மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. சென்ற சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது காவேரி நீர் பிடிப்பு தகவல்களை நின்று விட்டது இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு சென்ற சில நாட்களாக நீர்வரத்து குறைந்து கொண்டே வருகின்றது. சென்ற 14ஆம் தேதி அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரத்து 500 கன அடி வீதம் நீர்வரத்து இருந்த நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 14,600 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் நேற்று 9 ஆயிரத்து […]
கரூர் மாவட்டத்தில் உள்ள ராச்சாண்டார்திருமலை பகுதியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி வரகனேரியில் வசிக்கும் ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் என்பவரிடம் குளிர்பான நிறுவனம் தொடங்கி நடத்தலாம் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி பெஸ்டின் மற்றும் அவரது நண்பர்களான ஞான சௌந்தரி, சகாயராஜ் ஆகியோர் தலா 8 லட்ச ரூபாய் வீதம் 24 லட்சம் ரூபாய் பணத்தை குளிர்பான நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மேலும் மூலப்பொருட்கள் வாங்குவதற்காக பெஸ்டின் மேலும் 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகர பா.ஜ.க துணை தலைவராக இருப்பவர் பாண்டியன் (60). இந்நிலையில் மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சுரேஷ்குமாரும், செயலாளர் கலையரசனும் பாண்டியனின் இரண்டு மகன்களுக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பாண்டியன் கடந்த 2017-ஆம் ஆண்டு சுரேஷ்குமார் மற்றும் கலையரசனிடம் 7 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து பாண்டியன் கேட்டபோது சுரேஷ்குமார் ரயில்வே துறையில் வழக்கு இருப்பதால் தாமதமாவதாகவும், தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை நேற்று ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் கூறியதாவது, போலீசார் வேலை நேரத்தில் செல்போன் உபயோகப்படுத்த கூடாது. வேலை நேரம் முடிந்த பிறகு தான் செல்போனை உபயோகிக்க வேண்டும். யாரும் தேவையில்லாமல் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட வேண்டாம். அரசாங்கம் சம்பளம் கொடுப்பதால் அரசாங்க வேலையை மட்டும் […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் விஸ்வநாதன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சுபானி(25), அலிகான்(25) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் விஸ்வநாதன் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறையில் ஆர்டர் கொடுத்த நகைகளை வாங்கி வருமாறு சுபானி மற்றும் அலிகானிடம் 68 லட்சம் ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ளார். இவர்கள் பேருந்து மூலம் மாதவரத்திற்கு வந்தனர். இதனையடுத்து கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் இருக்கும் உறவினர்களை பார்த்துவிட்டு சவுகார்பேட்டைக்கு செல்லலாம் என அலிகான் தெரிவித்தார். […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சியில் பாலசுப்பிரமணியன் என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகளுக்கு பணம் வழங்க சக்திவேல் என்பவரிடம் பாலசுப்பிரமணியன் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக்திவேல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சக்திவேல் பாலசுப்ரமணியிடம் பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பாலசுப்பிரமணியனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் […]
புதிய வாக்காளர் படிவங்களின் உண்மை தன்மை பற்றி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டத்தில் புதிய வாக்காளர் படிவங்களின் உண்மை தன்மை பற்றி சமூக சீர்திருத்தத்துறை அதிகாரி வீடு வீடாகச் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நாகை நகராட்சிக்குட்பட்ட நாகநாதர் சன்னதி தெரு, சட்டையப்பர் கீழே மடவளாகம், சட்டையப்பர் மேலவீதி ஆகிய பகுதிகளில் வாக்காளர் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் பற்றி கேட்டறிந்தார். மேலும் வாக்களிப்பது குறித்தும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த […]
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் 2022-23 நிதி ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுகளை சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்களது பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாரம்பரியமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தப்பாக்கம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அதில் தனது மகன் சுரேஷ் தன்னையும், தனது மனைவியையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்திய போது சுரேஷ் தனது பெற்றோர்களை […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் சுமைதாங்கி அருகே தனியார் சிமெண்ட் கடை இருக்கிறது. அந்த கடைக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் பூச்செடிகளுடன் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து சிமெண்ட் கடை உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அந்த நபர் முன்னுரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(46) என்பது தெரியவந்தது. பூச்செடி வியாபாரம் செய்யும் செந்தில்குமார் இரவு நேரம் […]
