தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனயடுத்து இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், சித்தார்த் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து: ஒரு முறை தான் கதை சொன்னாரு. அவர் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் எந்த காட்சி எப்படி இருக்கணும் என்பதை தெளிவாக எடுத்தார். சினிமாவில் அழுத்தமான கேரக்டர்களின் நடிப்பது குறித்து: கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், ஆ… ஆவண்ண்ணா… அக்கண்ணாவுக்கும் வித்தியாசம் தெரியாதவன், நாட்டிலே வாரிசு. உதயநிதி வாழ்க என மட்டுமல்ல, இன்பநிதி வாழ்க என்றும் நாங்கள் கோஷம் போடுவோம். உதயநிதி வாழ்க என்று சொன்னது மட்டுமல்ல, இன்பநிதி வாழ்க என்று கூட நாங்கள் கூச்சல் போடுவோம். ஒரு முன்னாள் எம்எல்ஏ, எனக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசைதான், ஒரே ஒரு ஆசைதான். எங்க ஜமீன்தார்.. சின்ன ஜமீன்தாரை முதல் […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]
சேவூர் அருகே உள்ள தொடக்கப் பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூர் அருகே இருக்கும் மாங்கரசுவலையப்பாளையம் தொடக்கப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் கம்பு, ராகி, திணை, வரகு, சாமை, சோளம் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் சிறுதானியங்கள் பருப்பு வகைகள், கீரை விதைகள், அரிசி ரகங்கள், எண்ணை வித்துக்கள் […]
மலையாள சினிமாவில் பிரபல நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால். தனது தந்தையை போலவே இவரும் நடிகராக மாறி பல படங்களை ஹீரோவாக நடித்து வருகிறார். இவரின் ஆசை டைரக்ஷன் பக்கம் இருந்ததால் தொடக்கத்தில் இவர் ஜீத்து ஜோசப்பிடம் உதவியாளராக சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ஆனால் இவர் அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தாமல் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ஹிருதயம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் அண்மையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்க, சுனைனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க, ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு சூழல் உங்களுக்கு தெரியாது. 1962-இல் இருந்து திமுக எத்தனை இடங்களில் தனியாக நின்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று… காங்கிரஸ் தனித்து நின்று…. எல்லா கட்சியும் தனித்து நின்றது என்று சொன்னால்… பாரதிய ஜனதா கட்சி சந்தோஷமாக நாங்கள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் போட்டியிடும். […]
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாள சில காலமாக படப்பிடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால் பேமிலி மேன்-2, புஷ்பா ஸ்பெஷல் பாடல் மூலம் நல்ல கிரேஸை உருவாக்கினார் சமந்தா. இதன் மூலம் பல பாலிவுட் படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டார். தெலுங்கிலும் சகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு, சமந்தா திரைப்படங்களில் இருந்து […]
தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தன்யா பாலகிருஷ்ணன். இவர் ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு தோழியாகவும் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தன்யா தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிலையில், மாரி பட இயக்குனர் பாலாஜி மோகனை ரகசியமாக தனியா திருமணம் செய்து கொண்டதாக இணையதளங்களில் சமீப காலமாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் இயக்குனரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் […]
ஆறுமுகநேரி கே.ஏ மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி கே.ஏ மேல்நிலைப் பள்ளியில் சென்ற 1955 ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் வருடம் வரையிலும் பயின்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுமான கே.எஸ்.முருகேசன் தலைமை தாங்க முன்னாள் மாணவரும் சென்னை ஐகோர்ட் நீதிபதியான ஜெகதீஷ் சந்திரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சந்திப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. இதனை முன்னாள் மாணவரும் அருணாச்சல பிரதேச மாநில திறன் மேம்பாடு மற்றும் […]
மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, நம்மளும்.. நம்ம மட்டும் இல்லை. எங்கெங்கெல்லாம் பிஜேபி ஆட்சியில் இல்லையோ, அங்க எல்லாம் ஒரு கவர்னரை போடுறாங்க. அந்த கவர்னர்.. தான் ஒரு கவர்னர் அப்படிங்கறது மறந்துட்டு, எதோ கட்சியில் இருக்கக்கூடிய மாதிரி… இல்லனா ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கக்கூடியவர்கள் மாதிரி அவர்கள் மேடைக்கு முழங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை, […]
ராபின் உத்தப்பா மற்றும் யூசுப் பதான் ஆகியோர் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.. சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த லீக் போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கவுள்ளது. ஜனவரி மாதம் இப்போட்டிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் யூசுப் பதான் ஆகியோர் துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் காந்தி நகரில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே குடியிருப்பில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான காசி விஸ்வநாதன் என்பவர் தான் புதிதாக தொடங்கவிருக்கும் தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி மதன் அவரது நண்பர்களான சாய் கணேஷ், சக்தி ஆகிய 3 பேரும் இணைந்து காசி விஸ்வநாதனிடம் தொழிலில் முதலீடு செய்வதற்காக 15 லட்ச ரூபாயை கொடுத்துள்ளனர். […]
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பேசிய திமுகவின் டிகே.எஸ். இளங்கோவன், சட்டமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றிசுழன்று பிரச்சாரம் செய்து பணியாற்றியவர். அவரைப் பொருத்தவரை இயக்க தோழராக, இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்து செல்பவராக திமுக குடும்பத்திலிருந்து வந்தவராக இருக்கிறார். அவரை கட்சி முழுவதுமாக ஏற்றுக் கொண்டது. அவரது பணிகள் கட்சிகார்களால் பாராட்டப்படுகின்ற பணிகளாக இருக்கின்றன. எனவே அவருக்கு அமைச்சராக கூடிய தகுதிகள் இருக்கின்றன. இது […]
சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை ஜெயராம் தெருவில் முகமது உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி இரவு முகமது உசேன் தனது தோழியுடன் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கிழக்கு கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி முகமதுவிடம் இருந்த 600 ரூபாய் பணத்தை பறித்தனர். இதனையடுத்து முகமதுவின் செல்போனை பறித்து பண பரிமாற்றம் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொட்டையாண்டி புறம்பு ஊராட்சி பகுதியில் ரஞ்சித்குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வெடி வைக்கப்பட்டது. அப்போது அருகே இருந்த வீடுகள் மீது கற்கள் விழுந்து மேற்கூரை சேதமடைந்தது. இது தொடர்பாக சப் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்ததால் கடந்த சில மாதங்களாக கல்குவாரி செயல்படாமல் இருந்துள்ளது. நேற்று கல்குவாரியில் மீண்டும் பணிகள் தொடங்கியதால் கோபமடைந்த பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த வருவாய் ஆய்வாளர் கோபிலதா, […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொங்கலப்பம்பாளையத்தில் விவசாயியான கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட ராஜகோபால் மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது கடந்த 20 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததால் ராஜகோபாலின் இடது காலில் சைலன்சர் பட்டு படுகாயம் ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு ராஜகோபால் வெளியே புறப்பட்டார். இதனையடுத்து திரும்பி வந்தபோது தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்து […]
உதயநிதி பதவியேற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மூத்த தலைவர்களில் இருந்து கடைசி தொண்டன் வரை எதிர்பார்த்த நிகழ்வு…. உதயநிதி அவர்களை அமைச்சராக நியமித்த கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு, அமைப்புச் செயலாளர் என்ற முறையில் கழகத் தோழர் சார்பிலும், தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் இருக்கக்கூடிய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது. சிறப்பாக தமிழகத்தினுடைய தலை சிறந்த அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று முழு நம்பிக்கை […]
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படம் 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கன்னட படமான கேஜிஎப் 2 வசூல் ரீதியாக இரண்டாம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புக் மை ஷோ என்ற […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக தலைமையிலான அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவார்கள் என்பதற்கான முன்னோட்டமாக இது அமைந்திருக்கிறது. இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த தனிநபர் மசோதாவை அவர்கள் மக்களவையிலும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. மக்களவையில் அவர்களால் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டு இருப்பதால், அங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள… ஒரு ஏதுவான சூழல் இருக்கலாம். ஆனாலும் கடைசியாக அது வாக்கெடுப்பில் வீழ்த்தப்படும் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் ‘ஆர்சி 15’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து இவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராம்சரண் வரிக்குதிரை டிசைன் இருக்கும் சட்டை அணிந்தபடி […]
உலகளவில் கொரோனா இன்னும் இருப்பதால் இந்தியாவில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.சேகரித்த மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பவும், தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை நாங்கள் கட்டி கொடுக்கிறோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக சொன்னீர்கள். அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கி சென்று விட்டாரா ? அந்த மருத்துவமனை என்ன ஆகிவிட்டது ? உ.பி என்று சொல்லுவோம். உபி என்றால் உடன்பிறப்புகள். ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. தளபதி இந்த சங்கீஸ் தொல்லை தாங்க முடியவில்லை தளபதி என்று சொன்னார். இங்கேயும் […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அதை கட்டி காத்தவர் இதய தெய்வம் அம்மா அவர்கள். இருபெரும் தலைவர்கள். குடும்பம் கிடையாது. இங்கே இருக்கின்றவர்கள் தான் பிள்ளைகள் என்று அந்தப் பிள்ளைகளுக்காக உழைத்து மறைந்த தலைவர் நம்முடைய தலைவர்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், இதயம் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும்… தன்னுடைய உயிர் இருக்கின்ற வரை… […]
பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குஸ்தர் மாவட்டத்தில் சந்தை ஓன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தற்போது பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளை அமைப்பான பாகிஸ்தான் […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மி மட்டும் இல்லைங்க. ஆன்லைன்ல நிறைய இருக்கு. சரத்குமார் ஆன்லைன்ல நடிச்ச ஒரே காரணத்துக்காக இந்த கேள்வி கேக்குறீங்க. எனக்கு அதை பத்தி கவலையே கிடையாது. மோனோகிராஃப் சைட் ப்ளாக் பண்றமா நாம் இதை பிளாக் செய்வதில்லை. ஆன்லைன் ரம்மி இல்லைங்க… கிரிக்கெட் என்ன பண்றாங்க ? தோனி வராரு என்ன பண்றாரு ? ஷாருக்கான் வாராரு என்ன பண்றாரு ? அது சூதாட்டம் இல்லையா ? அங்க தான் […]
ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 90 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். ஆண்டுதோறும் இந்தியாவில் உள்நாட்டு தொடரான ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டும் ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த ரஞ்சிக் கோப்பை தொடர் மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். எனவே ஒவ்வொரு வீரர்களும் தங்களது திறமையை இந்த தொடரில் வெளிப்படுத்தி இந்திய அணியில் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி, ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும், நம்ம கட்சிக்கும் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டின் வேலை தமிழர்களுக்கே உறுதி செய்யப்பட வேண்டும். மாநில அரசு வேளையில் 100%, மத்திய அரசு மற்றும் தனியார் துறைகளில் 90 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய உரிய சட்டத்தை தமிழக அரசு இயற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். எல்லா மாநிலங்களிலும் அந்த மாநில அரசுகளில் 100 சதவிகித அந்த மாநில மக்களுக்குத் தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எதையும் நான் புதிதாக கேட்கவில்லை, மத்திய […]
நாளைய பஞ்சாங்கம் 21-12-2022, மார்கழி 06, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 10.16 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. விசாகம் நட்சத்திரம் காலை 08.33 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை […]
திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளரை பேசியபோது, நீங்க திமுகவுடைய பினாமி சொத்துக்கள் எங்காவது இருக்கு என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் எல்லாம் ரிஜிஸ்டர் பண்ணலாம். மக்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுக்கின்றோம். அதெல்லாம் ஒரு ஆப்போட லான்ச் பண்றோம். தமிழ்நாட்டில உங்களுக்கு தெரியும். கரூரா அண்ணே…. செந்தில் பாலாஜி பினாமி 10 பேர் இருக்காங்க. இதெல்லாம் அவங்க சொத்து என்று நீங்க என்டர் பண்ணுங்க. நாங்க அதை சரி பார்க்கிறோம். தேவையில்லாமல் உங்களுடைய […]
டிசம்பர் 22 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி, டிச.,22-ந் தேதி தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் இரவு 9 மணிக்கும், எர்ணாகுளம் சென்னை சென்ட்ரல் ரயில் இரவு 11.20-க்கும் புறப்படும். மறுமார்க்கத்தில் டிச., 23-ல் நெல்லை – தாம்பரம் ரயில் மதியம் மணிக்கும், சென்ட்ரல் – எர்ணாகுளம் ரயில் மதியம் 2.50 […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவர் ஐயா படத்தின் மூலமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து டாப் 1 நடிகையாக உள்ளார். நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் வரும் 22ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், பேட்டி அளித்த அவரது கணவர் விக்னேஷ், 99 நிமிடங்கள் கொண்ட இந்த படத்தில் இடைவெளி இருக்காது. இதற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார். தொடர்ந்து, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அம்மாவாக குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்கிறார் என்ற […]
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 37,000 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் பங்களிப்பு மட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை கிண்டியில் தொடங்கி வைத்தார். அத்துடன் இத்திட்டத்துக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன், தான் […]
தமிழக அமைச்சரவை கூட்டம் என்பது வரக்கூடிய ஜனவரி நான்காம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் 35 அமைச்சர்கள் முதலமைச்சருடன் சேர்ந்து பங்கேற்க உள்ளார்கள். வரும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூட இருக்கிறது. அது பொங்கலுக்கு முன்பா ? பின்பா ? என அறிவிப்பு வர இருக்கிறது. அதில் என்ன அறிவிப்பு வெளியிடலாம்? தமிழக அரசின் செயல்பாடுகள், அறிவிப்புகள் என்ன இருக்க […]
பாகிஸ்தானில் உள்ள பன்னு நகரில் பயங்கரவாத எதிர்ப்பு மையம் உள்ளது. இங்கு கைது செய்யப்பட்ட பல பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் பயங்கரவாதிகளுடன் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பயங்கரவாதி போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில் கடுகாயம் அடைந்த 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற பயங்கரவாதிகளை விடுவித்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை […]
விழுப்புரம் அருகே தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த கலைமகள் சுடுமண் சிற்ப குழுவினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாங்கள் மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலை முறையாக கற்றுக் கொண்டிருக்கிறோம். இதில் 91 பேர் ஈடுபட்டு வருகின்றோம். இந்நிலையில் நாங்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை உலர வைத்து சூலை போட்டு வேகவைப்பதற்கு போதிய இடவசதி இல்லை. அதனால் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு […]
இந்திய அரசு தன் நாடு மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறது. அவையனைத்தும், பெண்கள், குழந்தைகள், ஓய்வூதியதாரர்கள், விவசாயிகள், தொழில்புரிவோர் என பல்வேறு பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. அவ்வாறு மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் அரசின் அதிகாரபூர்வமான விளம்பரங்கள், அறிக்கைகள் மற்றும் அரசின் சமூகவலைதளபக்கங்களில் வெளியிடப்படும். ஆனால் இப்போது பல YouTube சேனல்களானது அரசுதிட்டங்கள் மற்றும் பல விஷயங்கள் குறித்து தகவல் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில், 2.26 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்ட […]
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் கீழ்பாக்கம் கல்லூரி சாலை மற்றும் கல்லூரி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, “விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லூரிக்கும், கல்லூரி சாலைக்கும் இடையே தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காலிமனை அமைந்துள்ளது. அந்த காலி மனையில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு […]
பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா, டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக பாபர் அசாம் ஒரு பெரிய பூஜ்ஜியம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பென் ஸ்டோக்ஸ் & கோ அடித்து நொறுக்கி டெஸ்ட் தொடரை 3:0 என ஒயிட் வாஷ் செய்தது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் தொடரை 0:3 […]
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என பலர் வாக்களித்துள்ளனர். உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரை வாங்கினார். இதனையடுத்த அவர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடக தளங்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கணக்குகளை முடக்கப்போவதாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருப்பதியில் உள்ள 3 தனியார் கல்லூரிகளில் லத்தி படத்தில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, லத்தி படத்தின் டிக்கெட் விற்பனையின்போது […]
நம் நாட்டில் செயல்பட்டு வரக்கூடிய பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவைத்தொகையானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்து இருப்பதாக பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன் வாயிலாக பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும் மற்றும் புது வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் முதற்கட்டமாக 4 பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு முயற்சி செய்வதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வங்கிகளினுடைய பங்கு விலக்கல் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியாகும். நாட்டின் மக்கள் தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 7.2 சதவீதம் ஆகும். இந்நிலையில் டிசம்பர் 2-வது வாரம் வரை மொத்தம் 9.6 கோடி பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். இதனையடுத்து கேரளா மற்றும் மராட்டியத்தில் ஒரு கோடி பேருக்கு மேல் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது என […]
தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. […]
பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு மீது நேற்று முன்தினம் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் […]
நடிகர் விஜயின் வாரிசு படத்திலிருந்து தற்போது 3ஆவது பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று […]
தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கடந்த 2016-ம் வருடம் பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டு வருகிற 2023 புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1ல் இருந்து புழக்கத்திற்கு வர இருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்படுகிறது. மேலும் தற்போது உள்ள ரூ.2000 நோட்டை முழுமையாக தடை செய்து விட்டு, பழையபடி ரூ.1000 நோட்டை அரசு புழக்கத்தில் விட திட்டமிட்டு உள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. அண்மையில் […]