Categories
மாநில செய்திகள்

FLASH: தமிழகம் முழுவதும் ஜனவரி-5 ம் தேதி…. அரசு ஊழியர்கள் போராட்டம்…!!!

தமிழகம் முழுவதும் ஜன.5ம் தேதி போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். அரசாணை 115, 139, 152-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“PM,CM பதவிகளுக்கு தேர்வு” முதல் மார்க் வாங்குவோருக்கு பதவி…. சீமான் அதிரடி…!!!

முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளுக்கும் தேர்வு வைக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சீர்காழியில் பேசிய அவர். நீதிபதிக்கு நீட் இருக்குல்ல, அதே மாதிரி எல்லாருக்கும் தேர்வு வையுங்கள். யார் முதல் மார்க் வாங்குகிறார்களோ அவர்கள் தான் முதலமைச்சர், பிரதமரா வரணும். நானும் எழுதுவேன். நேர்மையான ஒரு நீதிபதியை வைத்து பேப்பரை திருத்த சொல்லுங்கள். மதிப்பெண்ணுக்கு ஏற்ற பதவியை கொடுங்கள் என்றார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ!… அது எடிட் பண்ண தல அஜித் போட்டோவா?… தெரியாமல் பகிர்ந்த “கழுகு” பட நடிகர்…. நெட்டிசன்கள் கேலி….!!!!

தல அஜித்குமார், டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க் கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் மஞ்சு வாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? C.M ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள் என தமிழக அரசை கண்டித்துள்ளது. அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்னும் அசீம் கிட்ட எந்தவொரு மாற்றமும் இல்ல”…. சூடுபிடிக்கும் பிக்பாஸ் ஆட்டம்…. வெளியான புரோமோ வீடியோ….!!!!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 சென்ற அக்,.9 ஆம் தேதி துவங்கி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.இப்போது 9  நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை நெருங்கி இருக்கிறது. இதனிடையில் நேற்று வெளியாகிய 2வது புரோமோவில், இந்த வாரம் நாமினேஷனுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்க் கட்டாயம்…. போடலைனா அபராதம்…. தமிழகத்தில் கட்டுப்பாடு…. சற்றுமுன் அறிவிப்பு!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் கொரோனா வைரஸ் ஆனது பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அதன் கோரத்தாண்டவத்தை உலகம் முழுவதும் கண்டது. இந்த கொரோனாவால் கடந்த 2020 மார்ச் 25ஆம் தேதி இந்தியாவில் பொதுமுடக்கமானது அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலமும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். சென்னையில் கோயம்பேடு சந்தையில் கொரோனாவின் தாக்கமானது அதிக அளவில் பரவ  தொடங்கியது. கோயம்பேடு சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகமாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்…. அணியாவிட்டால் அபராதம்…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: கோயம்பேடு சந்தையில் மீண்டும் கட்டுப்பாடு …!! மீறினால் அபராதம் என எச்சரிக்கை..!!

கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலாகிறது. தனிமனித இடைவெளி கட்டாயம் என சி.எம்.டிஏ அதிகாரிகள் தகவல்.  pf 7 புதிய வகை கொரோனா பரவலை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது. கட்டுப்பாடுகளை பின்பற்றாத வியாபாரிகளுக்கு அபராதம் எனவும் சிஎம்டிஏ அதிகாரி தகவல். காய்கறி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தகவல்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையுடன் திருமணத்தை உறுதி செய்த இயக்குனர் பாலாஜி மோகன்…. உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு….!!!!

தமிழ் சினிமாவில் காதலின் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். இந்தப் படத்திற்கு பிறகு வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கினார். இவர் அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் ஒரு பேட்டியில் பாலாஜி மோகன் நடிக்கும் தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்…! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகாஸ்.. அட செம ஜாலிதான் போங்க..!!!!

துணிவு திரைப்படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடல்நிலை எப்படி இருக்கு….? மருத்துவர்கள் தகவல்…!!

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் நேற்று  அனுமதிக்கப்பட்டார். 63 வயதான அவர் மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழக்கமான பரிசோதனை மற்றும் வயிற்றில் ஏற்பட்ட தொந்தரவுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்பேத்கரே காவி அணிந்திருந்தார்”…. ஆதாரம் கையில் இருக்கு…. சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த எச். ராஜா….!!!!

அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பேசிய எச் ராஜா, அம்பேத்கரே காவி அடைந்து தான் இருந்தார். அந்தப் படமே எங்களிடம் இருக்கிறது. இப்ப கூட எங்களால் காட்ட முடியும். அதை போஸ்டரில் போட்டால் உடனே காவல்துறை விசிக கைக்கூலியாக செயல்படுமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறக்க முடியுமா…! “நா.முத்துகுமார் ஒருமுறை சொன்னார்”….. வைரலாகும் பதிவு…!!!

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கால் பதிக்காத இடமே இல்லை. உதவி இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவலாசிரியர் என்று 12 வருடங்களில் 1500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் தொடர்ந்து இரண்டு தேசிய விருது, 10 இக்கும் மேற்பட்ட புத்தகம், 41 வயதில் என்ன செய்ய முடியுமோ அந்த அளவிற்கு அனைத்தையும் சாதனையாக செய்து முடித்தார். தனது 41 ஆவது வயதில் இந்த உலகை விட்டு பிரிந்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ‘நா.முத்துகுமார் ஒருமுறை சொன்னார்’ என்ற பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்கள் கத்தி வைத்திருங்கள்…. அதுதான் உங்களுக்கு நல்லது…. பாஜக எம்பி சர்ச்சை பேச்சு….!!!!

தங்கள் மதம் சார்ந்து பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் கடமை இந்துக்களுக்கு உண்டு என பாஜக எம்பி பிரக்யா தாகூர் கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர், இந்துக்கள் தங்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் காய்கறி வெட்டும் கத்தி போன்ற ஆயுதங்களை ஆவது வைத்துக் கொள்ளுங்கள். தங்களை காத்துக் கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. நம்மை யாரேனும் தாக்க முற்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். நம்மை நாமே  பாதுகாத்துக் கொள்வது தான் நல்லது. உங்கள் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. தமிழகத்தில் 9 லட்சம் குழந்தைகள் பாதிப்பு…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

தமிழகத்தில் சுமார் 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் பயிலும் 36 லட்சம் தமிழக முதலமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையது கண்டறியப்பட்டுள்ளது. 45,000 குழந்தைகள் இருதய ஓட்டை, காது கேளாதவர் உள்ளிட்ட பாதிப்புகளுடன் இருக்கக்கூடியவர்களை கண்டறிந்து மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை சீர் செய்யும் வகையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்: பாஜக கூட்டணிக்கு கல்தா ?

ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ஆதரவு மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக கொடி, பெயர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்சுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு நேற்று பதிலளித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுத்து இருந்தார். என்னை யாராலும் தடுக்க முடியாது. எடப்பாடி கட்சியின் சட்டதிட்ட விதிகளை மீறி செயல்படுகிறார் என்றெல்லாம் பதிலடி கொடுத்திருந்தார். மேலும் என்னை இது போன்ற அவதூறு பரப்பினால் நான் வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்து இருந்தார். அதேபோல தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.5000?…. கோரிக்கையை ஏற்குமா அரசு….????

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்….!! மகளுக்காக உயிரை விட்ட பாதுகாப்பு படை வீரர்…. காரணம் என்ன தெரியுமா….? சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்….!!!!

எல்லை பாதுகாப்பு படை வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. குஜராத்  மாநிலத்தில் உள்ள சக்லாசி கிராமத்தில் வாஹிலா  என்ற எல்லைப்பாதுகாப்பு படை வீரர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். அந்த சிறுமி தன்னுடன் படிக்கும் ஒரு மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் அந்த சிறுமியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து  அதிர்ச்சி அடைந்த வாஹிலா தனது மனைவி, 2  மகன் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா டைம்ல இது தேவைதானா?…. 60,000 பயணிகள் அங்கே போக போறாங்க?… வெளிவரும் தகவல்கள்….!!!!

பீகார் கயாவில் வருகிற டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் “போத் மஹோத்சவ்” எனும் போதனை நிகழ்ச்சி திபெத்திய புத்த மதகுரு தலாய் லாமா தலைமையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தலாய் லாமா பீகார் மாநிலத்திற்கு வந்து உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 50 நாடுகளை சேர்ந்த 60,000 ஆன்மீக பயணிகள் பீகாருக்கு வர இருகின்றனர். இதன் காரணமாக கயா விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

இது புத்தாண்டு எச்சரிக்கை…! வாகன ஓட்டிகளே கவனமா இருங்க…. அதிரடி அறிவிப்பு…!!!

ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் டிச.29இல் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்?….. இனி இதற்கெல்லாம் NO….. மக்களே அலர்ட் ஆகுங்க….!!!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யார் நம்பர் 1 ஹீரோ..? சண்டை போடும் தல-தளபதி வெறியன்ஸ்… பொதுவான ரசிகர்களின் கருத்து என்ன..? இதோ நீங்களே பாருங்க..!!

