விட்டது. அந்த நச்சு காற்றை சுவாசித்த 51 நபர்கள் […]
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசியதாவது, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி குஜராத் பாஜகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதே முடிவு வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மற்ற மாநிலங்களிலும் கிடைக்கும். பிரதமர் மோடிக்கு இந்தியா மற்றும் குஜராத்தில் கிடைத்த புகழ்தான் குஜராத்தில் கிடைத்த இந்த வெற்றிக்கு காரணம் […]
குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந்த தேர்வர்கள் தொடர்ந்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கக்கூடிய நிலையில, இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியான அறிவிப்பாக அவர்களுக்கு பதிவாகி இருக்கின்றது. குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் […]
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. துணிவு திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 3-ம் பாடலான கேங்ஸ்டா டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை […]
ஏற்கனவே 731 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு. குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மேலும் இந்த எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூலையில் நடைபெற்ற குரூப் 4க்கான ரிசல்ட் ஜனவரியில் வெளியாகும். தற்போது 9,870 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
தல அஜித்குமார், டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க் கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் மஞ்சு வாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் லைகா நிறுவனமானது வெளிநாடுகளில் வேற லெவல் புரமோஷனை […]
முக அறுவை சிகிச்சைக்காக இரண்டாவது முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின். சென்னை அடுத்த தண்டலம் சவீதா மருத்துவமனையில் இரண்டாவது முறையாக முக அறுவை சிகிச்சைக்காக சிறுமி டான்யா அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சிறுமி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட நிலையில், இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்து பேசினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் மூலமாக அழைத்து அமைச்சர் நாசரிடம் சிகிச்சை குறித்து பேசினார். […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் தற்போது அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயசுதா, நடிகை ஜெயபிரதா ஆகியோர் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது நடிகை ஜெயசுதா தென்னிந்திய சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறினார். […]
நாடு முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு டிஜிட்டல் வருகை பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்தியா முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி 1ஆ-ம் தேதி முதல் டிஜிட்டல் வருகை பதிவேடு அமலுக்கு வருகிறது. அதாவது நாடு முழுவதும் தொழிலாளர்களின் பணி தொடர்பாகவும், வருகை தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் மத்திய அரசு டிஜிட்டல் வருகை […]
எஸ்.என்.ஆர் பிலிம்ஸ் சார்பாக சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டியர் டெத்”. சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதி உள்ளார். இந்த படத்தை பிரேம் குமார் இயக்க, அசோக் சாமிநாதன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். இப்படத்திற்கு நவீன் அண்ணாமலை இசையமைத்துள்ளார். தற்போது படம் பற்றி இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது “இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ்வாக தான் பார்க்கப்படுகிறது. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடத்தில் பேசினால் எப்படியிருக்கும் […]
மலையாள திரை உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.பி.சஷி (64). இவர் உடல்நல குறைவின் காரணமாக திருச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென கே.பி சஷி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1994-ம் ஆண்டு வெளியான இலையும் முள்ளும் என்ற பிரபலமானவர் கே.பி சஷி. இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவர் பாலிவுட் […]
அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட, சூழலில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவுனில் ஆளுநரை சந்தித்து முறையாக அழைப்பு விடுக்க சென்றுள்ளார். ஜனவரி 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்றது. பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்பதெல்லாம் அன்றைய தினம் நடைபெறக்கூடிய அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருக்கின்றார். […]
ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய “பாகுபலி” திரைப்படத்தின் வாயிலாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்தின் 2ஆம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் பிரபாஸ் பான் இந்தியா படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அந்த அடிப்படையில் சூப்பர் ஹிட் அடித்த கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் “சலார்” படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் […]
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 160 மொழிகளில் 50 ஆயிரம் தியேட்டர்களில் கடந்த 16-ம் தேதி ரிலீசாகியுள்ளது. இந்த படம் […]
செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் கொரோனாவின் தினசரி பாதிப்பு பத்துக்கும் கீழ் உள்ளது. கொரோனா தொடர்பான கட்டமைப்பை இரண்டு நாளில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 1.75 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் மருந்து கையிருப்பு நிலவரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு பத்துக்கும் கீழே உள்ளது. நேற்று 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள்எண்ணிக்கை […]
தமிழகத்தில் புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ஆம் தேதி புதுக்கோட்டையில் நடக்கிறது. தமிழ்நாட்டின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.இதற்கிடையே தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24-ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிவடைந்த பிறகு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ஆம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில் ஜனவரி மாதத்தில் பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள் என மாணவர்களுக்கு அதிக விடுமுறைகள் வர இருக்கிறது. அதன்படி ஜனவரி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள், 4 […]
மருத்துவமனைகளில் கொரோனா தொடர்பான வசதிகளை 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு பேசிய அவர், கொரோனா தொடர்பான கட்டமைப்பை 2 நாட்களுக்குள் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி அண்மையில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதோடு ரெப்போ வட்டி விகிதமும் 5.9 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்ந்தது. இதனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீட்டு கடன், வாகன கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் எல்ஐசி நிறுவனமும் தற்போது வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கான வட்டி விகித உயர்வு டிசம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு […]
பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் “கிக்”. இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியது. அதன்பின் சந்தானம் மீண்டுமாக திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இதை அண்மையில் தன் சமூகவலைதளத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்தானம் புலி உடன் விளையாடும் வீடியோவை தன் இணையதளப் பக்கத்தில் பகிர்ந்து, “இதன் பெயர்தான் […]
உலக அளவில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதால் மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக அதிக அளவில் வாய்ப்பு இருக்கிறது. இதனால் முக்கியத்துறைகளான சுற்றுலா, மருத்துவம், போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய தொழில்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு […]
இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.. சிறுமி டான்யாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தண்டலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்து இருந்த நிலையில், தற்போது அவர் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான துனிஷா சர்மா, தன்னுடன் நடித்த நடிகர் ஷீசன்கானை காதலித்து வந்தார். அண்மையில் துனிஷாவை திருமணம் செய்துகொள்ள நடிகர் ஷீசன்கான் மறுத்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மனமுடைந்த துனிஷா சர்மா மும்பை அருகில் சூட்டிங் தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து துனிஷா சர்மா சாவுக்கு காதலன் ஷீசன்கான் தான் காரணம் என புகார் பெறப்பட்டது. அதன்பின் ஷீசன்கான் கைது செய்யப்பட்டு அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]
சென்னை தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ம் தேதி தொடங்குகிறது. 70 நாட்கள் பொருட்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மக்களை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம்பெறவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.