வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் நிலுவையில் இருக்கக்கூடிய வரிகளை உடனடியாக கடையின் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் இதுவரை செலுத்தவில்லை. இதனால் இன்று திருவல்லிக்கேணி, ஜி.பி. சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள 125 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் வரி செலுத்தாமல் இருக்கும் கடையின் உரிமையாளர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் […]
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை ராஜஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் வெளியில் சிங்கம் போல பேசுகிறார் ஆனால் உண்மையில் அவர் உள்ளே எலிபோல செயல்படுகிறார் என்று ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். இந்நிலையில் பிரதமரை இவ்வாறு விமர்சித்து பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் பாஜகவினர் குழல் எழுப்பினர். ஆனால் பார்லிமென்ட்க்கு வெளியே பேசியதற்கு இங்கு மன்னிப்பு […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகனை தந்தை கொன்று உடலை சாக்கு பையில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அலிகாரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தாராப்பூர் கிராமத்தை சேர்ந்த 24வயதான ரவி என்பவர் கடந்த 14ஆம் தேதி குடித்துவிட்டு தந்தை ஜெயப்பிரகாசுடன் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அவர் திடீரென காணாமல் போனதால் தனது மருமகன் ரவி காணாமல் போனது குறித்து மாமா போலீசில் புகார் அளித்த போது இந்த […]
ஜல்லிக்கட்டு குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போட்டி நடைபெறும். அதிலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதனை பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட […]
சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் செயலியை பயன்படுத்தி வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பயனர்களுக்கு தேவையான மின்னஞ்சல் மற்றும் டிரான்ஸ்லேட்டர் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இங்கு உள்ளது. அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூகுள் நிறுவனம் அவ்வப்போது புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் கூகுளில் தேவையான அனைத்தையும் தேட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தேடும் வசதியை கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு போட்டி தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குரூப்-1 தேர்வுக்கான அட்டவணை இல்லாமல் இருந்தது. தற்போது குரூப்-1 […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் […]
முந்தைய பிரத்தானிய உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்துவது என்னும் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு உருவான நிலையில் இந்த விஷயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பிரத்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் தொடர்பான வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் இந்த திட்டம் ஐ.நாவின் அகதிகள் ஒப்பந்தத்தையோ அல்லது […]
தமிழகத்தில் அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பே இரண்டாக பிரிந்து விட்டது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு பல கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ள […]
பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் […]
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் தமிழக போக்குவரத்து துறை மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் நிறைவு பெற்றதும் விரைவில் இ- சேவை மையத்திலே எல்.எல்ஆர் எனப்படும் பயிற்சி ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் தொடக்கத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக “பரிவாகன்” எனும் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைன் மூலமாக அனைவராலும் இந்த வசதியை பயன்படுத்த […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தெற்கு வங்க கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் டிசம்பர் […]
தன் நலம் கருதாமல் செய்யப்படும் உதவி தான் மனிதநேயத்தின் மிகப் பெரிய சான்றாக இருக்கிறது. இதனை எடுத்துக்காட்டும் பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதுபோன்ற ஒரு வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியாகியது . அந்த வீடியோவில் நிரம்பி வழியும் நீர்த்தேக்கத்தில் ஒரு நாய் ஒன்று சிக்கித்தவிக்கிறது. அப்போது அந்த நாயை காப்பாற்ற ஒரு நபர் தன் உயிரை பணையும் வைத்து செய்யும் முயற்சியை வீடியோவில் காண முடிகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் […]
தமிழகத்தில் பொங்கலுக்கு முன்பு ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் இலவச மின் இணைப்பு செயல்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதில் தற்போது 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன்பு மின் […]
இப்போது அனைத்து விவசாயிகளிடமும் கைபேசி இருப்பதால் வேளாண்மை குறித்த பல்வேறு தகவல்களை கைபேசி வாயிலாக வழங்கும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி ஆகும். தற்போது உழவன் செயலி வாயிலாக வழங்கப்படும் சேவைகள் பற்றி தெரிந்துகொள்வோம். மானியத் திட்டங்கள்: வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றிய தகவல்கள். இடுபொருள் முன்பதிவு வேளாண்மை, உழவர் நலத்துறை வாயிலாக விநியோகம் செய்யப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு […]
மலையாள சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் உல்லாஸ் பந்தளம். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நிலையில், மம்முட்டியின் தெய்வந்தின்டே ஸ்வந்தம் க்ளீடஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். இவர் தன்னுடைய மனைவி ஆஷா மற்றும் மகன்கள் சூரியஜித், இந்திரஜித் ஆகியோருடன் பட்டினம் திட்டா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் உல்லாஸ் தன்னுடைய மனைவி ஆஷாவை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் […]
சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் குப்பை லாரிகளுக்கு நேரம் நிர்ணயிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். “அதில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதாவது பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்கக் கூடாது குப்பை லாரிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதனால் பள்ளி […]
உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் youtube சேனல் தொடங்கலாம் என்ற நிலை வந்து விட்டது. இந்நிலையில் கூகுளின் யூடியூப் நிறுவனம் தற்போது கல்வி துறையிலும் அடி எடுத்து வைக்கிறது. Youtube லேர்னிங் என்ற […]
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 2 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 20, 21, 23 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் டிசம்பர் 24-ஆம் தேதி வரை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்படும். அதேபோல குரூப் 1, குரூப் 2, குரூப்-3 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுக்கான அட்டவணையானது வெளியிடப்படும். எந்தெந்த துறையில் எவ்வளவு காலியிடப் பணியிடங்கள் உள்ளது ? அதற்கான அறிவிப்பு வெளியாகி, அந்த காலிப் பணி இடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பானது வெளியிடப்படும். கடந்த வாரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி) சார்பில் அறிவிப்பானது வெளியிடப்பட்டது. அதில் […]
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியில் வசித்து வருபவர்கள் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியினர். இதில் ஐயப்பன் அஜித் ரசிகர் என கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி கொண்டு திருநெல்வேலி தாளையத்து பகுதியை சேர்ந்த சிவா என்பவர், எனக்கு அஜித் ரசிகர் மன்ற தலைவரின் மேலாளர் நெருக்கமானவர் எனக்கூறி ஐயப்பனை நம்ப வைத்துள்ளார். அத்துடன் நடிகர் அஜித் அவர்கள் கஷ்டப்படும் ரசிகர்களுக்கு மாவட்ட வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை […]
பொருட்களை வாங்க கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால், உரிய நேரத்தில் அதனை திருப்பி செலுத்தவேண்டும். அதே போன்று கிரெடிட் கார்டின் லிமிட்டானது அதிகரிக்கப்பட்டாலும், நம் தேவைக்கு ஏற்றவாறு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது, கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. இந்த கார்டை சரியாக பயன்படுத்தி இஎம்ஐ செலுத்திவரும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு லாபகரமான வாய்ப்புகளையும் வங்கிகள் வழங்குகிறது. அவற்றில் ஒன்றுதான் கடன் வழங்குவது ஆகும். பொதுவாக வங்கிகளில் பர்சனல் லோன் வாங்குவது கடின செயல்முறைதான். தேவையான ஆவணங்கள் […]
பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3:0 கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது டெஸ்ட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தானை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றது இங்கிலாந்து அணி. இந்நிலையில் […]
சீன நாட்டில் 60% மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகலாம் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. எனவே, கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இந்நிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர். எனவே, சீன அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிகமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், மூத்த […]
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் “வாரிசு” மற்றும் அஜித்தின் “துணிவு” படங்கள் 8 வருடங்களுக்கு பின் நேரடியாக மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 2 நடிகர்களுக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சுபாஷ், மணிகண்டன் ஆகிய இரண்டு பேரும் சபரிமலை […]
ஆந்திரா கர்னூல் மாவட்டத்திலுள்ள கோசிகி பகுதியில் பசு ஒன்றின் மடியில் ஒரு குழந்தை அழகாக பால் குடித்த சம்பவம் அனைவரின் கர்வத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பசு எந்த இடையூறும் இன்றி தாய்மை உணர்வுடன் அந்த குழந்தைக்கு பால் ஊட்டும் நிகழ்வு காண்போரை நெகிழ வைத்துள்ளது. அதே நேரம் கொதிக்க வைக்காத பாலை அக்குழந்தை பசு மடியில் இருந்து நேரடியாக குடிப்பதால் பாக்டீரியா, வைரஸ் போன்ற ஒட்டுண்ணிகள் தீங்கு விளைவிக்கும் […]
மத்தியப்பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் நேற்று நாற்காலியை தொட்டதற்காக 2ம் வகுப்பு மாணவனை அப்பள்ளி ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக காயமடைந்த மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் கல்வி அலுவலர் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். சலுவா கிராமத்தில் வசித்து வரும் அமர்சிங் ஸ்ரீவாஸின் 7 […]
குரூப் 1 தேர்வுக்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குருப் 1 அட்டவணை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான உத்தேச அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் […]
ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேறினர்.. வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார். கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் ரோஹித் சர்மா. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை, அதேபோல வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் இடம்பெறவில்லை. […]
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அல்வார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று (டிச.19) உரையாற்றினார். அப்போது, ராஜஸ்தானில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும் அவர்கள் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் […]
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் செய்தி தொடர்பாளர்களின் ஆலோசனை கூட்டமானது வரும் 27ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அதிமுகவின் தலைமை கழகம் ஆனது தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 27ஆம் தேதி காலை 10 மணிக்கு எடப்பாடி […]
இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக உலக நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் உதவி வருகிறது. அதிலும் குறிப்பாக விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிக்கித் தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ஐ.நா போன்ற அமைப்புகள் நேரடியாக உதவிகளை வழங்குகிறது. ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பாக 47 ஆயிரத்து 69 விவசாய குழு குடும்பங்களுக்கு ஏற்கனவே 2300 டன் உரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பின் […]
இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்த கப்பல் சேவையானது புத்தகயா செல்லும் யாத்திரீகர்களுக்கும் வர்த்தக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இது குறித்து கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வருகிற ஜனவர் மாத மத்தியில் இருந்து இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கும், பாண்டிச்சேரிக்கும் இடையான கப்பல் […]
பெங்களூரில் உள்ள கூடலூர் பகுதியில் பரமசிவமூர்த்தி (47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயதான தந்தை மற்றும் தாய் இருக்கின்றனர். அவர்களை கவனித்துக் கொள்வதற்காகவும், வீட்டு வேலை செய்வதற்காகவும் பெண் வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதனால் வில்சன் கார்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் பரமசிவமூர்த்தி வேலைக்கார பெண் வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த நிறுவனமும் 21 வயது இளம்பெண்ணை அனுப்பி வைத்துள்ளது. அதன்படி அந்த இளம் பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் […]
சீன நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால், மக்கள் அதனை எதிர்த்து தீவிரமாக போராட தொடங்கினர். எனவே, மூன்று வருடங்கள் கழித்து விதிமுறைகளில் தளர்வு கொண்டுவரப்பட்டது. இதனால், மீண்டும் அங்கு கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. உயிர் பலிகளும் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பலிகள் குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில், பீஜிங் மாகாணத்தில் மருத்துவமனையில் […]
உத்தரப்பிரதேசம் மாநிலம் மல்புரா போலீஸ் நிலையத்தில் சென்ற டிச..16-ம் தேதி ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில், கடந்த 16ம் தேதி காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு சென்ற இரண்டு சகோதரிகள் வீடு திரும்பவில்லை. இவர்களில் ஒருவர் 10ம் வகுப்பும், மற்றொருவர் 12ம் வகுப்பும் படித்து வந்தனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் காவல்துறையினர் பெற்றோரிடம் விசாரித்தபோது மதிப்பெண் குறைவாக எடுத்தது பற்றி சகோதரிகளின் தாய் அவர்களை திட்டியது தெரியவந்தது. இந்நிலையில் காணாமல் போன சகோதரிகளில் ஒருவரின் சமூகஊடக […]
திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி சுப்பாரெட்டி, அவரின் மனைவி சொர்ணலதா ரெட்டி இருவரும் திருப்பதி வெங்கடாசலர் கோவிலுக்கு 2 கிலோ 12 கிராம் 500 மில்லி கிராம் எடையில் தங்க கந்தாபாரணத்தை காணிக்கையாக அளித்துள்ளனர். திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் சீனிவாச விஸ்வசாந்தி மகா யாகம் வெற்றிகரமாக முடிந்ததை முன்னிட்டு அவர்கள் இந்த தங்க கந்தாபரணத்தை காணிக்கையாக அளித்துள்ளதாக கூறியுள்ளனர் […]
காயத்ரி ரகுராம் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பா.ஜ.க-வில் இருந்து என்னை துரத்துவது தான் உங்கள் லட்சியமா..? இதற்கிடையில் தொடர்ச்சியான தாக்குதல். பிறகு நான் எப்படி ஒரு தலைவரை பின்பற்றுவது..? இது போன்ற செயல்களை ஊக்குவிக்கும்போது எப்படி இந்த உத்திகளை நான் 8 வருடங்களாக எதிர்கொண்டு நிற்கிறேன். நான் இன்னும் வலுவான பா.ஜ.க காரிய கர்த்தா மட்டுமே” என அவர் கூறிய டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. மேலும் தன் மீது சுமத்தப்படும் அனைத்து பழிகளையும் […]
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாரிடம் இணைந்து அந்த பகுதியில் இன்று காலை தேடுதல் வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் அந்த பகுதியை […]
ஈராக் நாட்டில் காவல்துறையினரின் கவச வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 9 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்திற்கு அருகில் இருக்கும் கிர்குக் நகரத்தில் காவல்துறையினர், கவச வாகனத்தில் சென்ற சமயத்தில் தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் மேற்கொண்டனர். அவர்கள், வெடிகுண்டுகளை வீசி எறிந்ததோடு, வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதலும் நடத்தியதில் காவல்துறையினர் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. […]
செய்தியாளர்களை சந்தித்து பேசியே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு பெரும்பாலான இளைஞர்கள் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அண்மையில் வெளிவந்துள்ள ஆண்டு திட்ட அறிக்கை இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே குரூப் 4 தேர்வை 2023 ஆம் வருடத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் எஸ்சி, எஸ்டி மக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கூகுளில் டிராபிக் ஏற்பட்டதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கர்த்தார் நாட்டில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மட்டும் அர்ஜென்டினா அணிகள் மோதியது. இந்நிலையில் இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் அடிக்க கோப்பையை வெல்வதில் இரு அணிகளும் இடையே கடுமையான போட்டி நிலவியது. பின்னர் இறுதியில் போட்டி 3-3 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து பெனால்டிக் கிக் முறையில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு […]
ஸ்ரீ ஜெயவிலாஸ் நிறுவனத் தலைவர் T.R.தினகரன் வயது மூப்பு காரணமாக உ யிரிழந்தார். மதுரை, அருப்புகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலரின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்த அவரின் மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை அருப்புக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வடகொரிய அரசு செயற்கைக்கோளை வானில் செலுத்தி, சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலினுடைய தீர்மானங்களை மீறி செயல்படுவதும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் வடகொரியாவின் வழக்கமாகிவிட்டது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய இரண்டு ஏவுகணைகளை அடுத்தடுத்து ஒரே நாளில் வடகொரியா சோதனை மேற்கொண்டது. அந்த ஏவுகணையானது, ஜப்பான் நாடு வரை பாய்ந்து தாக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா முதல் உளவு செயற்கைக்கோளை வானில் […]
சென்னை தாம்பரம் அருகிலுள்ள சித்தாலப்பாக்கம் அசினாபுரத்தில் வசித்து வரும் செந்தில் என்பவரின் மகன் சதீஷ். இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ வரலாறு 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இதில் சதீஷ் கல்லூரி அருகிலுள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார். இதற்கிடையில் விடுதி அருகில் உள்ள பீட்சா கடையில் பகுதி நேரமாக உணவுப்பொருள்களை வீடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை சதீஷ் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து அறைக்கு சென்ற […]
டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் மற்றும் […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எவ்வளவு மோசமாக இருக்கு இந்த ஆட்சி ? நம்ம எல்லாம் கொத்தடிமைகளாக வைத்திருக்கின்றது இந்த அரசு. கொத்தடிமைக்கு கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு, நம்ம முதலமைச்சர் என்ன பேசுகிறார் ? இன்றைக்கு இந்தியாவிலே சிறந்த ஆட்சியை கொடுக்கிற ஒரே மாநிலம் திமுக ஆளுகின்ற திராவிட மாடல் ஆட்சி என்கிறார். பொதுவாகவே மாடல் என்றால் என்ன ? மாடல் என்றால் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவது.. சேலைக்கு மாடல் வருவார்கள், […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதல்வருடைய அறிவுரை என்னவென்றால், சிறப்பு தரிசனம் – சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கம். இருந்தாலும் திருக்கோவிலின் உடைய பொருளாதார நிலை, சூழ்நிலையை கருதி, சிறப்பு கட்டணங்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். ஒரு சில திருக்கோவில்களில் நல்ல நிலையில் அந்த திருக்கோவிலின் பொருளாதாரம் இருக்கின்ற நிலையில் முழுமையாக அந்த கட்டணத்தை ரத்து செய்கின்றோம். அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவிலில் 200 ரூபாய் […]
இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் குவித்தது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” 2ஆம் பாகத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் முதல்பாகம் வசூல் சாதனை படைத்திருக்கும் நிலையில், அடுத்த பாகத்தின் காட்சி அமைப்புகளில் பிரமாண்டத்தை மேலும் கூட்டவேண்டும் என அதற்குரிய கிராபிக்ஸ் வேலைகளானது தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையில் ஒரு […]