கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமன்பட்டி பகுதியில் எலக்ட்ரிக்கல் ஒப்பந்ததாரரான சுந்தரராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுந்தரராஜ், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த நவம்பர் 11 – ஆம் தேதியன்று சுந்தரராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வேலம்மாள் கணவரின் உடல் மீது படுத்தபடியே அவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன் பிறகு உறவினர்கள் தம்பதியின் உடல்களை தகனம் செய்தனர்.