CBSE மாணவர்களுக்கு மீண்டும் பழைய முறையில் நடப்பு வருடத்துக்கான (2022-2023) பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நடப்பு வருடத்துக்கான CBSE வாரிய தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் துவங்கவும் மற்றும் ஜனவரி 1ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகளை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் CBSE வாரிய தேர்வர்களிடமிருந்து பதிவுக்கட்டணம் வசூலிக்கும் போலி இணையதளம் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து PIB கூறியிருப்பதாவது, https://cbsegovt.com என்ற […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே நெடுகுளா கிராமத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இலையில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவின் படி, துணை தாசில்தார் சதீஷ் நாயக் தலைமையில் வருவாய் அலுவலர் சகுந்தலா தேவி உட்பட அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 15 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர். இதேபோல் மற்றொரு கடையில் இருந்தும் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தகம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சத்திய செல்வன்(35) தஞ்சாவூரில் இருக்கும் சலூன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை சத்திய செல்வன் கந்தர்வகோட்டை தஞ்சை சாலையில் டாஸ்மாக் கடைக்காரர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சத்திய செல்வனின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் செல்வராஜ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரியின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சத்யா, செல்வராஜுக்கு 25 ஆயிரம் […]
திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலையும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தொடர் உழைப்பின் பலனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய இடம் பிடித்தவர் பவித்ரா ஜனனி. இதையடுத்து இவர் மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி ஆகிய சீரியலில் நடித்து இப்போது பிரபலமாகி உள்ளார். இவரது சீரியல்கள் சூப்பர் ஹிட் என்றே கூறவேண்டும். இந்த நிலையில் தற்போது வினோத்பாபு நாயகனாக நடிக்கும் சீரியலில் பவித்ரா ஜனனி கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக […]
குருவிக்காரர் சமுதாயத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. அரசியல் வித்தியாசங்களை கடந்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறி உள்ளது. அனைவருமே ஒருமனதாக ஆதரவளித்து கட்சி வித்தியாசங்களை கடந்து, மாநில வித்தியாசங்களை கடந்து இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு மற்றும் மட்டுமல்ல அது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, பல்வேறு கட்சிகளை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் இந்த விவாதத்திலே பங்கேற்று பழங்குடியின பட்டியலை […]
நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துறைவாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறை அமைச்சர் கூறியதாவது, தற்போது ரயில்வேயில் ஒரு கிலோ மீட்டர் செலவானது சுமார் 1.16 ரூபாயாக உள்ளது. ஆனால் பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு […]
இந்தியாவில் 5 ஜி சேவையானது அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. நவம்பர் 26 ஆம் தேதி நிலவரப்படி 14 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜிசேவை வழங்கப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. விரைவில் பிஎஸ்என்எல்லில் 5ஜி சேவை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் 5 ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலில் 30 குஜராத்தில் மட்டும் உள்ளன. குஜராத்தின் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேதலோடை உயர்நிலைப் பள்ளியில் ராபர்ட் ஜெயக்குமார் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பெலிசியா மேக்டலின் தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து பெலிசியா வழக்கம் போல பள்ளி பேருந்தில் ரோமன் சர்ச் பகுதியில் இறங்கியுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு வராததால் பெற்றோர் பெலிசியாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலாததால் ராபர்ட் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீன்வளத்துறை ஆய்வாளர்கள் சரவணன் கணேசன், சரவணன் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேல்முருகன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் திருப்பத்தூர் மீன் மார்க்கெட் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 கடைகளில் கெட்டுப்போன மற்றும் தரம் குறைந்த மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 300 கிலோ கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பை கிடங்கில் குழிதோண்டி புதைத்தனர். மேலும் 3 […]
கள்ளக்குறிச்சி மனைவி ஸ்ரீமதி வைத்திருந்த செல்போன்னை காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் அமர்வில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மொத்தம் 21 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்ட நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் வெளியேறி 11 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் அசீமை சீன் கிரியேட் செய்யாமல் உன் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பூ. 80களில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர். சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் அரசியலில் குதித்தார். மறுபக்கம் தனது கணவர் சுந்தர் சி மற்றும் 2 பெண் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் வாரிசு திரைப்படத்தில் கூட நடித்து முடித்துள்ளார். […]
தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். மக்களால் செல்லமாக கேப்டன் விஜயகாந்த் என்று அழைக்கப் பட்டார். சினிமாவில் படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ அப்படியே அரசியலிலும் நன்றாக செயல்பட்டு வந்து கொண்டிருந்தார். ஆனால் இடையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சினை காரணமாக வீட்டிலேயே முடங்கினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எப்பொழுதும் மக்களுக்காக குரல் கொடுக்கும் விஜயகாந்த் இப்பொழுதெல்லாம் மக்களை சந்திப்பதே கிடையாது. கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு […]
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என திமுக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஒன்றரை வருடம் கழித்து தற்போது உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து பலரும் உதயநிதிக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை […]
ஆவின் நிறுவனமானது பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக அவர்களுடைய நலனுக்காகவும் பால் ஆலையை சுற்றியுள்ள கிராம விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து அதை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறது. இந்த பால் விலையானது தனியார் பால் பாக்கெட் விலையை காட்டிலும் குறைவானது. இதைத் தவிர பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளையும் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் […]
பிராந்திய வாரியாக பிரஸ் எம்ப்ளம் பிரச்சாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா 39 பேரும், ஐரோப்பாவில் 37 பேரும், ஆசியா 30 பேரும், ஆப்பிரிக்கா 7 பேரும் மற்றும் வட அமெரிக்காவில் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். 1992 முதல் 1999 -ஆம் வருடம் வரை முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடைபெற்ற போர்களுக்கு பின் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பில் ஐரோப்பா மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளது. பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்ய […]
ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியை 49 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜகநாத் கோடா என்ற இளைஞர் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் அவரை குஜராத்திற்கு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர் 49 முறை குத்தி கொலை செய்துவிட்டு உடலை யாருக்கும் தெரியாத இடத்தில் தூக்கி […]
உக்ரைன் மீது ரஷ்யாவின் போரானது கடந்த 10 மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோரி கேமரோவோ ஓப்லாஸ்ட் பகுதியில் உள்ள ரஷ்ய படை குழுவின் தளபதி செர்ஜி சிவிலியோவ் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதாவது உக்ரைனில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குமாறு கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நான் ஸ்டாவ்ரோபோல் நகரின் 274 -ஆவது படை பிரிவில் போர் பயிற்சியாளராக இருக்கின்றேன். இந்நிலையில் கெமரோவோ […]
தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]
தமிழக அரசு வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. இதுவரை அரசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2022-ம் வருடம் திமுக தலைமையிலான அரசு பணம் எதுவும் வழங்காமல் 21 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை மட்டும் வழங்கியது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. […]
செங்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் வைத்து நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆரம்பித்ததும் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்துவிட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதையடுத்து திமுக உறுப்பினா்கள் ரஹீம், இசக்கிதுரை பாண்டியன், மேரி, பேபிரெசவுபாத்திமா, இசக்கியம்மாள் மணிகண்டன், சந்திரா, சரவண கார்த்திகை, காங்கிரஸ் உறுப்பினா் முருகையா போன்றோர் எங்களது வார்டு பிரச்சனையை கேட்காமல் தலைவா் கூட்டத்தை எப்படி முடித்துவிட்டு செல்லலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின் 11-வது […]
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் கௌரவ விரிவுரையாளர்கள் அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வருடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் அனைத்து அரசு கல்லூரிகளிலும் காலியாக உள்ள 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் அரசு மற்றும் கலை கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் […]
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி காரணமாக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி கோரி இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து காந்தி சிலையை இந்த மாத இறுதிக்குள் இடமாற்றம் செய்ய மெட்ரோ ரயில் நிர்வாக முடிவெடுத்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 90 சதவீத பணிகள் […]
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகின்றது. இன்று மூன்றாவது முறையாக வழக்கு விசாரணை ஏதும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வழக்கை ஒத்திவைக்க கேட்டிருந்தார். அதற்கு பிறகு அலுவல் தினத்தில் கடைசி வழக்காகப்பட்டியிடப்படும் நேரமின்மை காரணமாக வேறொருநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீணா கபூர் என்ற இந்தி நடிகை அவரின் மகன் சச்சின் கபூரால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டதாக பல ஊடகங்களில் செய்தி வெளியானது. உயிரிழந்த நடிகையின் உடல் மும்பையில் இருந்து 80 கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு காட்டில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த நடிகை தான் உயிருடன் இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தன்னை பற்றி உறுதி செய்யப்படாத வதந்தி […]
இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் மாணவிகள் சேர்க்கை 2021-22ம் வருடத்தில் 20% ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார். இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று (டிச..14) மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நாடு முழுவதும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பை தொடரும் மாணவிகளை ஊக்குவிக்க பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மாணவிகளுக்கென சிறப்பு முதுகலை உதவித்தொகைகளை வழங்குகிறது. இதேபோன்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தொழில்நுட்பக் கல்வியில் […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி மதீனா நகர் தெற்கு தெருவில் மதார் முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது ரிக்காஸ்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் தங்கி உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உணவை சப்ளை செய்துவிட்டு முகமது தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பார்வதிபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது அபிலாஷ் என்பவர் ஓட்டி […]
மக்கள் நலவாழ்வுதுறை மா. சுப்ரமணியன் மதுராந்தகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது நேரடியாக அங்கிருந்து மருத்துவர்கள் அறைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியில் இருந்த மருத்துவர்களிடம் தகவல்களை கேட்டறிந்தார். அதன் பின் பணிக்கு வராத மருத்துவர்களின் விவரங்களையும் கேட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 4 மருத்துவர்களில் ஒருவரும் மருத்துவமனையில் பணியில் இல்லை. இதனால் பணி நேரத்தில் மருத்துவமனைக்கு வராத 4 மருத்துவர்களையும் அமைச்சர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்ய […]
தேனி மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்ப் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து குமுளி- திண்டுக்கல் இடையே அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று காலை முருகேசன் என்பவர் குமுளியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்தை இயக்கி சென்றுள்ளார். அப்போது மழை பெய்ததால் பேருந்துக்குள் தண்ணீர் ஒழுகி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் முருகேசன் அரசு பேருந்தை நேராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து சேதமடைந்த பேருந்தை இயக்குவதால் பயணிகளின் […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பட்டதாரி வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பெயரில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பேசிய நபர் பட்டதாரி வாலிபர் குறித்த தகவல்களை கேட்டு கொண்டார். அப்போது தான் பெங்களூரு விமான நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த வாலிபர் மறுமுனையில் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்சத்து […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லம் பகுதியில் ரவி- உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் வர்ஷா(20) தஞ்சை மன்னர் சரபோஜி கலைக்கல்லூரியில் 3- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வர்ஷா கடந்த 3-ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம் சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில் வர்ஷா முதலிடம் பிடித்தார். மேலும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற […]
வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பிள்ளை தெருவில் இருக்கும் தனியார் பள்ளியில் பின்புறம் விவசாய கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமாட்சிபுரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் காமாட்சிபுரத்திலிருந்து தினமும் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு நடந்து சென்றனர். அப்போது உள்ளம் என்ற இடத்தில் சென்ற போது மாணவ- மாணவிகள் உள்பட 30 பேரை மரத்தில் இருந்த கதண்டுகள் விரட்டி கடித்தது. இதனால் காயமடைந்த 30 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]
மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கூட்டுக்கல் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்ணு(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டத்தில் டிப்ளமோ படித்து வந்த நிலையில் பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு கோவையில் இருக்கும் கல்லூரியில் சேர்ந்தார். இந்நிலையில் விஷ்ணுவின் தாய் கீழே தவறி விழுந்ததால் கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் விஷ்ணுவின் கல்லூரி கட்டணத்தை செலுத்த இயலாததால் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தில் இருக்கும் கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அதன்படி பார்வதிபுரத்தில் இருக்கும் ஒரு சங்க அலுவலகத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது சங்க அலுவலகத்திற்குள் முருகன் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை வழிபட அனுமதி வழங்க கோரி சிலை வைத்தவர்கள் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள பரித்பூர் பகுதியில் குடிபோதையில் 2 நபர்கள் நாய்க் குட்டிகளின் காதுகள் மற்றும் வால்களை வெட்டி மதுபானத்துடன் சாப்பிட்டதாக பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பிஎஃப்ஏ) மீட்புப் பொறுப்பாளர் தீரஜ் பதக் என்பவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “பரித்பூரில் வசிக்கும் முகேஷ் வால்மீகி