Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த போது…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

பெயிண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் கணேசன் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கணேசன் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

அதன் பின் அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து உடனடியாக கணேசனை மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |