சீன தொழிலதிபரான ஜாக் மா ஓவியம் வரைவதில் தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருவதாக அலிபாபா நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அலிபாபா நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், முன்னாள் தலைவராகவும், சீன தொழிலதிபரான ஜாக் மா இருந்துள்ளார். ஆனால் அவர் சீன அரசாங்கத்திற்கு எதிராக பேசியதால் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்தே பொது இடங்களுக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அலிபாபா நிறுவனத்தின் துணைத் தலைவரான ஜோ சாய் கூறியதாவது, சீன தொழிலதிபரான ஜாக் மா ஓவியம் வரைவதில் தன்னுடைய நேரத்தை செலவிடுகிறார் என்று கூறியுள்ளார்.
மேலும் ஜாக் மாவுடன் தான் தினந்தோறும் பேசி வருவதாகவும், அவர் சமூக சேவையை ஆற்றுவதில் தன்னுடைய கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். அதன்பின் தற்போது தங்களுடைய நிறுவனத்தில் வீழ்ச்சி ஏற்பட்டாலும், அது வருகின்ற நாட்களில் சரியாகி விடும் என்றும் தெரிவித்துள்ளார்.