மகரம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடி மனமகிழ்ச்சி அடையும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமை படக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பெயரும் புகழும் ஓங்கி இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். காரியத்தில் அனுகூலமும் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவிகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை கூடி மனதில் […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல் சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். யாரிடமும் கோபமாக பேசவேண்டாம். அனைவரிடமும் விட்டுக் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம். இன்று கவனமாக எதையும் மேற்கொள்ளுங்கள். பெண்களால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். திறமையான பேச்சின் மூலம் மட்டுமே எந்தவொரு வேலையிலும் வெற்றிப்பெற முடியும். இறைவழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காரியத்தில் சிறிய தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். தடைகளைத் தாண்டிதான் வெற்றிப்பெற வேண்டியதிருக்கும். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். […]
துலாம் ராசி அன்பர்களே..! இன்று வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாகும். தெய்வ வழிபாடுகளுக்காக பயணங்கள் செய்வீர்கள். இன்று வாழ்வில் எல்லா வளமும் பெருகும். உல்லாச பயணங்களால் மனமகிழ்ச்சி அடையும். பெண்களுக்கு இன்றையநாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியப்பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் வந்துசேரும். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினரின் உதவிகள் கிடைக்கும். பிரிந்து சென்றார்கள் வந்திணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி […]
கன்னி ராசி அன்பர்களே..! குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நீங்கி கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும் நாளாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். இன்று தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரித்து காணப்படும். நீங்கள் நினைத்ததெல்லாம் சிறப்பாக நடந்து முடியும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரமுள்ள உயர் பதவிகள் உங்களைத்தேடி வரக்கூடும். செய்யக்கூடிய வேலையில் சிறப்பு இருக்கும். உத்தியோகத்தில் உங்களை மற்றவர்கள் மதிக்கக் கூடும். வீன் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். வெளிநாட்டு பயணங்கள் விஷயமாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் மனம் தெளிவுப்பெறும். தொழில் வியாபாரம் சிறந்த லாபத்தைக் கொடுக்கும். தனவரவு அதிகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் எண்ணங்கள் மேலோங்கும். தெய்வ அருளால் அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். எந்தவொரு சூழ்நிலையிலும் திறமையாகக் கையாண்டு வெற்றிப் பெறுவீர்கள். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். மனதிலிருந்த கவலைகள் விலகிச்செல்லும். வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். பயணங்களும் வெற்றியைக் […]
கடகம் ராசி அன்பர்களே..! முன்யோசனையின் மூலம் செயல்படுவதனால் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களை பாராட்டுப் அவர்களிடமிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. புகழுக்கு நீங்கள் மயங்க வேண்டாம். அனைத்து விதத்திலும் நற்பலன் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். தனலாபம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக நண்பர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை செய்யக்கூடிய இடத்தில் பொருட்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள். பெண்கள் சமையல் மேற்கொள்ளும் போழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இறைவனின் அருள் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட தொகை கையில் வந்துசேரும். தொழிலில் எச்சரிக்கையுடன் ஈடுபடுங்கள். குடும்ப பெரியவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். பொறுமையை மேற்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் அதிகமாக கிட்டும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்துச்சேரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சகோதர ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தார் அன்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய பணிகளை முடித்து வெற்றிப் பெறுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று விரயங்கள் ஏற்படாமலிருக்க விழிப்புடன் செயல்பட வேண்டியது இருக்கும். செய்யும் செயலை நிதானமாக செய்யுங்கள். சேமிப்பை மேற்கொள்ளுங்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். தேவையில்லாத கற்பனைக்கு இடங்கொடுக்க வேண்டாம். மனதை ஒருநிலை படுத்துங்கள். வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்லுங்கள். நிதானத்தை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் நல்லப்பலன் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அன்பை […]
இன்றைய பஞ்சாங்கம் 20-12-2022, மார்கழி 05, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 12.45 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. சுவாதி நட்சத்திரம் காலை 09.54 வரை பின்பு விசாகம். சித்தயோகம் காலை 09.54 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 20.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். […]
திசம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 354 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 355 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 11 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 69 – நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு உரோம் நகரை அடைந்தான். 217 – முதலாம் கலிஸ்டசு 16-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் உடனடியாகவே இப்போலிட்டசு எதிர்-திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார். 1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் இளவரசன் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான். 1334 – பன்னிரண்டாம் பெனடிக்ட்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1606 – வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜன் நாகம்மாள் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது 3 பேர் மறைவான இடத்தில் அமர்ந்து கொண்டு போதை மாத்திரைகளை வாலிபர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜன் உடனடியாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று பேரையும் கையும், களவுமாக பிடித்து விசாரித்தனர். […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தன்னுடைய தங்கைக்கு நடந்த ஆசீட் வீச்சு சம்பவம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆசிட் வீசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை […]
இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் யூத் செஸ் போட்டிகளில் 17 நாடுகளை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில் மதுரை சொக்கலிங்கம் நகரை சேர்ந்த 10- ஆம் வகுப்பு மாணவி கனிஷ்கா 16 வயது உட்பட்டவர்களுக்கான பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மாணவி கனிஷ்கா கூறியதாவது, கடந்த 6 வருடங்களாக செஸ் விளையாடி வருகிறேன். தினமும் 10 முதல் 15 மணி நேரம் இதற்காக பயிற்சி பெற்று மாநில அளவில், […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாரப்பநாயக்கன்பட்டியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கரன் என்ற மகன் இருந்துள்ளார். ரிக்வண்டி தொழிலாளியான பாஸ்கரனுக்கு மீனா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பாஸ்கரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் மீனா தனது இரண்டு மகன்களையும் அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த பாஸ்கரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பூதேரி புல்லவாக்கம் கிராமத்தில் வசிக்கும் 30 கூலித் தொழிலாளர்கள் வளவனூர் கிராமத்திற்கு நெல் நடவு வேலைக்காக சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து ஒரு வேனில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வளவனூர் கூட்ரோடு அருகே சென்ற போது திடீரென பிரகாஷுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை […]
சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.என் புதூர் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை ராஜசேகர் பார்த்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த புள்ளி மானை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ… தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ… தொழிலாளி அணி கேக்குது, மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்து நெற்கதிர்களை மிதித்து சேதப்படுத்துவதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் கூடலூர் வனவர் செல்லத்துரை […]
சேலம் மாவட்டத்தில் உள்ள தென்குமரை கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கோவர்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது கோவர்த்தனன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் கோவர்தனனை […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு நாகலூர் மலை கிராமத்தில் நிஷாந்த்-மாலதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து 2 மாதமே ஆனால் ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 15-ஆம் தேதி நிஷாந்த் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து தம்பதியினர் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த பிறகு மாலதி வீட்டை திறப்பதற்காக கணவரிடம் குழந்தையை கொடுத்துள்ளார். அப்போது ஒரு கையில் குழந்தையையும், மற்றொரு கையில் மளிகை பொருட்களையும் வைத்துக்கொண்டு […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கத்தில் நேற்று சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “ஜன சங்கத்தின் தமிழக கிளையின் முதல் தலைவராக இருந்தவர் வி.கே. ஜான் என்ற கிறிஸ்தவர். இந்நிலையில் மற்ற மதத்தினரின் மத அடையாளத்தை ஏற்றுக் கொண்டால் தான் மதச்சார்பின்மை என்பதில்லை. எந்த மதமும் இன்னொரு மதத்துக்கு தாழ்வில்லை என்பதை மதச்சார்பின்மை. அதேபோல் ஒரு […]
சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி முருகேசனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து அதில் இருக்கும் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் முருகேசன் லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவேற்றம் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 99 […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தலார் வீதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்றும் மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய கவிதா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகன் வேலைக்கு சென்ற பிறகு திடீரென சாமி வந்தவர் போல் வனிதா ஆடியதால் அச்சத்தில் கவிதா அழுதுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கத்தியால் வனிதா தனது மகளின் தலையில் […]
நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெறவில்லை. இந்நிலையில் அனைத்து திருச்சபைகள் சார்பாக நடைபெற்ற ஊர்வலத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலமாக வந்துள்ளார். இதனையடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவித்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் புனித தாமஸ் ஆலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பேருந்து நிலையம், லோயர் பஜார், கமர்சியல் சாலை, […]
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் ஐஸ்லாந்து எனும் பகுதியில் வசித்து வருபவர் தான்யா பதிஜா (32). இவர் அந்த பகுதியில் டோனட்ஸ் இனிப்பு கடை நடத்தி வரும் இளம் தொழில் அதிபர். இவரது தந்தை கோபிந்த் பதிஜா. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகின்றார். இந்நிலையில் தான்யா பதிஜாவின் வீடும் அவரது தந்தையின் வீடும் ஐஸ்லாந்து பகுதியில் அருகருகே அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி இரவு தான்யா பதிஜா வீட்டில் உறங்கிக் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, இஷா கோபிகர், கருணாகரன் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள தத்தம்பட்டி அடுத்த நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமை சேர்ந்த அர்ஜுன் என்பவர் அதே முகாமில் உள்ள ஒரு பெண்ணை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக அர்ஜுன் குடும்பத்தினர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அர்ஜுன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். இதில் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தப்போ… தலைமை கழகமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த அன்பகத்தில் இருந்து காலி செஞ்சி அறிவாலயத்திற்கு வருவாங்க. அப்போ அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோ… தொழிலாளி அணி கேக்குது, மாணவர் அணி கேட்டுகிட்டு இருக்காங்க… இப்படி பல அணிகள் கேட்டுகிட்டு இருக்கிறப்போ…. இளைஞரணி சார்பில் நானும் போய் கேட்டேன். […]
ராஜ குடும்பத்தினர் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் வீட்டில் ஒரு அறையில் மர்மங்கள் உள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் பண்டிகையை பிரித்தானியா ராஜ குடும்பத்தினர் மிகவும் விமர்சியாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை sandringham House என்னும் வீட்டில் கொண்டாட இருக்கின்றனர். ஆனால் இந்த வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் பணியாளர்கள் செல்ல பயப்பட்டுள்ளனர். இதனால் மகாராணியார் பாதிரியார் ஒருவரை தனியாக அழைத்து வந்து பிரார்த்தனை செய்துள்ளார். மேலும் மன்னர் சார்லஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]
தென்னிந்திய சினிமாவில் ”கேஜிஎஃப் 2” படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்த படம் இவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. இதனையடுத்து தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தில் இவர் தமிழில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இவர் கமிட்டாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாருதி இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திலும் இவர் கமிட்டாகியுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க […]
தமிழகத்தில் தற்போது வாட்ச் பற்றிய பிரச்சனைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரபேல் நிறுவனத்தின் 3.15 லட்சம் மதிப்பிலான வாட்ச் கட்டியிருக்கிறார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் ஒரு சிலர் உதயநிதி ஸ்டாலின் கைகளில் கட்டி இருக்கும் 14 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா நடிகர் ராம்சரண் கட்டி இருக்கும் வாட்சின் விலையை கேட்டால் அசந்து போய் விடுவீர்கள் என்கிறார்கள் […]
பிரபல நாட்டில் 2 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராஜன்பூர் மாவட்டத்தில் சிந்து நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை தற்போது கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சாலை வழியாக இன்று காலை வந்த 2 பேருந்துகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்க கூடாது. உதயநிதி ஸ்டாலினிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. அதன்பிறகு காவி நிறம் தொடர்பான சர்ச்சைகள் அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற கலர் கலரான பிரச்சனைகள் வரக்கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம். வாரிசு போன்ற பெரிய படங்களுக்கு பிரச்சனைகள் வந்தால் தான் அந்த படம் பிரபலமாகும். இந்த பிரச்சனைகளை […]
பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் […]
2 வயது சிறுவன் ரிமோட் பேட்டரியை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷிகேஷ் என்ற 2 வயது மகன் உள்ளார். இந்நிலையில் இன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ரிஷிகேஷ் திடீரென ரிமோட் பேட்டரியை விழுங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் என்டோஸ்கோப்பி முறையைப் பயன்படுத்தி 20 நிமிடத்தில் சிறுவனின் வயிற்றில் இருந்த […]
பதான் திரைப்படம் குறித்து ஷாருக்கானிடம் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் கிராமத்தில் ஆறுமுகம் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் தும்பரமேடு கிராமத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 நாய்கள் நேற்று ஆறுமுகத்தின் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்தது. அப்போது ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை நாய் கடித்து குதறியதில் 20 குட்டிகள் உட்பட 24 ஆடுகள் இறந்து விட்டதாக தெரிகின்றது. இதுகுறித்து ஆறுமுகம் போலீசில் புகார் அளித்துள்ளார். […]
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் பயங்கரவாத செயல்களை ஆதரிக்கும் அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சாடி பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ கூறியதாவது, ஒசாமா பின்லேடன் இறந்து விட்டார். ஆனால் குஜராத் கசாப்பு கடைக்காரர் வாழ்கின்றார். அவர் தான் தற்போது இந்தியாவின் பிரதமராக (மோடி) இருக்கிறார். பிரதமர் மோடி அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்களில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் 2,30,000 போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். வழக்கமாக போலீஸ் உயர் அதிகாரிகளின் சாகசங்கள் மட்டுமே படங்களில் காண்பிக்கப்படும் நிலையில், தற்போது லத்தி படத்தில் கான்ஸ்டபில்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் செய்யும் பணிகள் போன்றவைகள் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், என்னை பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றிலே 2 பேரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கலைஞரும், பேராசிரியராக தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் இடத்திலும் சொல்லிவிட்டு செய் வேண்டுமென்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் செஞ்சா சரியாத்தான் இருக்கும் அப்படி நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியல் பார்ப்பது என்பது […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கோபாலபுரத்தினுடைய தலைவருடைய தெரு இருக்கு பாருங்க… அதோட மூளை பகுதியில 5, 6 கடைகள் இருக்கும் அதுல ஒரு கடை பார்பர் ஷாப். முடிதிருத்து நிலையம். அந்த இடத்தில் தான் என்னுடைய அலுவலகத்தை ஆரம்பிச்சேன். அதை திறந்து வைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் இடத்தில், பேராசிரியர் இடத்திலே சொன்ன போது, 2 பேரும் கிளம்புனாங்க, நடந்தே வந்தாங்க. […]
குஷி திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. சென்ற 2000 வருடம் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் குஷி. இத்திரைப்படம் விஜய், ஜோதிகா, விஜயகுமார், விவேக், மும்தாஜ் என பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டானது. இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண், பூமிகா நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் சென்ற 2001 ஆம் வருடம் தியேட்டரில் வெளியாகி அதிக வசூலை […]
மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் சற்று கவர்ச்சி காட்டியும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த […]
மராட்டிய மாநிலத்தில் சிந்து துர்க் பகுதியில் ஒரு வீட்டின் முன்னால் தந்தை மற்றும் அவரது மகன் என இருவரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டியில் அமர்ந்துள்ளனர். அப்போது ஸ்கூட்டியின் எஞ்சின் அணைக்காத நிலையில் இருந்துள்ளது. வீட்டில் இருந்த ஒருவரை எதிர்பார்த்து அந்த நபர் வண்டியில் காத்திருந்தார். அப்போது வண்டியின் முன்பக்கம் நின்று கொண்டிருந்த அவரது மகன் திடீரென ஆக்சிலேட்டரை திருக்கியுள்ளான். இதில் வண்டி விரைவாக முன்னோக்கி சென்று மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் வீட்டிலிருந்தவர்கள் இந்த சம்பவத்தை பார்த்து […]
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின். இவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனபோது பட விழாவில் நடிகர் அஸ்வின் பேசியது சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு நடிகர் அஸ்வின் பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது செம்பி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் அஸ்வின் விஜய் […]
தளபதி 67 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சென்ற டிசம்பர் 5-ம் […]