மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தர் ஆகவும் வலம் வருபவர் பிரித்திவிராஜ். இவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதேபோன்று பிரித்திவிராஜ் மற்றும் நடிகர் மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் வருமானவரித்துறையினர் […]
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காவல்துறை சிபிஐக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் சர்வதேச காவல்துறையிடமிருந்து சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வந்திருக்கும் இ-மெயில் முகவரியின் இணைய சர்வர்கள் பற்றி சிபிஐ தகவல்களை சேகரித்துத் தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தில்லியிலுள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்ற நவம்பா் 23ம் தேதி காலையில் தாக்குதலை எதிர்கொண்டு அதன் சா்வா்கள் முடங்கியது. அதன்பின் சர்வர்கள் மீட்கப்பட்டதன் வாயிலாக வெளி நோயாளிள் பிரிவு பதிவு மற்றும் […]
தொடர் மழை காரணமாக பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது/ இதனால் சென்ற ஒன்பதாம் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் அதிகபட்சமாக வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரி 35 அடி உயரத்தை […]
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உழுமலையை அடைத்திருக்கும் கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது இந்த ஆடைகளும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சென்ற மூன்று மாதங்கள் காண சம்பளம் வழங்காமல் நிலுவையில் இருக்கின்றது. மேலும் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் பிஎஃப் தொகையை காலை நிர்வாகம் சென்ற 25 மாதங்களாக பிஎப் அலுவலகத்தில் செலுத்தவில்லை இதன் காரணமாக ஓய்வு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா படலை படக் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த […]
தூத்துக்குடி அருகே பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் விளைச்சல் நன்றாக நடைபெற்று இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளையூரணி கிராமத்தில் விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையின் போது வருடம் தோறும் வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றை பயிரிடுவார்கள். அவற்றை சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பயிரிடுவர். அந்த வகையில் இதற்கான விதைகளை புரட்டாசி மாதத்தில் விதைத்தார்கள். இவை நான்றாக வளர்ந்து கார்த்திகை மாதத்தில் அறுவடைக்கு தயாராகும். இந்த நிலையில் இந்த வருட வடகிழக்கு பருவ மழையை நம்பி புரட்டாசி […]
எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படத்தின் ‘காசேதான் கடவுளடா’ என்ற 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது. இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு […]
மது போதைகளில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் வலைபேசி தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த கொம்பையா என்பவரின் மகன்கள் பாண்டித்துரை மற்றும் கருப்பசாமி. இவர்கள் இருவரும் நேற்றும் முன்தினம் இரவில் டாஸ்மாக் கடையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதன்பின் இருவரும் பாரில் இருந்து வெளியே வந்து சிறிது தூரம் நடந்து சென்றார்கள். அப்போது பாண்டித்துரை திடீரென ஆட்டோவில் இருந்து இரும்பு […]
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அமைச்சர் பதவியேற்றதும் அவர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதையடுத்து முதன்முறையாக விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார். அதாவது ஆந்திராவில் நடைபெறும் தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்ள செல்லும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் அவர் கலந்துரையாடினார். இந்நிலையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார் […]
திமுகவின் மறைந்த தலைவரும், இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எத்தனையோ பொறுப்புகள் வரலாம், போகலாம். பதவி அல்ல, பொறுப்பு. ஆனால் நான் எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக… உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. இப்போது அமைச்சர் பொறுப்பு என்பதினால் பொறுப்பான செல்லப் பிள்ளையாக இருப்பதற்கு நான் முயற்சிப்பேன். பத்திரிக்கை நண்பர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். இரண்டு நாட்களாக எல்லா தொலைக்காட்சிகளிலும், […]
முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா அணி. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க பேட்டர்கள் ஆஸ்திரேலிய […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, கர்மவீரர் காமராஜர் ஐயா ரயிலில் பார்த்திருக்கிறோம். நீங்களும் ரயிலில் போய் இருப்பீர்கள். ஒரு துண்டை போட்டுக்கொண்டு ரயிலில் பயணம் செய்வார்கள். யாராவது முதலமைச்சர் ரயிலில் வந்த மாதிரி பார்த்து இருக்கிறீர்களா? சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை. அதுவும் சரியாக அங்கே சன் டிவி நேரடியாக வந்து கொண்டிருக்கிறது. அவர் வேற உள்ளே உட்கார்ந்து கொண்டு இது ரயிலா? விமானமா ? வீடா ? நாம் […]
கோவை மாவட்ட அதிமுக ஜனவரி மாதம் நடந்த இருக்கும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய நல் ஆசியுடன் புது வருடம் பிறந்து 2023 3, 5, 9 இந்த 3 தேதிகளில் பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் மக்கள் பிரதிநிதிக்காக ஆர்ப்பாட்டத்தை நம்முடைய பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்கள் இதற்கு முன்னால் அறிவித்தார்கள். நம் தலைமையில் மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது. 23 […]
நெய்வேலி என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி அ.தி.மு.க சார்பாக நெய்வேலி சுரங்கம் முன் என்எல்சி நிறுவனம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுசை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியாதவது “மத்திய பா.ஜ.க அரசு கூறுகின்ற பணிகளை வாயைமூடி தன் தலையில் தூக்கி வைத்து திமுக ஸ்டாலின் அரசு செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் வருடத்திற்கு 2 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுவதாக […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, கர்மவீரர் காமராஜர் ஐயா ரயிலில் பார்த்திருக்கிறோம். நீங்களும் ரயிலில் போய் இருப்பீர்கள். ஒரு துண்டை போட்டுக்கொண்டு ரயிலில் பயணம் செய்வார்கள். யாராவது முதலமைச்சர் ரயிலில் வந்த மாதிரி பார்த்து இருக்கிறீர்களா? சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை. அதுவும் சரியாக அங்கே சன் டிவி நேரடியாக வந்து கொண்டிருக்கிறது. அவர் வேற உள்ளே உட்கார்ந்து கொண்டு இது ரயிலா? விமானமா ? வீடா ? நாம் […]
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்தியா, அமெரிக்கா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கி போன்ற மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதார மந்த நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற FICCI கூட்டத்தில் […]
இந்திய ரயில்வேயானது இன்று 250-க்கும் அதிகமான ரயில்களை ரத்துசெய்திருக்கிறது. பயணிகள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ரயில்கள் செல்லும் நேர நிலவரத்தைத் தெரிந்துக்கொள்வது நல்லது ஆகும். மக்களின் வசதியை முன்னிட்டு ரத்து செய்யப்படும் (அ) தாமதாக வரும் ரயில்கள் தொடர்பான தகவல்களை இந்தியன் ரயில்வே வெளியிட்டு வருகிறது. இவற்றில் ரயில்கள் ரத்து, ரயில்கள் தடம் மாற்றிவிடப்படுவது, தாமதமாக வருவது உள்பட பல பட்டியல்கள் வெளியாகிறது. இந்த பட்டியலில் பல மாநிலங்களைக் கடந்துவரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை […]
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது என்றும், ஒருவேளை நிலம் கையகப்படுத்தப்பட்டால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன் பிறகு திமுக அரசு விவசாயிகளின் விருப்பமின்றி வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று அரசாணை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு தன்னுடைய எதிர்ப்புதான் காரணம் என்று கூறியிருந்தார். […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக மக்கள் காலையில் எழும்போது எதன் விலை உயர போகுதோ என்ற அச்சத்தில் தான் எழுகிறார்கள். ஆவின் நிறுவனத்தில் தொடர்ந்து பால் விலை அதிகரிக்கப்பட்டு வருவதால் விற்பனை குறைந்துள்ளது. விவசாயிகளிடம் பாலை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்துவிட்டு மக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். சினிமா துறையை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரை […]
தாய்லாந்து நாட்டின் மன்னர் மகாவஜிர லோங்கோர்ன் மற்றும் அவரது மனைவி சுதிடா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். அதே சமயம் அவர்கள் இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரசகுடும்ப பணியகம் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரச பணிகளை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் பேரில் மன்னர் மற்றும் ராணி இருவரும் ஓய்வில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்ப்ரஸ்வேயில் 2 பேருந்துகள் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் அண்ணாமலை தன்னுடைய வாட்ச் விவகாரத்திற்கு தற்போது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுகவினர் என்னுடைய ஊழல் குறித்து விவாதிக்க ஆர்வமாக இருப்பதால் அதை எதிர் கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன். நான் கடந்த வருடம் மே மாதம் என்னுடைய ரபேல் கைகடிகாரத்தை வாங்கினேன். அதன் ரசீது […]
பிரதமர் மோடி பற்றி சர்ச்சை கூறிய விதமாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இவருடைய கருத்திற்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க- வினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க சார்பாக நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் பாக்தாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அதில் பேசிய பா.ஜ.க உள்ளூர் நிர்வாகியும் மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால் அதிரடியான அறிவிப்பு […]
பேருந்தில் ஏறிய சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தை சேர்ந்த மனிஷ் ஜாதவ்(12) என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 15-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மனிஷ் ஜாதவ் மதியம் வகுப்புகள் முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏறியபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு […]
கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது 3 பிரபலங்கள் ஒரே பள்ளியில் பயின்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வலம் வருகிறது. பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் நமக்கு நன்கு தெரிந்த டாப் நடிகர்கள் தான். எனினும் தமிழ் சினிமா பிரபலங்கள் இல்லை. அதாவது இவர்கள் தெலுங்கு சினிமாவை ஆண்டு வரும் பிரபலங்கள் தான். அவர்கள் யார் யார் எனில் ராம் சரண், […]
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்து உள்ளது. இவ்விவகாரத்தில் பா.ஜ.க தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும். தி.மு.க அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் தினசரி விலைவாசி அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது. தற்போதெல்லாம் பா.ஜ.க-வை பற்றி பேசிதான் திமுக வண்டி ஓடுகிறது. ஆரிய-திராவிடம் எனும் பிரிவினையை ஏற்காதவன் […]
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 58 […]
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓபிஎஸ் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சிநிர்வாகிகள், வெப்பேரியிலுள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டு இருக்கும் அந்த அறிவிப்பில், அ.தி.மு.க தலைமை செயலகம் லெட்டர் பேட் மற்றும் சீலுடன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு […]
தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அமைச்சர்களுக்கு தற்போது உதயநிதியை புகழ்வது மட்டும் தான் ஒரே வேலை. பாஜக-திமுக கூட்டணி அமையப்போவதாக சி.வி சண்முகம் கூறியுள்ள நிலையில், அவர் பாஜகவில் இணைந்து விட்டாரா என்று நான் கேள்வி எழுப்புகிறேன். கூட்டணி பற்றி கட்சியில் இருப்பவர்கள் மட்டும்தான் சொல்ல வேண்டும். சினிமா துறையைப் பொறுத்தவரை உதயநிதி மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டும் பிழைத்தால் போதுமா?. […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த ஒரு பெண் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கோவையில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த அக்டோபர் மாதம் எனக்கு திருமணம் நடைபெற்றது. என்னுடைய விருப்பமில்லாமல் எனக்கு திருமணம் நடந்தது. எனவே என்னுடைய திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என பதிவுத்துறை அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதி முன்னிலையில் வந்த போது திருமணத்தை பதிவு செய்யாவிட்டாலும் திருமணம் நடந்து முடிந்தது என்பதை மாற்ற முடியாது. […]
பிக் பாஸ் 6வது சீசனில் சென்ற வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கில் நடைபெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. விக்ரமன் வெற்றி பெற்றாலும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் ஜனனி தான் ஜெயித்தார் என மற்றவர்கள் கூறியது விமர்சனத்துக்கு உள்ளானது. டாஸ்கில் விக்ரமன் கோடு மீது கை வைத்து விட்டார் என ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர். நேற்று சனிக்கிழமை பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற கமல்ஹாசன் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கிடையில் ஜனனி வெற்றி பெற்றதாக சொல்லும் அசீம், […]
இலங்கை நாட்டில் பிரபல மீடியாவில் பணிபுரிந்தவர் ஜனனி. இவர் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்-6ல் பங்கேற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததும் குட்டி த்ரிஷா என்றெல்லாம் கொண்டாடப்பட்டார். எனினும் நிகழ்ச்சி செல்ல செல்ல ஜனனி மீது இருந்த கிரேஸ் எல்லாம் போய் விட்டது. அதற்கு காரணம் அவர் பிக்பாஸ் வீட்டில் விளையாடிய விதம்தான். இந்த வாரம் எலிமினேட் லிஸ்டில் ஜனனி இடம்பெற்று இருந்தார். இதற்கிடையில் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகளுடன் ஏடிகே […]
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கடந்த 16-ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதியோடு தேர்வுகள் அனைத்தும் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்த பிறகு ஜனவரி 2-ஆம் […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நீட்டிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி, […]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் “கனெக்ட்” படத்துக்காக உத்தாரா உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல் தற்போது வெளியாகி உள்ளது. மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இப்போது இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கிவரும் படம் தான் “கனெக்ட்”. ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் […]
அமீர் டைரக்டு செய்த மெளனம் பேசியதே (2002) படம்தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம். இதையடுத்து அவர் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல ஹிட் திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன்-2, சதுரங்க வேட்டை-2, ராம் (மலையாளம்) ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. த்ரிஷா நடிக்கும் புது இணையத்தொடர் படப்பிடிப்பு முடிந்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் த்ரிஷா அறிமுக டைரக்டர் […]
தற்போது ரன்வீர்சிங் நடித்து வரக்கூடிய புது படம் “சர்க்கஸ்”. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், வருண்சர்மா, சஞ்சய் மிஸ்ரா, முகேஷ் திவாரி, முரளி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ரோஹித் ஷெட்டி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் “கரன் லகா ரேஞ்க்” என்ற பாடலுக்கு கணவர் ரன்வீர்சிங்குடன் இணைந்து தீபிகா படுகோனே ஆடியிருக்கிறார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா..! பாணியில் இப்பாடல் படமாகி […]
தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கட்சியின் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகளும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பாஜக மற்றும் அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் […]
தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களைத் தயாரித்தும், வினியோகித்தும் திரைப்படத் தொழிலில் ஈடபட்டு வந்தார். இதற்கிடையில் அந்நிறுவனம் வெளியிடும் படங்களின் விளம்பரங்களில் இதுவரை “உதயநிதி ஸ்டாலின் வழங்கும்” என அனைத்து விளம்பரங்களிலும் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நிறுவனம் கடைசியாக தயாரித்த கலகத் தலைவன் மற்றும் கட்டா குஸ்தி படம் போன்றவற்றிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டு இருந்தது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு அனைத்து விளம்பரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு “உதயநிதி […]
அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை கைப்பற்றுவதற்கு தீவிர அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் என்று மத்திய அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது ஓபிஎஸ் தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் என்னைத்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு […]
சித்தார்த் ஆனந்த் டைரக்டு செய்த “பதான்” இந்தி திரைப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து இருக்கின்றனர். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூபாய்.15 கோடி சம்பளம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பதான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த […]
பெட்ரோல் நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சிவசேனா கட்சி மாநில செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள பழனிச்செட்டிப்பட்டியில் இருக்கும் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் இருக்கின்றது. இங்கே மேலாளராக ஹரிங்டன் என்பவர் பணியாற்றும் நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் மேலாளராக பணியாற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு நாட்ராயன், ஸ்டாலின், குரு ஐயப்பன் உள்ளிட்ட மூன்று பேர் வந்து […]
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தச்சூர் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு மழைக் காலங்களில் நெற் பயிர்களை வீணாகாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தார்ப்பாய் வழங்கினார். அதன்பின் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்த வருடத்தில் 94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். அதன் பிறகு நெற் பயிர்கள் மழையில் நனைந்து வீணாவதால் அதை […]
விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய 2 திரைப்படங்களும் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரி பாதியாக பிரித்துக்கொள்ள இருக்கின்றன. இதற்கிடையில் இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு “விஜய் தமிழகத்தின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக தான் அஜித் இருக்கிறார். இதனால் 2 படங்களுக்கும் சம அளவில் […]
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “துணிவு”. இப்படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது. இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அண்மையில் துணிவு படத்திலிருந்து சில்லா சில்லா என்ற முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜிப்ரான் இசையில் அனிரூத் […]
கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவையில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்த போது விவசாயிகளுடன் சேர்ந்து பாஜகவும் தீவிரமாக போராடியதுதான் விளைவாக தான் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த மாட்டோம் என்று உறுதி கொடுத்தது. அதன் பிறகு அண்ணாமலைக்கும் திமுகவில் இருக்கும் ஊழல்வாதிகளுக்கும் மட்டும் தான் பிரச்சினையே தவிர, திமுகவில் உள்ள தனி நபர்களுக்கு கிடையாது. எனக்கு ஆ. ராசா உண்மையாகவே […]
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரம் குறித்து சமீப காலமாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில் தற்போது அது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தற்போது நான் ஓட்டும் கார், சட்டை, வேஷ்டி, கைக்கடிகாரம் போன்றவைகள் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் கைகளில் அணிந்து இருப்பது ரபேல் விமானத்தின் உதிரிபாகங்களில் இருந்து செய்யப்பட்ட சிறப்பு கைகடிகாரம். ரபேல் விமானத்தை […]
தமிழ்நாடு கண்ணாடி இழைவலை அமைப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: manager, associate consultant காலி பணியிடங்கள்: 7 வயது: 25-40 சம்பளம்: ரூ.2 லட்சம் வரை கல்வித் தகுதி: B.E, B.Tech, MBA தேர்வு: தகுதி பட்டியல், நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு tanfinet.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. அதன்படி சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடன் உதவிதிட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன் சுய தொழில் தொடங்க ஆர்வம் உடையவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊறுகாய் வற்றல் தயாரித்தல், இனிப்பு, கார வகைகள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சுய […]