நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், எங்கள் ஊரில் திருநெல்வேலியில் போனால் கண்டுபிடித்துவிடலாம். தமிழ்நாட்டில் எவனாவது ஒருவன் அரசியலில் வந்தால், தமிழ்நாட்டில் எவனாவது ஒருவன் சினிமாவிற்கு நடிக்க வந்தால் எந்த ஜாதி என்று குழப்பம் வந்தால் ? திருநெல்வேலிக்கு ஒருவாட்டி போயிட்டு வந்தா தெரிஞ்சுரும். ஜெயம் ரவி இன்ன ஆளுங்க, விஜய் சேதுபதி இன்ன ஆளுங்க, விஜய் இன்ன ஆளுங்க. ஏனென்றால் அவர் ஒட்டிருவான் கல்யாண போஸ்டரில்… ஒரு அருவாளுடன் […]
வேலு நாச்சியாரின் வீரத்தையும், தியாகத்தையும் அனைவரும் போற்றி வணங்க வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி வேலு நாச்சியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இன்றும் இவரது நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலர் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “ஆங்கிலேயரின் அடக்குமுறை எதிர்த்து போராடிய பேரரசி வீரமங்கை வேலு […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, ஆஸ்திரேலியாவுல ஆடு, மாடு மேய்க்கிறவன்…. அமெரிக்காவில் ஆடு, மாடு மேய்க்கிறவன்… நானும் ஒன்னா ? ஏன் இப்படி அறிவு கெட்டு அலையனும் நம்ம.. நான் வேற, அவன் ஆஸ்திரேலியன், அவன் அமெரிக்கன், நான் தமிழன், அதை புரிஞ்சுக்கணும்… நான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றேன். ஒரு வழிபாட்டுக்காக ஒரு மார்க்கத்தை ஏற்று, நபி வழியை ஏற்று நான் நடக்கிறேன் […]
வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமாக பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற பல செயலிகள் உள்ளது. அதில் உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக whatsapp உள்ளது. இது பயனர்களின் வசதிக்காக தினம்தோறும் புதிய வசதிகளை வெளியிடுகிறது. அதேபோல் தற்போது பயனர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் டெஸ்க்டாப் பீட்டா பயனர்கள் மற்றவர்களின் ஸ்டேட்டஸ் குறித்த புகார்களை தெரிவிக்க புதிய ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதாவது ஸ்டேட்டஸ் […]
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், என்னுடைய இயக்குனர் வம்சி சார் எப்படின்னா.? அவர் சொல்ற கதையை கேட்டு எல்லாருமே ஓகே சொல்லிடுவாங்க. ஆனா செட்டுல இருக்கிற யாருக்குமே அவர் ஒரு தடவையில டேக் ஓகே பண்ணுனதே இல்லை. சிரிப்ப பாரு என் செல்லங்களுக்கு..! நான் என்ன சொல்ல வரன்னா.. அவர் நினைச்சதை ஸ்கிரீன்ல வரவரைக்கும் கடுமையாக வேலை செய்யும் ஒரு இயக்குனர். யாரும் தப்பா நினைக்க வேண்டாம். சார் கிட்டத்தட்ட 2 […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என்று சொல்லக் கூடிய நபர்… பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு என கூறி, இதற்கும் சேர்த்து நான் கையெழுத்து வாங்குவேன் அப்படின்னு… நடை பயணம் போலாம் இல்ல, 410 ரூபாய் சிலிண்டர் இன்னைக்கு 1100 ரூபாய் கடந்து போயிட்டு இருக்கு… அதுக்கும் சேர்த்து கையெழுத்து வாங்கலாம் இல்ல. மக்கள் அதிலும் பாதிக்கிறார்கள்… சிலிண்டர் மானியம் அக்கவுண்டில் […]
இரண்டாவது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியானது தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து திணறியபோது அஸ்வின் 42 ரன்களை அடித்து இந்திய அணியை வெற்றியடைய செய்தார். இதற்கு சேவாக், அவரது வழக்கமான பாணியில் டுவிட் செய்து உள்ளார். அவற்றில், விஞ்ஞானி அதை செய்து விட்டார் என்றும் ஸ்ரேயஸ் ஐயருடன் பார்ட்னர்ஷிப் போட்டு அஸ்வின் அற்புதமான இன்னிங்ஸ் ஆடியதாகவும் டுவிட் பக்கத்தில் சேவாக் தெரிவித்துள்ளார். The scientist did it. Somehow got this one. Brilliant innings from […]
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மினிமாடல் மற்றும் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸின் ஒரு பகுதியாக ஐபோன் 12 மினி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற ஸ்மார்ட் போன்களை போன்றே இந்த மினி மாடலும் வருகிறது. எனினும் இவற்றில் சிறிய அளவில் மட்டுமே டிஸ்பிளே இருக்கிறது. இந்த அசத்தலான ஐபோன் பிளிப்கார்டின் பிக்சேவிங் டேஸ் விற்பனையின்போது உங்களுக்கு தள்ளுபடி வாயிலாக மிககுறைந்த விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன்-12 மினி இப்போது சந்தையில் ரூபாய்.37,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் பிளிப்கார்டு […]
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் அதே பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 16-ஆம் தேதி குண்டூரில் இருந்து ரூ.68 லட்சத்துடன் சென்னை சவுகார்பேட்டையில் நகை வாங்குவதற்காக விஸ்வநாதனிடம் வேலை செய்யும் ஊழியர்களான அலிகான் (25) மற்றும் சுபானி (25) ஆகியோர் வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் மீனம்பாக்கம் சாலையில் அவர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்து அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து […]
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், முதலில் எனது தயாரிப்பாளர் தில் ராஜு சார், அவர் முதலில் தெலுங்கில் தயாரித்த திரைப்படம் தில். அதனால்தான் அவருக்கு தில் ராஜு என்ற பெயர் வந்தது. தமிழ் சினிமாவிற்கு உங்களை வரவேற்கிறோம் சார். நீங்க வந்து இங்கே இனிமேல் நிறைய படங்கள் பண்ண போறீங்க. வெற்றிகரமா இன்னும் நிறைய பணம் சம்பாதிக்க போறீங்க என்று எங்கள் ஊரில் முன்கூட்டியே தெரிந்திருக்குது சார். அதனாலதான் நம்ம நண்பர் […]
ஜியோவின் அன்லிமிடெட் டேட்டா பிளான் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே ஒரு முறை வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் ரீச்சார்ஜ் செய்து விட்டால், ஆண்டு முழுவதும் இண்டர்நெட் டேட்டா குறித்து கவலைப்பபடாமல் இருக்கலாம். jioன் அந்த அதிரடி டேட்டா பிளான் மற்றும் அதன் முழு விபரங்களை இங்கே தெரிந்துகொள்வோம். jio ன் அன்லிமிட்டெட் டேட்டா பிளானின் விலையானது ரூபாய். 2999 ஆகும். இவற்றில் நீங்கள் 365 நாட்கள் வேலிடிட்டியை பெற முடியும். […]
பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வாழும் மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் இண்டியானா மாகாணத்தில் உள்ள புளூங்டன் நகரில் ஒரு வணிக வளாகம் அமைந்துள்ளது. அந்த வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை […]
கர்நாடகாவில் கெம்பண்ணா என்பவர் ஒப்பந்த கூட்டமைப்பு தலைவராக இருந்து வருகிறார். இவர் தோட்டத்துறை மந்திரி முனிரத்னா மீது சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசு 40 சதவீதம் லஞ்சப்பனம் பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது மட்டுமல்லாமல் இது குறித்து பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதிக அளவிலான ஊழலால் உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் எந்த பணியும் பெற முடியவில்லை எனவும் பிற மாநிலங்களை சேர்ந்த நபர்களே பணியை பெறுகின்றனர் […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]
நாளைய பஞ்சாங்கம் 26-12-2022, மார்கழி 11, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 01.38 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. திருவோணம் நட்சத்திரம் மாலை 04.41 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் மாலை 04.41 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 26.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வருமானம் பெருகும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு ச1,000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் டிச.,27, 28-ந் தேதிகளில் முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படவுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் ஜன.,2-ல் தொடங்கி வைக்கிறார். டோக்கன் மூலம் ரேசன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கைரேகை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நபராக இருந்தால் ஒரு முக்கியமான விதிமுறை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். அதாவது, முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் பயணிகளிடத்தில் TTE இரவு 10 மணிக்குப் பின் ரயில் டிக்கெட்டை செக் செய்ய இயலாது. ஒரு வேளை TTE தொந்தரவு செய்தால், நீங்கள் டிக்கெட் காண்பிக்க மறுக்கலாம். இதையடுத்து உங்களது குழுவுடன் நீங்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டால் இரவு 10 மணிக்கு மேல் ஒருவருக்கொருவர் பேச இயலாது. ஏனெனில் உங்களது உரையாடலின் சத்தம் மற்ற […]
சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த BF 7 கொரோனா இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி தமிழகத்திலும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாகோட்டயத்தில் பறவைகாய்ச்சல் காரணமாக 6000 பண்ணைக் கோழிகள் அழிக்கப்பட்டன. இன்ப்ளுயென்சா எனப்படும் வைரஸ் மூலம் பறவைகளுக்கு ஏற்படும் இந்தக் காய்ச்சல், அதனை உண்ணும் மனிதர்களுக்கும் தொற்றுகிறது. கேரள எல்லை மாவட்டமான கோவைதான் தமிழகத்தின் […]
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், எப்படி முதலில் நன்றி சொல்லலாம் என்று பார்க்கலாமா ? என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான நண்பா நண்பிகள் வந்திருக்கும் அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் என்னுடைய வணக்கம். நம்ம போற பயணம் நிறைவா இருக்கணும்னா நம்ப தேர்ந்தெடுக்கிற பாதை சரியாக இருக்கணும் சொல்லுவாங்க. அப்படி நம்ம போற வழியில அறிவ சேர்த்துக்கிட்டே இருக்கணும், அன்பை கொடுத்துகிட்டே இருக்கணும், நட்ப கொடுத்துகிட்டே இருக்கணும். வாய்ப்பு கிடைக்கிறப்ப எல்லாம் […]
பெரியம்மை, போலியோ நோய்களை அழித்தது போல கொரோனாவையும் அழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த ஆண்டின் கடைசி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் இன்று உரையாற்றினார். அப்போது அவர், சுற்றுலாத் துறை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவித்தார். “மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று கவனமாக இருந்து கொரோனாவை விரட்டுவோம்” என மோடி பேசினார்.
தவறான யூபிஐ ஐடிக்கு பணத்தை அனுப்பிவிட்டு செய்வதறியாது தவிக்கும் பல பயனர்கள் தற்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் இனி அதுபோன்ற தவறுகள் எதுவும் நடந்தால் நீங்கள் பயப்படவேண்டிய தேவையில்லை. ஏனெனில் ரிசர்வ் வங்கி உங்களுக்காகவே சில வசதிகளை வழங்குகிறது. இது போன்ற டிஜிட்டல் சேவைகளில் நீங்கள் தவறுதலாக வேறு நபருக்கு பணம் அனுப்பி விட்டால் உடனடியாக அந்த கட்டண முறைக்கு நீங்கள் புகார் அளிக்க வேண்டும். பேடியும், போன் பே, கூகுள் பே ஆகிய […]
ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழகம் வழியே தெலங்கானா -கேரளம் இடையில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வேயானது ஏற்பாடு செய்து உள்ளது. இதற்குரிய முன்பதிவு இன்று (டிச.25) காலை 8 மணிக்கு துவங்கியது. அந்த வகையில் ஹைதராபாத்திலிருந்து டிச.,29 ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் டிச.,31 ஆம் தேதி அதிகாலை 3:50 மணிக்கு கோட்டயம் வந்து சேரும். மறு மாா்க்கமாக டிச.,.31 ஆம் தேதி இரவு 10:50 மணிக்கு கோட்டயத்திலிருந்து […]
பிரபல நடிகை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை உர்பி ஜாவித். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இந்த நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பாக துபாயில் பொது இடத்தில் கவர்ச்சி உடையில் தன்னை வீடியோ எடுத்ததாகவும் அங்கு பொது இடங்களில் வீடியோ எடுப்பது குற்றம் என்பதால் இவரை கைது செய்து போலீசார் […]
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலைக்கு சென்று விட்டு சென்னை திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வேன் கடலூர் மாவட்டம் அருகே வெங்கனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த டெம்போ வேனில் பயணித்த 9 பயணிகள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் வேன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி […]
ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது. பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இந்த படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரலானது. இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி படம் […]
பிரபல நாட்டில் நடந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரின் சாலையில் நேற்று எரிவாயு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி அதே பகுதியில் இருந்த பாலத்தின் மீது மோதி வெளியே வர முடியாமல் சிக்கியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை பத்திரமாக மீட்க முயன்றனர். ஆனால் திடீரென லாரி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 8 பேர் […]
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு 11:30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து 160 கிலோமீட்டர் கிழக்கு – தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் கிழக்கேயும் அது நிலை கொண்டுள்ளது. […]
ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் […]
ஆஸ்கர் விருது இறுதிசுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் அசல் பாடல் பிரிவில் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலும், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் குஜராத்தி மொழியில் வெளியாகிய “செல்லோ ஷோ” படமும் தேர்வாகி உள்ளது. இது தவிர்த்து “ஆல் தட் ப்ரீத்ஸ்” ஆவணப்பட பிரிவிலும், “தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்” ஆவண குறும்பட பிரிவிலும் தேர்வாகி இருப்பதாக ஆஸ்கர் கமிட்டி அறிவித்து உள்ளது. இவற்றில் தி எலிபெண்ட் விஸ்பரஸ் குறும்படத்தை கார்த்திசி கோன்சலஸ் இயக்கியுள்ளார். 95-வது ஆஸ்கர் […]
ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரியின் வீட்டில் திருடிய 2 பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு வந்த 2 பெண்கள் தங்களை வீட்டு வேலைக்கு சேர்த்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். மேலும் உங்கள் வீட்டை சுத்தம் செய்து காட்டுகிறோம். பிறகு எங்களை வேலைக்கு சேர்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து […]
பிரபல சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.மீனாகுமாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எங்கள் சித்த மருத்துவ நிறுவனத்தில் அடுத்த ஆண்டில் புதிய இளங்கலை சித்த மருத்துவ படிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்கு இந்திய மருத்துவ தேசிய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதில் 60 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் நிகழாண்டு நீட் தேர்வுக்கான தரவரிசை பட்டியலில் இருந்து மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெறும். அதற்கான கவுன்சிலிங் விரைவில் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ராம் நகரில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கிகளில் கடன் உதவி பெற்று தரும் பங்குதாரராக இருக்கிறார். இவர் மூலம் கடன் பெற்ற திருவேங்கடசாமி என்பவர் தனக்கு கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் தெரியும். அவர்கள் கருப்பு பணம் வைத்துள்ளனர். அதனை மாற்றுவதற்காக 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 2 லட்ச ரூபாய் கிடைக்கும் என பிரவீன் குமாரிடம் தெரிவித்தார். இதனை நம்பி பிரவீன் குமாரும், திருவேங்கடசாமியும் இணைந்து […]
கடலூர் மாவட்டத்திலுள்ள பெரியாக்குறிச்சி ஜி.பி நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்ய நாராயணன் என்ற மகன் இருந்துள்ளார். டிரைவரான சத்தியநாராயணனும் அவரது தாய் தனலட்சுமி அப்பகுதியில் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் நீண்ட நேரமாகியும் சத்ய நாராயணனின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகன் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து […]
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் மற்றும் மகளிர் காவல் நிலையம் என ஆறு காவல் நிலையத்தைச் சேர்ந்த 119 போலீசாருக்கு தனியார் பள்ளியில் வைத்து இ-பீட் ஸ்மார்ட் காவலர் செயலியை உபயோகப்படுத்துவது குறித்து பயிற்சி நடைபெற்றுள்ளது. இதற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சிந்து தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ரோந்து பணியில் ஈடுபடும் போது எளிதில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் புதிய செயலி செயல்படும் எனவும், இருக்கும் இடத்தில் இருந்து குற்றவாளிகளை எளிதில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் பக்தர்கள் கோவில் வெளி பிரகாரத்தில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர். மேலும் மின் இழுவை ரயில், ரோப்கார், படிப்பாதை ஆகியவற்றை பயன்படுத்தி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இன்று கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.பாறைப்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் முகேஷ்(10) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு முகேஷ் திடீரென மயங்கி விழுந்தான். இதனால் சிறுவனை பழனி, திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிறுவனின் உடல்நலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து […]
கரூர் மாவட்டத்திலுள்ள செல்லிபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி வளர்ச்சி அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குணசேகரன் குடும்ப செலவுக்காகவும், தனது மகளின் திருமணத்திற்காகவும் சசிகுமார் என்பவரிடம் 33 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். மேலும் குணசேகரன் தனது நிலத்தை சசிகுமாருக்கு முன்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்திற்கு சசிகுமார் போலி ஆவணங்களை தயாரித்து பெரியசாமி என்பவருக்கு விற்பனை செய்துவிட்டார். இதனையடுத்து பெரியசாமி அந்த நிலத்தை பாலமுருகன் என்பவருக்கு விற்றுவிட்டார். […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே தடகள போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டிகளில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவி கிருத்திகா 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கத்தையும், கரினா நல்லி 100 மீட்டர் மற்றும் தடை தாண்டுதலில் வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர். இதனையடுத்து மாணவி இலக்கியா வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கத்தையும், 400-100 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கத்தையும், ஆண்கள் பிரிவில் […]
மத்தியப்பிரதேசம் ரேவா மாவட்டத்தில் காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் சுயநினைவின்றி விட்டுச் சென்ற காதலனையும், அவனது கூட்டாளியையும் காவல்துறையினர் கைது செய்தனர். மவுகஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்ற 21ஆம் தேதி இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதுகுறித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வீடியோவில் அந்த நபர் பெண்ணை கொடூரமாக அடித்து கீழே தள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் அந்த பெண் மயக்கமடைந்தார். அப்போது அந்த […]
இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துக்களை 5 ஆண்டுகள் பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் காலி மனைகளை குத்தகைக்கு விடும்போது அது வணிகம் அல்லது குடியிருப்பு நோக்கில் பயன்படுத்தப்படவுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அதற்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]
ஜியோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது புத்தாண்டை முன்னிட்டு ரூ.2,023 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த புதிய சலுகையில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 2ஜிபி டேட்டா 252 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ செக்யூரிட்டி செயலிகளுக்கான […]
ஜார்க்கண்ட் மாநிலம் குட்டா மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு வெகு நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து பல முறை இந்த சோதனையை செய்த பின், வாலிபருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் சிறு வயதிலிருந்தே அப்படி உள்ளது எனவும் மருத்துவர்கள் அவரிடம் […]
இந்திய சினிமாவில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமாக இருக்கும் நடிகைகளின் லிஸ்ட்டை ஒவ்வொரு மாதமும் ஆர்மிக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிடும். அந்த வகையில் 2022-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்திற்கான பிரபலமான நாயகிகளின் லிஸ்ட்டை ஆர்மிக்ஸ் மீடியா தற்போது வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டின் படி இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை சமந்தா பிடித்துள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் இருக்கிறார். அதன் பிறகு 3-ம் இடத்தில் நயன்தாராவும், 4-ம் இடத்தில் காஜல் […]
உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]
தமிழ் சினிமாவில் புதுமுகநாயகிகள் அறிமுகமாகும் அளவுக்கு கதாநாயகர்கள் பெரிதாக அறிமுகமாகுவதில்லை. ஒருவேளை புதுமுக நடிகர்கள் அறிமுகமானாலும் ஏதாவது ஒரு சிலர் மட்டும்தான் தங்களுக்கான தனி இடத்தை பிடித்து சினிமாவில் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அறிமுகமான புதுமுக நடிகர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதாவது லவ் டுடே படத்தை இயக்கி நடிகராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தான் ரசிகர்களை கவர்ந்த ஒரே புதுமுக நடிகர். இவர் ஜெயம் ரவி மற்றும் காஜல் […]
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடக்கும்.பிறகு மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவு கூடும். இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: பயிற்சியாளர் காலி பணியிடங்கள்: 87 கல்வி தகுதி: டிகிரியுடன் விளையாட்டு பயிற்சியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் வயது: 47- க்குள் சம்பளம்: ரூ.35,600 – ரூ.1,12,800 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து முக்கிய […]
தந்தை பெரியாரின் 49-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் மலர் வணக்க நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வுக்கு பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, நாங்கள் திராவிடம் என்பதை எதிர்க்கிறோம். தமிழர்கள் அல்லாதோர் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் வசதியாக கொண்டுவரப்பட்டது தான் திராவிடம். இன்று தமிழக அமைச்சரவையில் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட 9 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது எங்களுக்கு இவ்வளவு பெரிய முன்னுரிமை அங்கீகாரம் […]