Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநரை ஆபாசமாக பேசி கடிதம் அனுப்பிய மர்ம நபர்….காவல்துறை தீவிர விசாரணை !!…

ஆளுநருக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தான் ஆபாசமாக எழுதியும் கடிதம் ஒன்றை மார்பநபர் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளார் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது .. தேர்தல் நேரங்களில் அரசியல் பிரமுகர்களின் வீடுகள் ,அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டு வந்த நிலையில் பாதுகாப்பு என்பது தமிழகம் முழுவதும் ஏற்படுத்த உள்ளது . தமிழக ஆளுநர் மாளிகையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், ஆளுநரை ஆபாச வார்த்தைகளால்  மிரட்டி  கடிதம் ஒன்று ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது  தொடர்பாக வழக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் விரைவில் திரைக்கு வரும் படக்குழு அறிவிப்பு..!!!

கொலைகாரன் படம் விரைவில் திரைக்கு வரும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.   வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக இருந்து கதாநாயனாக உயர்ந்த இவர் தற்போது ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் கொலைகாரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்திற்கு இவரே இசையமைப்பதாக கூறப்பட்டது , ஆனால் படப்பிடிப்பு தீவிரமாக நடந்ததால் இவரால் இசையமைக்க முடியவில்லை எனவே இப்படத்திற்கு  சைமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி  மூன்று விதமாக நடித்துள்ளார் .இவருடன் கதாநாயகியாக மும்பை அழகி ஆஷிமா நடித்துள்ளார். இவர் செய்யும் கொலைகளை […]

Categories
அரசியல்

1 1/2 கோடி வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் அமமுக வேட்ப்பாளர் சர்ச்சை பேச்சு ….

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 லட்சம் வேட்ப்பாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 1 1/2 கோடி வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று அமமுக வேட்ப்பாளர்கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது இதனைத்தொடர்ந்து தேர்தலுக்கான கொண்டாட்டங்களும் தேர்தல் பணிகளும் வெகுவிமர்சியாக இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய […]

Categories
அரசியல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட இருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைப்பு ….

தென்சேன்னை மற்றும் மத்திய சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்ய இருந்த பிரச்சாரம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது . மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி என்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன இதனை அடுத்து தற்பொழுது  தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சி தரப்பினரும் […]

Categories
அரசியல்

தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தடை…… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி , தேர்தல் வியூகம் என தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர் . தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தஞ்சையில் போட்டியிடும்  தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி இந்த ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை……!!

கோவை துடியலூரில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்த 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்தனர். கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று மாலை பள்ளி சென்று மாலை வீடு திரும்பிய சிறுமி அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும்  சிறுமி வீடு திருபாததால்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . […]

Categories
தேசிய செய்திகள்

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட மும்பை to சிங்கப்பூர் விமானம்… பயணிகள் அதிர்ச்சி !!!..

மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் திடீரென வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலின் காரணமாக  அவசரஅவசரமாக சர்வ்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது . இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பாக புல்வாமா தாக்குதல் ஆனது நடைபெற்றது இதனையடுத்து அந்த தாக்குதலுக்கு பின்பு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் தொடுத்தது மேலும் இன்றைய தினம்  வரை எல்லைப் பகுதிகளில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதட்டம் என்பது நிலவி வருகிறது. மேலும் இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதலால் எல்லைப் பகுதிகள் மட்டும் அல்லாமல் இந்தியாவின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

4000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்த அதிரடி மன்னன்….!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விரைவாக 4,000  ரன்களை கடந்த முதல்  வீரர் என்ற சாதனையை அதிரடி  மன்னன்  கெய்ல் படைத்துள்ளார். 2019 ஐ.பி.எல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில்   ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டி யில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு  184 ரன்கள்   குவித்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கிய திமுகவிற்கு கமல் நன்றி தெரிவித்தார்..!!!

நயன்தாராவை சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கியதற்கு  திமுகவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர்  விக்னேஷ் சிவன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். ராதாரவியின் இந்த பேச்சுக்கு பல கண்டனம் எழுந்ததையடுத்து  நடிகர் ராதாரவியின் மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை […]

Categories
அரசியல்

ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன ?.. ஸ்டாலின் கேள்வி ….

தேர்தலுக்கான பிரச்சார பயணத்தில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் கொண்டாட்டங்கள் வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது இதனையடுத்து இன்று வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று  தேர்தல் […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பறக்கும் படை அதிரடி சோதனை …. 5,23,000 ரூபாய் பறிமுதல் ..!!

காஞ்சிபுர மாவட்டத்தில் பறக்கும் படையின் தீவீர சோதனையில் 5,23,000 ருபாய் பறிமுதல் செய்யப்பட்டது தற்பொழுது விசாரணை ஆனது நடைபெற்று வருகிறது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன இதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியின் சார்பில் […]

Categories
அரசியல்

அமமுக_வினர் வேட்புமனு தாக்கல் செய்ய TTV.தினகரன் வலியுறுத்தல்…!!

அமமுக வேட்பாளர்கள் அனைவரும் 2 -3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக வேண்டுமென்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV. தினகரன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விதிப்படியே அவுட் செய்தேன்….. நான் தவறு ஏதும் செய்யவில்லை…… விமர்சனங்களுக்கு அஸ்வின் பதிலடி…..!!

நான் பட்லரை கிரிக்கெட் விதிகளின் படியே அவுட் செய்தேன்,அதில் தவறேதுமில்லையே என பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.  ரஹானே தலைமையிலான  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி  நேற்று ஜெய்ப்பூரில்  நடைபெற்றது. மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகள் என பஞ்சாப் பவுலர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக குக்கர் சின்னம் கிடையாது…… TTV.தினகரன் கோரிக்கை நிராகரிப்பு…!!

அமமுக_விற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார் . அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்தின் ரீலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

தல அஜித்தின் நேர்கொண்டபார்வை படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி.   இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் விஸ்வாசம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது . இதைத்தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேர்கொண்டபார்வை ’. இப்படம் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது அனைவரும்   அறிந்ததாகும் . மேலும் இப்படத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK – அணியின் 2வது போட்டி….. சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை களைகட்டியது..!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள  2 வது போட்டிக்காக டிக்கெட் விற்பனை இன்று காலை 8:45 மணிக்கு தொடங்கியது.  ஐ.பி.எல் கிரிக்கெட்  திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி மே மாதம் வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் உள்ளன.ஒவ்வொரு அணியும் ஒரு அணியுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பணக்கார வேட்பாளர்கள்….. வசந்தகுமார் , கனிமொழி , ஆ.ராசா என நீளும் பட்டியல்…!!

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வேட்புமனு செய்த பணக்கார வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல்  அறிவித்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 6 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள  சொத்து விவரங்கள் குறித்து பார்க்கலாம் . கன்னியாகுமரி வசந்தகுமார் :  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்றம் தேர்தல் 604….. சட்டமன்றம் இடைத்தேர்தல் 230…… இன்றோடு நிறைவடைகிறது வேட்புமனு தாக்கல்…!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு 604 பேரும் , சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 230 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் […]

Categories
அரசியல்

அமமுக_வுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா…? காலை 10 மணிக்கு வழக்கு விசாரணை…!!

அமமுக_விற்கு குக்கர் சின்னம் கேட்ட வழக்கு இன்று காலை 10 மணிக்கு முதல் வழக்காக விசாரணை தொடங்குகின்றது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல் , டீசல் விலை ……. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி….!!

இன்றய நிலவரப்படி பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் இன்றி  , டீசல் விலை குறைந்து காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐ.பி.எல் போட்டி: CSK VS DC அணிகள் பலப்பரீட்சை…..!!

இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை  மற்றும் டெல்லி  அணிகள் மோதுகின்றன  ஐ.பி.எல்லில்  இன்று  5ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றியுடன்  தங்களது கணக்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில் 2வது போட்டியில்  வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி அணியின்  ரிசப் பன்ட் மும்பைக்கு எதிரான  […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

“கமலால் அரசியலில் சாதிக்க முடியாது” ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார்…. கமல் சகோதரர் சாருஹாசன் கருத்து…!!

அரசியல்வாதியாக கமல்ஹாசனால் எதையும் சாதிக்க முடியாது , ரஜினி நிச்சயமாக 100 சதவீதம் அரசியலுக்கு வர மாட்டார் என்று கமலின் சகோதரர்  சாருஹாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் நோக்கி தங்களது பயணத்தை தொடங்கினர். இதில் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்று தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் சிரஞ்சீவி வீட்டு மாப்பிளையாகும் விஜய் தேவரகொண்டா….!!

 நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் சிரஞ்சீவி_யின் தம்பி மகள் நிஹாரிகா_வை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர்   “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம் மூலம் பிரபலமானார் . தமிழில் சமீபத்தில் வெளியான  “நோட்டா” படத்தில் நடித்துள்ளார். இவர்  நடிகர் சிரஞ்சீவி_யின் தம்பி மகள் நடிகை நிஹாரிகா_வை காதலித்து வருவதாகவும் விரைவில் விஜய் தேவரகொண்டா_வுக்கும் , நிஹாரிகா_வுக்கும்  திருமணம் நடக்க உள்ளதாகவும்  தகவல் வெளியாகிள்ளது. நடிகை நிஹாரிகா தமிழில் “ஒரு […]

Categories
அரசியல்

தேர்தல் நடத்தும் பொறுப்பை அதிமுக_வுக்கு வழங்கிய தேர்தல் ஆணையம்…முக.ஸ்டாலின் கண்டனம்…!!

தேர்தல் நடத்தும் பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 18_இல் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலை காலியாக உள்ள 21 தொகுதிக்கும் சேர்த்து நடத்த வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

17 ஆண்டாக மின்சாரம் இல்லை…… தேர்தலால் வந்தது நல்ல காலம்…. மாணவர்கள் மகிழ்ச்சி…!!

17 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் இருந்த பள்ளிக்கு தேர்தல் வருவதால் மின்சாரம் வந்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியின் எல்லைக்குட்பட்ட பகுதியில்  உள்ளது பெரியநாயக்கம்பாளையம் . இந்த பகுதியில் ஒரு அரசு நடுநிலை பள்ளி ஒன்று கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது . பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் தடாகம் என்ற வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் என சுமார் 47 பேர் படிக்கின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL சூதாட்டத்தில் ஈடுபட 5 பேர் கைது….. ரூ 50,000 பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை…!!

IPL போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 12வது IPL 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகின்றது. IPL 12_ஆவது சீசன்  மே 2வது வாரம் வரை நடைபெற இருக்கின்றது . இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றது.IPL போட்டி எப்படி கொண்டாடப்படுகின்றதோ […]

Categories
இந்திய சினிமா சினிமா

“லட்ச ரூபாயில் ஆயா” மகனுக்காக செலவு செய்வேன்…. இந்தி நடிகை கரீனா கபூர் ஓபன் டாக் …!!

தன்னுடைய மகனின் பாதுகாப்பிற்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன் என்று பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். ஹிந்தி திரையுலகில் மாபெரும் நடிகையாக நடித்து வருபவர் கரீனா கபூர். இவர் “ரேபியகீ” படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் என்பது அறிந்ததே .பின்னர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கட்சிதமாக பயன்படுத்திக் கொண்டு இந்தி திரையுலகில் வேகமாக வளர்ந்தார். இவர்  கடந்த 2012_ஆம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை தொடங்கினார் . இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது […]

Categories
அரசியல்

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்த மத்திய அரசு…. கமல்ஹாசன் குற்றசாட்டு…!!

இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…!! ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இவ்வளவு சம்பளமா…?

ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் இந்தி நடிகை கங்கனா ரணாவத்_துக்கு 24 கோடி சம்பளம் வழங்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்  விஜய் . இவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும்  “தலைவி” என்கின்ற தலைப்பில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜெயலலிதா வேடத்தில் […]

Categories
அரசியல்

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ 73,00,000 …. அதிரடி படையினர் பறிமுதல்….!!

சிவகாசியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கூறி 73 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.தேர்தல் ஆணையம் சார்பில் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு […]

Categories
அரசியல்

“ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு” தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பேச்சு…!!

ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படுமென்று தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து , தொகுதி பங்கீடு , வேட்பாளர் அறிவிப்பு என தற்போது வேட்புமனு தாக்கல் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள […]

Categories
அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைகிறது ……!!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைகின்றது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுமென்று  தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மக்களவை  தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-ஆம்  தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுமென்று  தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 26….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 26 கிரிகோரியன் ஆண்டு : 85_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 86_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 280 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 590 – பேரரசர் மவுரிசு தனது மகன் தியோடோசியசை பைசாந்தியப் பேரரசின் இணைப் பேரரசராக அறிவித்தார். 1027 – இரண்டாம் கொன்ராட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1169 – சலாகுத்தீன் எகிப்தின் தளபதியாக (அமீர்) நியமிக்கப்பட்டார். 1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது. 1484 – வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். 1552 – குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது குருவானார். 1812 – வெனிசுவேலாவின் கரகஸ் நகர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பனியில் சிக்கி உயிரிழந்த இந்திய வீரரின் உடலுக்கு அரசு மரியாதை..!!

காஷ்மீரில் உள்ள எல்லை பாதுகாப்பு  பணியின் போது  உயிரிழந்த, மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் அருகில் உள்ள சியாச்சின் பனிமலை பிரதேசத்தில் மைனஸ் 45 டிகிரி வரை குளிர் நிலவி வருவது வழக்கம், சியாச்சின் பனிக்கட்டிகள் நேரடியாக உடலின் மீது பட்டால், அந்த பகுதி கடும் குளிரில் உறைந்து ஒட்டிக்கொள்ளும் 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில், உறைந்து போகும் குளிரிலும், தாய் நாட்டுக்காக ராணுவவீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்கத்தில் பாய்ந்த ராஜஸ்தான் இறுதியில் பம்மியது…… பஞ்சாப் அணி ருசிகர வெற்றி…!!

பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.   ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இதையடுத்து  தொடக்க வீரராக கே.எல் ராகுல் , கிரிஸ் கெயில்  களமிறங்கினர்.ஆட்டத்தில் முதல் ஓவரே கே.எல் ராகுல் 4 ரன்னில் ஆட்டமிழக்க பொறுப்புடன் ஆடிய மயங் அகர்வால் 22 ரன் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய கிரிஸ்  கெயிலுடன் இணைந்தது […]

Categories
அரசியல்

அதிமுக கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு தோல்வி பயம்…. நயினார் நாகேந்திரன் பேட்டி…!!

அதிமுக கூட்டணியை கண்டு தோல்வி பயத்தில் ஸ்டாலின் விமர்சித்து வருகின்றார் என்று இராமநாதபுர வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் .  வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகள்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார்.திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சி இடம்பெற்றுள்ள பிஜேபி_க்கு 5 நாடாளுமன்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜாஸ் பட்லர் 69 ரன்னில் அவுட்….. ராஜஸ்தான் அணி 14 ஓவர்களில் 118 /2 ……!!

ராஜஸ்தான் அணி 14 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு  118 ரன்கள் குவித்துள்ளது .  ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இதையடுத்து  தொடக்க வீரராக கே.எல் ராகுல் , கிரிஸ் கெயில்  களமிறங்கினர்.ஆட்டத்தில் முதல் ஓவரே கே.எல் ராகுல் 4 ரன்னில் ஆட்டமிழக்க பொறுப்புடன் ஆடிய மயங் அகர்வால் 22 ரன் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR அணி அற்புதமான தொடக்கம்….6 ஓவர் முடிவில் 64/0 ….!!

ராஜஸ்தான் அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் குவித்துள்ளது  ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது .  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து  கே.எல் ராகுலும், அதிரடி மன்னன் கிறீஸ் கெயிலும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல் ராகுல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியாகிறது NGK …….இந்திய அளவில் ட்ரெண்டிங்…..கொண்டாடும் ரசிகர்கள்…!!

என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகியதையடுத்து  சூர்யா ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . தானாசேர்ந்தக்கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய படம் NGK . இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கிட்டத்தட்ட ஒன்றரை  ஆண்டுகளுக்கு பின் நடிகர் சூர்யா நடித்து இந்த படம்  வெளியாக இருப்பதால்  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பு இருந்துவந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிறிஸ் கெய்ல்79 (47), சர்பராஸ் கான் 46*(29), விளாசல்…… ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில்4 விக்கெட் இழப்பிற்கு 184  ரன்கள் குவித்துள்ளது.  ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது .  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து  கே.எல் ராகுலும், அதிரடி மன்னன் கிறீஸ் கெயிலும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் விளாசிய கெய்ல் 65 (42) ….. KXIP அணி 15 ஓவர் முடிவில்125 /2……!!

பஞ்சாப் அணி 15 ஓவர் முடிவில் 125/2  ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்விளையாடி வருகிறது. இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது .  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து  கே.எல் ராகுலும், அதிரடி மன்னன் கிறீஸ் கெயிலும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல் ராகுல் 4 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

NGK படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு……. ரசிகர்கள் உற்சாகம்…!!

என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் தானாசேர்ந்தக்கூட்டம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிய நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என் ஜி கே. இப்படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்துள்ளார் .ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொறுமையான ஆட்டம்…… KXIP அணி 10 ஓவர் முடிவில் 68 /2……!!

பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 68/2  ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்விளையாடி வருகிறது. இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது .  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து  கே.எல் ராகுலும், அதிரடி மன்னன் கிறீஸ் கெயிலும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல் ராகுல் 4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேஎல் ராகுல் ஏமாற்றம்…… KXIP அணி 5 ஓவர் முடிவில் 31/1……!!

பஞ்சாப் அணி 5 ஓவர் முடிவில் 31 /1 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்விளையாடி வருகிறது. இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது .  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து  கே.எல் ராகுலும், அதிரடி மன்னன் கிறீஸ் கெயிலும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல் ராகுல் […]

Categories
அரசியல்

அதிமுகவின் கோட்டை…..ஸ்டாலின் அல்ல யார் வந்தாலும் அசைக்க முடியாது…. அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு…!!

யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகள்  கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அனைவரும் ஏறக்குறைய வேட்புமனுக்கு தாக்கல் செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை…!!

பொள்ளாச்சியில் மதுபோதைக்கு அடிமையானதை மனைவி தட்டி கேட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான  அருண் என்ற கங்காதரன்  வயது 23 இவரது மனைவி ஜோதி சரண்யா வயது 20  இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடமாகிய நிலையில் கங்காதரன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கணவன் – மனைவிக்கும் தகராறு முற்றியதால் மிகுந்த மனவேதனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது….!!

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.     https://youtu.be/yJb4qQwqdc0

Categories
அரசியல்

ரூ 33,46,00,000 பறிமுதல்….. பறக்கும் படை அதிரடி…… தேர்தல் அதிகாரி தகவல்….!!

தமிழகத்தில் இதுவரை 33 கோடியே 46 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால்பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர் .மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதி அமுலில் இருப்பதால் தேர்தல் ஆணையம் தீவிர […]

Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனை நிறுத்தம் ….. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கின் தண்டனையை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு  நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது . 1998_ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியத்தை  எதிர்த்து மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர் . ஒரு கட்டத்தில் இந்த  போராட்டத்தில் கல்வீச்சு , பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி தீவைப்பு வைப்பது என வன்முறை வெடித்தது. இது தொடர்பாக காவல்துறை  108 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை M.P,M.L.A_க்களை  விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விசாரித்ததில்  முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரிசப்பன்ட் ருத்ர தாண்டவம்….. ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்….. புகழ்ந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்…..!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ரிசப் பன்ட் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 87 ரன்களை குவித்ததை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.   ஐ.பி.எல் தொடரின் 3-ஆவது லீக் போட்டி மும்பை வான்கேட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி களமிறங்கி விளையாடியது. டெல்லி  அணி […]

Categories

Tech |