Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பெரியமேடு பகுதியில் பெயிண்டரான சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சுபாஷ் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த ஆஷா தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |