Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கியதால்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பெயிண்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கிக் கீழே விழுந்துள்ளார்.

அதன்பின் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்‌ அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து சுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவரிடம் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |