தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 சிறைச்சாலைகளில் கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அனைத்து சிறைச்சாலைகளிலும் கேமரா பொருத்தும் பணியும், சிறையில் பணியில் இருக்கும் காவலர்களின் உடையில் கேமரா பொருத்தப்படும். அதன்மூலம், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வசதியை உருவாக்கி அனைத்து சிறைகளையும் கண்காணிப்பில் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. சிறை காவலர்களின் உடைகளில் […]
வாலிபர் ஒருவர் மணப்பெண் திட்டியதால் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பகுதியில் இன்ஜினியராக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு சன்சில்க் ஷாம்பூ உள்ளிட்ட பல அழகு சாதன பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனை […]
தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப் படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி மற்றும் திநகர் உள்ளிட்ட 40 பணிமனை மற்றும் பேருந்து […]
உத்திரபிரதேச மாநிலத்தில் மோதிக்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சலீம். இவர் அங்குள்ள பஜாரில் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது அவரிடம் 20 ரூபாய் குறைவாக இருந்துள்ளது. இதனை பொருட்கள் வாங்கிய கடைக்காரரிடம் சலீம் கூறிய நிலையில் கடைக்காரர் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகளப்பாக மாறியது. அப்போது அங்கிருந்த மற்ற நபர்களும் சலீமை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் கூட்டத்தில் அவமானம் தாங்க முடியாத சலீம் அங்கிருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை […]
ஜே இ இ முதல்நிலை தேர்வு தொடர்பான அறிக்கையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் முதல் நிலை தேர்வு 2023 ஆம் ஆண்டு பங்கேற்பதற்கான தகுதிகளில் மாற்றமில்லை. ஆனால் ஐஐடி, என் ஐ டி, சிஎப்டிஐ- இல்சேர்க்கை பெறுவதற்கான அளவுகோலில் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். அதுவே எஸ்சி எஸ்டி மாணவர்கள் 65 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் என்பதை கூடுதல் தகுதியாக இணைத்துள்ளது. கொரோனா ஊரடங்கின் போது […]
தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]
ஆந்திராவில் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தனது மரண நாளை கொண்டாடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாலேட்டி ராமராவ் (63) தன்னுடைய 75 வயதில் அதாவது 2034 ஆம் ஆண்டில் உயிரிழப்பின் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். அதோடு நான் இறப்பதற்கு இன்னும் 12 ஆண்டுகளே உள்ளதால் இந்த ஆண்டு முதல் தனது மரண நாளை கொண்டாட உள்ளதாக அழைப்பிதழ் வழங்கி கொண்டாடியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. மேலும் […]
ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி ரம்யால் மகனை பறிகொடுத்த தாய் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். சென்னை மணலி அண்ணா தெருவை சேர்ந்தவர் பெருமாள் மற்றும் ஜெயலஷ்மி தம்பதியினர். இவர்களின் மகன் நாகராஜ் கடந்த ஜூன் மாதம் ரம்மியால் கடன் பெற்று தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும் அரசு தரப்பில் இருந்தே இதுவரை […]
மத்திய அரசின் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் மிகவும் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதை விட போன் மூலம் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் வாங்குகின்றனர். இந்த நிறுவனங்களில் பொருட்களின் விலை குறைவு என மக்கள் நன்புகின்றனர் . ஆனால் மத்திய அரசுக்கு சொந்தமான ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஒன்று இருக்கிறது. இதில் மற்ற நிறுவனங்களை விட தரமான பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தேசியவாதி என்பதால் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள ரபேல் வாட்சை கட்டி இருப்பதாக கூறிய அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில்,நான்கு ஆடுகளுக்கு மட்டுமே சொந்தக்காரர் என்று சொல்பவர் எப்படி ஐந்து லட்சம் மதிப்புள்ள வாட்சை வாங்கினார். ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கலாம். ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகைப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடு போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்க இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்படுவதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் […]
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனால் நாளுக்கு நாள் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல நிறுவனங்களும் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஓலாய் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் தள்ளுபடியுடன் கூடுதலாக நான்காயிரம் ரூபாய் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது. பணி: உதவி வன பாதுகாவலர் காலி பணியிடங்கள்: 9 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 21-34 கல்வி தகுதி: டிகிரி தேர்வு: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 12 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஹமிர்பூரில் சென்ற டிசம்பர் 15-ம் தேதி முன்னாள் ராணுவ வீரர் பரசுராம் என்பவரின் மகள் நேஹாவுக்கும், கடற்படையில் பணியாற்றும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் வரதட்சணையாக தன் மகளுக்கு புல்டோசர் பரிசாக வழங்கப்பட்டது. இது தொடர்பாக மகளின் தந்தை பரசுராம் கூறியதாவது, “தன் மகளுக்கு சொகுசு காரை வரதட்சணையாக கொடுப்பதைவிட வேறு எதாவது பயன் உள்ளதாக வழங்க வேண்டும் என நினைத்தேன். மேலும் என் மகள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு […]
முதல்வர் ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நேற்று இரவு முதலே நான் மிகுந்த மகிழ்ச்சியின் இருந்தேன். ஏனென்றால் நான் படித்த பள்ளிக்கு போகப் போகிறேன் என்று. பள்ளிப் பருவம் என்பது யாருக்கும் மீண்டும் கிடைக்காத காலம். நான் இந்த பள்ளியில் சேர்வதற்காக தேர்வு எழுதினேன். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. இந்த பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த போது எனது […]
ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள நான்புரா பகுதியில் 40 வயதுடைய டிம்பிள் தேசாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பெற்றோர் திருமணம் செய்வதற்காக வரன்களை பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவருக்கு திருமணத்தில் நாட்டமில்லை என்றாலும், குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். இதனையடுத்து அவர் அதே பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சென்று செயற்கை கருத்தரித்தல் முறையில் சிகிச்சை […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம், மாவட்ட நிர்வாகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை டிசம்பர் 18ஆம் தேதி அதாவது இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் […]
குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் ஜமால்பூரின் கீதா மந்திர் எஸ்டி பஸ் நிலையம் அருகில் முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலகம் இருக்கிறது. இங்கு நிறுத்தப்பட்டு இருந்த சுகாதார அலுவலரின் அரசு வாகனம் திடீரென திருட்டு போனது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் சாஹில் மக்சுத்கான் பதான் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, கைதான […]
குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். மேலும் இவரது கண் முன்னே அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் கடந்த 2008-ம் வருடம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் தண்டனை பெற்ற 11 பேரும் தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக அம்மாநில அரசு பரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியது. அதன்பின் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்மிர்பூர் பகுதியில் டிசம்பர் 15-ஆம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. அதாவது முன்னாள் ராணுவ வீரரான பரசுராம் என்பவரின் மகள் நேகாவுக்கும், கடற்படையில் பணிபுரியும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது பரசுராம் தன்னுடைய மகள் நேகாவுக்கு வித்தியாசமாக புல்டோசர் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். பொதுவாக திருமணத்தின்போது சொகுசு கார் பரிசாக வழங்கப்படும். ஆனால் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு புல்டோசரை பரிசாக வழங்கியது பலரது மத்தியிலும் […]
நொய்டா நாட்டில் சமீபகாலமாகவே சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற கர்னல் ஒருவருக்கு மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகையை தருவதாக கூறி 1.80 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏக் உபர்முக்வே, எட்வின் காலின்ஸ் மற்றும் ஒகோலோய் டாமியன் ஆகிய 3 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானதோடு, […]
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 12 சிறைச்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். அதன் பிறகு சிறையில் குற்றங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக சிறை காவலர்களின் சட்டைகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராக்களை சென்னையில் உள்ள […]
மீனம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபார தொடர்பு இன்று பலம் பெறும். பணவரவு நன்மையை வரவழைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவது நாற்பத்தி வரவழைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தள்ளிவைப்பது நல்லது. வீடு மற்றும் வாகனதால் வீண் செலவுகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர பணியை மேற்கொள்ள கூடாது. சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். […]
கும்பம் ராசி அன்பர்களே..! எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். உபரிபண வருமானம் ஏற்படும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உணவில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் எதிர்பாராத தொல்லைகள் ஏற்படும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை அகண்டு ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அனைத்து வகையிலும் ஆதரவு கிடைக்கும். கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் […]
மகரம் ராசி அன்பர்களே..! இன்று சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நாளாக இருக்கிறது. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களின் தகுதியை உயர்த்தும். தனவரவு தாராளமாக இருக்கும். இன்று தாயின் அன்பும் அரவணைப்பும் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். பயணங்களில் செல்லும்பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். பணவரவை சிக்கனமாக கையாளவேண்டும். செலவைக் கட்டுப்படுத்தி சேமிக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்த வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். புத்திக்கூர்மையை வெளிப்படுத்தவேண்டும். […]
