கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி வனச்சரகம் சந்திரன் ஏரி பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த குப்புராஜ், சந்திரன், மாது, தேவராஜ் ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரித்தபோது அவர்கள் சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த சாக்கு முட்டையில் 16 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்துள்ளது. இதனால் குப்புராஜ், மாது, சந்திரன், தேவராஜ் ஆகிய […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அட்லி. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]
தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மனதை வென்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் சாதனை புரிந்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி இந்த வருடம் ரிலீஸ் ஆன திரைப் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் வேட்டை நடத்திய படங்களில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் […]
அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் ஒன்றுதான் பிஎப் ஆகும். பிஎப் வாயிலாக அரசு வேலை செய்யும் மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேமிப்பு தொகையை ஓய்வுகாலத்தில் பயன்படுத்தலாம். EPF-ல் பங்களிக்கும் அனைத்து பணியாளர்களும் பல முறைகளைப் பயன்படுத்தி தங்களது கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். கணக்கிலுள்ள நிலுவையை கண்டறிய, ஆண்டின் இறுதியில் பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி (EPF) விவரங்களை பகிர்ந்துகொள்வதற்காக அவர்கள் […]
தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல்பிரீத் சிங். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK,ஸ்பைடர் போன்ற படங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு அறிமுகமானார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் அவர் நடித்திருக்கிறார். இப்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் ரகுல்பிரீத் சிங் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரகுல்பிரீத் சிங் அளித்த பேட்டியில் “இந்தியன் 2ல் 90 […]
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (17.12.2022) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாட வேலையை பின்பற்றி முழு வேலை நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேபோல மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை […]
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த தொடர் வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்குப் பிறகு கைதி 2 மற்றும் விக்ரம் 2 படங்களையும் லோகேஷ் இயக்க இருக்கிறார். இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தன்னுடைய மிரட்டலான […]
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பாவனா. இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். நடிகை பாவனா மலையாள சினிமாவில் தற்போது நடித்துள்ள ‘என்றாகாக்காக்கொரு பிரேமண்டார்ந்து’ என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை பாவனா ஒரு பேட்டியில் தனக்கு எதிராக சமூக வலை தளங்களில் தொடர்ந்து அவதூறு பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாவனா கூறியதாவது, எனக்கு மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே […]
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நாடு முழுவதும் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் புதிய வேக வரம்பு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். அதன் பிறகு சர்வதேச விதிகளின் அடிப்படையிலும், மாநில அரசுகளின் ஆலோசனையின் பெயரிலும் இருவழிச்சாலை மற்றும் நான்கு வழி சாலைகளில் புதிய வேகவரம்பு நிர்ணயிக்கப்படும். சர்வதேச அளவில் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதன்படி ஒரு […]
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ( IRCTC) சார்பாக இயங்கிவந்த “பாரத் தர்ஷன்” சுற்றுலா ரயில் திட்டம் சென்ற 2019ம் வருடம் ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து புது கொள்கை மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய “பாரத் கவுரவ்” என்ற புது சுற்றுலா ரயில் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் துவங்கப்பட்டது. எனினும் பழைய திட்டத்தை விடவும் இத்திட்டத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதனால் நியாயமான கட்டணத்தில் பயணிகள் […]
உலக அளவில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய நடிகர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் நடப்பாண்டிலும் அதிகம் தேடப்பட்ட 100 பிரபலங்களின் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் 5 நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி நடிகர்கள் விஜய், அஜித், ரஜினிகாந்த், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் அதிகம் தேடப்பட்டவர்கள் லிஸ்டில் நடிகர் விஜய்க்கு 15-வது இடம் கிடைத்துள்ளது. இதேப்போன்று […]
பாலஸ்தீனத்தில் உள்ள இயேசு நாதரின் பிறப்பிடமான பெத்லகேம் நகரில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து இல்லை. இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இந்த வருடம் இயேசுநாதர் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அங்கு உலகமெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். இதனால் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. இது குறித்து அந்த நகர ஓட்டல் அதிபர்கள் சங்க தலைவர் எலியாஸ் அர்ஜா கூறியதாவது, “கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா […]
எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் இர்குட்ஸ் பிராந்தியத்தில் உள்ள அங்கார்ஸ்க் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் அங்கார் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் ஆலை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று திடீரென இந்த ஆலையில் தீ பற்றி எரிந்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு […]
விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். சென்ற 1971 ஆம் வருடம் பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் அடிப்படையில் ஆண்டுதோறும் டிச..16 ஆம் தேதி விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் தன் சுட்டுரை பதிவில், “1971ல் நடந்த போரில் இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த துணிச்சல்மிக்க அனைத்து ஆயுதப்படை வீரர்களுக்கும் விஜய் திவாஸான இன்று மரியாதை செலுத்துகிறேன். நாட்டைப் பாதுகாப்பாக வைத்து இருப்பதில் […]
தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மேற்குவங்கம், ஜாா்க்கண்ட் போன்ற பா.ஜ.க ஆட்சி அல்லாத 6 மாநிலங்கள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) குறைக்கவில்லை. ஆகவே இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது என பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவா் இவ்வாறு கூறினார். இதற்கிடையில் சமையல் எரிவாயு விற்பனையால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதற்காக […]
பணி நேரத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜன்ம பூமி என்னும் பகுதியில் இந்து மத கடவுள் ராமரின் வழிபாட்டு தளம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் கான்ஸ்டபிள் பணி நேரத்தின்போது போஜ்புரி பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதில் 3 கான்ஸ்டபிள் நடனமாட அதை மற்றொரு பெண் கான்ஸ்டபிள் வீடியோ […]
சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை (17.12.2022) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9ஆம் தேதி விட்ட விடுமுறையை ஈடு செய்ய வெள்ளி கிழமை அட்டவணைப்படி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக் கிழமை பாடவேளையை பின்பற்றி இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019 -ஆம் வருடம் இறுதியில் சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளை எல்லாம் தவிக்க வைத்தது. தற்போது அமெரிக்கா, இந்தியா என பெரும் பாதிப்புக்கு ஆளான நாடுகள் எல்லாம் பெருமளவில் கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்தி உள்ளது. இந்நிலையில் சீனாவில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை கொண்டு வருவதற்காக ஊரடங்கு பொது முடக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இது ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு பெரும் விரக்தியை ஏற்படுத்தியது. […]
மாநிலங்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் “கடந்த 5 வருடங்களில் 19 நாடுகளின் 177 செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (இஸ்ரோ) வா்த்தக ரீதியாக வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். இதன் வாயிலாக 9.40 கோடி டாலரும் (சுமாா் ரூ.778 கோடி), 4.60 கோடி யூரோவும் (சுமாா் ரூ.407 கோடி) அந்நியச் செலாவணியாகக் கிடைத்திருக்கிறது. விண்வெளி குறித்த நடவடிக்கைகளில் தனியாா் நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் […]
தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளைப் பெற அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை மக்கள் தர வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் பலன்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என தமிழக நிதித்துறை சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் தர வேண்டும். ஆதார் ஒதுக்கப்படும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கும் அரசின் பலன்கள் வழங்கப்படும் என தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் […]
வனத்துறை அதிகாரி பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் அரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் அடிக்கடி வனவிலங்கு தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் தற்போது ஒரு வெள்ளை சிங்க குட்டி தனது குடும்பத்துடன் காட்டில் உலா வரும் ஒரு சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவின் தலைப்பில் கூறியதாவது, “இதோ உங்களுக்கான ஒரு வெள்ளை சிங்க குட்டி. உலகில் […]
பொருளாதாரம், கல்வி, மருத்துவம், ஆளுமை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களின்பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்தியா டுடே ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் குஜராத் 4வது இடத்தில் உள்ளது. நம்பர்-1 CM என்பதை விட நம்பர்-1 TN என்பதில் தான் பெருமை என சமீபத்தில் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இரண்டிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி இருப்பதையும், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலத்திலும் தமிழகம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் விஜய் சமீபத்தில் பனையூரில் ரசிகர்களை சந்தித்து பேசியபோது மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தன்னுடைய கைகளில் தூக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலான நிலையில் வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காத்தான் விஜய் அப்படி செய்ததாக பலரும் விமர்சித்தார்கள். ஆனால் விஜயின் ரசிகர்கள் பப்ளிசிட்டிக்காக தளபதி அப்படி செய்யவில்லை ரசிகர்களின் […]
நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு முன்னணியான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஸ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த தம்பதியினருக்கு ராதா என்ற பெண்குழந்தை இருக்கிறது. இதற்கிடையில் ஸ்ரேயா தான் கர்ப்பமாக இருந்தது குறித்து வெளியில் அறிவிக்கவில்லை. பிறகு திடீரென்று ஒருநாள் தனக்கு பெண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தைக்கு ராதா என பெயர் சூட்டியிருக்கிறோம் என […]
தமிழ் சினிமாவில் வருடம் தோறும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில படங்கள் மட்டும் தான் மக்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. அதன் பிறகு பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கும். ஆனால் சில சமயங்களில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் கூட மக்கள் மனதை கவராமல் தோல்வியை சந்தித்து விடும். இந்நிலையில் 2022-ம் ஆண்டில் தோல்வியை சந்தித்த முன்னணி ஹீரோக்களின் […]
அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்கான மறு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24ஆம் தேதி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ஆம் தேதி […]
எஸ்ஜெவிஎன் நிறுவனத்தில் காலியாகவுள்ள அசிஸ்டன்ட் கிராஜுவேட், டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Satluj Jal Vidyut Nigam Limited பதவி பெயர்: Assistant Graduate, Technician Apprentice மொத்த காலியிடம்: 300 கல்வித்தகுதி: Bachelor degree in Engineering/ Technology, ITI ஊக்கத்தொகை: ரூ.10,000 வயதுவரம்பு: 18 – 30 Years கடைசி தேதி: 08.01.2023 கூடுதல் விவரம் அறிய: www.sjvn.nic.in https://sjvnindia.com/UploadFiles/JobUploadedFile/1441/Detailed%20Advt.%20108-
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஜே இ இ மெயின் முதற்கட்ட தேர்வு ஜனவரி 24ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் ஆறாம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது . 2023-2024ஆம் கல்வியாண்டில் சில முக்கிய தேர்வுகளுக்கான காலண்டரை தேசிய […]
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவர் மகாலட்சுமி. இவர் நிறைய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் மூலம் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சமீபத்தில் லிப்ரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தரை இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை மகாலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் அல்வாவை ப்ரொமோட் […]
தமிழகத்தில் பால் விலையை தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலை அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட், தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பால் பொருட்களின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை 580 ரூபாயிலிருந்து […]
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து போலி இணையதளம் பதிவு கட்டணம் வசூல் செய்கின்றது. கட்டணம் செலுத்திய பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது cbse.gov.in என்ற இணையதளம் தான் அதிகாரபூர்வ இணையதளமாகும். பின்வரும் https://cbsegovt.com என்ற இணையத்தளம் போலியானது என்று PIB ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மாணவர்கள் பணம் கொடுத்து அட்மிஷன் பேப்பர்களை பெற சொல்வது எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. […]
பிக்பாஸ் 6-வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே துவங்கி 60 நாட்களை தாண்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தற்போது வரை வீட்டிலிருந்து 10 பேர் வெளியேறி இருக்கின்றனர். இதற்கிடையில் சென்ற வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது. அப்போது ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வெளியேறினர். இதனிடையில் ஆயிஷா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வரும்போது ஷிவின், சீக்கிரமாக இன்விடேஷன் ரெடிபண்ணு, பிரியாணி போடு, குட்நியூஸ் சொல்லு என கேட்டிருந்தார். […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி பெண்களுக்கு இலவச பேருந்து, நகை கடன் தள்ளுபடி, கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில் […]
சென்னையில் இன்று 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் சர்வதேச மற்றும் இந்திய அளவிலான சிறப்பு படங்கள் திரையிடப்படும். அதன்படி 51 நாடுகளில் இருந்து வந்த 102 படங்கள் திரையிடப்பட இருக்கிறது. இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வாரிசு என்ற […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஒட்டி தனியார் இ-சேவை மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டு விண்ணப்பிக்க வந்த மூதாட்டிக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் காமேஷ் பாலாஜி என்பவர் பெயரில் போலியாக கையெழுத்து போட்டு, போலி முத்திரையை பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் காமேஷ் பாலாஜி தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இ-சேவை மையத்தில் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 20-வது தெருவில் அங்கம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் கார்த்திகேயனின் ஏ.டி.எம் கார்டை எடுத்துக்கொண்டு பணம் எடுப்பதற்காக எம்.கே.பி நகர் 1-வது தெருவில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் ஏ.டி.எம் கார்டை சொருகி பணம் எடுக்க முயன்ற போது பணம் வரவில்லை. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் அங்கம்மாள் உதவி கேட்டுள்ளார். அவரும் ஏ.டி.எம் கார்டை வாங்கி எந்திரத்தில் […]
தமிழகத்தில் கூடிய விரைவில் வயது மூத்தோருக்கான தனி சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் பன்னோக்கு மருத்துவமனை கட்டும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் கட்டப்பட்டு வரும் புதிய மனநல மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். இந்த புதிய […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து விருதாச்சலம் மார்க்கமாக செல்லும் தண்டவாளத்தில் ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மர்ம நபர்கள் யாரோ சிறுவத்தூர் ரயில் நிலையம் அருகே ஈரப்பதத்துடன் உள்ள களிமண்ணை கட்டியாக உருட்டி தண்டவாளத்தில் வைத்துள்ளனர். இதனால் டிராலி வழுக்கிய படி நீண்ட தூரம் இழுத்து சென்று விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் தலைமையிலான போலீசார் தண்டவாளத்தை ஒட்டி […]
இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை ஸ்விகி நிறுவனமானது வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணி இருக்கிறது. அதன்படி ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.25 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இருக்கிறது. அத்துடன் மசால் தோசை, சிக்கன் ப்ரைடுரைஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. மேலும் வெளிநாட்டு […]
ஒவ்வொரு வருடத்தை போன்று இந்த முறையும் ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒவ்வொரு வருடமும் 2 முறை அதிகரிக்கப்படுகிறது. அதாவது, முதல் முறை ஜனவரி மாதத்திலும், 2வது ஜூலையிலும் டிஏ அதிகரிப்பு வழங்கபடுகிறது. முன்னதாக ஜூலை மாத அகவிலைப்படி செப்டம்பர் 2022ல் அதிகரிக்கப்பட்டது. தற்போது அடுத்த அதிகரிப்பு குறித்த எதிர்பார்பானது அதிகரித்து உள்ளது. இது 2023ம் வருடம் ஜனவரி மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து சமீபத்தில் இவர் தனது ரசிகர்களை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார். கருப்பு நிற பேண்ட் சட்டையில் ஸ்டைலாக வந்திருந்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மொளசி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கர்(28), நந்தகோபால்(24) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் சங்கர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். நந்தகோபால் பெருந்துறை பவானி ரோட்டில் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று சங்கர் தனது தம்பியை தேடி பெருந்துறைக்கு சென்றார். இந்நிலையில் கடைக்குள் சென்ற சங்கர் திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நந்த கோபால் தனது அண்ணனை மீட்டு பெருந்துறை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் ரீத்தாபுரம் பகுதியில் வர்கீஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வர்கீஸ் தனது மகள் ஆஷா, பேத்தி சரியா ஆகியோருடன் திங்கள்சந்தையில் இருந்து காரில் அழகிய மண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் நெய்யூர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் 25 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் பாய்ந்து தண்டவாளத்தில் கிடந்தது. அந்த சமயம் நாகர்கோவில் நோக்கி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் டார்ச்லைட் அடித்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கற்காடு சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளங்கோ மற்றும் அபிலாஷ் என்பது தெரியவந்தது. இருவரும் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்துள்ளனர். இருவர் மீதும் காவல் நிலையங்களில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பயங்குளம் பகுதியில் ரவீந்திரன்-ராஜகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஜிதா(29) என்ற மகளும், அஜின்(27) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் அஜிதா நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அஜின் தனது அக்காவை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தேங்காப்பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முன்சிறை பகுதியில் சென்ற போது தனது தாய் ராஜகுமாரி கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததை அஜின் பார்த்தார். இதனால் […]
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக்கடனில் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி 0.15 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை வீட்டு கடன் வட்டியில் தள்ளுபடி வழங்கப்படும். அதன் பிறகு எஸ்பிஐ வங்கியில் பொதுவாக வீட்டு கடன்களுக்கு 8.55 சதவீதம் முதல் 9.05 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால் தற்போது சிறப்பு சலுகையாக வட்டி விகிதமானது 8.40% முதல் 9.05 சதவீதம் […]
நண்பரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு மூர்த்தி என்ற மகன் உள்ளார் இந்நிலையில் மூர்த்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நண்பர்களான விக்னேஷ், செல்வின், யுவராஜன் ஆகியோர் கஞ்சா வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு மூர்த்தி மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த நண்பர்கள் அவரை அடித்து உதைத்தனர். மேலும் நண்பர்கள் மூர்த்தியின் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை தொடர்ந்து பெய்ததால் சிவகாசி பஜார் பகுதியில் பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். இதனையடுத்து பெரியகுளம், சிறுகுளம் போன்ற கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் நகர் பகுதிகளில் இருக்கும் கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து சூரியகாந்தி, பருத்தி, […]