ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், 21 வயதுடைய வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் சிறுமியை கோவைக்கு கடத்தி வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் மகளை காணவில்லை என […]
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய “ஹவாசோங்-17” என்னும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதன் பின் எந்த ஒரு ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை நேற்று ஒரே நாளில் வடகொரியா சோதித்துள்ளது. சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அண்ணா நகரில் தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், வினைதீபக் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் வினைதீபக் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி குஜராத்தில் இருக்கும் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக கவிதா சென்று விட்டார். கடந்த சில நாட்களாக தீபக் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி சொர்ணா ஊரில் கூலித்தொழிலாளியான ஐயப்பன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் ஐயப்பன் தனியார் பேருந்தில் மேல் பட்டாம்பாக்கத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்குள்ள சந்ததோப்பு திடலில் திடீரென ஐயப்பன் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஐயப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். […]
இந்திய மக்கள் தொகையில் 7.2% நபர்களிடம் பாஸ்போர்ட் இருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாத மத்தியில் வழங்கப்பட்ட மொத்த பாஸ்போர்ட்களின் எண்ணிக்கையானது 9.6 கோடி ஆகும். இவற்றில் 2.2 கோடி கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 97 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர். எனினும் தமிழகத்தை விட இரண்டு மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தில் 87.9 லட்சம் பேர் தான் பாஸ்போர்ட் வைத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு வீடியோக்கள் வெளியாகி மக்களை மகிழ்ச்சி படுத்துகிறது. அந்த வகையில் தற்போது பாலைவனத்தில் அதாவது வெயிலில் வசிக்கும் விலங்கான ஒட்டகம் தற்போது பனியில் துள்ளி குதித்து விளையாடும் வீடியோவானது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எப்போதுமே சூடான பகுதியில் இருக்கும் ஒட்டகம் திடீரென குளிர்ச்சியான பகுதிக்கு வந்தவுடன் தன்னை மறந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடுகிறது. பனிப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 70,000-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு சென்று சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளில் வியாபாரம் களை கட்டியது. மேலும் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து காகித பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை செல்வம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோமையார்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செல்வம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் காகிதங்கள் சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகனாபுரத்தில் விவசாயியான பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி(56) என்ற மனைவி உள்ளார். நேற்று காலை பாஸ்கரன் வெளியே சென்ற பிறகு வளர்மதி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வளர்மதியின் முகத்தை துணியால் மூடி, கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்தனர். அதே சமயம் வளர்மதி நகைகளை காப்பாற்றி கொள்வதற்காக திருடர்களுடன் போராடி ஒரு கட்டத்தில் ஒருவரின் கைவிரல்களை கடித்து குதறினார். […]
கரூர் மாவட்டத்தில் உள்ள முதலிகவுண்டனூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி தேவி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண், 1 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக காயத்ரி தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பிறகும் காயத்ரி தேவி வராததால் கார்த்திக் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து […]
கரூர் மாவட்டத்தில் உள்ள ரங்கப்பகவுண்டன் வலசை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபினேஷ்(19)கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று மாலை அபினேஷ் தனது நண்பர்களான அசோக்குமார், சதீஷ்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேருடன் நங்காஞ்சி ஆற்று தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அபினேஷ் தடுப்பணையின் தண்ணீரில் விழுந்து தத்தளித்ததால் அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர். அதற்குள் அபினேஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுகுறித்து […]
கரூர் மாவட்டத்தில் உள்ள மலைக்கோவிலூர், ஆண்டிப்பட்டி கோட்டை, வேலம்பாடி, பள்ளப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இந்நிலையில் விவசாய பயிர்கள் தெரியாத அளவிற்கு பனி மூடியதால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனையடுத்து உடலை வருத்திக்கொண்டு அதிகாலையில் கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சாலையில் செல்கின்றனர். கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சுமார் 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு 4970 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிகமாக பணம் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும் அரசாங்கம் விமான நிலையத்தை அமைப்பதில் உறுதியாக […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்த கிரீஷ்(27) காரில் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவர் அத்திப்பள்ளி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிரீஷ் காரிலிருந்து கீழே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் […]
பொதுவாக குழந்தைகள் என்றாலே எந்த பொருளை எடுத்தாலும் உடனடியாக வாயில் போட்டு விடுவார்கள். எனவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் பொருட்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். குழந்தைகள் எளிதில் எடுத்து வாயில் போட்டு விழுங்கக்கூடிய பொருட்களை அவர்கள் கைகளில் கொடுக்காததோடு அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எதையும் எடுத்து வாயில் போட்டு விழுங்க மாட்டார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை டிவி பேட்டரியை வாயில் போட்டு விழுங்கியுள்ளது. […]
உலக அழகி பட்டத்தை இந்திய பெண் பெற்றுள்ளார். கடந்த 1984-ஆம் ஆண்டு முதல்முறையாக திருமணம் முடிந்த பெண்களுக்கான உலக அழகி போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் இன்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடுவராக கடந்த 2001-ஆம் ஆண்டில் அழகி பட்டத்தை தட்டிச் சென்ற இந்தியாவை சேர்ந்த டாக்டர் அதிதி கோவித்ரிகர் நடுவராக இருந்தார். இதனையடுத்து இந்த போட்டியில் பல நாடுகளில் இருந்து […]
பிரபல தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேவ் மற்றும் கீர்த்தி செட்டி நடிப்பில் உருவான உப்பெனா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து தமிழில் உப்பெனா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உதவி […]
தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 37,000 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் பங்களிப்பு மட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை கிண்டியில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் நம்ம ஸ்கூல் திட்டத்தின் படி தமிழகத்தில் உள்ள 37,000 அரசு பள்ளிகளும் nammaschool.tnschools.gov.in என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், என்னை பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றிலே 2 பேரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கலைஞரும், பேராசிரியராக தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் இடத்திலும் சொல்லிவிட்டு செய் வேண்டுமென்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் செஞ்சா சரியாத்தான் இருக்கும் அப்படி நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியல் பார்ப்பது என்பது […]
மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை நாக்பூரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூடியது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரேவுக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது குழந்தையுடன் சரோஜ் பாபுலால் குளிர்கால கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து பேரவை வளாகத்தில் பச்சிளம் குழந்தையுடன் சரோஜ் பாபுலாலை கண்ட பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களின் […]
சாலை விபத்துக்களில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் 24 மணிநேரம் இலவச சிகிச்சையளிக்கும் அரசு திட்டத்தை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (எஸ்ஜிபிஜிஐஎம்எஸ்) அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் ராஜேஷ் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது, விபத்துக்கு உள்ளானவர்களின் உயிரை காப்பாற்ற இவ்வசதி உதவும். மோகன்லால்கஞ்ச் நகரில் வசித்து வரும் ராகுல்சிங், லாரி ஓட்டுநராக உள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை அன்று காலை சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு கையில் 4 இடங்களில் எலும்பு […]
பிரபல நாட்டில் நடந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபல நாடான பாகிஸ்தானில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன் மீது ஒரு அமைப்பு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நேற்று காரைக்குடி சந்தை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை வாரணாசியில் உள்ள காசி நாட்டுக்கோட்டை நரகாத்தார் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஏ.எம்.கே கருப்பன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சென்னை வாழ் காரைக்குடி நகரத்தார் சங்கத்தின் தலைவர் ஏ.எல் சொக்கலிங்கம், துணைத் தலைவர் பி.எஸ்.ஆர்.எம்.ஏ சுவாமிநாதன், துணை செயலாளர் ஆர்.எம்.பி.எல் சிவராம், செயலாளர் ஏ.எம்.கே.எம் பழனியப்பன், பொருளாளர் எல்.எஸ்.பி லட்சுமணன் மற்றும் விஜி பழனியப்பன், விசாலாட்சி கணேஷ் […]
நடிகர் ஷாருக்கான் தன் மகளுடன் பதான் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்ததலைவரும் மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவருமான கிரிஷ் கெளதம் தெரிவித்து உள்ளார். மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை அடுத்து “பதான்” பாடலில் காவி நிற உடையணிந்தது தொடர்பாக சட்டப்பேரவை தலைவரும் கேள்வி எழுப்பி இருக்கிறார். பதான் திரைப்படத்தில் ”பேஷாரம் ராங்” என்ற பாடலில் ஷாருக்கானுடன் காவி உடையணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடுவதற்கு பா.ஜ.க தரப்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் […]
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மதுரையில் கடந்த 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க […]
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது @Gulzar_sahab என்ற டுவிட்டர் யூசர் நெகிழ்ச்சியான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தாகத்துடன் சுற்றித் திரியும் ஒரு குரங்குக்கு, மாற்றுத்திறனாளி தண்ணீர் கொடுத்து உதவுகிறார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவுசெய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். குரங்கு தண்ணீருக்குதான் அலைகிறது என்பதை உணர்ந்து, அதற்கு தாகம் […]
‘வாரிசு’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் […]
தமிழ்நாட்டில் முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அதன் பிறகு புலம்பெயர் தமிழர் நல வாரிய அமைப்பில் மும்பை, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், லண்டன் மற்றும் மொரிசியஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியாக புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் […]
தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ஏழை எளிய மக்களுக்கு அரசு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அதே சமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் ஒவ்வொரு பொருள்களும் தரமானதாக இருக்க வேண்டும் என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி […]
நாளைய பஞ்சாங்கம் 20-12-2022, மார்கழி 05, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 12.45 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. சுவாதி நட்சத்திரம் காலை 09.54 வரை பின்பு விசாகம். சித்தயோகம் காலை 09.54 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் – 20.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் […]
கரூர் மாவட்ட அதிமுக உறுப்பினர் திருவிக என்பவர் இன்று திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்து அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கார் கண்ணாடியை உடைத்து திருவிக என்பவரை கடத்தியுள்ளனர். இவர் கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். அந்த சமயத்தில் திருவிக கடத்தப்பட்டது அதிமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]
இந்தியாவில் தற்போது ஆதார் அட்டைகளின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. போலி ஆதார் அட்டைகளின் வழக்கு தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நாட்டின் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். அதே சமயம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கான பணிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. வாக்காளர் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் திறந்து வரும் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயனர்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது பயனர்கள் தாங்களாகவே அவதார் உருவங்களை உருவாக்கிய அதனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாட்ஸ் அப்பில் […]
இந்தியாவில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அவ்வகையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்: 7-14 நாட்கள்: 3.00 சதவீதம் 15 – […]
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.500க்கு ஒரு வருடத்தில் 12 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வு பிரச்னை தீவிரமானது என்றும், அரசின் நலத்திட்டங்களின் பலன்களை யாரும் இழந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். The issue of price rise is serious. We will give 12 gas cylinders in […]
ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட இயக்கத்தில் அவதார் ஃபுல் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 55 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. கதை மற்றும் திரைக்கதையின் அடிப்படைக் கலவையான வரவேற்பை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸ் இல் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 3,600 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளதாக திரையுலக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் மூன்று நாட்களுக்குள் மற்றொரு ஹாலிவுட் படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் […]
தமிழகத்தில் திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் […]
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் ஜமகண்டி டக்கோடா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் புஜபலி கர்ஜகி (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (25) என்ற பெண்ணை காதலித்தார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக புஜபலி மற்றும் பாக்யஸ்ரீ திருமணம் செய்து கொண்ட […]
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வி.மேட்டுப்பட்டி பகுதியில் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், அவரது மாணவர் ரத்தினம் முரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் உமா மகேஸ்வரி, சந்திரசேகர் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது நாராயண குளக்கரையில் கணவன் மனைவி நடுகல்லை கண்டெடுத்தனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, கண்டெடுக்கப்பட்டது 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கணவன் மனைவி நடுகல் ஆகும். இதில் இருக்கும் ஆண் சிற்பம் இருகரமும் மார்போடு இணைந்து கும்பிட்ட நிலையில் இருப்பதோடு, காதில் வளைகுண்டலம், இடுப்பில் இடைக்கச்சை ஆடை, தார்பாய்த்து அதில் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. அவ்வபோது அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்று விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் பழுதாகி […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரை சுற்றி இருக்கும் தொழிற்சாலைகளில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்களும், ஆண்களும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் காவலன் செயலியில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நான் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு எனது ஆண் நண்பருடன் […]
போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட சில தினங்களிலேயே பதவி விலகப் போவதாக கடிதம் அளித்துவிட்டேன் என்று போப் பிரான்சிஸ் கூறியிருக்கிறார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த சனிக்கிழமை அன்று தன் 86 ஆம் பிறந்த நாளை கொண்டாடினார். சமீப நாட்களாக உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், கடந்த 2013 ஆம் வருடத்தில் போப் ஆண்டவராக தன்னை தேர்ந்தெடுத்த சில தினங்களில் உடல்நல பாதிப்புகளால் பதவி […]
சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் பகுதியில் சந்தானம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊத்துக்கோட்டை தாலுகாவில் தொலைக்காட்சி நிருபராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பரான ஏழுமலை என்பவருடன் சந்தானம் பூண்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சதுரங்கப்பேட்டை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற பொக்லைன் எந்திரம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு சந்தானம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். […]
தமிழ் திரையுலகில் ஆண் பாவம் என்ற திரைப்படம் வாயிலாக அறிமுகமானவர் தான் நடிகை சீதா. இதையடுத்து அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்த நிலையில், நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் இருக்கின்றனர். ஆனால் காதலித்து திருமணம் செய்த அவர்கள் 11 ஆண்டுகளில் திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் நடிகை சீதா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் விவாகரத்துக்கு காரணம் என்ன என்று […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவன வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் தனது மனைவி திவ்யா, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் காரில் தேனாம்பேட்டையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த காரை திவ்யா ஓட்டினார். இந்நிலையில் கிண்டி நோக்கி செல்லும் கத்திப்பாரா மேம்பால சாலையில் சென்ற போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. […]
உலகம் முழுவதும் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் வங்கிகளுக்கு செல்வதற்கு பதில் யுபிஐ செயலிகள் மூலமாகவே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்த முறை சுலபமாக இருப்பதால் பல கோடி பேர் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் தேசிய கட்டண கழகத்தின் தரவுகளின் படி கடந்த செப்டம்பர் மாதத்தில் போன்பே மற்றும் ஜி பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் 11 லட்சம் கோடி அளவிற்கு பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக யுபிஐ […]
எய்ம்ஸ் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியவர்களின் விவரங்களை அளிக்குமாறு உளவுப்பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை மீது கடந்த மாதம் 23-ஆம் தேதி இணையதள தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மருத்துவமனையில் உள்ள சர்வர்கள் பழுதடைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து சி.பி.ஐ., என்.ஐ.ஏ உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரணையில் சீனா மற்றும் ஹாங்காய் நாடுகளில் உள்ள […]
தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகனின் நூற்றாண்டு விழாவை அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா நடந்தது. இந்த கவியரங்கத்துக்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். கவியரங்கத்தில் பாடல் ஆசிரியர்களான விவேகா, கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். அத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் கவிதைகளால் […]
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண புலம்பெயர் தமிழர் நல வாரியம் – தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தொண்டு செய்வாய் – துறை தோறும் துறை தோறும் துடித்தெழுந்தே” என்ற வாசகத்தை நெஞ்சில் நிலை நிறுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களது தலைமையிலான தமிழக அரசு நாள்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை […]
உத்தரப்பிரதேசத்தில் வெப்ப நிலை குறைந்து கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், வீடற்றவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். தற்போது மாநிலத்தில் கடும் பனி நிலவி வருவதால் மக்கள் பலரும் நடுங்கி தவிக்கின்றனர். இவற்றில் வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பாதுகாக்கும் விதமாக நிவாரண உதவிகளை வாங்கி அவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் […]