உலக திரையுலகில் சில திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் ஹிட் அடிக்கும். அதுபோன்ற படங்களின் வரிசையில் அவதார் படமும் இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாக வெற்றியை அடுத்து நேற்று அவதார் 2 படம் ரிலீஸ் ஆகியது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படம் தொழில்நுட்ப விஷயங்கள் கதையை தாண்டி அதிகம் பேசப்படும். அவதார்-2 திரைப்படம் டிசம்பர் 16 நேற்று உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் வெளியாகி இருக்கிறது. எனினும் இந்த படம் டிசம்பர் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மகாராஜா நகரில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொக்கலிங்கம் ஒரு கட்டுமான நிறுவனத்தினர் கட்டி வந்த அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் 37 லட்ச ரூபாய்க்கு வீடு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த நிறுவனத்தினர் 18 மாதங்களில் வீட்டை கட்டி தருவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு மேல் காலதாமதம் ஆனால் அதற்கான வீட்டு வாடகை தந்து விடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் குறிப்பிட்ட நவீன வடிவில் வீட்டின் முகப்ப்பு பகுதியை அமைத்து தருவதாக அவர்கள் உறுதி […]
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் இருக்கும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நகர்த்தக்கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டை துவங்கி வைத்துள்ளார். இதனையடுத்து ஒருமுறை எக்ஸ்ரே எடுத்தால் பின்னர் தேவைப்படும் உடல் தகுதியை தனித்தனியாக கணினி மூலம் பார்த்து எக்ஸ்ரே பகுப்பாய்வு செய்து கொள்ளும் வசதியுடன் இந்த கருவி அமைக்கப்பட்டுள்ளது. […]
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் பாதுகாப்பு கருதி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து யாரும் ஆற்றில் குளிக்கவும் கூடாது என கூறியிருந்தார். நேற்று முன்தினம் ஆரிக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார்(20) என்பவர் தனது நண்பர்களுடன் திருக்கண்டலம் […]
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கடந்த 27-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 6-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கோவில் பின்புறம் இருக்கும் மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 35 லட்சம் பக்தர்கள் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கிரிவலம் சென்றதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் வைத்து உண்டியல் பணம் என்னும் பணி கோவில் இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலையில் […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தன்யா பாலகிருஷ்ணன். சென்ற 2011 ஆம் வருடம் சூர்யா நடிப்பில் வெளியாகிய 7ம் அறிவு படத்தின் வாயிலாக அறிமுகமான இவர் காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார். மேலும் தெலுங்கில் நாயகியாகவே நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்ததால் அங்கு தன்யா பல படங்கள் நடித்து வருகிறார். எனினும் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பகுதியில் ஜெயக்குமார் சதீஷ்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் சதீஷ்குமார் மீது வனத்துறையில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் யானை தந்தத்தை சதீஷ்குமாரும், ஜெயக்குமாரும் இணைந்து விற்பனை செய்ய முற்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அறிந்த சென்னை தலைமையிட வனத்துறை அதிகாரிகள் சதீஷ்குமாரின் செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு செல்கிறார் என கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வனத்துறையினர் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு யானை தந்தத்தை […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரங்கியூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு பிரபாகரன் மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் தந்தை திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சாந்தி பிரபாகரனுக்கு 10 […]
கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையொட்டி விற்பனை கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் மகளிர் சுய உதவி குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் திட்டம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில அரசு மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் […]
மத்திய ரயில்வேயில் அப்ரெண்டிஸ் பதவிக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Central Railway பதவி பெயர்: Apprentice மொத்த காலியிடம்: 2422 கல்வித்தகுதி: 10+2, ITI வயதுவரம்பு: 25 Years கடைசி தேதி: 15.01.2023 கூடுதல் விவரம் அறிய: www.rrccr.com https://rrccr.com/rrwc/Files/196.pdf
பின்னணி பாடகி , நடிகை என பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டி வருபவர் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் சீசன் 7-ல் பங்கேற்று அழகாக பாடி அசத்தினார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். […]
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை பூமிகா. தமிழில் இவர் நடித்த பத்ரி, ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது. மேலும் கடந்த 2018 ஆம் வருடம் சமந்தா நடிப்பில் வெளியாகிய U Turn திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பூமிகா நடித்தார். அத்துடன் கண்ணை நம்பாதே என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதற்கிடையில் நடிகை பூமிகா எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கக்கூடிய ஒரு பிரபலம் […]
தளபதி விஜய்யை விடவும் அஜித் பெரிய ஸ்டார் இல்லை. அதனால் வாரிசு திரைப்படத்திற்கு தான் அதிக தியேட்டர் கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் தில்ராஜு கூறியது இப்போது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகின்றனர். எனினும் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் அஜித் கலந்துகொள்ளபோவதில்லை என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. ஏனெனில் நல்ல படத்திற்கு அதுவேதான் விளம்பரம் என அஜித் அண்மையில் கூறியிருந்தார். இந்த நிலையில் அஜித்தின் பிஆர்ஓ […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு கருத்தரித்தலை முறைப்படுத்துவதற்காக இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து கருமுட்டை வழங்கக்கூடிய பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சட்டத்தின்படி கருமுட்டைகளை அதற்கான வங்கிகளின் இருந்து பெறவேண்டும் என்றும், 23 வயது முதல் 35 வயதுகுட்பட்ட பெண்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே கருதானம் பெற வேண்டும் எனவும் இருக்கிறது. அதன் பிறகு ஒரு தம்பதிகளுக்கு ஒரு முறைக்கு மேல் கருமுட்டை […]
திரில்லர் மற்றும் துப்பறியும் கதைகளை டைரக்டு செய்வதில் வல்லவரான இயக்குனர் அறிவழகன் அண்மை காலமாக நடிகர் அருண்விஜய் வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் இப்போது சபதம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடிக்கிறார். கடந்த 13 வருடங்களுக்கு முன் வெளியாகிய ஈரம் படத்தில் இயக்குனராக அறிமுகமான அறிவழகன், அப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆதிக்கும் மிகப் பெரிய திருப்புமுனையை பெற்றுத்தந்தார். இந்த நிலையில் சபதம் படத்திற்காக இவர்கள் இணைந்துள்ளனர். இப்படத்தின் துவக்க […]
அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் கட்சிக்குள் மாறி மாறி அணிமாற சிலர் வேறு கட்சிக்கும் தாவுகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் திடீரென திமுகவில் இணைந்தார். அதன்பிறகு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.கே. வெங்கடாசலம் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.பி. கந்தசாமி தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்ததோடு […]
சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில், 5.50 லட்சம் சதுர அடியில், 7 தளங்கள் மற்றும் 1000 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இந்த பணிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கிண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனை அடுத்த வருடம் ஜூன் மாதம் திறக்கப்படும். அதன் பிறகு இந்த மருத்துவமனைக்காக கிண்டி […]
குறு நிறுவனங்கள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் படி மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள சமையல் எண்ணெய் உற்பத்தி, மரச்செக்கு எண்ணெய், உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களும் உணவு […]
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். அண்மையில் டில்லியில் 17 வயது மாணவி ஒருவர் சாலையில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார். இதுகுறித்து தற்போது கங்கனா ரணாவத் பதிவிட்டு இருப்பதாவது “சாலையோர ரோமியோ ஒருவரால் டீனேஜ் பருவத்தில் எனது சகோதரி ரங்கோலி ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானார். அதில் இருந்து அவர் மீண்டுவர 52 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. இதனால் என் குடும்பம் கடும் வேதனைக்கு உள்ளானது. அந்த சம்பவத்துக்கு பின் என்னை […]
பல நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆண்டுதோறும் பல கார் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்துவது வழக்கம். அதேபோல் 2023-ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே இருக்கிறது. இந்நிலையில் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, ரெனோ, கியா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்த போவதாக கூறியுள்ளது. அதேபோல் ஹோண்டா நிறுவனமும் விலையை 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த போவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து […]
விவசாய நிலத்தில் இருந்து திடீரென நீர்க்குமிழிகள் ஏற்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் காலையில் வயலில் திடீரென நீர்க்குமிழிகள் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் விவசாயிகள் சேற்றைக் கொண்டு நீர்குமிழியை அடைத்தார்கள். இதை தொடர்ந்தும் நீர்க்குமிழி வந்ததால் தங்கள் பகுதியில் பதிக்கப்பட்டிருக்கும் எரிவாயு குழாயில் கசிவை ஏற்பட்டிருக்கின்றதா என அச்சமடைந்து வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் […]
வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்னிருத்தம் செய்யப்படுகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகின்றது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் வேதாரண்யம், புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, தோப்புதுறை, கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம் துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று […]
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உத்தேச தேதியாக ஜனவரி 12-ம் தேதி கூறப்படுகிறது. இதன் காரணமாக 2 நடிகர்களின் ரசிகர்களும் படத்தின் ரிலீஸ்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வாரிசு பட இயக்குனர் வம்சி பேட்டியளித்தபோது, இந்த படம் முழுக்க தமிழ் திரைப்படம் என்று கூறியிருந்தார். இந்த திரைப்படம் முழுக்க தமிழ் படமாக இருந்திருந்தால், […]
அவிநாசியில் கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் இருக்கும் ராஜநகரில் வாரம்தோறும் புதன்கிழமை சந்தை கூடுகின்றது. இந்த பகுதியில் ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், ஜவுளி, மளிகை பொருட்கள், சிறுதானியங்கள், உணவு பொருட்கள் என ஏராளமானவற்றை விற்பனை செய்கின்றார்கள். இந்த நிலையில் சென்ற புதன்கிழமை சந்தையில் ஒரு பெண் வியாபாரம் செய்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார். பின் வியாபார பணத்தை அவர் எண்ணிப் பார்த்தபோது […]
ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று செயற்கை கரு மூலமாக குழந்தைகளை உருவாக்குவது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மற்றொருபக்கம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மக்கள் தொகை அதிகரிப்பு உலகின் பெரும் பிரச்சனையாக இருந்த காலம் மாறி தற்போது பல நாடுகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் நிலையில் இருக்கின்றனர். தென்கொரியா, ஜப்பான், பல்கொரியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை சரியத் தொடங்கியுள்ளது. […]
சென்னை குரோம்பேட்டையில் உள்ள தொழில்நுட்ப வளாகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சி, மாணவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் த.மோ அன்பரசன் கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுக்காக ரூபாய் 59 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு பிறகு அமைச்சர் த.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, […]
ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கை வசதி இல்லாமல் மக்கள் தரையில் அமர்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நிரந்தர ஆதார் சேவை மையம் இருக்கின்றது. இங்கே நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் இங்கு வரும் பொது மக்கள் உட்கார இருக்கை வசதி இல்லாமல் தரையில் அமர்ந்து கொள்கின்றனர். மேலும் முதியவர்களும் புதிதாக ஆதாரத்தை விண்ணப்பிக்க கைக்குழந்தைகளுடன் பெண்களும் வருகின்றார்கள். இங்கு இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமர முடியாமல் முதியவர்கள் […]
மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களிடம் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டு தெரிந்துகொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, சித்தா பிரிவு, ஆய்வகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு அமைச்சர் மேற்கொண்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள 16 மருத்துவர்களில் எந்த அறிவிப்பும் இல்லாமல் பணிக்கு […]
மதுரை அரசடி பகுதியில் உள்ள இறையியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் டிடிவி தினகரன் பேசினார். அவர் பேசியதாவது, சிலர் மதத்தின் பெயரில் மக்களை பிரித்து பிரிவினை வாதத்தை ஏற்படுத்துகிறார்கள். மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து இன்று தீவிரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. அதன்பிறகு சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என கூறி […]
