தமிழில் பல படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மான்ஸ்டர்,இறைவி போன்ற படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர் மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவரது படத்திற்கு கடமையை செய் என்ற பெயரிடப்பட்டுள்ளது. முத்தின கத்திரிக்காய் படத்தை இயக்கிய வெங்கட்ராகவன் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார் .படப்பிடிப்பின் பூஜை இன்று தொடங்கியது.