கடலூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிபாளையம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவர் பண்ருட்டியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு புஷ்பலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 2 மாதமே ஆன யோகமித்ரன் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் புஷ்பலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்த போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் புஷ்பலக்ஷ்மி தனது குழந்தையை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். இதனையடுத்து […]
சைனாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையை இந்தியா மேற்கொண்டு வருகின்றது. வடஇந்தியாவில் ஒரு சில இடங்களில் பிஎஸ் 7 என்கின்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், மத்திய சுகாதாரத்துறை தமிழக அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22ஆம் தேதி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி தமிழகத்தில் இருக்கக்கூடிய […]
சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அண்ணா நகரில் வசிக்கும் நந்தகுமார், பிரவீன், ராஜகோபால், நரேஷ், அனீஸ், ராஜன், காந்தி, சரீப் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 22-ஆம் தேதி 8 பேரும் சபரிமலைக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை சுதாகர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு அதே வேனில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். நேற்று காலை 10 மணிக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் சென்ற […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவத்தூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த நேரம் காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த மங்களலட்சுமி முத்துலட்சுமி ஆகியோரின் வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது பற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குனரகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக முகக்கவசம், பிபிஇ கிட்டுகளையும் (BBE) போதுமான அளவிற்கு இருப்பு வைத்துக் கொள்ளவும், அனைத்தையும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாங்கி […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான அணைத்து வசதிகளும் செய்ய வேண்டும் என அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. குறிப்பாக கொரோனா சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க சுகாதாரத்துறை, அனைத்து மருத்துவமனைக்கும் சுற்றறிக்கை அனுப்பி […]
இலங்கை பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலு விளக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணன் எடப்பாடி தெளிவா சொல்லிவிட்டார். எந்த நிலையிலும் எங்க தலைமையில்தான் கூட்டணி இருக்கும். எங்க தலைமையில் வருகின்ற கூட்டணியில் நாங்கள் ஒதுக்கின்ற இடம்தான். எங்களை யாரும் வற்புறுத்த முடியாது. எங்களை யாரும் டிமாண்ட் பண்ண முடியாது. கடந்த தேர்தலிலும் சுமூகமாக பேச்சுவார்த்தை எல்லாம் தொடங்கப்பட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சி பங்குபெற்றதோ, அது நாங்க ஒதுக்குன இடம் தான் என்பது ஊரறிந்த ஓன்று, […]
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]
சர்வதேச புகழ் பெற்ற புகைப்பட கலைஞரான எஸ். ராமச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கடந்த 2 வருடங்களாக காலண்டர் வெளியிட்டு வருகிறார். இந்த காலண்டர் ஹியூமன் மற்றும் கலைஞர் என்ற தலைப்பில் 2 வருடங்களாக வெளியிடப்படும் நிலையில், தற்போது தி ஆர்டிஸ்ட் என்ற பெயரில் 2023-ம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளனர். அதன்பிறகு நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஓவியர், சிற்பி, கிராஃப்டி ஆர்டிஸ்ட் என்ற பரிணாமங்களில் புகைப்படம் எடுத்து அதை காலண்டராக எஸ். ராமச்சந்திரன் வடிவமைத்துள்ளார். […]
தமிழகத்தில் ஜாதி, வருவாய் மற்றும் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அது வழங்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வகையில் தற்போது ஜாதி,வருவாய் மற்றும் ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை நிலுவையில் […]
மத்திய அரசின் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Lower Division Clerk, Junior Secretary assistant காலி பணியிடங்கள்: 4500 வயது: 18-27 சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100 கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி தேர்வு: கணினி வழி தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 4 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு […]
2004ம் வருடம் ஏற்பட்ட ஆழிபேரலையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். லான்ச் படகு வாயிலாக நடுக் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர்களை தூவியும் மறைந்தவர்களுக்கு மரியாதை செய்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் மக்களுக்கும் நன்மை செய்யவில்லை. ஓ.பி.எஸ் ஒரு டம்மி, ஒரிஜினல் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மேல் எனக்கு […]
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி, திரையரங்குகளில் […]
கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்திரவதை, தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில் வெறுப்பு, துன்புறுத்துதல் மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவம் மற்றும் வழிகாட்டுதல்களை இந்த குழு வழங்கி வந்தது. இந்நிலையில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கலைத்து நடவடிக்கை […]
கொரோனா பரவல் அச்சத்தை அடுத்து கர்நாடகாவில் திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு. கோவிட்-19 4ஆவது அலை அச்சத்திற்கு மத்தியில், கர்நாடகா அரசு திரையரங்குகள், பப்கள், உணவகங்கள் மற்றும் பார்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், புத்தாண்டு விருந்துகளுக்கு முகமூடிகள் கட்டாயம், புத்தாண்டு கொண்டாட்டங்களை அதிகாலை […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தற்போது விடப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் வீட்டு பாடங்கள் மட்டுமே வழங்கலாம் என்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இருந்தாலும் சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை கட்டாயம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளி […]
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள ஆண்டவர் தர்காவின் 466 -வது ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நாகையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு பேசிய போது, ஆட்டோக்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக […]
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், அன்னைக்கு கூட…. ஈவினிங் […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற போது…. இன்றைக்கு அண்ணாமலை சொன்னதாக சொன்னார்.. தகுதி இல்லை… அவர்களுக்கு தெரியாது என்றெல்லாம் பாரதிய ஜனதா தலைவர் சொல்லுகிறார் என்று சொன்னார்கள்… அவருக்கு தெரியாது என்ற எதுவுமே இல்லை. பொறுப்பேற்றுக் கொண்ட போது ஐந்தரை லட்சம் கோடி கடன், அரசாங்கத்தில் பணம் இல்லை, கொரோனா வந்திருக்கிறது. ஓர் ஆண்டு காலத்திலே பக்கத்தில் இருக்கின்ற கேரளாவிலே பாதிப்பு அதிகம். அனால் தமிழ்நாட்டிலே […]
சென்னையில் அனைத்து மயானங்களையும் இரண்டு வருடங்களுக்குள் மின்மயானமாக மாற்றும் முயற்சியில் மாநகராட்சி நிா்வாகமானது இறங்கி உள்ளது. சென்னையில் மாநகராட்சியின் வாயிலாக எரியூட்டும், புதைக்கும் வகையில் 209 மயானங்கள் இருக்கிறது. இதில் 49 மயானங்கள் நவீனமான முறையில் எரியூட்டும் அடிப்படையில் உள்ளது. மற்றவை விறகுகள் வாயிலாக எரியூட்டப்படும் விதமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் வாயிலாக சென்னை மாநகா் முழுவதும் பல பணிகள் மூலம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் ஒன்றாக மயானங்களும் நவீனமயமாக்கப்பட்டு […]
பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கடந்த சட்டசபை தேர்தல் கூட்டத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருந்ததாவது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இவர் தன் அகரம் பவுண்டேசன் வாயிலாக பெரும்பாலான மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். மேலும் கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்கு தன் குரலை தவறாமல் பதிவு செய்து வருகிறார். அண்மையில் நடிகர் சூர்யா மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதாவது, தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளில் யாரேனும் படித்த இளைஞர்கள் இருப்பின் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா அதிமுகவை ஒருங்கிணைக்க இவங்க யாரு ? இவங்களும் அண்ணா திமுகவுக்கும் என்ன சம்பந்தம் ? இருக்கு பலமுறை சொல்லிட்டேன். இவங்க வேணா டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகிய 3பேர் மட்டும் ஒன்றிணையலாமே தவிர, எங்களை சொல்லவில்லை. ஆடு நனையுதுன்னு ஓணான் அழுக கூடாது. எங்க கட்சியில எந்த பிரச்சனையும் இல்ல. இன்னைக்கு அண்ணன் எடப்பாடியார் தலைமையில் ஒரு எழுச்சியா கட்சி போய்கிட்டு இருக்க கூடிய நிலையில, சசிகலாவின் கருத்தை […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார் . இன்று மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன உடல்நல பிரச்சனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல் தெரியாமல் […]
பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை துனிஷா சர்மா. இவர் பல்வேறு பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். இவர் நேற்று திடீரென படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்பு குழுவினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, அண்ணாமலை சொல்கிறார் உங்களுக்கு என்ன தெரியும் என்று? சீனாவில் கொரோனா என்று சொன்னால் சென்னையிலே உடனடியாக கூட்டம் போட்டு, தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார் தளபதி அவர்கள். அவரோடு கிறிஸ்மஸ் விழாவிற்கு சென்று விட்டு நான் வருகிறேன்… போகிறபோது காரில் சொன்னார், மழை இல்லை என்று சரியாக விட்டு விடாதீர்கள்… உடனடியாக எடுத்த பணியை முடித்து தர வேண்டும் என்று உடனடியாக சொல்லி, நானும் ஆணையரிடம் சொல்லி… […]
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3,552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு துறை வீரர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் வீதம் அடுத்த கட்ட உடற்கல்வி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் தகவல் பலகை ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ஜாதி, வருவாய், மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் அந்த சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அதன் விவரங்களை தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளது. சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு சுமார் 2,356 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விமர்சனங்களை தவிர்ப்பதற்காக பரிசு தொகுப்பில் பல பொருட்களை தவிர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது பொதுமக்கள் […]
குடிக்கும் ஆண்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் என மத்திய மந்திரி கவுஷல் கிஷோர் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லம்புவா சட்டசபை தொகுதியில் போதைப்பழக்க மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வீட்டு வசதி மந்திரி கவுஷல் கிஷோர் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “எனக்கு ஆகாஷ் கிஷோர் என்ற மகன் இருந்தான். அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தான். இதனால் நாங்கள் அவனை ஒரு போதை மீட்பு மையத்தில் சேர்த்தோம். அவன் […]
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வயிற்றுப் பேத்தியுமான திருமதி லலிதா பாரதி அம்மையார் அவர்கள் (94) வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாளின் மகளான திருமதி லலிதா பாரதி அவர்கள் 40 ஆண்டுகளாக இசை ஆசிரியராக பணியாற்றியவர் […]
ஸ்பெயின் நாட்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பொன்டேவேத்ரா என்ற மாகாணத்தின் செர்டெடோ-கோடோபேட் நகரத்தில் ஒரு பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து சாலை ஓரத்தில் இருக்கும் ஆற்றினுள் கவிழ்ந்து விழுந்து விட்டது. இதில் அந்த பேருந்தில் பயணித்த 6 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து தொடர்பில் […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, நான் கூட்டம் போட்டு அவர்கள் பேசுவதை கேட்டு மகிழ்ந்திருப்பேனே தவிர, எனக்காக நான் கூட்டம் போட்டதே கிடையாது, எனக்காக நான் பேசியதும் கிடையாது. எங்கள் ஊரில் கூட கூட்டம் போடும் போது நான் நாலு இடத்திலே கூட்டம் நடந்தால் முதலிலே பேசிவிட்டு, நான் உடனடியாக அடுத்த கூட்டத்திற்கு சென்று விடுவேன். ஆனால் இன்றைக்கு சுப்ரமணியம் என்னை மட்டும் வைத்துவிட்டு அவர் வெளியே சென்று இருக்கிறார்கள். பேராசிரியரை […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லை, மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி […]
பிரபல நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் ஒரு இளம் பெண்ணை சரமரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்நாட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அரசு இரும்பு […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அம்மா மரணம் தொடர்பான விசாரணையில் என்னைப் பொருத்தவரை […]
நியாய விலை கடை பணியிடங்கள் நிரப்புவது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோமல் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டின் வேளாண் கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கான நேர்முகத் தேர்வுகள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், விற்பனையாளராக […]
சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் ராமானுஜ நகர் மேம்பாட்டு தொகுதிக்கு உட்பட்ட விசுன்பூர் கிராமத்தில் நேற்று காலை இறுதிச்சடங்கில் பங்கேற்ற 40க்கும் அதிகமானோர் உணவு சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் உடல்நிலை பாதிக்கப்பட்ட அனைவரும் சூரஜ்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சூரஸ்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சிங் கூறியதாவது, உணவு கெட்டுப்போனதால் அவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். தற்போது அனைவரும் நலமாக இருக்கின்றனர். மேலும் இதுகுறித்து உரிய […]
காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பின், பொது மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்கும் அடிப்படையிலான கூட்டு உரிமத்தை பெற இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) திட்டமிட்டு உள்ளது. நாட்டில் இதுவரையிலும் 4.2% மக்களுக்கு மட்டும்தான் காப்பீட்டு பலன்கள் கிடைக்கிறது. காப்பீட்டின் பலன்களை சமூகத்தின் மேலும் பல நிலைகளுக்குக் கொண்டு செல்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு காப்பீட்டு சட்டம் (1938), காப்பீட்டு ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணைய சட்டம் […]
சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை (டிச.23) சீனாவில் இருந்து தில்லி வழியாக இந்தியா திரும்பிய உத்திரபிரதேசம் ஆக்ராவை சோ்ந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆக்ரா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அருண் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபா் அவருடைய வீட்டில் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த ஆண்டு பரிசுத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பாக குளச்சல் ஆழ்கடல் பகுதியில் விசைப்படகில் வைத்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பாட்னா தேசிய சட்டக் கல்லூரி பேராசிரியருமான அருட்தந்தை பீட்டர் லடீஸ் மற்றும் மீனவர் தோழமை தலைவரும் தலைமை தாங்கியுள்ளார். இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் திண்டுக்கல் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரக்சன் முன்னிலை வகித்துள்ளார். பொருளாளர் […]
மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த குவாலியா் நகரில் அவருக்கு 4,050 ஹெக்டேரில் நினைவு இடம் அமைப்பதற்கு மத்தியபிரதேச அரசு இடம் ஒதுக்கியுள்ளது. கடந்த 1924-ம் வருடம் டிச,.25 ஆம் தேதி குவாலியரில் வாஜ்பாய் பிறந்தாா். திருமணம் செய்து கொள்ளாமல் தேச சேவைக்காக தன்னை முழுமையாக அா்ப்பணித்த இவா், காங்கிரஸ் கட்சியை சாராமல் 5 வருட கால ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமா் என்ற பெருமையைப் பெற்றவா். மேலும் பா.ஜ.க-வின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன […]
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பெரும் அளவிலான ஆயுதங்களும் வெடிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராணுவத்தின் 19வது பிரிவின் அதிகாரி மேஜா் ஜெனரல் அஜய் சந்த்புரியா பத்திரிகையாளா்களை சந்தித்து கூறியதாவது, “சென்ற சில வாரங்களாக உரி செக்டாா் ராம்பூா் பகுதியில் அமைந்திருக்கும் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் எல்லை ஊடுருவல்களும் பயங்கரவாதிகளால் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பதுக்கும் சதிவேலைகளும் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்து. அதனடிப்படையில் கடந்த […]
கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக பெங்களூர் தமிழ் சங்கத்தில் தமிழ் புத்தக திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. இந்த விழாவில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூர் மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம் பிரசாந்த் மனோகர் பாபா, அணு ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி தவமணி, சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரிஸ்வான் ஹர்ஷத், பெங்களூர் மாநகராட்சி முன்னாள் மேயர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி […]
லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் முட்டாஞ்செட்டி சாலையில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பிரியா, தங்கராஜன், சந்திரா, தினேஷ்குமார், சுதா, பிரீத்தி, ராஜம்மாள், சரோஜா, செண்பகம், ரேவதி, கவிதா உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களை […]
ஈரோடு மாவட்டத்தில் சோலார் அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சி பாரதி நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 96 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து பயனாளிகளுக்கு நேற்று வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் குணசேகரன், மாநில நெசவாளர் […]
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் பிடி தொழில் முடங்கியுள்ளது. தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 330 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் கடலில் 4 அடி உயரத்தில் அலைகள் எழும்புகிறது. மேலும் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் வேதாரண்யம் மற்றும் […]