என்பவர் தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது போதை தலைக்கேறியதால் இருவரும், அங்கே இருந்த 2 நாய்க் குட்டிகளின் காதுகள் மற்றும் வாலை வெட்டி மதுகுடிக்கும் போது சைட்டிஷ்ஷாக சாப்பிட்டு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மழுவன்சேரி பகுதியில் மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மதுசூதனன் தோலடி சோதனை சாவடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது செருவல்லூர் தேவிகோடு பகுதியை சேர்ந்த திலீப்குமார்(39) என்பவர் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்துள்ளார். மேலும் கத்தியை காட்டி திலீப் குமார் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுசூதனன் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]
பிரபல நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு 5 நாளில் 3 அதிபர்கள் மாறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோ காஸ்டிலோ வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார். ஆனால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோ காஸ்டிலோ கூறியதாவது, “நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்படும். […]
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் தரவரிசையில் அதிரடியாக முன்னேற்றம் கண்டுள்ளார் இந்திய வீரர் இஷான் கிஷன்.. இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. […]
இந்தியாவின் புல்லட் ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பதில் அளித்தார். அதாவது, சென்ற 6 மாதங்களில் வந்தே பாரத் ரயிலானது 68 முறை விலங்குகள் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் ஒரு முறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். நம் நாட்டில் பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், வந்தேபாரத் உட்பட 20-க்கும் அதிகமான ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. […]
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போதைய காலகட்டத்தில் அதிக அளவில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர். இவர்களை குழந்தை இல்லாதவர்கள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். அதேபோல் தற்போது 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை தற்காலிகமாக தத்து கொடுக்கும் பராமரிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளை அவர்கள் 18 வயது வரை அல்லது வாழ்நாள் முழுவதும் தங்களுடன் […]
அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நமது பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்க நல்ல திறமையான ஆசிரியர்கள் தேவை. எனவே தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பி.ஏ., எம்.ஏ ஆகிய பட்டப்படிப்புகளை தமிழில் படித்திருக்க வேண்டும். அதில் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண் நல்லது அதற்கு இணையான கிரேடு இருக்க வேண்டும். மேலும் […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், நடிகைகளின் பின்னாலே சுத்தி கொண்டிருந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரை போன உதயநிதி, இன்னைக்கு தமிழ்நாட்டின் உடைய அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் நாங்கள் கேட்போம். நயன்தாராக்கு போயி பீடிங் பாட்டில் வாங்கி கொடு. இரண்டு குழந்தை உள்ளது. நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டடும். ஸ்டாலின் காலை நக்கி குடிக்கிறார்களே இவங்க […]
பிரபல அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள கோயம்பேட்டில் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும். இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு பணி தொடங்கியது. தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார். பின்னர் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் புரட்சித் தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தி, எடப்பாடி அண்ணனோடு தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், அதே போன்று கழக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழகத்திலேயே பல்வேறு பொறுப்புகள் வகிக்கின்றவர்கள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அத்தனை பேருமே ஒன்றுகூடி நம்முடைய பொன்மனச் செம்மலுக்கு, இதய தெய்வத்திற்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சிக்கு ( 10.30 மணியிலிருந்து 11.30 […]
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே பகுதியில் இந்திய சீன எல்லையில் சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை அறிந்த இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்து சீன வீரர்களை பின்வாங்க வைத்ததில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சமீபத்திய […]
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், சின்னமனூர் உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழையால் சுருளி அருவி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் நேற்று காலை அருவியில் குளிக்க சென்ற போது வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றுள்ளனர். மேலும் தொடர் கனமழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோசடிக்கு காரணமானவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கும்பல் எம்பிஎப் என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமான மக்கள் அந்த செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தனர். ஆனால் மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் செயலியை செயலிழக்கச் செய்துவிட்டு தப்பித்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். […]