Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஆம்புலன்ஸ் இன்னும் வரல” பைக்கில் அழைத்து கொரோனா பாதித்த பெண்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கொரோனா பாதித்த பெண்ணை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மோட்டார் சைக்கிளில் அமரவைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சக்கரக்கோட்டை பகுதியில் திருமணமான ஒரு இளம்பெண் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இந்த இளம்பெண் சில நாட்களாகவே சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற காரணங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு கடந்த 23ஆம் தேதி அன்று மருத்துவ குழுவினர், ஊராட்சி செயலாளர் விமல் மற்றும் உதவியாளர் ஹரி போன்ற அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அந்தப் பெண்ணிற்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரவில்லை. அந்த சமயம் இளம்பெண் மூச்சுத்திணறலால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த  ஊராட்சி செயலாளர் விமல், உதவியாளர் ஹரி மற்றும் கந்தகுமார் ஆகியோர் சற்றும் தாமதிக்காமல் தனது மோட்டார் சைக்கிளில் அந்தப் பெண்ணை அமர வைத்து அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்று கொரோனா சிகிச்சைக்கான அறையில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்த இளம் பெண்ணிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து சிகிச்சைக்கு பின் அந்த இளம்பெண் தற்போது நலமுடன் இருக்கின்றார். இவ்வாறு ஊராட்சி செயலாளர் செய்த துணிச்சலான செயல் தற்போது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |