Categories
மாநில செய்திகள்

“சென்னையில் புத்தாண்டு-பொங்கல் விற்பனை கண்காட்சி”…. சிறப்பாக தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனை கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன்பிறகு மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொங்கல் பரிசு பெட்டகங்களை இணையதளம் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆய்வு கூட்டம்… “கொரானா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு”… கேரளா அரசு அறிவுறுத்தல்..!!!!

கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு உடனடியாக கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் மீண்டும் கொரோனா கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முக கவசம் அணிய அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

1,144 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி… வழங்கிய ஆட்சியர், எம்எல்ஏ..!!!

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ கடனுதவியை வழங்கினார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதை அடுத்து திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்று 1144 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டிலான கடனு உதவியை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி […]

Categories
உலக செய்திகள்

சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்… இங்கிலாந்து அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ்  பிஎஃப் 7  தீவிரமடைந்து வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் சீனாவில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகளை விதிப்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி சீனாவில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நெகடிவ்  சான்றிதழை கொண்டு வர வேண்டும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரத்தத்துடன் பண்ட்…… “இணையத்தில் போட்டோ, வீடியோ வைரல்”….. ஊடகங்களை கடுமையாக சாடிய ரோஹித் மனைவி.!!

கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, ரூர்க்கியில் ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்த உடனேயே எடுக்கப்பட்ட ரிஷப் பந்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானதை அடுத்து ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார். புத்தாண்டுக்காக தனது குடும்பத்துடன் இருப்பதற்காக டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு பந்த் நேற்று அதிகாலை பயணம் செய்து கொண்டிருந்தார், ஆனால் விபத்துக்குள்ளானார், இதன் விளைவாக அவரது முகம், முதுகு, முழங்கால் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது, அவரது […]

Categories
உலக செய்திகள்

“சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்”… பிரான்ஸ், ஸ்பெயின் உத்தரவு…!!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ்  பிஎஃப் 7 வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. மேலும் பிரெஞ்சு மக்கள் சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கரும்பு வெட்டு கூலியை சர்க்கரை ஆலையே ஏற்கணும்… ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை..!!!

கரும்பு வெட்டு கூலிகளை சர்க்கரை ஆலைகளே ஏற்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சிரியரிடம் வழங்கினார்கள். இந்த கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். இதில் குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனவும் ஆட்கள் கிடைப்பதில்லை எனவும் வெட்டுக் கூலியும் அதிகமாக இருக்கின்றது […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் தற்காலிக செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவத்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரும் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக நியமிக்கப்பட்டவர்கள். இந்நிலையில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. ஆறு மாத காலத்திற்கு பணியமனம் செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!!… நடிகர் சிம்புவின் “பத்து தல” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிலீசான மாநகரம் மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…. மக்களே உடனே பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…!! தமிழகத்தில் அடுத்த 5 வருடங்களுக்குள் அனைவருக்கும் இலவச வீடு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால்  பல்வேறு விதமான நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விஷ்வந்தாங்கல், கீழ் சிறுபாக்கம், நல்லவன் பாளையம், கீழ் செட்டிபட்டு, மேல் செட்டிபட்டி ஆகிய 5 ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்டு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நீர் போற இடத்தில எல்லாம் மக்களுக்கு வீடு…!” காகித ஓடம் மிதக்க விட்டு போராட்டம்… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!!

குடிசை வீட்டை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித ஓடம் மிதக்க விட்டு பொதுமக்கள் போராட்டம். புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்களை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசு காலி செய்ய வலியுறுத்தியது. அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த 37 வீடுகளில் இருக்கும் 100-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறினர். மேலும் அவர்கள் மாற்று இடம் கேட்டு வீட்டு மனைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இதில் இடம் தேர்வு செய்யப்பட்டு இடம் கேட்டு விண்ணப்பித்த 21 […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…!! புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.‌‌… மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய அரசானது சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும். இதேப்போன்று ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு ஸ்பெஷலாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக ஒரு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்கு பிறகு மாநில அரசுகளும் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தங்கம், வெள்ளி, சில்வர் பாத்திரம்… தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த இளைஞர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவருக்கு 5 வருட சிறை தண்டனையும் இழப்பீடு தொகையை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டவுன் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்ற 2018-19 ஆம் வருடத்திலிருந்து தீபாவளி சீட்டு நடத்தினார். இவர் தீபாவளி சீட்டில் 2 கிராம் தங்கம், 25 கிராம் வெள்ளி, அரை கிலோ இனிப்பு, பட்டாசு பெட்டி, பித்தளை, சில்வர் பாத்திரம் வழங்குவதாக கூறினார். இதனால் ஏஜெண்டுகள் மூலம் சுமார் 204 […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“பேயிடம் இருந்து தப்பித்தார்களா….?” கவர்ச்சி புயல் சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படம் எப்படி….? இதோ திரை விமர்சனம்….!!!!!

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது ஓ‌ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை யுவன் இயக்க, நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தெரியாமல் பேயிடம்  மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ஒரு வரி கதை. இந்நிலையில் ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]

Categories
உலக செய்திகள்

பிரபல செய்தி தொகுப்பாளர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் (93) இன்று காலமானார். அமெரிக்காவில் மாலை செய்திகளை தொகுத்து வழங்கிய முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் இவர். 50 ஆண்டுகால செய்தித்துறை பயணத்தில் 12 எம்மி விருதுகளை பார்பரா வென்றுள்ளார். இன்று உருவாகும் பெண் பத்திரிகையாளர்களுக்கு இவர் தான் முன்னோடி.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது? கே.பாலகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம்,  புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று இரவு தடை…. மக்களே உஷார்…!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்நிலையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த பரவலானது தற்போது தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்திற்கு தடை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

25,000 லஞ்சம் கேட்ட VAO…. பதுங்கி இருந்த போலீசார்… அதிரடியாக கைது..!!!

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை அடுத்திருக்கும் புலிவாய் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி எல்லம்மாள். இவர் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அருகே வசித்து வருகின்றார். இவருக்கு சென்ற 2008 ஆம் வருடம் ஒரு ஏக்கர் 6 சென்ட் நிலத்தை இவரது தந்தை தான செட்டில் ஒன்றாக கொடுத்திருக்கின்றார். இந்த நிலத்திற்கான பட்டா இவரின் பெயரில் இருந்திருக்கின்றது. இந்த நிலையில் 36 சென்ட் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்… ஒளிரும் வில்லைகளை வழங்கும் போலீசார்..!!!

பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் வில்லை போலீசார் சார்பாக வழங்கப்படுகின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள், சேலம், எடப்பாடி, திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடு, சங்ககிரி, பவானி  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 3 லட்சம் பக்தர்கள் நடைபயணமாக காங்கேயம் வழியாக தைப்பூசத்திற்கு செல்வார்கள். அவ்வாறு பக்தர்கள் நடைபயணம் செல்லும் போது விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக போக்குவரத்து போலீஸ் சார்பாக ஒளிரும் வில்லைகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக இரவு நேர நடைப்பயணத்தின் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: இன்று முதல் பணிக்கு வர வேண்டாம்: தமிழக அரசு ஷாக் அறிவிப்பு..!!!

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் மாதம் ரூ. 14,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பனி நீட்டிப்பு வழங்கப்படாது (இன்று முதல் வேலைக்கு வர வேண்டாம்) என தெரிவித்துள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓய்வுநிதியைத் தாங்க…! நூதன முறையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்… 535 பேர் அதிரடி கைது..!!!

போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 535 பேர் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லவன் சாலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பல வருடங்களாக வலுவையில் இருக்கும் பண பயன்கள், பஞ்சபடி, பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களில் சில அரை நிர்வாணத்தில் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு உடலில் நாமத்தை வரைந்து பிச்சை எடுத்தும் நூதன முறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குத்துச்சண்டை போட்டியில் சாகச நிகழ்ச்சி… பெட்ரோல் கேன் சாய்ந்து குப்பென்று பத்திய தீ..!!!!

குத்துச்சண்டை போட்டி சாகச நிகழ்ச்சியில் பெட்ரோல் கேன் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் இருக்கும் தனியார் உள்விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை வீரர்கள் ஒரே மேடையில் போட்டியிடும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்த போட்டியில் குத்துச்சண்டை வீரர் பாலிஷ் சதீஸ்வரர் என்பவர் இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு முன்பாக நெருப்பில் சாகசம் செய்தார். அப்போது எதிரில் இருந்து நெருப்பு பந்து அவர் மீது தூக்கி வீச இதனை அவர் கையால் தடுத்து தீயை அணைக்கும் சாகசத்தில் ஈடுபட்டார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அயோக்கிய பயலே, திருட தாண்டா வாற….. நாய், பூனை கதை சொல்லி… ஆட்சியாளர்களை வெளுத்த சீமான்!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓராண்டா?  இரண்டா 50 ஆண்டுகளுக்கு மேலாக…  கற்றறிந்த சான்றோர்களே… பள்ளி,  கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கின்ற என் பாசத்திற்குரிய தம்பி, தங்கைகளே….  ஒரு பூனை பாலை நீங்கள் காய்ச்சி சட்டியில் வைக்கும் போது…. சூடாக நீங்கள் வைத்து விட்டீர்கள் என்றால் ? அது பசியில் வந்து குடிக்கும். குடிக்கும் போது அது சுட்டு விட்டால்,  வெள்ளையாக எதை பார்த்தாலும் தன் வாழ்நாளில் கிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ எல்லாம் வேஸ்டா போயிட்டே!… காதல் திருமணம் செய்த ஜோடிக்கு!…. போலீஸ் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி…..!!!!

கர்நாடகா பெங்களூருவிலுள்ள நீலச்சந்திரா பகுதியில் இளைஞர் ஒருவர் கால்டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த நவம்பர் 4ம் தேதி திருவள்ளூர் பகுதிக்கு ஓடிவந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் இளம் பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. ரேஷன் அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன…? இதோ முழு விவரம்….!!!!!!

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையாக தலா ஒரு  கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி  9-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல்  பரிசினை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் நியாய விலை கடைகளுக்கு ஜனவரி 13-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப… 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்து கழகம் உத்தரவு…!!!!!

ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 1.1.2023 அன்று வரை நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு தினசரி இயக்கக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

துனிஷா சர்மா தற்கொலை வழக்கு: “என் மகளை மதமாற்றம் செய்ய வற்புறுத்தினான்”…. பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

மும்பையில் நடந்த தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் கடந்த 24-ஆம் தேதி சீரியல் நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் வனிதா ஷர்மா அளித்த புகாரின் அடிப்படையில், துனிஷாவின் காதலரும் சக நடிகருமான ஷீசன் முகமது கான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஷீசனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த 27-ம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு பின், துனிஷா சர்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையில் துனிஷா மற்றும் ஷீசனின் மொபைல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பாமக இளைஞரணித் தலைவர் விலகல்..!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து சில சூழ்நிலைகள் காரணமாக விலகிக் கொள்வதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ்-க்கு ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் கடிதம்  எழுதியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இருமல் மருந்தால் உயிரிழப்பு:  தயாரிப்பு நிறுத்தம்..!!

கலப்படம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நொய்டா மேரியான் பயோடெக் நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தம். Dok-1 Max மருந்தை எடுத்துக் கொண்டதால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் குற்றம் சாட்டியது. நொய்டா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மருந்தை ஆய்வுக்கு அனுப்பினர் மருந்து தர கட்டுப்பாடு அதிகாரிகள். ஆய்வில் மருந்தில் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டதால் அனைத்து மருந்து தயாரிப்பையும் நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பை பொருத்தவரை தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்று மேரியான் பயோடெக் […]

Categories
Tech

இனி உங்கள் போனில் Spam கால்கள் வந்தால் பயமில்லை…. Alert கொடுக்கும் Google Voice…. புதிய வசதி அறிமுகம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பயணர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்வேறு சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து திருடப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் பொதுமக்களின் தொலைபேசி எண்களுக்கு அதிகமாக spam கால்கள் வருவதாக புகார்களும் எழுந்துள்ளது. Spamகால்களை எடுப்பதன் மூலம் நம்முடைய மொபைல் ஹேக் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக உலகின் முன்னணி தகவல் தொடர்பு நிறுவனமான கூகுள் செயல்பட இருப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவ்வகையில் Google voiceசெயலியில் வரும் இன்கம்மிங் கால்களுக்கான […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

Breaking: மரணம்! காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்…. அதிர்ச்சி….!!!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூதாட்டி பெரியம்மாள் (73) மற்றும் தில்லை குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் நிலையும் சற்று மோசமாக இருப்பதாககூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசு வெடிப்பு குறித்து வட்டாட்சியர் ஜானகி மற்றும் டிஎஸ்பி சுரேஷ் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் வட்டி விகிதம் உயர்வு…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!

இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் வங்கிகளை விட அதிகம் லாபம் தரும் வட்டியும் வழங்கப்படுகிறது. அதனால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேமிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலுள்ள ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் கால அளவும் இருக்கின்றது. அதன் மூலமாக சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் வட்டி தொகை முதிர்வு காலத்தில் கிடைக்கின்றது. அவ்வகையில் செல்வமகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்னும் 5 வருடங்களில் இது இருக்கவே இருக்காது…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதேசமயம் மக்களின் கோரிக்கைகள் உடனடியாக பரிசளிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து ஊராட்சிகளின் குறைகேட்பு முகாம் நேற்று நடைபெற்றது. அந்த முகாமில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் என முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் முறையான கோரிக்கைகள் மட்டுமே […]

Categories
அரசியல் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: நாமக்கல் வெடி விபத்து – 4 பேர் பலி …!!

நாமக்கல் பட்டாசு வெடிப்பு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்திருக்க கூடிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். நாமக்கலில் நாட்டு வெடி பட்டாசு வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.பட்டாசு பட்டாசு கடை உரிமையாளர் தில்லை குமார், மனைவி பிரியா, தாய் செல்வி, பெரியக்காள்  உள்ளிட்டோர்  பலியாகியுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

தலாய்லாமாவை உளவுப்பார்த்த பெண்?…. பின்னணி என்ன?…. போலீசார் கைது நடவடிக்கை….!!!!

பீகார் மாநிலம் புத்த கயாவில் “புத்த மஹோத்சவம்” எனப்படும் புனித போதனை நிகழ்ச்சியானது கடந்த டிச.29 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இவற்றில் திபெத்திய புத்த மத குருவான தலாய் லாமா பங்கேற்று சொற்பொழிவு ஆற்றினார். இன்று டிச 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போதனை நிகழ்ச்சியில் 50 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தலாய் லாமா சென்ற 22ம் தேதி கயாவுக்கு வருகை புரிந்தார். இந்நிலையில் சீனப் பெண் ஒருவர், […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. தமிழகத்தில் எதற்கெல்லாம் தடை?….. இதோ முழு விவரம்…..!!!!!

இந்தியாவில் புதிய மரபணு மாற்றமடைந்த bf 7 என்ற வைரஸ் பரவல் உறுதியாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவுரத்தில் உள்ளதால் தமிழகத்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் கட்டாயம் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி புத்தாண்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் மிளிர்கிறது, ஒளிர்கிறது….. சல்மான்கான், ஷாருக்கான் மாதிரி ஆன C.M ஸ்டாலின்!!

நாம் தமிழகர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட மாடல் என சொல்லுறாங்களே… ஆம் அவரு மாடல் தான். அப்படின்னா சாம்பிள் பிஸ்.. பொம்மை கடைக்கு போ… துணிக்கடைக்கு போ… வாசலில் ஒரு பொம்மை இருக்கோம். புடவை கடைக்கு போ…  ஒரு பொம்மை இருக்கும். அதற்கு பெயர் என்ன ? மாடல். அதுபோல் இது ஒரு பொம்மை. இது ஒரு மாடல். தம்பி மாடலை நீ மாதிரியாக தான் பார்க்க […]

Categories
மாநில செய்திகள்

தொலைதூர கல்வியில் சேர ஜனவரி 2 முதல் விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான யுஜிசி- யால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை,முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் மாணவர்கள் நேரிலும் அல்லது http://online.ideunom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…! 56 அரசு பள்ளிகளில் சாதி பெயர்கள் மாற்றம்…. மாநில பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

இன்றைய காலகட்டத்தில் சாதிப் பெயர்களை சொல்லி ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருகிறது. எனவே வருங்காலத்தில் மாணவர்கள் சமுதாயம் தங்கள் மத்தியில் எந்த வித சாதிய பாகுபாடு இல்லாமல் கல்வியை கற்க வேண்டும். இதற்காக பள்ளியில் படிக்கும் சமயங்களில் அவர்களுடைய மனதில் சாதி குறித்து எந்த விதமான எண்ணங்களும் இல்லாமல் இருப்பதே சிறந்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சாதி அடிப்படையிலான பெயர்களை கொண்ட 56 அரசு தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளின் பெயர்களை பள்ளிக்கல்வித்துறை மாற்றியுள்ளது. பெயர் மாற்றப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

PM கிஷான்: விவசாயிகளே ரூ.2000 பணம் வேணுமா….? புது வருஷத்தில் காத்திருக்கும் குட் நியூஸ்…!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: காலையிலேயே பயங்கரம்…. பட்டாசு வெடித்து கோர விபத்து…. 2 பேர் பலி, 5 பேர் கடுகாயம்….!!!!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூதாட்டி பெரியம்மாள் (73) மற்றும் தில்லை குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் உடல் நிலையும் சற்று மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பட்டாசு வெடிப்பு குறித்து வட்டாட்சியர் ஜானகி மற்றும் டிஎஸ்பி சுரேஷ் விசாரணை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. நாளை (ஜனவரி 1) முதல் எல்லாமே மாறப்போகுது….. புதிய மாற்றங்கள் என்னென்ன?…. இதோ முழு விவரம்…..!!!!

2023 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளன. ஜனவரி மாதம் முதல் அரசு மற்றும் பிற துறைகளில் உள்ள செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்துமே மக்களின் அன்றாட வாழ்க்கை முறையில் அதிரடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது என்பது குறித்து இதில் பார்க்கலாம். கிரெடிட் கார்டு: கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் தங்களின் […]

Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.44,000 சம்பளத்தில்…. உச்ச நீதிமன்றத்தில் வேலை…. இன்றே கடைசி நாள் ……!!!!

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கோர்ட் அசிஸ்டன்ட் காலி பணியிடங்கள்: 11 சம்பளம்: ரூ.44,900 – ரூ.80,803 வயது: 18-30 கல்வி தகுதி: B.E, B.Tech, BCA, BSC/MSC(computer science) தேர்வு: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://main.sci.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
டெக்னாலஜி

wow…!இது மட்டுமில்ல இன்னும் நெறைய…! வாட்ஸ் அப்பில் புதிய அட்டகாச வசதி….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்சாப் பயன்படுத்துபவர்கள் முக்கியமான chatகளை Pin செய்து கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் இருக்கிறது. 3 நம்பர்கள் அல்லது குரூப்கள் வரை நாம் பின் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை வாட்சாப் 5ஆக உயர்த்த […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் 2 நாள் இலவச தரிசன டிக்கெட் ரத்து…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் இன்றும் ஜனவரி 1ஆம் தேதியான நாளையும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கு மொத்தம் நாலு புள்ளி 50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதற்காக ஜனவரி 1ஆம் தேதி முதல் மதியம் 2 மணி முதல் திருப்பதியில் 9 இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க ….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை இன்று  டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தொழிற்கல்வி படித்தால் அவர்களுக்கு தமிழக தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து பட்டப் படிப்பிற்காக பத்தாயிரம் ரூபாய் மற்றும் டிப்ளமோ படிப்பிற்காக ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வருடத்திற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்று முதன்மை கல்வி அலுவலகங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கணினி தமிழ் விருது…. ரூ.2 லட்சம் பரிசு….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

கணினி தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் முதலமைச்சர் கணினி தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2021 -22 ஆம் ஆண்டிற்கான கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுபவருக்கு விருதுத் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. மிக குறைந்த விலையில் சிலிண்டர் வாங்க சூப்பர் சான்ஸ்…. இன்று ஒரு நாள் மட்டுமே……!!!!

பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் குறைந்த விலையில் சமையல் சிலிண்டர் வாங்கலாம். சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பேடிஎம் ஆப்மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இதில் முன்பதிவு செய்தால் 500 ரூபாய் வரையில் […]

Categories

Tech |