பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் பகுதியில் ராஜ ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜரத்தினம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த ராஜரத்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.