தனுசு ராசி அன்பர்களே..! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் குறைந்துவிடும். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும். பிறருக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய அணுகூவம் உண்டாகும். இன்று எடுத்த காரியம் நல்லபடியாக வெற்றிப்பெறும். கடந்தகாலத்திலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தேவையில்லாத குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஈடுபடும்முன் சிந்தித்து செயல்பட வேண்டும். செயலில் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று இறைவழிபாடு மேற்கொள்ளக்கூடிய நாளாக இருக்கும். கல்யாண முயற்சி கைகூடும். சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி செய்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். வியாபாரத்தில் திட்டங்களை தீட்ட வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படக்கூடும். நிதானமாக எதையும் அணுகவேண்டும். யாரையும் நம்பி வேலையில் ஈடுபட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் […]
துலாம் ராசி ராசி அன்பர்களே..! இன்று போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனைவரிடமும் அன்பு காகட்டுப்படுவீர்கள்ட்டுவீர்கள். அன்புக்கு . எதிரிகளின் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சாதகமானபலன் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்களது கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். பயணத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு பிரச்சனையிலும் தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைக் கொடுக்கும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். வேலையில் அலைச்சல் உண்டாகும். இன்று […]
கன்னி ராசி அன்பர்களே..! இன்று மனம் தளராமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உங்களுடைய செயல்கள் மற்றவர்களை ஈர்க்கும். ஆர்வம் அதிகமாக இருக்கும். சிரமங்களை சமாளித்து சாதனைகளைப் புரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி சிறப்பாக இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். நல்ல முன்னேற்றமான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். தொழிலிலிருந்த போட்டிகள் விலகி, பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை […]
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நேரத்திற்கு உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத தருணங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுப்பதற்கு […]
கடகம் ராசி அன்பர்களே..! கணவனின் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதினால் கவனம் வேண்டும். இன்று குடும்பப் பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உண்டாக்கும். மனைவியின் அன்பில் மகிழ்ந்துக் கொள்வீர்கள். மனைவிக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். கொடுத்த கடன் வசூலாகும். தொழில் சம்பந்தமான பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எந்தவொரு பணிகளும் ஈடுபடுவீர்கள். கடல் தாண்டி வியாபாரம் […]
மிதுனம் ராசி அன்பர்களே..! வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு பெற்று மகிழ்ச்சி அடையக்கூடும். மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் மன நிம்மதியை பாதுகாப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். உணவு உண்பதில் கட்டுப்போட வேண்டும். பயன்தராத பொருட்களை வாங்குவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். பணபாக்கி வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்துக் காணப்படும். பூர்வீக சொத்துகளால் சாதகபலன் கிட்டும். ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அன்பு அதிகமாக இருக்கும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..! தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நோக்கங்கள் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று உங்களுடைய நலம் விரும்புபவர்களை சந்திப்பீர்கள். இனிய எண்ணங்களால் தன்னம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் முன்னேற்றத்திற்காக அதிக பொறுப்புடன் நடந்துக்கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். இதனால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நண்பர்களின் உதவிகள் தக்க நேரத்தில் வந்துச்சேரும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்று […]
மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் விரயச் செலவுகள் அதிகமாகும். சில விஷயங்களில் உற்சாகமாக ஈடுபட்டாலும் வெற்றி பெறுவது கடினம். இன்று தனலாபத்தை அதிகப்படுத்தி கொள்கிறீர்கள். உழைப்பிற்கு நற்பலன் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். அனைத்து வகையிலும் என்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். தடைகளைத் தாண்டி வெற்றிப் பெறுவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பெண்களிடம் அன்பாக நடக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுப்பீர்கள். மனதைரியம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும். தேவையில்லாத […]
இன்றைய பஞ்சாங்கம் 18-12-2022, மார்கழி 03, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.32 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 10.18 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் – 18.12.2022 மேஷம் உங்களின் […]
திசம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 352 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 353 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 13 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 218 – திரேபியா சமரில் அன்னிபாலின் கார்த்தாசினியப் படைகள் உரோமைப் படைகளைத் தோற்கடித்தன. 1271 – குப்லாய் கான் தனது பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, சீனாவிலும், மங்கோலியாவிலும் யுவான் வம்ச அரசாட்சி ஆரம்பமானது. 1622 – போர்த்தீசப் படையினர் கொங்கோ இராச்சியத்தை உம்புமி என்ற இடத்தில் (இன்றைய அங்கோலாவில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர். 1777 – சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடியது. 1787 – நியூ ஜெர்சி ஐக்கிய […]
மத்திய அரசு தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த ஆண்டு இது தொடர்பாக தேர்தல் சட்டங்கள் திருத்தத்தில் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் கமிஷன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 2-ம் தேதி ஜெய் பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மையப்படுத்தி ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு சமூகத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாக பலரும் […]
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கால்நடைகள் அதிக அளவில் கோமாரி நோயினால் பாதிக்கப்படுகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசால் தடுப்பூசிகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய 90 லட்சம் தடுப்பூசிகள் இன்று வரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கவும் மத்திய அரசு விரைவில் தடுப்பூசியை வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு பெரும் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் 18-ஆம் படி வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 18-ஆம் படி வழியாக ஓரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் என ஒரு மணி நேரத்தில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு வாரிசு திரைப்படத்தை விட துணிவு அதிக திரைப்படங்களில் தமிழகத்தில் ரிலீசாக போவதாக தகவல் வெளியானதால் தயாரிப்பாளர் தில் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டிவலசு அணைக்கட்டு ரோடு பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா(48). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகன் சதீஷ்குமார் பி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தான். கடந்த 2017-ஆம் ஆண்டு ஈரோட்டை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் மின்சார வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார். அதனை நம்பி அவர் கேட்ட 13 லட்ச ரூபாய் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள லாடபுரம் ஊராட்சிக்குட்பட்ட கெங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் (10), அஜித் (9), சந்திப் (7) என மூன்று மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரும் லாடபுரம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது மகன் ஜீவன் குமார் (8). இவர்கள் நான்கு பேரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 4 மாணவர்களும் பள்ளியில் இருந்து […]
மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரையில் இருந்து 18 ஐயப்ப பக்தர்கள் ஒரு வேனில் சபரிமலைக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே இருக்கும் வளைவில் திரும்பிய போது ராமகிருஷ்ணனின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயராமன், ராமகிருஷ்ணன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் 54 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார் இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் தொழிலாளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. இவர் ஏற்கனவே ஒரு கொலை […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் கொத்தனாரான சுந்தரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை விஷயமாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணபுரம் அருகே இருக்கும் கடை முன்பு சுந்தரேசன் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் சுந்தரேசனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சுந்தரேசனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சுந்தரேசனின் மனைவி குருபாக்கியம் தனது கணவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் […]
திருப்பூரில் இருந்து அரசு பேருந்து நேற்று முன்தினம் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மதுராபுரியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு பேருந்து நிலையத்தில் வைத்து சிலர் பேருந்தை வழிமறித்தனர். ஆனால் பேருந்து நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த வாலிபர்கள் பேருந்தின் கண்ணாடி மீது கற்களை தூக்கி வீசினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஷ், நந்தா, ரோகித், […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ராஜ்கிரண் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, சூதாட்டம் என்பது மிக மிக மோசமான விளையாட்டு. இந்த விளையாட்டால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளதோடு, தமிழகத்தில் இதுவரை 37 உயிர்கள் பலியாகியுள்ளது. அந்த காலத்தில் சூதாட்டம் என்பது சட்டப்படி குற்றமாக இருந்ததோடு சூதாடினால் காவல்துறையினர் கைது செய்வார்கள். ஆனால் தற்போது சூதாட்டம் டிஜிட்டல் மையமாகி […]