முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பள்ளி நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார். சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் முதலமைச்சர் படித்த கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “நான் இங்கு சி.எம். ஆக வரவில்லை. ஒரு நல்ல மாணவனாக வந்துள்ளேன். இந்த பள்ளியில் எனது சகோதரர்கள் முத்து, அழகிரி ஆகிய 2 பேரும் படித்தார்கள். இதனால் எனக்கு […]
ஆண்டுதோறும் தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதேபோல இந்த வருடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை வழங்குவதற்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த பரிசு தொகுப்பில் இடம் பெறும் நிலையில் இந்த வருடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகை வழங்குவதற்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார்.
பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்த இருக்கிறது. சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் தமிழக அரசின் சார்பில் தீட்டப்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். விவசாய நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் என்று அரசினுடைய கோரிக்கைக்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். கிராம மக்களினுடைய கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், தகவல்கள் […]
அஜித் நடிக்கும் “துணிவு” மற்றும் விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதற்கிடையில் எந்த நடிகருக்கு அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்ற கேள்விகள் எழுந்தது. இதில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ “அஜித் உடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். எனினும் வாரிசு திரைப்படத்திற்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் பற்றி பேசப் போகிறேன்” […]
நடிகர் அஜித், டைரக்டர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் போன்றோர் 3-வது முறையாக இணைந்திருக்கும் படம் “துணிவு”. பஞ்சாபில் நடந்த வங்கி்க்கொள்ளையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். துணிவு படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வைசாக் எழுதியுள்ள 2வது பாடலான “காசேதான் கடவுளடா” பாடல் வெளியாகி இருக்கிறது. இதை வைசாக், […]
நடப்பு ஆண்டு வெளியாகி வசூலில் சிறந்து விளங்கிய திரைப்படங்கள் பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். இவற்றில் தமிழில் உருவாகி வெளிவந்த படங்கள் மட்டுமே அடங்கும். பிற மொழிகளிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட எந்தவொரு திரைப்படத்தையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. # முதலாவதாக தமிழ் திரையுலகின் வரலாற்று பதிவான “பொன்னியின் செல்வன்” ஆகும். # 2-வதாக இந்திய சினிமாவை திரும்பிபார்க்க வைத்த “விக்ரம்” படம். # 3-வதாக வசூலில் தெறிக்கவிட்ட விஜய் நடிக்கும் “பீஸ்ட்” # 4-வதாக கலவையான […]
ரெளத்திரம், இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, அன்பிற்கினியாள் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் தான் கோகுல். இப்போது இவர் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் “சிங்கப்பூர் சலூன்” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், லால், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை ஐசரி கே கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதற்கான சூட்டிங் சென்ற சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த படம் ஒரு முடி திருத்துபவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் […]
தன் மகன் விஜித் பச்சான் நடிக்கும் “டக்குமுக்கு திக்கு தாளம்” என்ற திரைப்படத்தை டைரக்டர் தங்கர்பச்சான் இயக்கி முடித்துள்ளார். இப்போது “கருமேகங்கள் கலைகின்றன” என்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கவுதம் மேனன் போன்றோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தில் அருவி படத்தில் நடித்த அதிதி பாலனும் இணைந்துள்ளார். அதாவது ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் இதற்கு முன் தங்கர்பச்சான் இயக்கிய […]
நடப்பு ஆண்டு இந்தியில் அதிக பட்ஜெட்டில் தயாராகிய சாம்ராட் பிரிதிவிராஜ், பிரம்மாஸ்திரா, குட்பை, ரன்வே 34, ஜெயேஷ்பாய் ஜோர்தார் உட்பட பல்வேறு படங்கள் தோல்வியடைந்து பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. அமீர்கான் நடிப்பில் ரூபாய்.180 கோடி செலவில் தயாராகிய “லால்சிங் சத்தா” திரைப்படத்துக்கு ரூ.100 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தோல்வி காரணமாக அமீர்கான் சில காலம் திரையுலகை விட்டு விலகி இருக்கப் போவதாக அறிவித்து இருக்கிறார். இந்நிலையில் இந்தி படங்கள் தோல்விக்கான காரணம் […]
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் சிராலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மருத்துவரும், முன்னாள் அமைச்சருமான பாலேட்டி ராமராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 12-வது நினைவு தினத்தில் கலந்து கொள்ள வருமாறு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அழைப்பிதழ் வாங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாலேட்டி ராமராவ் வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பாலேட்டி ராமராவ் தான் உயிரோடு இருக்கும் […]
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் “வால்டேர் வீரய்யா”. இப்படத்தை டைரக்டர் பாபி என்ற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இவற்றில் சிரஞ்சீவிக்கு ஜோடி ஆக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த”படத்தின் முதல் […]
இன்றைய நவீன காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையை தொழில் நுட்பங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மின்சாரம், ஸ்மார்ட் போன், இணையதளம் போன்றவைகள் தற்போது மனிதர்களுக்கு அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆனால் இந்த நவீன காலகட்டத்திலும் ஸ்மார்ட்போன், மின்சாரம் போன்ற எந்த தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் ஒரு கிராம மக்கள் வசிக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம் அப்படி ஒரு அதிசய கிராமம் இருக்கிறது. அதாவது ஆந்திர பிரதேச மாநிலத்தில் குர்மா என்ற கிராமம் அமைந்துள்ளது. […]
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலத்தில் 2 வீரர்கள் பங்கேற்கவில்லை. வருகின்ற 23-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலம் பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த பட்டியலில் 991 வீரர்கள் இருந்தனர். ஆனால் தற்போது 450 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலில் உள்ள அந்த பகுதிகள் கைப்பற்றப்படும். மேலும் இது ஒரு சிறிய ஏலம் என்பதால் பல பெயர்கள் அறிவிக்கப்படாதது மற்றும் 87-வது வீரரிடமிருந்து துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை தொடங்கும். […]
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவானது நேற்று சென்னை சேத்துப்பட்டில் வைத்து நடந்தது. இந்த விழாவில் டைரக்டர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசினார். அதாவது “சிவாஜிக்கான உரிய மரியாதையை எந்தவொரு அரசும் செய்யவில்லை. தற்போது பாரதிராஜா பேசுகிறேன் எனில் அது அவர் போட்ட பிச்சை என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவர் இந்த நாட்டினுடைய பொதுசொத்து ஆவார். எனினும் அவருக்கு கிடைக்கவேண்டிய இணையான பட்டம் என்று எதுவுமில்லை” என […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கான் பகுதியில் முஸ்கான் (40) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண் காவல் நிலையத்தில் தன்னுடைய இளைய மகன் அயனை தன்னுடைய மூத்த மகன் காசிப் அடித்து கொலை செய்து கங்கை நதியில் வீசியதாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த மூத்த மகன் காசிப்பை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், 16-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு கடந்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றதால், இந்த வருடம் வருகிற 23-ஆம் தேதி கொச்சியில் வைத்து மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் 714 இந்திய வீரர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 991 வீரர்கள் விண்ணப்பித்தனர். இதில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தங்கள் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் திறந்து வரும் புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் வாட்ஸ் அப் குரூப்பில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ளது போல வாட்ஸ் அப்பிலும் எமோஜிகளை பயனர்கள் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது பயனர்கள் தாங்களாகவே அவதார் உருவங்களை உருவாக்கிய அதனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாட்ஸ் அப்பில் […]
ஓய்வூதியம் பெற இனி கூட்டு வங்கி கணக்கு தொடங்க யாரையும் வற்புறுத்த வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோரின் துணையுடன் இணைந்து கூட்டு வங்கி கணக்கில் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த முறையில் சிக்கல் இருப்பதால் இனி கூட்டு வங்கி கணக்கு தேவையில்லை.ஒற்றைக் கணக்கு இருந்தாலே போதுமானது என கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் கூட்டு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என பல வங்கிகளும் தெரிவித்து வந்த நிலையில் […]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: பயிற்றுனர் காலி பணியிடங்கள்: 97 சம்பளம்: ரூ.35,600 – ரூ.1,12,800 துறைகள்: வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.sdat.tn.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் இந்த வருடம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தினம்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்களின் […]
நடிகர் விஜயகாந்தின் ரமணா படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இறந்த உடலை ஹீரோ எடுத்துச் செல்வதும், இறந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை பல லட்சம் ரூபாய் வசூலிப்பது போன்ற காட்சியும் படத்தில் இடம்பெற்றிருக்கும். இதேபோன்ற ஒரு சம்பவம் ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளது. அதாவது நோயாளி இறந்த பிறகும் சிகிச்சைக்கு கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. பிரபல சோனிபட் மருத்துவமனை அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு நோயாளியின் மரணத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]
திருப்பதியில் புதுமண தம்பதியினருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருப்பதியில் புதிதாக திருமணமான தம்பதியினருக்கு வெங்கடாசலபதியின் தட்சனை இனி நேரடியாக கிடைக்கும். திருமண அழைப்பிதழை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே திருமலை தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைத்துவிட்டால் திருமணத்தன்று பாலாஜியின் ஆசி பெற்ற பிரசாதம் வீடு தேடி வரும். பிரசாதத்துடன் சில மங்களப் பொருட்களும் பாலாஜியின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Junior Overman, Junior Surveyor, Sirdar காலி பணியிடங்கள்: 213 சம்பளம்: ரூ.31,000 – ரூ.1,00,000 கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ வயது: 35- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.nlcindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள வித்யாதர் நகரில் சரோஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் கடந்த 27 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் சென்ற டிசம்பர் 11ம் தேதியன்று இளைஞர் அனுஜ், தன் அத்தையான சரோஜை கொடூரமாக கொலை செய்து 10 துண்டாக வெட்டி சமையலறையில் மறைத்து வைத்து உள்ளார். இதையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்று துண்டாக வெட்டிய உடல் உறுப்புகளை […]
இந்தி தொலைக்காட்சி நடிகை உர்பி ஜாவேத்(25) இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூகவலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்க்க அறை குறையாக ஆடை அணிந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் அவர் பேஷன் முயற்சி எனும் பெயரில் பிளேடுகள், இரும்புச் சங்கிலிகள், மின்சார கம்பிகள், செல்போன் ஆகியவற்றால் ஆன உடைகளை அணிந்து வீடியோ வெளியிடுவதும் வழக்கம் ஆகும். இந்நிலையில் உர்பி ஜாவேத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்து […]
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சென்ற 16-ம் தேதியன்று இரவு வேளையில் 16 வயதான சிறுமியை கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்திருக்கின்றனர். அதாவது, சிறுமியை கடத்திய 8 பேர் கொண்ட கும்பல் கடற்கரை கிராமத்திலுள்ள பங்களாவுக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். மேலும் சிறுமியை கடற்கரைக்கு அழைத்து வந்து மீண்டும் பாலியல் வன் கொடுமை செய்து உள்ளனர். அதன்பின் அந்த கும்பல், சிறுமியை அங்கேயே விட்டு விட்டு சென்றதாக […]
ஐபிஎல் மினி ஏலத்தில் 15 வயதே ஆன இளம் வீரர் பதிவு செய்துள்ளார். இந்தியாவில் சென்ற 2018 முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 16-வது சீசன் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான தொடரில் பங்கேற்று விளையாடும் அணிகள் மற்றும் வீரர்கள் குறித்த பட்டியலை முன்னதாகவே வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி மினி ஏலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் அவர்களுக்கு […]
தஞ்சாவூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு முக்கிய திமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் ருக்மணி கார்டன் என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஒருவர் திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் என்பதும் மற்றொருவர் திமுக நகரச் செயலாளர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் […]
சோசியல் மீடியாவில் விஜய் தான் நம்பர் ஒன் என ரசிகர்கள் பேசி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் சினிமாவில் அறிமுகமானபோது பல விமர்சனங்களுக்குள்ளாகி தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது இந்த இடத்தை பிடித்திருக்கின்றார். நடிகராக அறிமுகமாகி பின் இளைய தளபதியாக என்ட்ரி கொடுத்து தற்போது ரசிகர்களின் மனதில் தளபதியாக நிற்கின்றார். இவர் தனது ஒவ்வொரு திரைப்படத்தின் மூலம் புதிய சாதனையை படைத்து வருகின்றார். இவரின் திரைப்படங்கள் விமர்சனத்திற்குள்ளானாலும் பாக்ஸ் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் இந்த வருடம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு 50 வயதுக்கு […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தவும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அரசு முயற்சி செய்து வருகிறது. அதேசமயம் விரைவில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரத்திலான கல்வி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அரசு உறுதி அளித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் படித்துள்ள முன்னாள் மாணவர்கள் தங்கள் […]
திரையரங்க ஊழியர்கள் அவதார் வேடமணிந்து நின்றது ரசிகர்களின் கவனத்தை பெற்றது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் […]
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் விலை உயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி வெறும் நான்கு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தன்னுடைய சொத்து எனக் கூறிய அண்ணாமலை சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை வாங்கியது எப்படி? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கைக்கடிகாரம் […]
நாடு முழுவதும் மருத்துவ மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர உழவுத் தேர்வு கட்டாயமாக பட்டு உள்ளது. அதனால் இந்த நுழைவு தேர்வுக்காக மாணவர்கள் தனியாக பயிற்சி மையங்களில் சேர்ந்து பயின்று வருகிறார்கள். இந்த பயிற்சி மையங்களில் நடக்கும் விஷயங்கள் பல மாணவர்களை பாதிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. அதனால் ராஜஸ்தான் அரசு இனி பயிற்சி மையங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பயிற்சி மையங்களில் கண்காணிக்க சட்டம் […]
உலகமே வியந்து பார்க்கும் ஐபிஎல் தொடரின் 15 சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ள நிலையில் 16 வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது தொடங்குவதற்கு முன்பாக வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் ஏலத்தில் 45 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றாலும் பத்து அணிகள் கவனமும் தற்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த 15 வயது சுழல் பந்துவீச்சாளர் […]
நாடு முழுவதும் நழுவடைந்த விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் தேவையான விவசாய பொருட்களை வாங்கிக் கொள்ள உதவியாகவும் மத்திய அரசு வருடத்திற்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 8,84,56,693 விவசாயிகளுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,43,03,867 விவசாயிகளுக்கு […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் இடை நின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 100% உறுதி செய்யும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் 30 நாட்கள் பள்ளி வராத குழந்தைகளையும் […]
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பேத்தியின் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்துள்ளார். மணமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்தி பேசியபோது, “பால் விலையை குறைத்ததன் காரணமாக லட்சக்கணக்கானோர் பயனடைந்திருப்பதாகவும், கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து விமர்சனங்களை தவிர்ப்பதற்காக திருமணத்தை எளிமையாக நடத்துமாறு அமைச்சரிடம் தான் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கு என்ன தவறு நடக்கும் என பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். தும்மினால் கூட செல்போனில் […]
உலகமே வியந்து பார்க்கும் ஐபிஎல் தொடரின் 15 சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ள நிலையில் 16 வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது தொடங்குவதற்கு முன்பாக வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் ஏலத்தில் 405 கிரிக்கெட் வீரர்கள்பங்கேற்கின்றனர். இவர்களில் கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய பெரிய வீரர்கள் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ள […]
நாட்டில் அடுத்த கட்ட தங்க பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டிற்கான 3ம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு 50 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகள், […]
ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி ஏலத்தில் கண்டிப்பாக எடுக்க வாய்ப்பிருக்கும் வீரர்கள் குறித்து பார்க்கலாம். இந்தியாவில் சென்ற 2018 முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 16வது சீசன் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி மினி ஏலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் 45 வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், 16-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு கடந்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றதால், இந்த வருடம் வருகிற 23-ஆம் தேதி கொச்சியில் வைத்து மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் 714 இந்திய வீரர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 991 வீரர்கள் விண்ணப்பித்தனர். இதில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் […]
ஐபிஎல் ஏலத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து இளம் வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் சார்பில் ஆண்டுதோறும் இளம் கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவது வழக்கம். அதேபோல் வருகின்ற 23-ஆம் தேதி கொச்சியில் ஏலம் நடைபெற உள்ளது. இதில் 450 பேர் ஏலம் விடப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் வயது ஸ்பெக்ட்ரமின் எதிரெதிர் துருவத்தில் உள்ள ஏலத்தில் பெயர்கள் வைக்கப்படும். அதில் பல வீரர்கள் பட்டியல் உள்ளது. அந்த பட்டியலில் பல்வேறு வயதுடைய வீரர்கள், அனுபவ […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த வருடம் 16-வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த 16-வது சீசனை முன்னிட்டு கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் சுமார் 991 வீரர்கள் விண்ணப்பித்த நிலையில், 405 பேர் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் க்றிஷ் மோரீஸ் சென்ற வீரர்தான் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு விலை போனார். இவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி […]
பாக்ஸ் ஆபிஸில் அவதார் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் […]
பத்து தல திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு […]
வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி ஐ.பி.எல் 2023 -ஆம் ஆண்டிற்கான மினி ஏலம் கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கு பெற வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் நாள் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஐ.பி.எல் மினி ஏலத்தில் பங்கேற்க மொத்தமாக 991 பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் 185 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள். மேலும் 786 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறாத வீரர்கள். இந்த ஏலத்தில் […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த வருடம் 16-வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த 16-வது சீசனை முன்னிட்டு கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் சுமார் 991 வீரர்கள் விண்ணப்பித்த நிலையில், 405 பேர் இறுதி செய்யப்பட்டு 405 வீரர்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2023-ம் ஆண்டு நடைபெறும் போட்டியில், தங்கள் அணிக்கு வலுவான வீரர்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
மீனம் ராசி அன்பர்களே..! வளர்ச்சி கூடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். சிலர் வாகனம் மற்றும் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். இன்றையநாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். நல்லச்செய்திகள் இல்லம் தேடி வந்துச்சேரும். எதிர்பார்த்த சந்திப்புகள் உண்டாகும். தனவரவு உண்டாகும். உற்பத்தியாளர்கள் சிறந்த லாபத்தை அடைவீர்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். பணவரவு சீராக இருக்கும். சிந்தித்து செயல்பட வேண்டும். பயணத்தின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். […]