Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்னாள் எம்.பி மஸ்தான் மரணம்…. கொலை செய்தது அம்பலம்…. உறவினர் உட்பட 5 பேர் கைது..!!

முன்னாள் எம்பி மஸ்தானை உறவினர் உட்பட 5 பேர் இணைந்து கொலை செய்துள்ளனர். கார் ஓட்டுநர் இம்ரான், உறவினரான சித்தா டாக்டர் சுல்தான் அகமது, நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்தானின் சகோதரரின் மருமகன் சித்தா டாக்டர் சுல்தான் அகமது, கார் ஓட்டுநர் இம்ரான்  உட்பட 5 பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலம் ஆகியுள்ளது. மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் முன்னால் எம்பி மஸ்தானை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகராட்சி மன்ற கூட்டம்… ஜனவரி 15ஆம் தேதி வரை… சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!!!!!!

சென்னை மாநகராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம்  நடைபெற்றுள்ளது. மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணைமேயர்  மு மகேஷ் குமார், கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி போன்றோர்  முன்னிலை வகித்தனர். மேலும் நிலை குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கேள்வி நேரமும், கேள்வி இல்லா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்-2 படத்தின் புது போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

மறைந்த எழுத்தாளர் கல்கி நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகியது. இதில் முதல் பாகம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது. அதன்பின் “பொன்னியின் செல்வன்-2” 2023ம் வருடம் ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் […]

Categories
தேசிய செய்திகள்

“இது தேர்தலில் நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும்”…? காங்கிரஸ் எதிர்ப்பு…!!!!!!

உள்நாட்டில் புலம் பெயர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லாமல் தங்கள் இருப்பிடத்தில் இருந்து கொண்டு ஓட்டு போடுவதற்கு வசதியாக “ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம்” அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் கூறியதாவது, “குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அவ்வாறு இருக்கும்போது ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம் மூலம் பல இடங்களுக்கும் சந்தேகத்திற்குரிய ஓட்டுப்பதிவை பரவலாக்கினால் என்ன ஆவது? என […]

Categories
தேசிய செய்திகள்

கட்டிப்பிடித்தபடி பைக் ஓட்டிய ஜோடி…. வெளியான வைரல் வீடியோ…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் கட்டிப்பிடித்தபடி ஒரு ஜோடி பைக் ஓட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியது. இந்த வீடியோவை அவ்வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் படம் பிடித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, சம்மந்தப்பட்ட அந்த ஜோடி அஜய்குமார்(22), கே.ஷைலஜா (19) ஆகியோரை கைது செய்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து வெற்றிபெற்ற படங்கள்…. சம்பளத்தை உயர்த்திய தனுஷ் பட நடிகை?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

கடந்த 2015ல் வெளியாகிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுபமா. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். மேலும் பல்வேறு மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியாகிய “18 பேஜஸ்” படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் தன் சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ரூபாய்.60 லட்சம் சம்பளமாக வாங்கிய அனுபமா, […]

Categories
வேலைவாய்ப்பு

Degree, Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.31,000 சம்பளத்தில் NLC நிறுவனத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Junior Overman, Junior Surveyor, Sirdar காலி பணியிடங்கள்: 213 சம்பளம்: ரூ.31,000 – ரூ.1,00,000 கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ வயது: 35- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.nlcindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
தேசிய செய்திகள்

