தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து, நான் கடவுள் படத்தில் ஆர்யாவுக்கு அப்பாவாக நடித்த அழகன் தமிழ்மணி இவரை பற்றி பகீர் தகவலை கூறியுள்ளார். அதில், இந்த படத்தில் நடிப்பதற்கு […]
ஜெயிலர் திரைப்படத்தின் தீம் மியூசிக் குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரஜினியின் முத்துவேல் பாண்டியன் தீம் மியூசிக் சிறப்பு […]
தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் ஐயா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ்சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் தமிழ் திரைப்படத்தில் […]
வாலிபர் ஒருவர் தனது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள கல்கஜி பகுதியில் மண் சிங்-பூஜா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மண் சிங், பூஜா ஆகிய 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது அதேபோல் மண் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “துணிவு’. இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியாகியது. இவற்றில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் கூறுகிறது. இந்த படத்தின் “சில்லா சில்லா” பாடல் கடந்த 9ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் […]
அவதார் திரைப்படத்தை திரை பிரபலங்கள் பலரும் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சென்ற 2009 ஆம் வருடம் வெளியான திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட் செலவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் 250 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்தது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த வசூல் சாதனையை முறியடித்தது இல்லை. இந்த நிலையில் தற்போது […]
தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழில் தற்போது பிக் பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்க, ஹிந்தியில் 16-வது சீசனும், தெலுங்கில் 6-வது சீசனும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதன்பிறகு 3 மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்க, 2-ம் சீசனை நடிகர் நானியும், 3,4,5,6 ஆகிய சீசன்களை நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கினர். […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், AIADMKவில் யாராக இருந்தாலும் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்றும் பேசுவது இல்லை. அதேபோல ரெட்டை வேடம் போடுகின்ற சந்தர்ப்பவாதிகளாகவோ அல்லது நேரத்துக்கு நேரம் கலர் மாத்திக் கொள்கின்ற பச்சோந்திகளாகவோ நாங்க என்னைக்கு இருந்தது கிடையாது. இதற்கெல்லாம் சொந்தக்காரர் திமுக தான். அதனால எங்களை பொறுத்தவரை பேச்சில மாறுதல் கிடையாது. திமுக அப்படி இல்லை மாறி மாறி பேசும். தமிழக உரிமைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறுல, காவேரி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்ப் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தேனியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி இவர் குமுளியிலிருந்து அரசு பேருந்தை திண்டுக்கல் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் மழை பெய்து பேருந்துக்குள் மழை நீர் ஒழுங்கியதால் பயணிகள் முருகேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகேசன் அரசு பேருந்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓட்டி சென்று புகார் அளித்ததோடு, வட்டார போக்குவரத்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.பங்களா கிராமத்தில் 200 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்ட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை திண்டுக்கல்-நத்தம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலர் வெற்றி வேந்தன் ஆகியோர் சாலை மறியலில் […]
தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலும், சிங்கமுத்துவும் சேர்ந்து நடிக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து விட்டனர். 10 ஆண்டுகளுக்கு பிறகும் இவர்கள் இருவரும் இணைந்த நகைச்சுவை காட்சிகள்தான் தொலைக்காட்சிகளில் அதிகம் காட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிங்கமுத்துவிடம் கேட்டதற்கு “நாங்கள் 2 பேரும் நேரில் சந்தித்து பேசினால் இப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும். யாரோ கூறியதை கேட்டுக் கொண்டு என் மீது உண்மைக்கு […]
பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன். இவர் சிரிச்சா போச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் திறமைசாலி. இவரும் சூர்யா தேவி என்ற பெண்ணும் நடிகை வனிதாவின் மூன்றாம் திருமணம் குறித்து தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை யூடியூபில் கூறிவந்த நிலையில் நடிகை வனிதா போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்த அவர் நாஞ்சில் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான சுரேஷ்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கீழானூர் கிராமத்தில் ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுவரின் ஒரு பகுதி இடிந்து சுரேஷ் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
தமிழகத்தில் இருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாட வேண்டும். முக்கியமாக இசை தட்டுகள் கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாட வேண்டும். அப்போது தவறாமல் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பூஜிய குறைபாடு, […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை எதிரே இருக்கும் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் அரசு தலைமை மருத்துவமனை எதிரே இருக்கும் பாதாள சாக்கடை மூடி வாகனங்கள் வந்து செல்வதால் உடைந்து காணப்பட்டுள்ளது நேற்று திடீரென அந்த மூடி உடைந்து அதன் அருகே இருந்த சாலை உள்வாங்கி 12 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. அந்த சமயம் அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
பாபா 2 திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் புதுப் பொலிவுடன் […]
ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி திருக்கோயிலின் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த திருவிழா ராப்பத்து, பகல் பத்து என மொத்தம் 20 நாட்கள் நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வான வைகுண்ட சொர்க்கவாசல் திறப்பு, பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை திறக்கப்படும். இந்நிலையில் இதற்காக திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி விழாவை […]
சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு திருட்டு, விபச்சாரம் உள்ளிட்ட குற்றங்களுக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுதல் அல்லது கைகளை துண்டித்தல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் “ஒயிட்நைல் மாகாணத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் விவாகரத்து பெற்ற அந்த இளம் பெண் மற்றொரு வாலிபருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை அந்த பெண்ணின் […]
நடிகை குஷ்பூவின் அண்ணன் இன்று காலமானார். தமிழ், தெலுங்கு என்ன பல மொழிகளில் முன்னணி நடிகையாக 80,90-களில் வலம் வந்தார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இவர் தற்போது நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் தனது மூத்த சகோதரர் அபூபக்கர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் சென்ற நான்கு நாட்களாக வென்டிலேட்டரில் இருந்து வருவதாகவும் நேற்று தான் அவரின் உடல்நிலையில் சிறிது […]
புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் தற்போது ஐபிஎஸ் அடிப்படையிலான “ஸ்டாப் டொபாக்கோ என்ற செயலியை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக அனைத்து தாலுகாக்களிலும் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலைப் விற்பனை செய்தாலோ […]
பெங்களூருவில் இருந்து திருச்சி நோக்கி 49 பயணிகளுடன் தமிழக அரசு சொகுசு பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இன்று காலை திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த பேருந்து விபத்துக்குள்ளானது. வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த […]
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “ஆவின் நிறுவனத்தின் நோக்கமே குறைந்த விலையில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவது தான். ஆனால் கடந்த 9 மாதங்களில் மட்டும் மூன்று முறை தி.மு.க அரசு நெய்யின் விலை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். அதாவது கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆவின் நெய் தற்போது ரூ.115 அதிகரிக்கப்பட்டு ரூ.630 […]
மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த விவசாய பண்ணை உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு மிக சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது. உள்ளூர் வாசிகள் இந்த பண்ணையை வாடகைக்கு எடுத்து அங்கு குடில்கள் அமைத்து பொழுதை கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக அங்கு […]
ரஜினியும் மகளும், ஏ.ஆர்.ரகுமானும் மகனும் எடுத்த செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஐஸ்வர்யா தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். இந்த நிலையில் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் அமைக்கும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ரஜினிகாந்த்தும் ஐஸ்வர்யாவும் நேற்று முன்தினம் திருமலையில் சாமி தரிசனம் செய்தார்கள். இதன் பின்னர் விமானம் மூலமாக கடப்பா சென்றார்கள். இவர்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானும் கடப்பாவிற்கு […]
பிரான்ஸ் நாட்டின் ரோல் மாகாணம் வால்க்ஸ் என் வெலின் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 14 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]
கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ வரும் நிறுவனங்களின் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி தர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது. கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூக்கு வரும் நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு செய்து விட்டு சென்று விடுகின்றது. ஆனால் மீண்டும் மாணவர்களை அழைப்பதே கிடையாது. பிறகு இது குறித்து விசாரித்தால் அப்படி ஒரு நிறுவனமே இல்லை என புகார்கள் எழுகின்றன. இது போன்ற போலி நிறுவனங்களை தடுப்பதற்கு அந் நிறுவனங்களின் மூன்று ஆண்டு பின்புலத்தை ஆராய்ந்த பிறகே […]
தமிழகத்தில் டிசம்பர் 21ஆம் தேதி 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும். டிசம்பர் 21ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், […]
புதிய வாகனங்களுக்கு மட்டுமே BH எண் கொண்ட நம்பர் பிளேட் அனுமதி கிடைத்து வந்த நிலையில் தற்போது பழைய வாகனங்களும் BH வரிசை நம்பர் பிளேட் களை வாங்க முடியும். இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் BH தொடர் சுற்றுச்சூழலின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்பவர்களுக்காக BH தொடர் வாகனப் பதிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னதாக, […]
நாளைய பஞ்சாங்கம் 18-12-2022, மார்கழி 03, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.32 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 10.18 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் – 18.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு […]
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை வடபழனியில் நண்பர்களுடன் வாடகை வீடு எடுத்து தங்கி சினிமா துறையில் கேமராமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜீவ்காந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜீவ் காந்தியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் […]
சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் பரப்பளவுடைய சிறுமருதூர் கண்மாய் அமைந்துள்ளது. இந்நிலையில் மேட்டுப்பட்டி, சிறுமருதூர், எஸ்.வையாபுரி பட்டி ஆகிய கிராமங்களில் இருக்கும் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் கண்மாய் ஆழப்படுத்தப்பட்டு சமீபத்தில் மடை கட்டப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக 13 ஆண்டுகளுக்கு பிறகு சிறுமருதூர் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் மறுகால் பாய்கிறது. இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து வர்ண பகவானுக்கு சிறப்பு பூஜை […]
பாபா 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் பொதுப் பொலிவுடன் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக 90களில் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். சினிமா மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே குஷ்புவின் மூத்த சகோதரர் உடல் நிலை சற்று மோசமான நிலையில் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் குஷ்புவின் மூத்த சகோதரர் உடல் நலக்குறைவால் இன்று […]
அஸ்வின் நடிக்கும் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. மைனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பிரபு சாலமன் தற்போது செம்பி என்ற திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் சேர்ந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்படத்தின் 2-ம் ட்ரைலர் […]
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சர்க்கார் வித் ஜீவா நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜீவா, இவர் சில மாதங்களுக்கு முன்பு ஓடிடிக்காக புதிய கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஆகா என்ற ஓடிடி தளத்தில் சர்க்கார் வித் ஜீவா என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் சேனல் ஒளிபரப்ப இருக்கின்றது. இதற்கான புரோமோ அண்மையில் வெளியாகி […]
ஒரே திரையில் இரண்டு திரைப்படங்களை காட்டும் புதிய முயற்சியில் தமிழ் இயக்குனர் கையில் எடுத்துள்ளார். ரசிகர்களை புது புது முயற்சிகளை மேற்கொண்டு எப்படியாவது கவர்ந்து விட வேண்டும் என இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் ஜெகன் வித்யா என்பவர் இரண்டு திரைப்படங்களை ஒரே திரையில் காட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றார். இத்திரைப்படத்திற்கு பிகினிங் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகினி உள்ளிட்டோர் நடித்திருருக்கின்றார்கள். மேலும் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். […]
தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரக்கூடிய 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]
தமிழகத்தில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என மீண்டும் பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் 23ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து கல்வியாண்டின் தொடக்கத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பை உறுதி செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை. ஜனவரி 2ஆம் தேதி அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கும் என […]
சுமார் 3000 கோடி பட்ஜெட்டில் உருவான அவதார் 2 திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இது குறித்து திரைப்பட ஆய்வாளர் ரமேஷ் பாலா கூறுகையில், உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 300 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய அளவில் மட்டும் முதல் நாளிலேயே […]
தமிழகத்தில் பால் விலையை தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலை அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட், தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பால் பொருட்களின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை 580 ரூபாயிலிருந்து […]
Youtube ஒருவரின் திருமணத்திற்கு சந்தாதாரர்கள் 4 கோடிக்கும் மேல் மொய் அனுப்பியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. யூடியூபில் உள்ளவர்களுக்கு கிரியேட்டிவ் திங்ஸ் என்ற youtube சேனலை பற்றி சிறப்பு அறிமுகம் எதுவும் தேவையில்லை. குறும்படங்கள் மற்றும் வீடியோக்கள் தயாரித்து ஸ்ரீ என்ற இளைஞர் ஒருவர் நற்பெயரை பெற்றுள்ளார். இந்த சேனல் மேலாளர் ஸ்ரீ சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமண வீடியோவை பதிவிட்டு அவர்களை ஆசீர்வதிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்த புதுமண தம்பதிக்கு […]
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சென்னையில் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லாமல் பயணம் செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கு வழங்கக்கூடிய டோக்கன்கள் குறித்து செய்தி குறிப்பு மூலமாக அறிவிப்பு செய்திருக்கிறார்கள். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மாநகர பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணக் கூடிய வகையில் அவர்களுக்கான டோக்கன்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள இருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் விதம் ஆறு மாதத்திற்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் […]
நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே சோர்ந்து போய் உள்ளனர். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிஎன்ஜி விலையும் உயர்த்தப்பட்டது. Indraprastha gas limited CNG விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட விலை இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வுக்குப் பிறகு டெல்லியில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு 79.56 […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தற்போது அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 19 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் […]
சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு வரும் 21-ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர் சைதாப்பேட்டை ஆகிய பணிமனைகளில் டோக்கனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டணமில்லா டோக்கனை பயன்படுத்தி ஆறு மாதங்கள் வரை பயணிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.. ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யவும், தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் தொடரப்பட்ட வழக்குகள் என்பது உச்ச நீதிமன்றத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எல்லோரும் சேர்ந்து தான் செய்கிறோம் அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு உடையது, எல்லோரும் சேர்ந்து பல திட்டங்களை உருவாக்கி அதை செயல்படுத்துவோம். என் துறையிலும் ஒன்று என்றாலும் அவரிடம் கேட்டுக் கொள்வேன், அவர் துறையில் ஏதாவது ஒன்று என்றால் கேட்டுக் கொள்வோம் அதுதான் இங்கு இருக்கின்ற அமைச்சரவையினுடைய சிறப்பு. அதைத்தான் முதலமைச்சராக அவர்கள் எங்களுக்கெல்லாம் அவ்வபோது அழைத்து, இதை எல்லாம்செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அதன்படி நடப்போம். […]
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வருகிறான். அந்த சிறுவனுக்கு 3 வாலிபர்கள் சேர்ந்து போதைப்பொருள் கொடுத்து பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துவது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், நாகல்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து சிறுவனிடம் போதைபொருள் […]