யார் நம்பர் ஒன் என்ற கேள்விக்கு ரசிகர்களின் பதிலை பார்க்கலாம். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை…. OPS அதிரடி…!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து என்னை நீக்க அடிப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவால் என்னை நீக்க முடியாது. அதிமுக தொடங்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக இபிஎஸ் செயல்படுகிறார். அதிமுகவின் பெயர் மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக இபிஎஸ் அளித்த நோட்டீஸ்க்கு ஓபிஎஸ் இப்படி பதில் அளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 13 நாட்கள் விடுமுறை…. வந்தது மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.தேர்வுகள் முடிந்த பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு தொடங்கும். அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதியும், ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் 2023 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை 150 பேர் முன்னாடி…. அண்ணாமலை கேவலமா பேசினாரு…. காயத்ரி குற்றசாட்டு…!!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ  வெளியான நிலையில், இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கினார். இது குறித்த பிரச்சினை பாஜகவில் நீடித்து கொண்டிருக்கும் நிலையில்,  பாஜகவில் இருந்து இடை நீக்கப்பட்டுள்ள நடிகை காயத்ரி பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதில், “துபாய் ஹோட்டலில் என்னை 150 பேர் முன்னிலையில், அண்ணாமலை கேவலமாக பேசினார். இதை அவரால் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 15 மாவட்டத்தல் இன்று மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த மூணு மணி நேரத்தில் 15 மாவட்டங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், மயிலாடுதுறை, நாகையில் மழை பெய்ய வாய்ப்பு. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல் மற்றும் காரைக்கால் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது…. அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்ன?…. இதோ முழு விவரம்….!!!

2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. ஜனவரி மாதம் முதல் அரசு மற்றும் பிற துறைகளில் உள்ள செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்துமே மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் அதிரடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்து இதில் பார்க்கலாம். கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் தங்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் “புத்தாண்டு பரிசாக” மதுக்கடைகளை மூடிடுக…. ராமதாஸ் ட்வீட்…!!!

உங்கள் மகளையோ, சகோதரியையோ குடிப்பழக்கம் இருக்கும்  உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்‌ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருக்கிறார் இதுகுறித்து ட்வீட் செய்த ராமதாஸ். கௌஷல் கிஷோரின் வார்த்தைகள் உண்மையானவை. வலிகள் நிறைந்தவை. இந்தியாவிலேயே இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம்.  குடிப்பழக்கம் உள்ளவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பு: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்?….. புதிய டுவிஸ்ட்….!!!!

தமிழகத்தில் சமீப காலமாக அதிமுக இரண்டாக பிளவுப்பட்டு கொண்டிருக்கிறது. ஓபிஎஸ் மற்றும் ஈ பி எஸ் இருவரும் தனித்தனி அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றனர். இதனால் அதிமுக கூட்டணி கட்சிகளும் என்ன செய்வது என்று அறியாமல் முடித்துக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெறாது என பேச்சு அடிபட்டது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி தொடர்வதா அல்லது வேண்டாமா […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட சோகம்….!! ஐசியுவில் நடந்த திருமணம்…. காரணம் என்ன தெரியுமா….?

உயிருக்கு போராடிய தாயின் கண்முன்பு ஐசியுவிலேயே  மகள் திருமணம் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற  கிராமத்தில் லாலன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூனம் வர்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சாந்தினி  குமாரி என்ற  மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று  முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரை  குடும்பத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

ரொம்ப பெரிய மனசு!… ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொத்தை…. திருப்பதிக்கு வழங்கிய ஓய்வுபெற்ற செவிலியர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற செவிலியர் என்.கே.நேமாவதி. இவர் புதியதாக தந்து பெயரில் கட்டிய 2 மாடி கட்டிட வீட்டை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த வீட்டின் மதிப்பானது ரூபாய்.70 லட்சம் ஆகும். அதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில், தேவஸ்தான எஸ்டேட் துறையின் சிறப்பு அதிகாரியான மல்லிகார்ஜுனாவிடம் வீட்டு ஆவணங்கள் மற்றும் சாவியினை நேமாவதி வழங்கினார். இவ்வாறு ஓய்வுபெற்ற செவிலியர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

கோடநாடு வழக்கில் சிபிஐ எஸ்.பி.க்கு சம்மன் : சூடுபிடிக்கும் விசாரணை..!!

கொடநாடு கொலை வழக்கில்  தற்போது சிபிஐ எஸ்.பி முரளி ரம்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2017-இல் நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிஐஎஸ்பிக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு  குழு விசாரணைக்காக முரளி ரம்பா ஆஜராவார் என்று தெரிகின்றது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மர்மமான முறையில் உயிரிழந்த கோடநாடு எஸ்டேட் சிசிடிவி ஆப்பரேட்டர் தினேஷ்குமார் வீட்டில் மீண்டும் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2017ல்கோடநாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கர்ப்பத்தால் தற்கொலையா…? பிரபல நடிகையின் பிரேத பரிசோதனை அறிக்கை..!!!

பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. பிரபல நடிகை துனிஷா ஷர்மா (20) மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அலிபாபா தஸ்தான் இ காபூல் என்ற தொடரில் தற்போது நடித்து வந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை துனிஷா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர் தற்கொலை செய்து கொண்டதால் இவர் கர்ப்பமாக இருந்ததாக பல்வேறு வதந்திகள் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை…. கல்லூரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகள் பள்ளி படிப்பை முடித்து அடுத்த கட்டமாக உயர்கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரிகளில் சேரும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி கற்கும் நிலை உருவாகும். இந்தத் திட்டத்தில் மாணவிகளை சேர்ப்பதற்கான பணிகள் கடந்த ஜூலை மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி தொலைந்து போன பான் நம்பரை…. எளிதில் ஆதார் மூலம் கண்டுபிடிக்கலாம்….. எப்படி தெரியுமா….????

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வருமானம் தொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கொள்ள பான் அட்டை கட்டாயம் தேவை. பான் கார்டு இல்லை என்றால் வங்கியில் பண பரிவர்த்தனை கூட செய்ய முடியாது. நம்முடைய வருமான வரி தாக்கல் மற்றும் ரிட்டன்ஸ் முதல் அன்றாட அனைத்து பயன்பாட்டிற்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டு எண் அல்லது அட்டையை தொலைத்து விட்டால் அதனை ஆதார் மூலமாக மீண்டும் தெரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!… “பாக்கி பணத்தை தா”…. தொழிலாளியை லாரி மீது தள்ளிவிட்ட நபர்…. நொடியில் பறிபோன உயிர்….!!!!

தெலங்கானா ஹைதராபாத்திலுள்ள பாலா நகர் நர்சாபூர் குறுக்கு சாலையில் ஸ்ரீனிவாஸ் (35) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்ற 2 நாட்களுக்கு முன் காசிராம் மற்றும் பிற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்துள்ளார். இதற்காக ரூபாய்.1,200 சம்பளமாக பேசப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் காசிராம் என்பவருக்கு ஸ்ரீனிவாஸ் ரூபாய்.800 மட்டுமே ஊதியமாக வழங்கியுள்ளார். இதன் காரணமாக நர்சாபூர் நடைபாதையில் வைத்து ஸ்ரீனிவாஸ் மற்றும் காசிராம் இடையில் மீதமுள்ள 400 ரூபாய்காக தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதியினர் அவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன யாதவ்.. ? உண்மையிலேயே நீ யார் தெரியுமா..! பேச்சால் பரபர பேச்சு!!

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி நடந்திய ஆர்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சீமான், திமிரா இருக்கணும். அங்க நிலம் பள்ளமாக இருந்ததால்தான் பள்ளர்கள் என்று அழைக்கப்பட்டமே ஒழிய, அது நம் குடிப்பெயர் அல்ல. நம் குடிப்பெயர் நாம் வேளாளர்கள். இதற்க்கு முன்பு உள்ள இடத்தில் நாம என்ன செஞ்சோம் ? நாம  ஏன் நம்ம உணவுக்கான பொருளை விளைய வைத்து சாப்பிடக்கூடாது என சிந்திச்சோம். இதுக்கெல்லாம் ஒரு பெருமை இருக்கு பாரு..  அந்த முல்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்யுடன் இணைவதில் மகிழ்ச்சி”.. தளபதி 67-ல் இணையும் பிரபல வில்லன் நடிகர்… மீடியாவில் ஓபன் டாக்..!!!

தளபதி 67 படத்தில் பிரபல வில்லன் நடிகர் நடிப்பதை உறுதி செய்யதுள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித், விஜய்யில் யார் நம்பர் 1…? நடிகை திரிஷா சொன்ன பதில்…. என்ன தெரியுமா…???

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித்தை தான் ரசிகர்கள் பார்க்கின்றார்கள். இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இயல்பான ஒன்று. தற்போது பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாவதால் அதிகமான மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதனிடையே வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் நம்பர் ஒன் ஹீரோ என கூறியது அஜித் ரசிகர்களிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தற்போது சோசியல் மீடியாவில் யார் நம்பர் ஒன் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க !! 2 லட்ச ரூபாய் பென்சன் வேணுமா….? அப்போ உடனே இதை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தனியார் ஊழியர்களுக்கும் மாதம் 2 லட்ச ரூபாய் வரை பென்சன் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டும் கடைசி காலத்தில் பென்சன் வழங்கப்படும். அதேபோல் தற்போது தனியார் துறையில் வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மாதம் கைநிறைய பென்சன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் குடும்ப செலவுகள் போக ஒரு சிறு தொகையை சேமித்து வைத்தாலே அது கடைசி காலத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். இந்நிலையில் கடைசி காலத்தில் பண பிரச்சினை இல்லாமல் வாழ்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே ரெடியா?…. 2023 ஜனவரி 6 முதல் 8 வரை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கல்வி முறைக்கு முக்கியத்துவம் வழங்கும் விதமாக பல்வேறு திட்டங்களை அரசு இந்த வருடம் அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் அறிமுகம் செய்த திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியும் வருகின்றது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் தமிழறிவு வளர்க்கும் விதமாக திறனறிவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் புதிய முயற்சியாக வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மொகத்த என்னால பாக்க முடியல…. வடிவேலுவை கடுமையாக விமர்சிக்கும் சிங்கமுத்து….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையால் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சில பிரச்சினைகளால் திரையுலகை விட்டு விலகி இருந்த வடிவேலு பிரச்சினைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று  வருகிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் கடும் பனிப்பொழிவு – ரயில்கள் தாமதம் ..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகின்றது. வாகனங்கள் செல்லக்கூட முடியாத அளவுக்கு கடும் பனிப்பொலிவால்  வாகன ஓட்டிகள் பெறும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொலிவு நிலவி வருகிறது. திருவள்ளூர், ஈக்காடு, புரசைவாக்கம்,  வேப்பம்பட்டு,  திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை என மாவட்டத்தின் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

LIC housing finance… வீட்டு கடன்களுக்கான வட்டி உயர்வு… புதிய ரேட் என்ன தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!!!!

எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தி உள்ளது. இன்று முதல் இந்த வட்டி விகித உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டிருப்பதாவது, வீட்டு கடன்களுக்கான அடிப்படை கடன் வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. இனி எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வீட்டு கடன்களுக்கான வட்டி 8.65% முதல் தொடங்குகிறது. இதில் கடன் வாங்குபவர்களின் சிபில் ஸ்கோருக்கு தகுந்தாற்போல் வீட்டு கடன் வட்டி விகிதத்தை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இலவச தரிசனம் டோக்கன் தேதி அறிவிப்பு…. பக்தர்களே உடனே பாருங்க….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
வேலைவாய்ப்பு

SBI வங்கியில் 1,438 காலிப் பணிகள்…. ஜனவரி 10ஆம் தேதி கடைசி…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI, காலிப் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது. மொத்தம் 1,438 காலிப் பணியிடங்களுக்கு https://www.sbi.co.in /careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜனவரி 10ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கரும்பு” மார்க்கெட்டில், வயலில் இருக்கு….. “குறும்பா” பதில் சொன்ன அமைச்சர் துரைமுருகன்…!!!!

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், கரும்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி பொங்கலுக்கு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகனிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி […]

Categories
தேசிய செய்திகள்

JEE தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் திடீர் உயர்வு…. தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  நடப்பாண்டு வரை ஆண்களுக்கு 650 ரூபாய் தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அது ஆயிரம் ரூபாயாகவும், பெண்களுக்கு 325 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது எப்படி இருக்கு தெரியுமா.?” எனக்கு போட்டி நான் தாங்க, என்னை விட்ருங்க”… விஜய் பேச்சுக்கு சீமான் கருத்து..!!!!

இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சென்ற 24-ம் தேதி வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜயிடம் எந்த போட்டி வந்தாலும் எது வந்தாலும் உங்கள் கண்ணில் பயத்தை பார்த்ததே இல்லை, உங்களை தேடி வரும் போட்டிகளை எல்லாம் நீங்கள் எப்படி சமாளிக்கின்றீர்கள் என கேள்வி கேட்கப்பட்டபோது, 1990-களில் போட்டியாக எனக்கு ஒரு நடிகர் உருவானார். முதலில் போட்டியாளராக இருந்தார். பிறகு சீரியஸான போட்டியாளராக மாறினார். அவர் மேல், அவரின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்று முதல் டிசம்பர் 30 வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் […]

Categories

Tech |