விழா மேடையில் முதல் மந்திரி அதிரடி அறிவிப்பு… அதிர்ச்சியில் கலெக்டர்… பெரும் பரபரப்பு…!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி மாவட்ட கலெக்டராக தருண் பட்நாகர் என்பவர் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, புகாருக்கு ஆளான தாசில்தார் சந்திப் சர்மாவையும், மாவட்ட கலெக்டர் தருண் பட்நாகரையும் […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே…. கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால் கால் டாக்ஸி வசதி…. சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக இருக்கும் என்பதால் காவல்துறை பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது புத்தாண்டில் அளவுக்கு அதிகமாக போதையில் மிதக்கும் மது பிரியர்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்து நேரிடும். இதனால் போலீசாரின் அபராத நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதனைத் தவிர்க்க சென்னையில் நட்சத்திர விடுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் க்யூ ஆர் கோடு ஒட்டப்படும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து…. மருத்துவமனை பரபரப்பு தகவல்…..!!!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற போது, அவரது கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில், கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் பண்ட்-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது பிளாஸ்டிக் சர்ஜரிக்காக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து தீப்பிடித்ததில் அவர் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளையராஜா என்னுடைய உணர்வு”…. இயக்குனர் பா.இரஞ்சித் நெகிழ்ச்சி…..!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இப்போது விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படத்தை இயக்குகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் எனும் அமைப்பின் வாயிலாக சென்ற 2 ஆண்டுகளாக “மார்கழியின் மக்களிசை” என்ற இசை விழாவை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பங்கேற்றார். அப்போது பா.இரஞ்சித் பேசியதாவது, “இளையராஜா என்னுடைய உணர்வு. நமக்கு உடம்பில் கிள்ளினால் வலிப்பது போல் தான் இளையராஜா எனக்கு. அவர் பாடல்களை கேட்கும் போது எமோஷனலாக இருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் கொடுங்க!…. அரசுக்கு சீமான் வலியுறுத்தல்….!!!!!

அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்தை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் தி.மு.க அரசு ஏமாற்றி வருவது ஆசிரியர் பெருமக்களுக்கு செய்கிற பச்சை துரோகம் ஆகும். எனவே நாட்டின் வருங்காலத் தலைமுறையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் ஊதிய […]

Categories
மாநில செய்திகள்

“வனத்துறையில் நவீன தொழில்நுட்பத் வசதிகள்”…… மொத்தம் 6 பிளான்கள்…. தமிழக அரசின் அதிரடி திட்டம்…!!!

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறையின் கூடுதல் செயலாளர் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ள வனத்துறை நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இந்த நவீனமயமாக்க திட்டமானது மனித மேலாண்மை உட்பட 6 முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது. அதன் பிறகு சுமார் 8.55 கோடி ரூபாய் செலவில் களப்பணியாளர்களுக்கு பயிற்சி திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு வன பயிற்சி கல்லூரிகளில் பயிற்சி போன்றவைகள் வழங்கப்படும். இந்நிலையில் சுமார் 40 லட்ச ரூபாய் செலவில் வனத்துறையில் தொழில்நுட்ப […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“60 வருட திராவிட கட்சிகளின் தோல்விதான் புதுக்கோட்டை தீண்டாமை சம்பவம்”…. சீமான் ஆவேசம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயலில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்கள் தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் குடிக்கும் கழிவு நீர் தொட்டியில் மலம் கலந்தததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்பிறகு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

விமானத்தில் “எமர்ஜென்சி” கதவை திறந்து விளையாடிய பா.ஜ.க தலைவர்…. அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் டுவிட்….!!!!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், கடந்த 10-ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் “எமர்ஜென்சி” கதவை திறந்து விளையாடி இருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். போட்டோஷாப் கட்சி என சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவது பா.ஜ.க கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருப்பது பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை தான் என பலர் சமூகவலைதளங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசே!….பொங்கல் பரிசுத் தொகுப்பில் இதையும் சேர்த்துக்கோங்க?…. விவசாயிகள் கோரிக்கை…..!!!!

வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முதலில் கரும்பு இடம்பெறவில்லை. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிருப்தியடைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன்பின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று பொங்கல் பரிசுத்தொகுப்பில் மஞ்சளும் இடம்பெற்றால் விவசாயிகள் பயனடைவார்கள். ஆகவே அது தொடர்பாகவும் முதல்வர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து விருதுகளை குவிக்கும் விஜய் சேதுபதி படம்….. மகிழ்ச்சியில் படக்குழுவினர்…..!!!!

டைரக்டர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் ஆகிய நட்சத்திரங்களின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “மாமனிதன்”. இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறையாக கூட்டணி அமைத்து இசை அமைத்திருந்தனர். இதில் யுவன் ஷங்கர் ராஜா தன் ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் வாயிலாக இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். இத்திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் இந்த படம் பல சர்வதேச திரைப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மொழி பிரச்சனை: நடிகர் சித்தார்த் மீது பரபரப்பு புகார்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த், இப்போது கமல்ஹாசனுடன் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார். இவர் சமூக அரசியல் குறித்த கருத்துகளை அடிக்கடி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் மதுரை விமானம் நிலையத்தில் இந்தி தெரியாது என கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக சித்தார்த் சொன்னார். இது பற்றி சமூகவலைத்தளத்தில் சித்தார்த் வெளியிட்டுள்ளதாவது “மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்குள்ளானேன். வயதான என் பெற்றோர் கொண்டுவந்த பைகளிலிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

விமானத்தில் சண்டை போட்ட பயணிகள் மீது எப்ஐஆர்…. மத்திய மந்திரி அதிரடி நடவடிக்கை…..!!!!

பாங்காக்கிலிருந்து இந்தியா வந்த 4 இந்திய பயணிகள் ஒன்று சேர்ந்து விமானத்திலிருந்த மற்றொரு இந்திய பயணியை தாக்கினர். இதுகுறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய மந்திரி ஜோதிராதித்யா வெளியிட்டுள்ள பதிவில் “தாய்ஸ்மைல் ஏர்வே விமானத்தில் பயணிகளுக்கு இடையில் நடைபெற்ற சண்டை பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி தாய்லாந்திலிருந்து கொல்கத்தா வந்த விமானம் புறப்படுவதற்கு […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

BREAKING: விபத்து.. ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதி…!!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற போது, அவரது கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில், கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் பண்ட்-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது பிளாஸ்டிக் சர்ஜரிக்காக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இப்படி ஒரு பிரதமரா?” தாய் இறந்த துக்கத்திலும்….. இன்று PM மோடி செய்யும் சம்பவம்….!!! …!!!

தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி  7800 கோடியில் ஏராளமான நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருந்த நிலையில் அவருடைய தாயார் இறந்துள்ளார். இதனால் அவருடைய சுற்றுப்பயணம் இன்று ரத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மன்னிப்பு கேட்ட அண்ணாமலை: அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் ட்விட்.. அப்படி என்ன நடந்துச்சு ?

தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொடர்ந்து கருத்து மோதல்கள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றது. இருவரும் மாறிமாறி விமர்சனங்களை ட்விட்டர் மூலம் வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். பாஜகவின் தேசிய இளைஞரணி தலைவர்  தமிழகம் வந்த போது நடந்த சம்பவம் தொடர்பான ஒரு ட்விட் அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாம் காதல் செய்யும் மாயம்!… 65 வயதிலும் முதியவரின் மாஸ்டர் பிளான்…. வெளிச்சத்திற்கு வந்த பரபரப்பு உண்மைகள்….!!!!

மகாராஷ்டிரா புனேவிலுள்ள சார்ஹோலி பகுதியில் வசித்து வரும் 65 வயதான கெர்பா தோர்வ்  என்ற முதியவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவர் அந்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிப்போய் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்து உள்ளார். அதற்காக சினிமாவை மிஞ்சும் அளவிற்கு அவர் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, கெர்பா தான் இறந்து போனதாக நாடகமாட கொலை செய்து உள்ளார். தன்னுடன் நட்பாக பழகி வந்த ரவீந்திர பீமாஜி கெனந்த்(48) என்பவரை, தனது […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணீருடன் தாய் உடலை…. தோளில் சுமந்து செல்கிறார் பிரதமர்…. வீடியோ…!!!

தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, தாய் ஹீராபென் சடலத்தை பிரதமர் சுமந்து செல்கிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. https://twitter.com/ANI/status/1608657708382826498

Categories
தேசிய செய்திகள்

#HeerabenModi: தாயார் உடலை தோளில் சுமந்து நடந்த பிரதமர் மோடி…!!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று காமலானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குஜராத்தில் உள்ள காந்திநகர் இல்லத்தில் தனது தாய் ஹீராபென் மோடிக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பின்னர்  மோடி அவரின் தாயாரின் உடலை தோளில் சுமந்து சென்றார்.   https://twitter.com/ANI/status/1608657708382826498

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேச தெரில…. ஆள தெரியாது என… சரமாரி கேள்வி… நச்சுன்னு செஞ்சு காட்டிய C.M ஸ்டாலின்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பேராசிரியர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். கலைஞர் இந்த இயக்கத்தை வழி நடத்தினார். அவருக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் வழி நடத்துகிறார் ? என்று அடையாளப்படுத்திக் கொண்ட பொழுது, கலைஞரை நான் ஏற்றுக்கொண்டேன் என பேராசிரியர் பேசியது,  2005 மே மாதம் 12ஆம் தேதி ஓரிடத்தில் பேசி பேசி முடித்தார். அந்த பேச்சின் இறுதி தொகுப்பில் பேராசிரியர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

என் அம்மா ஸ்ரீதேவி செய்தது ரொம்ப தப்பு…. உண்மையை உடைத்த மகள் ஜான்வி கபூர்…!!!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது.  இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனது அம்மா ஸ்ரீதேவி பற்றி பேசிய ஜான்வி கபூர்,  “என் அம்மா (ஸ்ரீதேவி) 13 வயதில் அப்பாவுடன் ஹீரோயினாகவும், 21 வயதில் மகனுக்கு அடுத்தபடியாகவும் நடித்தார். அப்படி செய்வது மிகவும் தவறு என்று […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. 6 பேரின் கொடூரச் செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!

புனேவில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன் கொடுமை செய்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். அதுமட்டுமின்றி இதுபற்றி வெளியே சொன்னால் நிர்வாண புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுவிடுவதாக கூறி சிறுமியை மிரட்டி இருக்கின்றனர். இதுகுறித்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]

Categories
உலக செய்திகள்

தீ விபத்து: 19 பேர் பலி…. சற்றுமுன் சோகம்…!!!!

கம்போடியாவில் உள்ள நட்சத்திர விடுதி ர ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கியுள்ள பலரது நிலைமை தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எப்படி தீ விபத்து நடந்தது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

பயனர்களே…! இந்த போன்களில் நாளை முதல் வாட்ஸ் அப் இயங்காது….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்சாப் நிறுவனங்கள் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை. அந்த வகையில் நாளை […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்தடுத்து வரும் சிக்கல்!… சர்ச்சையில் இருந்து தப்பிக்குமா “பதான்” படம்?…. சென்சார் போர்டு புது அறிவுறுத்தல்…..!!!!!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “பதான்”. 4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து “பேஷரம் ரங்” எனும் பாடல் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பாடலில் நடிகை தீபிகா படுகோன் பிகினி உடையில் மிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகுமா…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? வெளியான தகவல்…!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வாரம் ஒற்றை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறுக்கமான உடை அணிய சொல்லி அறைந்த கணவர்… மாமியார் கொடுமை.. விவாகரத்து பெற்ற நடிகை பேச்சு..!!!

இறுக்கமாக உடை அணியச் சொல்லி தனது கணவர் அறைந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார். ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கரீனா கபூர். இவரின் சகோதரி கரிஷ்மா கபூர். இவரும் பிரபல நடிகையாக இருக்கும் நிலையில் தொழிலதிபரை திருமணம் செய்து சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்தும் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்ற நிலையில் கணவர், மாமியார் மீது வரதட்சனை வழக்கும் தொடுத்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த துயர சம்பவங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆனைமுத்துவின் பேரன் கத்துறேன்… தமிழக்தில் புரட்சி வரணும்…. சீமான் ஆவேச பேச்சு!!

நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி, எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க புரட்சி தமிழர் நிலத்தில் வரணும். அதுக்கு தான் இது. நான் ஆணைமுத்து இல்ல. அவனின் பேரன் கத்துறேன் இப்போ,  கவனிச்சிக்கணும். அதற்குப் பிறகு இந்த ஆட்சியாளர்களால் தவிர்க்க முடியவில்லை. 69 சதவீத இட ஒதுக்கீடு என்று ஆணை  வருது.  எப்ப வருது ? 90 இல் அவர் சட்டம் ஏற்றி  ஆணை போட்டுட்டாரு. […]

Categories
மாநில செய்திகள்

EB எண்-ஆதார் இணைப்பு: மின் வாரியங்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு…. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை தான் இந்த இணைப்பிற்கான இறுதி நாள் நாளை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான மக்கள் கூட்டம் மின்வாரியங்களில் கூடுகிறது. மேலும் இதனால் மக்கள் அசௌகரியங்களை சந்திப்பதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதால் தமிழக அரசு மின்வாரியங்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

அடக்கொடுமையே..! நிர்வாணமாக குளித்த மனைவியை புகைப்படம் எடுத்த கணவர்… வலுக்கும் கண்டனம்…!!!!

பிரபல நடிகையை நிர்வாணமாக கணவர் புகைப்படம் எடுத்திருக்கின்றார். பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அலெக்சாண்டரா டாடாரியா. இவரின் திரைப்படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. 36 வயதான இவர் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் தனது கணவருடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் இவர் நிர்வாணமாக நீச்சல் குளத்தில் குளிக்க அதை அவரது கணவர் புகைப்படம் எடுத்திருக்கின்றார். இதனை அலெக்ஸாண்ட்ரா […]

Categories
தேசிய செய்திகள்

சீட்டு பெல்ட், ஹெல்மெட்டு முக்கியம்…. இதை செய்யாததால் 16,397 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு (2021) சீட்டு பெல்ட் அணியாததால் 16,397 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 8,438 பேர் ஓட்டுநர்கள். மீதமுள்ள 7,959 பேர் பயணிகள் என மத்திய போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்கி 46,593 பேர் பலியாகி உள்ளனர். 39,763 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 4,12,432 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. இந்த விபத்துகளில் மொத்தம் 1,53,972 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து சாலை விபத்துகளில் 3,84,448 […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் இருந்து மேலும் ஆபத்தான மாறுபாடுகள்…. எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்…!!

BF-7 வைரஸ் மாறுபாட்டின் பரவலால், சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் ஒரு பதற்றம் உருவாகியுள்ளது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளனர். அதாவது சீனாவில் இருந்து மேலும் ஆபத்தான மாறுபாடுகள் வெளிவர வாய்ப்புள்ளதாக  எச்சரித்துள்ளார். அங்குள்ள ஜீரோ கோவிட் கொள்கை நீக்கப்பட்டதே அதற்குக் காரணம் எனவும், சீனாவின் முழு மக்களும் இப்போது ஒரே நேரத்தில் வைரஸுக்கு ஆளாகியிருப்பதால் அதிக மாறுபாடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 27ஆம் தேதி அஞ்சல் குறைகேட்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அஞ்சல் சரகத்தின் சார்பாக வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் உள்ள முதன்மை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறை கேட்பு முகாம் நடைபெறும். மக்கள் தங்கள் குறைகளை அஞ்சல் குறை கேட்டு மன்றத்தின் தலைவரான, தமிழ்நாடு சரக முதன்மை தலைமை அஞ்சல் அதிகாரியிடம் நேரடியாக அல்லது எம் விஜயலட்சுமி, உதவி இயக்குனர், முதன்மை தலைமை […]

Categories
மாநில செய்திகள்

கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது அறிவிப்பு…. விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 37 ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படுகிறது. தற்போது இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..இதற்காக சுமார் 3.8 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிப்பதற்கு https://tnrd.tn.gov.in என்ற இணையதள முகவரி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இணையதளத்திற்குள் நுழைவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் பயனர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு போட்டியிடும் கிராம ஊராட்சிகளை பட்டியலிட்டு ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள்

“உடனே இதை செய்யவும்” நாளையே கடைசி தேதி…. வருமானவரித்துறை அலெர்ட் அறிவிப்பு…!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு  நாளையுடன்  முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து டிச.31ம் தேதிக்குள் (நாளைக்குள்) தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“நான் 23 முறைக்கு மேல் காதலிச்சு இருக்கிறேன்”… ஓபனாக பேசிய பிரபல நடிகை..!!!

பிரபல நடிகை காதல் குறித்து பேசி உள்ளார். நடிகை ஷெனாஸ் டிரசரிவாலா மும்பையைச் சேர்ந்தவர். இவர் சென்ற 2001 ஆம் வருடம் வெளியான எடுருலேனி மனிஷி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானா.ர் இதன் பிறகு 2003 ஆம் வருடம் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் தொகுப்பாளராகவும் இருக்கின்றார். பயணத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார். மேலும் அதன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு…!!!

பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனைகலில் மாதம் தோறும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் பெறுபவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

தாயார் மரணம்: பிரதமர் மோடி விரைவு…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!!

தனது தாயார் உயிரிழந்ததை அடுத்து பிரதமர் மோடி கண்ணீர் மல்க உருக்கமாக ட்விட் செய்துள்ளார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு. கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை தனது தாயாரிடம் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தாயார் காலமானதை அடுத்து அவர் சற்றுநேரத்தில் அகமதாபாத் விரைகிறார்.

Categories
மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல் -பிலாஸ்பூர் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து பிலாஸ்பூர் வரை செல்லும் வாராந்திர ரயில் தற்காலிகமாக நாக்பூர் சந்திப்பில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஜனவரி 8ஆம் தேதி முதல் நின்று செல்லும் எனவும் பிலாஸ்பூரில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் நாக்பூருக்கு மாலை 3.24 மணிக்கு சென்றடையும். பின்னர் மறு மார்க்கமாக […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்…! சென்னை தீவுத்திடலில் இன்று(30.12.22) முதல் ஆரம்பம்…. மக்களே மறக்காம போங்க…!!!!

சென்னை தீவு திடலில் இன்று முதல் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கப்படுகிறது. மக்களை கவரும் விதமாக பொழுதுபோக்கு அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து 70 நாட்களுக்கு பொருட்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது சென்னை தீவு திடலில் 47வது சுற்றுலாத்தொழில் பொருட்காட்சி இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக சென்னை தீவுத்திடலில் சுற்றுலா […]

Categories
மாநில செய்திகள்

உஷாரா இருங்க…. அரசு பேருந்தில் இனி பெண்களை உரசினால் அலாரம் எழுப்பும் வசதி அறிமுகம்…. அரசு புதிய அதிரடி….!!!!

மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆண்கள் யாராவது தவறான கண்ணோட்டத்தில் பெண்கள் மீது உரசினால் பேருந்தில் உள்ள அவசர பொத்தானை அழுத்தி புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருதி சென்னையில் இயங்கும் சுமார் 1200 மாநகர பேருந்துகளில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் போது ஆண்கள் தங்களை உரசினால் அல்லது பாலியல் தொல்லை கொடுத்தால் இந்த அவசர பொத்தானை பெண்கள் அழுத்தலாம். […]

Categories
பல்சுவை

நாடு முழுவதும் ரீசார்ஜ் கட்டணம் திடீர் உயர்வு?….. ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் பிரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் பரிசீலித்து  வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் 99 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை 155 ரூபாயாக உயர்த்தியது. சோதனை ஓட்டமாக தொடரும் இதனை பிப்ரவரி மாதம் முதல் நாடு முழுவதும் அமல்படுத்த பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாருடா…! குஷியில் விஜய் செய்த காரியம்… உற்சாகத்தில் படக்குழு..!!!!

வாரிசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பட குழுவினருக்கு விஜய் பரிசு வழங்கியிருக்கின்றாராம். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.  இந்த நிலையில் இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான […]

Categories
மாநில செய்திகள்

“கரும்பு கொள்முதல்” வழிகாட்டு நெறிமுறைகள்…. வெளியிட்ட தமிழக அரசு…!!!!

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்தது. எனவே தொடர்ச்சியாக […]

Categories

Tech |