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டால் twitter கணக்கு முடக்கப்படும் என எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாஷிங்டன் டைம், நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகைகளின் செய்தியாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற அவதார் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு ஜேம்ஸ் கேமரூன் இரண்டாம் பாகமான அவதார் The way of water என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் டிசம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவதார் 2 படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். அவதார் முதல் பாகத்தில் மனிதர்கள் செய்யும் அதிகார அத்துமீறல்களை ஜேம்ஸ் கேமரூன் பட்டியலிட்டு ஏலியன்களுக்கான தேவ தூதனான […]
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரக்கூடிய பாரத் ஜோடோ யாத்திரை நேற்று (டிச.16) ராஜஸ்தானிலுள்ள தௌசாவில் 100வது நாளை நெருங்கியுள்ளது. முன்னதாக ராகுல்காந்தி சென்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன் பாதயாத்திரையை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவரான கே.சி.வேணு கோபால் கூறியிருப்பதாவது “மக்களின் பிரச்சனைகளை இந்த பாதயாத்திரை முன்னிலைப்படுத்தியது பெரிய சாதனை ஆகும். மேலும் இந்த பயணம் 100வது நாளை நெருங்கியுள்ளது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. […]
கொடிக்கம்பம் அருந்து விழுந்து அ.தி.மு.க தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் நெடுஞ்சாலை ஓரமாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு 100 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க கம்பத்தில் கொடியேற்றி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த கொடி கம்பம் சேதமடைந்திருந்தால் அதை மாற்றுவதற்காக நேற்று ராட்சத கிரேன் மூலம் கொடி கம்பத்தை கழற்றி மீண்டும் பொருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. […]
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துகளுடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்தில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். இதனாலையே தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் அவ்வபோது பல வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. அரசிற்கு அதிக வருவாயை வழங்கும் ரயில்வே துறையின் சேவைகள் அனைத்தும் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமேஸ்வரம் மற்றும் ஹுப்லி வாராந்திர ரயில் சேவை குறித்த […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு தனியார் துறையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம், மாவட்ட நிர்வாகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி அதாவது நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அம்மையப்பன் பாரத் கல்வியியல் […]
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் பச்பேடி அரசு பள்ளியில் பிரதீப் ஸ்ரீவஸ்தவா(61) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் டிசம்பர் 15ஆம் தேதி நள்ளிரவில் தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதையடுத்து தலைமை ஆசிரியர் வீட்டின் வாயிலுக்கு சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அதன்பின் அந்த வாலிபர் தலைமை ஆசிரியரை சுத்தியல், கத்தி போன்றவற்றால் கொடூரமாக தாக்கி இருக்கிறார். […]
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் யூட்யூப் மற்றும் இன்ஸ்டால் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தங்களைப் பற்றி அனைத்து தகவல்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர். அதனால் தற்போது மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் போலி அக்கவுண்டுகள் அதிகரித்து வருவதால் இந்தியாவை சேர்ந்த சைபர் ரூட் ரிஸ்க் அட்வைசரி நிறுவனம் போலி கணக்குகள் குறித்த சோதனையில் ஈடுபட்டது. அதன் மூலமாக சீனாவில் உள்ள ராணுவ வீரர்கள், […]
சென்னை மாவட்டத்தில் உள்ள சின்ன எர்ணாவூர் 4-வது தெருவில் பெயிண்டரான தனசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவொற்றியூர் தொகுதி துணை செயலாளராக இருந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவியும், பிரவீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனசேகர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக தனசேகரின் வீடு பூட்டியே கிடந்தது. நேற்று முன்தினம் காலை தனசேகருக்கு கடன் கொடுத்த 2 […]
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த தேர்வுக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எண்ணிக்கை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு […]