பஞ்சாப் மாநிலத்தில் டிச..15 இன்று முதல் ஜன்..15 வரை 1 மாதத்துக்கு விவசாயிகளுக்கு அனைத்து சுங்கச்சாவடிகளையும் இலவசமாக்க கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது என மாநில பொதுச் செயலாளரான சர்வான்சிங் பாந்தர் தெரிவித்து உள்ளார். விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) பிரச்சனைகளில் மத்திய-மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய சர்வான்சிங் பந்தேர், இன்று முதல் ஜனவரி 15 வரை சுங்கச்சாவடிகளை இலவசமாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். காலை 11 மணி முதல் மதியம் […]
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். அவர் பேசியது கேட்கவே மிகவும் அருவருப்பாக இருந்த நிலையில், அவர் மீது திமுகவினர் மூலம் புகார் கொடுக்கப்படும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் மோசமாக ஒரு அமைச்சராக இருந்தவர் இப்படி எல்லாம் பேசுவாரா ? என்று முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு தமிழக முதல்வரின் குடும்பத்தை.. முதலமைச்சர் […]
டெல்லியை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் (26) என்னும் இளைஞர் வசித்து வருகிறார். அமெரிக்க சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இவர் எப்படியாவது அமெரிக்கவாசி ஆகிவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரர்கள் உயிரிழந்துவிட்டனர். அதனால் நான் அவர்களின் இறுதி சடங்கிற்கு செல்ல வேண்டும் என விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். மேலும் இதற்காக போலி ஆவணங்களை தயார் செய்து இருக்கிறார். இவர் போலி ஆவணங்களை கொண்டு விசாவிற்கு விண்ணப்பித்ததை அமெரிக்க தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. தமிழக்த்திலும், புதுச்சேரியிலும் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சூறைக் காற்று வீசும் […]
வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 404 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 1: 2 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இருக்கும் ஜாஹுர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று காலை 9 மணி அளவில் தொடங்கி […]
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், மற்றும் திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வேலை செய்வதற்கு வசதியாக ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்கள் அல்லது தொழில்நுட்ப ஆலோசனை குழு உறுப்பினர்கள், பண்ணை சார் மற்றும் பண்ணை சார துறைகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் கல்வித் தகுதி, அனுபவம் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையைச் சேர்ந்த வினோத், காமராஜ் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தி பட்டினத்தை சேர்ந்த வெங்கடாசலம் மற்றும் அவரது நண்பர்கள் கிருஷ்ண பிரகாஷ், சங்கர் பாபு ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய வினோத், காமராஜ் அவர்களிடம் ரூ.3 1/2 கோடி வரை கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் எந்தவிதமான லாபத் தொகை மட்டுமல்லாமல் அசல் தொகையும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வினோத்குமார் இயக்க ராணா புரோடக்ஷன் சார்பாக ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் நிலையில் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது நடிகர் விஷாலிடம் பிரபல ஊடகம் […]
உலக அளவில் நான்கில் ஒரு பங்கு இந்திய பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனாலும் இதற்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்கள்தான் தயாரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு டோஸ்க்கு அதன் விலை 4,000 ரூபாய் ஆகும். இந்நிலையில் தற்போது “செல்வோ வேக்” எனும் தடுப்பூசி முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த […]
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சு திரிபாதி (38) நேற்று (டிச.14) சக்ரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது காரை முகமூடி அணிந்துவந்த சிலர் சுற்றிவளைத்தனர். அதன்பின் அவர்கள் கார் ஓட்டிவந்த சஞ்சு திரிபாதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் சஞ்சு திரிபாதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கிடந்த 7 தோட்டா உறைகளை கைப்பற்றியுள்ளனர். மேலும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், […]
விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் உள்ள மெக்லாரன் காரை ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் வாங்கி இருக்கிறார். விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் உள்ள மெக்லாரன் காரை, ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் வாங்கி இருக்கிறார். அதாவது, தெலங்கானா ஹைதராபாத்தைச் சேர்ந்த நசீர்கான் என்ற அந்த தொழில் அதிபர் மெக்லாரன் நிறுவனத்தின் 765 எல்.டி ஸ்பைடர் என்ற ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி உள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். நம் நாட்டில் […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், நடிகைகளின் பின்னாலே சுத்தி கொண்டிருந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரை போன உதயநிதி, இன்னைக்கு தமிழ்நாட்டின் உடைய அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் நாங்கள் கேட்போம். நயன்தாராக்கு போயி பீடிங் பாட்டில் வாங்கி கொடு. இரண்டு குழந்தை உள்ளது. நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டடும். ஸ்டாலின் காலை நக்கி குடிக்கிறார்களே இவங்க […]
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடித்துள்ளார். இதில் கதாநாயககியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். இந்த படம் 2023 -ஆம் வருடம் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடலான பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பாடலின் விமர்சனங்களை பார்க்கும்போது பதான் திரைப்படம் 2023 -ஆம் வருடத்தின் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த பதில் வந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக நடிகைகளின் வாழ்க்கை நடக்கும் பல விஷயங்களையும் தன்னுடைய youtube சேனலில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் கே. ராஜனும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கட்சிக்காரன் என்ற படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், அந்த விழாவில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வரக்கூடிய நிலையிலே தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான நீர்த்தேக்கங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் நீர் கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கியதில் இருந்து தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு மாவட்டம் என்று இல்லாமல் தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சுமார் 90 நீர்த்தேக்கங்களில் சராசரியாக 90.22 சதவீத கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. சென்னையை […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை திரிஷா. இவர் தன்னுடைய சினிமா பயணத்தில் தற்போது 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார். நடிகை திரிஷா லேசா லேசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், கடந்த 2002-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு திருப்பாச்சி, கில்லி, ஆறு என பல வெற்றி படங்களில் நடித்த திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், ரஜினி, […]
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன் தர்காவில் நடிகர் ரஜினி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வழிபாடு நடத்தினர். நடிகர் ரஜினிகாந்த் ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது மகளுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு பின்னர், ரஜினி தனியாக காரில் கடப்பா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அமீன் தர்காவுக்கு சென்றார். இந்த தர்கா மிகவும் புகழ் பெற்ற தர்காவாகும். இந்த தர்காவிற்கு சென்ற சில […]
பிளாக்கேப்ஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் விலகியநிலையில், டிம் சவுத்தி தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். வில்லியம்சன் விலகிய நிலையில் டிம் சவுத்தி டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வில்லியம்சன் ஒருநாள் மற்றும் டி20ஐ கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை தொடர்ந்து வழிநடத்துவார்.. அதேபோல சர்வதேச அளவில் 3 கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 346 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 22 […]
சென்னைக்கு 2-வது பேருந்து நிலையம் மிகமுக்கிய தேவை எனபதை கருதி சென்ற ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து பணிபுரிந்து வரும் நிலையில், அமைச்சர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையின் 2வது பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வரும் கிளம்பாக்கத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என எனக்கு தெரியவில்லை. இது அனைவர் மத்தியிலும் எழக்கூடிய ஒரு கேள்விதான். மேலும் அமமுகவின் தேர்தல் கூட்டணி அடுத்த ஆண்டு நவம்பர் (அ) டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார். அதிமுக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவிற்கு பெரிய கட்சியாக இருந்தது. ஆனால் இபிஎஸ் அதனை வட்டார […]
பிரபல ரவுடி ராக்கெட் ராஜா நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.. பனங்காட்டு படை கட்சி தலைவராக இருக்க கூடிய ராக்கெட் ராஜா நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவரை கடந்த ஜூலை மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேலும் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி நீதிமன்றத்தில் அந்த வழக்கு சம்பந்தமாக போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே […]
இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ,அதில் முன்பு இருந்த பண பலன்கள் கிடைக்காததால் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநில அரசு தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஓய்வூதிய தொகையை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் சமூக ஓய்வூதியமானது 2500 ரூபாயிலிருந்து 2750 ரூபாயாக […]
செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கழகத்தினுடைய இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி உடைய ஆற்றல்மிகு சட்டமன்ற உறுப்பினர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக… எடுத்துக்காட்டாக… மக்கள் பணியாற்றி வந்த போற்றுதலுக்குரிய அண்ணன் உதயநிதி அவர்கள் இன்று அமைச்சராக பொறுப்பேற்கின்றார். 2019 நாடாளுமன்ற தேர்தல், அதற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல், அதற்கு பிறகு 2021 சட்டமன்ற தேர்தல், பிறகு நகர்ப்புறத்திற்குரிய உள்ளாட்சித் தேர்தல் என கழகத்தினுடைய தொடர் வெற்றிகளுக்கு தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் […]
பொதுவாக கணவன்மார்கள் தான் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக வழக்குகள் பதியப்படும். ஆனால் தற்போது புதிய விதமாக கணவரை, மனைவி கொடூரமான முறையில் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் யது நந்தன் ஆச்சார்யா. இவர் தன்னுடைய மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவரால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி சம்பந்தப்பட்ட நபர் உரிய முறையில் […]
தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் 35-வது அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், மற்றொருபுறம் வாரிசு அரசியல் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதால் […]
கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இருவரும் சென்ற நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமண நிகழ்ச்சியில் திரையுலகினர் பங்கேற்று வாழ்த்தினர். இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில், மிகவும் இனிமையான அன்பான நபரான என் பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் அன்பான பாட்டி எங்களது முழு […]
டைரக்டர் மிஷ்கின் இசையமைக்கும் டெவில் திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரானது தற்போது வெளியாகி இருக்கிறது. மாருதி பிலிம்ஸ், டச்ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் தான் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்துக்கு டைரக்டர் மிஷ்கின் முதன் முறையாக இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ போன்றோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை நடிகை ஆண்டிரியா வெளியிட்டு […]
தமிழகத்தில் குட்கா முறைகேடு தொடர்பான விவகாரம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக பேசப்பட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என ஆறு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர், பி.வி ரமணா ஆகியோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர மீதம் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதி […]
தமிழகத்தின் 35 வது அமைச்சராக நேற்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பலரும் விமர்சித்து வரும் நிலையில் வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை எதிர்பாளர்கள் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் […]
நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் மற்றும் 1057 ஐ எஃப் எஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் நாட்டில் 6789 ஐஏஎஸ் பணியிடங்கள், 4984 ஐபிஎஸ் பணியிடங்கள் மற்றும் 3,191 ஐ எஃப் எஸ் பணியிடங்கள் உள்ளன என்று மத்திய பணியாளர் விவகாரத்துறை இணை அமைச்சர் ஜிஜேந்திர சிங் மக்களவையில் கடந்த புதன்கிழமை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 5,371 […]
இந்தியாவில் 2022ம் வருடம் வெளியாகிய வெப்சீரிஸ்களில்(வலைத்தொடர்கள்) முதல் 10 இடங்களை பிடித்திருக்கும் தொடர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படங்களுக்கான தரத்தை நிர்ணயிக்கும் ஐஎம்டிபி நிறுவனமானது இந்த பட்டியலை வழங்கி இருக்கிறது. இந்தியாவில் படங்களுக்கு நிகராக வலைத்தொடர்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அண்மை காலமாக மாநில மொழிகளிலும் வலைத்தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நடப்பு ஆண்டு இந்தியாவில் வெளியாகிய வலைத்தொடர்களில் டாப் 10 இடத்தைப் பிடித்த தொடர்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் முதலாவதாக […]
BSNL மற்ற டெலிகாம் நிறுவனங்களை விடவும் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களை அளிக்கிறது. நீங்கள் ஒரு ஆண்டு வேலிடிட்டி கொண்ட 365 நாட்கள் செல்லுபடி ஆகும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தை தேடுகிறீர்கள் எனில், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானது ஆகும். BSNL நிறுவனத்தின் ஒரு ஆண்டு கால ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி நாம் தெரிந்துக் கொள்ளுவோம். இந்த BSNL ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் டேட்டா, குரல் அழைப்பு, SMS உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதேபோன்று ஜியோ நிறுவனமும் […]
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பெயர்: Indian Oil Corporation Limited பதவி பெயர்: Apprentice மொத்த காலியிடம்: 1744 கல்வித்தகுதி: 12th/ ITI/ Diploma/ Any Degree வயதுவரம்பு: 18-24 Years கடைசி தேதி: 03.01.2023 கூடுதல் விவரம் அறிய: www.iocl.com https://iocl.com/admin/img/Apprenticeships/Files/cf909cc0920a437bbf5f01858a24749c.pdf
சர்வதேச அளவில் இன்றைய காலகட்டத்தில் பல தாய்மார்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருவதால் செயற்கை கருவூட்டல், வாடகைத்தாய் முறை என பல்வேறு விதமான முறைகளை தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு 3 லட்சம் இறப்புகள் கர்ப்பப்பை பிரச்சனைகளால் ஏற்படுகிறது என்று தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது உலகின் முதல் செயற்கை கருப்பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெர்லினைச் சேர்ந்த எக்டோலைஃப் என்ற நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பையை அறிமுகப்படுத்தியுள்ளது. […]
இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கர்(29) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான சங்கர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து கடன் தொந்தரவால் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராம்நகர் சாஸ்திரி ரோட்டில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
தாய் கண்முன்னே 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணங்குடிகாடு கிராமத்தில் நீலகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் நீலகண்டனின் மகள் சம்யுக்தா(4) தனது தாயுடன் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினிலாரி சம்யுக்தா மீது மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவசங்கரி […]
கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து காலை 7:30 மணி வரை கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி செல்கின்றனர். மேலும் ரயில்களும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே செல்கிறது. பகல் நேரங்களில் வெயில், திடீரென பெய்யும் மழை, அதிகாலையில் பனிப்பொழிவு என சீதோஷ்ண நிலை […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செங்கொடிபுரத்தில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டியில் வசிக்கும் பழைய இரும்பு வியாபாரியான ராமதாஸ்(34) என்பவருக்கும் இளம்பண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராமதாஸ் இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியதற்கு ராமதாஸ் மறுப்பு தெரிவித்து அவரை ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பேப்பர் அட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி தொப்பூர் கணவாய் 2-வது வளைவில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி குமார் படுகாயமடைந்தார் இதனை பார்த்த வாகன ஓட்டிகள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]
வருமான வரித்துறை இப்போது ரிட்டன் தாக்கல் செய்வதற்குரிய வரம்பை விரிவுபடுத்தி இருக்கிறது. இதன் வாயிலாக வருமானவரி செலுத்தும் பிரிவில் வராத நபர்களும் ரிட்டன் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் அடிப்படையில், தனி நபர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் வருமானம் வரிக்கு உட்பட்ட வரம்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்கள் கண்டிப்பாக வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. தற்போது வருமானவரி விலக்கு வரம்பு 60 […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரகதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக அறிவித்தது ஏன் என எனக்கு தெரியவில்லை. இது அனைவர் மத்தியிலும் எழும் கேள்விதான். வரும் காலத்தில் ஒரே வீட்டிலிருந்து 2 முதல்வர்களை கூட அறிவிக்கலாம். இதற்கிடையில் தங்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்பு மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தற்போது சொல்வதற்கு மாறாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.பாரதி, நாங்கள் […]
பிரபல ஜோதிடர் ஷங்கர் நாராயண் தற்போது நடிகராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். அதாவது, விஜய் சங்கர் என்ற பெயரில் “தனித்திரு” என்ற குறும்படத்தில் அவர் நடித்து உள்ளார். எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் பயின்றவரும், கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவருமான இயக்குநர் எஸ்.கே.செந்தில் “தனித்திரு” திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த குறும்படத்தின் பின்னணியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் பணியாற்றி உள்ளனர். எஸ்.ஆர் செந்தில்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தனித்திரு திரைப்படத்தை இயக்கிய எஸ்.கே.செந்தில், அடுத்ததாக அனைத்து வயதினரையும் கவரும் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருக்க கூடிய இந்த நிலையில் தற்பொழுது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரிசனம் செய்வதற்காக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியதால் பாதுகாப்பு கருதி முதியோருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினமும் பக்தர்கள் வருகை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 10-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் மைனா நந்தினி கலந்து கொண்ட நிலையில் டயப்பர் போன்ற உடையை அணிந்திருந்தார். இந்நிலையில் மைனா நந்தினி டயப்பர் போன்ற உடை அணிந்து இருந்ததால் அவருடைய பின்பகுதியை வைத்து ஒரு youtube சேனல் உருவ கேலி செய்துள்ளது. இந்த சம்பவத்திற்கு மைனா […]
பாகிஸ்தான்எ (50) நாட்டில் சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த பேருந்தில் சேஷாதி (24) என்ற இளம் பெண் அடிக்கடி பயணம் செய்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு திடீரென சாதிக் மீது காதல் ஏற்பட அவரிடம் ப்ரபோஸ் செய்துள்ளார். அதன்பிறகு சேஷாதியின் காதலை சாதிக் ஏற்றுக் கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சாதிக் பேருந்து ஓட்டும் ஸ்டைல், அவர் பேசும் விதம், […]
2023ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜன.1 ஆங்கில புத்தாண்டு, ஜன.15 பொங்கல், ஜன.26 குடியரசு தினம், ஏப். 14 தமிழ் புத்தாண்டு, ஏப்.22 ரம்ஜான், மே. 1 உழைப்பாளர் தினம், ஜூன்.26 பக்ரீத், ஆக.15 சுதந்திர தினம், செப்.17 விநாயகர் சதுர்த்தி, அக்.23,24 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, நவ.12 தீபாவளி, டிச.25 கிறிஸ்துமஸ் என மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்காரை கொச்சைப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் என்கின்ற அடிப்படையில் திரண்டு நின்று, போர்க்குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். ஏன் ? எத்தனையோ போராட்டங்களை இந்த வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தியிருக்கிறோம். எத்தனையோ பிரச்சினைகளுக்காக நாம் ஒரு நாள் இடைவெளியில் கூட போராட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக முடித்துவிட்டு இருக்கிறோம். இதுவரையில் நடந்த போராட்டங்களில் இருந்து, இந்த போராட்டங்கள் முற்றிலும் மாறுபட்ட போராட்டம். […]
வீரமே வாகை சூடும் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஷால் நடித்துள்ள படம் “லத்தி”. இதை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கி இருக்கிறார். இவற்றில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். ராணா புரொடக்ஷன் சார்பில் ரமணா மற்றும் நந்தா இந்த படத்தை தயாரிக்கின்றனர். லத்தி படம் வரும் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது நடிகர் விஷால் நேயர்களுக்கு பேட்டியளித்தபோது “லத்தி திரைப்படம் பற்றியும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, […]
பிரபல சின்னத்திரை இயக்குநர் தாய் செல்வம் சற்றுமுன் காலமானார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிய மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர், காத்து கருப்பு, பாவம் கணேசன், கல்யாண முதல் காதல் வரை, ஈரமான ரோஜாவே 2 போன்ற சீரியல்களை இயக்கியவர். மேலும், எஸ்.ஜே.சூர்யா நடித்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தை இயக்கியவர். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து விற்பனையாகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 320 குறைந்து ரூபாய் 40,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய் 5,060 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 72.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 680 அதிகரித்திருந்த நிலையில், […]